காவிரி பிரச்சனை!!

மணக்கால் அய்யம்பேட்டை | 3:51 PM | Best Blogger Tips


நிImage may contain: outdoor and natureறைய பேருக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை.
குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு அங்கிருந்து நேரடியாக ஓடி வந்து தமிழகத்தின் வழியாக ஓடிப்போய் கடலில் கலந்துவிடுவது போலவும், அப்படி கடலில் கலக்க விட்டுவிட்டு ஏதோ கர்நாடகக்காரன் தேக்கி வைத்திருக்கும் தண்ணீரில் பங்கு கேட்டு தமிழகம் தகராறு செய்வது போலவும் சிலர் பேசிட்டு இருக்காங்க.
அவங்க பேசுவதை பார்த்தால் காவிரி ஆறு உற்பத்தியாகி 200 ஆண்டுகள்தான் ஆனதுபோல இருக்கு.
ஒரு விஷயம் அவுங்களுக்கு புரியவே இல்லை, பூகோள ரீதியாக பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக காவிரி நதி கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர் வழியாக ஓடி கடலில் கலந்துகொண்டுதான் இருந்தது.
அப்போது காவிரி டெல்டாவில் முப்போகம் விவசாயம் நடந்துகொண்டேதான் இருந்தது.
ஆனால் பிரச்சனை ஆரம்பித்ததே 1932ல் காவிரியின் நீர்பிடிப்பு பகுதியில் கிருஷ்ண ராஜ சாகர் அணை கட்டப்பட்ட பிறகுதான்.
அதுவரை தடையின்றி ஓடிக்கொண்டிருந்த நதி காவிரி டெல்ட்டாவை தாண்டி தினமும் பல மில்லியன் லிட்டர் தண்ணீரை கடலுக்குள் கொண்டுபோய் சேர்த்துக்கொண்டே இருந்தது.
KRS
அணை கட்டப்பட்ட பிறகு காவிரியில் ஒரு சொட்டு நீர்கூட வர முடியவில்லை. காரணம் காவிரியை தடுத்து கட்டப்பட்ட KRS அணையில் நீர் அடைபட்டது.
அந்த அணை நிரம்பும் தருவாயில் உபரி நீர் மட்டும் வெளியேறிக்கொண்டிருக்கும். அதாவது இயற்கையான போக்கில் ஓடின நதி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
(KRS
அணையை தொடர்ந்து கபினி,ஹேமாவதி,ஹாரங்கி அணைகள் கட்டப்பட்டபோதும் அப்படித்தான்)
நம்முடைய நதி நீரை கேட்பது நமது உரிமை. சிலர் அதை என்னமோ யாசகம் போல நினைத்துக்கொண்டு மழை நீரை சேகரிக்க கூடாதா? கடல் நீரை குடி நீராக்கி குடிக்க கூடாதா என்கிறார்கள்.
அவர்களுக்கு ஒன்று புரியவில்லை. நதி நீர் என்பது நிலத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல, கடலுக்கும் சொந்தமானது
நதி நீர் கடலில் கலந்தேயாக வேண்டும். அது கட்டாயம். அதுதான் இயற்கை.
புவியியல் வல்லுநர்களிடம் கேட்டுப்பாருங்கள் இதற்கான விளக்கத்தை தருவார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன் சீனா மஞ்சளாற்றின் குறுக்கே உலகின் மிகப்பெரிய ஒரு அணையை கட்டியது.
அந்த தண்ணீரை பாலைவனத்தின் பக்கம் திருப்பி பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை சோலைவனமாக்கியது. ஆனால் அந்த ஆறு கடலில் சேரும் பகுதியில் நதி நீர் ஓடாததால் உப்பு நீர் நிலத்தடி நீருக்குள் ஊடுறுவியது. அந்த பகுதி கடற்கரையின் உப்பு அளவு அதிகரித்தது.
கடற்கரையோரம் இருந்த மஞ்சள் ஆறு பாசன பகுதிகள் பாலைவனமானது. மிகப்பெரிய பாதிப்பை சந்தித்த சீனா தற்போது அதை சரி செய்ய முயன்று வருகிறது.
அதுபோல காவிரி நீர் கடலில் கலக்காவிட்டால் காவிரி கழிமுக மாவட்டங்கள் பாலைவனமாகும்.
நம் மாநிலத்திற்குள் அணைகளே கட்டக்கூடாது என நான் சொல்லவில்லை. அணைகள் கட்டி அந்த தண்ணீர் ஏரி, குளங்களில் சேமிக்கப்பட்டாலும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் கட்டாயம் கடலில் கலந்தேயாக வேண்டும்.
அணைகள் பற்றி பேசுவோம். கர்நாடகாவிலிருக்கும் KRS, கபினி, ஹேரங்கி, ஹேமாவதி அணைகளில் தேக்கப்படும் தண்ணீரை நம் மேட்டூர் ஸ்டேன்லி அணை என்ற ஒரு அணையில் தேக்கிவிடலாம். இந்த 5 அணைகளில் மேட்டூர் அணைதான் மிகப்பெரியது.
கர்நாடகத்திலிருக்கும் அனைத்து அணைகளும் மலைப்பாங்கான மேட்டு நிலத்தில் இருக்கும் அணைகள்தான்.
ஆனால் தமிழகத்தில் மேட்டூருக்கு கீழே அப்படிப்பட்ட நில அமைப்பு இல்லை. காவிரி டெல்டா மாவட்டங்கள் சமவெளிப்பகுதிகளை கொண்டது. அதில் கிருஷ்ணராஜ சாகர், மேட்டூர் ஸ்டேன்லி போன்ற அணைகளை கட்ட முடியாது ஆனால் சிறு சிறு தடுப்பணைகளை மட்டும் கட்ட முடியும்.
இது பூகோள ரீதியில் உள்ள நீர் வடி நிலம், டெல்டா சமவெளி.
சிலர் கல்லணை மட்டும் டெல்டா பகுதியில் இல்லையா என கேட்கலாம்.
ஆம். கேள்வி சரிதான்.
கல்லணை ஒன்றும் நீங்கள் நினைப்பதுபோல் டி.எம்.சி கணக்கில் நீரை தேக்கி வைத்து வறட்சி காலத்தில் திறந்துவிட்டு பயன்படுத்தும் அணை கிடையாது. அது ஓடும் காவிரியின் குறுக்கே தண்ணீரை தடுத்து நிறுத்தி பல சிறு சிறு வாய்க்கால்களுக்கு பிரித்து அனுப்பும் ஒரு மிகப்பெரிய மதகு போன்றது. கல்லணையில் ஒரு டி.எம்.சி நீரை கூட தேக்க முடியாது.
காவிரி நதியை பொறுத்தவரை மேட்டூர் ஸ்டேன்லி நீர் தேக்கம் ஒன்று மட்டுமே போதும்
அதிலிருந்து வரும் தண்ணீரை சேமிக்க முயற்சிக்கலாம்.
நிறைய சிறு சிறு தடுப்பணைகள் கட்டி நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்தலாம், அந்த நீரை ஏரி, குளங்களில் சேமிக்கலாம்.
ஆனால் ஒரு சொட்டு தண்ணீரைக்கூட கடலுக்கு விடமாட்டேன் என நாம் நினைத்தால் இயற்கை நம்மை பழிக்கும்.
டெல்டா மாவட்டங்களில் மிகப்பெரிய அணையை கட்டுவேன் என யாராவது சொன்னால் அது கற்பனையாகத்தான் இருக்கும்.
உண்மையில் காவிரி டெல்டா சமவெளியில் பெரிய அணைகளை கட்ட முடியாது. சிறு, குறு தடுப்பணைகளை மட்டுமே கட்ட முடியும்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் நிறைய தடுப்பணைகளை கட்டிக்கொள்ளாதது நம்முடைய தவறுதான். தர்க்க ரீதியில் தவறுதான் ஆனால் இயற்கையை நாம் மாற்ற முயற்சிக்கவில்லை என்ற வகையில் அது சரி.
இதற்காக நமக்கு காவிரியில் உரிமை இல்லாதது போலவும், கர்நாடகாவை தொந்தரவு செய்வது போலவும் யாரும் பேசாதீர்கள்.
சர்வதேச நதி நீர் தாவா சட்டத்தின்படி ஒரு நதி மீது அதிக உரிமை அதன் கீழ் பகுதியில் இருப்பவர்களுக்குத்தான்.
நமது உரிமையைத்தான் கேட்கிறோம் பிச்சை அல்ல. நமது அரசியல் சண்டைக்காக நமது உரிமையை ஏளனப்படுத்தாதீர்கள்!
முடிவாக ஒன்று. காவிரியில் நமக்கு இருக்கும் உரிமை போன்றே வங்கக்கடலுக்கும் உரிமை இருக்கிறது. பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக காவிரி நீரை வங்கக்கடலும் குடித்து வந்திருக்கிறது. அதை கர்நாடகாவும், நாமும் முழுவதும் எடுத்துக்கொண்டால் இயற்கைக்கான பங்கை யார் கொடுப்பது?
------



 Image may contain: 1 person, smiling, sunglasses, phone and outdoor
🌴🍃 *வாழ்க வளமுடன்

நன்றி இணையம்




ஓய்வு அறியாத பிரதமர்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:52 AM | Best Blogger Tips
Image may contain: one or more people


அன்பார்ந்த மோடி அவர்களே
உங்களை பிரதமராக கொள்வதற்கு நாங்கள் தகுதியற்றவர்கள்
இந்த நாட்டின் பெரும்பாலான மக்கள் உங்கள் உழைப்பை மதிப்பதில்லை
ஒரு நாளைக்கு 16 மணி நேரம் உழைக்கிறீர்கள்
இந்த நாட்டின் நலனுக்காக தூக்கத்தை கூட தியாகம் செய்கிறீர்கள்
எங்களுக்கு பழக்கமான தூங்கி வழியும் தேவ கவுடாவாகவோ பப்புவாகவோ இல்லையே தங்களை
அதற்காக தங்களை யாரும் பாராட்டப்போவதில்லை
சாதாரண விஷயங்களில் கூட உங்களை தூக்கில் போட ஒரு பெரும் கூட்டம் அலைகிறது
இந்த தேசத்து மக்கள் 60 ஆண்டுகளாக தங்களை கொள்ளையடித்த ஒரு குடும்பத்திடம் மீண்டும் கொடுப்பார்களே ஒழிய உங்களை 5 வருடங்கள் அமைதியாக ஆள விடமாட்டார்கள்
காரணம் இந்த தேசம் தற்போது முட்டாள்களான அறிவுஜீவிகளாலும் சோம்பேறிகளாலும் மட்டுமே நிறைந்து இருக்கிறது
நான்கு பேர் கொண்ட ஒரு சிறு குடும்பத்தை கூட வழி நடத்த முடியாதவர்கள் இந்த நாட்டை எப்படி நடத்துவது என்று ஆலோசனை கூற வருகிறார்கள்
நாட்டின் பிரதமராகிவிட்டீர்கள் என்ற ஒரே காரணத்துக்காக தங்களை பழிவாங்க ரத்த வெறிபிடித்த
ஒநாய்களாக அலைகிறது ஒரு கூட்டம்
இப்போது தேர்தல் வைத்தால் மோடி மீண்டும் வரவாய்ப்பில்லை என்ற குரல்களை கேட்கிறேன்
ஓய்வு அறியாமல் உழைக்கும் மனிதனுக்கு இது தான் பரிசு போலும்
அவர்களால் இந்த நாடு முன்னேறுவதை பொறுத்து கொள்ளமுடியவில்லை
அவர்களுக்கு தேவை எல்லாம் துவரம்பருப்பு கிலோ ஒரு ரூபாயக்கும் இலவசமாக வெங்காயமும்
இதை மட்டும் செய்து பாருங்கள் உங்களை அவர்கள் எங்கு கொண்டு வைக்கிறார்கள் என்று
ஊழலை ஏற்று கொண்ட அவர்களால் இந்த நாட்டில் நடந்து கொண்டிருக்கும் சரியான மாற்றங்களை ஏற்று கொள்ளமுடியவில்லை
வருத்தமாகவே இருக்கிறது
2019 ல் நீங்கள் மீண்டும் வருவீர்களா என சந்தேகம் இருக்கிறது
என்ன செய்வது சார்
இவர்களுக்கு தேவை எல்லாம் பப்பு போன்ற முட்டாளே
அவர்களுக்கு தேவை எல்லாம் இலவச சோறு மட்டுமே
சரித்திரம் இதை தான் அவர்களுக்கு சொல்லி கொடுத்து இருக்கிறது
யாரும் மாற்றத்திற்கு தயாராக இல்லை
3 G ஸ்மார்ட் போன் களை கையில் வைத்துக்கொண்டு அதற்கு 300 வரை ரீசார்ஜ் செய்து கொண்டு பருப்பு விலை ஒரு ரூபாய் ஏறிவிட்டது என கூப்பாடு போடும் முட்டாள்களை என்ன செய்வது Bloody
Scoundrels
இவர்களை இப்படி சொல்வதை விட வேறு வார்த்தைகள் தெரியவில்லை
உலகத்தின் 10 சக்திவாய்ந்த தலைவர்களில் தாங்களும் ஒருவர்
ஆனால் அதெல்லாம் அவர்களுக்கு பெரிய விஷயமே இல்லை
பெரும்பான்மையான மக்கள் ஊமை களாகவும் குருடர்களாகவும் இருப்பது புதிதில்லையே
தாங்கள் ஓய்வெடுக்க வேண்டும்
உங்கள் கடுமையான உழைப்பு அர்ப்பணிப்பு இவை எல்லாம் இந்த முட்டாள்களுக்கு தேவை இல்லை
அவர்களுக்கு தேவை எல்லாம் அடிமைத்தனம்
நீங்கள் ஜனநாயக தலைவராக இருக்க வேண்டாம்
சர்வாதிகார தலைவனாக மாறுவதே என் போன்ற சாமானியர்களின் வேண்டுகோள்
செய்வீர்களா மோடி
இது பிச்சைக்காரர்களின் தேசம்
என் எதிர்பார்ப்பு நிறைவேறுமா தெரியவில்லை
போய் வாருங்கள் மோடி
தகுதியற்ற தேசம் நாசமாக போகட்டும்

நன்றி இணையம்