அருள்மிகு பண்ணாரி அம்மன் திருக்கோவில்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:49 PM | Best Blogger Tips
Image result for அருள்மிகு பண்ணாரி
https://www.facebook.com/images/emoji.php/v6/f71/1/16/1f339.png🌹 தமிழ் நாட்டில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வாய்ந்த கோவில்களில் ஒன்று அருள்மிகு பண்ணாரி அம்மன் திருக்கோவிலாகும்.
https://www.facebook.com/images/emoji.php/v6/f71/1/16/1f339.png🌹 பராசக்தி பல்வேறு பெயர்களுடன் பல்வேறு தலங்களில் குடிகொண்டிருக்கிறாள். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பண்ணாரி காட்டில் அம்மன் சக்தி வாய்ந்த தெய்வமாக விளங்குகிறாள்.
தல வரலாறு :
https://www.facebook.com/images/emoji.php/v6/f71/1/16/1f339.png🌹 சுமார் 300 வருடங்களுக்கு முன்பு பண்ணாரியில் ஓடிய தோரணப்பள்ளம் என்ற காட்டாற்றங்கரையில் மக்கள் மாடு மேய்ப்பதை தொழிலாக கொண்டு வாழ்ந்தனர். ஒரு காராம்பசு ஒன்று தன் கன்றுக்கு கூட பால் கொடுக்காமல் காட்டுக்குள் அடிக்கடி ஓடி ஒளிந்தது.
https://www.facebook.com/images/emoji.php/v6/f71/1/16/1f339.png🌹 மாடு மேய்ப்பவன் ஒருநாள் பசுவை பின்தொடர்ந்து சென்று கவனித்தான். அந்தப்பசு, ஒரு வேங்கை மரத்தடியில் உள்ள புற்றில், தனது பாலைப் பொழிவதைப் பார்த்தான். மறுநாள் கிராம மக்களிடம் விபரத்தைக் கூறினான். மக்கள், அந்த இடத்தை சுத்தம் செய்து பார்த்த போது, ஒரு அம்மன் திருவுருவம் இருப்பதை பார்த்தனர்.

https://www.facebook.com/images/emoji.php/v6/f71/1/16/1f339.png🌹 பசு அந்த அம்மனுக்கே அபிஷேகம் செய்ததாகக் கருதினர். அப்போது, ஒருவருக்கு தெய்வ அருள் உண்டாகி, நான் மண்ணார்க்காடு என்ற ஊரிலிருந்து வருகிறேன் (இவ்வு+ர் கேரளாவில் உள்ளது). பொதிமாடுகளை ஓட்டிக் கொண்டு செல்லும் மக்களுக்கு வழித்துணையாக வந்தேன். எழில் மிகுந்த இந்த இயற்கை சு+ழலில் நான் தங்க விரும்புகிறேன். என்னை 'பண்ணாரி அம்மன்" எனப் பெயரிட்டு வணங்கி வாருங்கள் என்றார்.
https://www.facebook.com/images/emoji.php/v6/f71/1/16/1f339.png🌹 அந்த அருள்வாக்கின்படி, அந்த இடத்தில் புற்களைக் கொண்டு குடில் அமைத்து அம்பாளை பிரதிஷ்டை செய்தனர். காலப்போக்கில், விமானத்துடன் சிறிய கோவில் கட்டப்பட்டது. அதில் அமைக்கப்பட்ட தாமரை பீடத்தில் தற்போது அம்பாள் அருள்பாலித்து வருகிறாள்.
கோவில் சிறப்புகள் :
https://www.facebook.com/images/emoji.php/v6/f71/1/16/1f339.png🌹 இக்கோவிலில் திருநீறு பிரசாதத்திற்கு பதிலாக புற்று மண்தான் திருநீறு பிரசாதமாக தரப்படுகிறது. இக்கோவில் தெற்கு நோக்கி இருக்கும் அம்மன் கோவிலாகும். அம்மன் சுயம்புவாக முளைத்துள்ளது இத்தலத்தின் சிறப்புகளில் ஒன்று.
https://www.facebook.com/images/emoji.php/v6/f71/1/16/1f339.png🌹 இக்கோவில் அக்னி குண்டம் இறங்குவது மிகப்பெரிய பிரம்மாண்டமான மெய்சிலிர்க்கும் காட்சி. கடைசியாக ஆடு, மாடு, போன்ற கால்நடைகளையும் பக்தர்கள் குண்டம் இறக்கி நடக்க வைப்பார்கள். இக்கோவிலில் மிக சிறப்பு வாய்ந்த குண்டம் திருவிழா தமிழ்நாட்டில் மிகப் புகழ் பெற்றது.
திருவிழாக்கள் :
https://www.facebook.com/images/emoji.php/v6/f71/1/16/1f339.png🌹 பங்குனி மாதத்தில் நடைபெறும் பெருந்திருவிழாவில் 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அமாவாசை உள்ளிட்ட விஷேச தினங்களில் சிறப்பு பு+ஜைகள் நடைபெறும்.
அமைவிடம் :
https://www.facebook.com/images/emoji.php/v6/f71/1/16/1f339.png🌹 ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் - மைசு+ர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி எனும் ஊரில் அமைந்துள்ளது.
https://www.facebook.com/images/emoji.php/v6/f71/1/16/1f339.png🌹 கோவையில் இருந்து 70 கி.மீ., தூரத்தில் உள்ள சத்தியமங்கலம் சென்று, அங்கிருந்து மைசு+ர் செல்லும் ரோட்டில் 15 கி.மீ., தூரத்தில் பண்ணாரியை அடையலாம். ஈரோட்டில் இருந்தும் இங்கு செல்லலாம்.


நன்றி இணையம்

தந்தை மகளுக்கா .....

மணக்கால் அய்யம்பேட்டை | 2:47 PM | Best Blogger Tips
Image result for parents
ஒரு தந்தை தனது மகளின் திருமண விழாவில் ஆற்றிய உரையை ஃபேஸ்புக் பகிர்வில் படிக்க நேர்ந்தது.
மிகவும் உருக்கமான, யதார்த்தமான, இயல்பான அந்த பதிவு இதோ:
எனது மனதின் மகிழ்ச்சியான இந்த தருணத்தில் பங்கு பெற்ற உங்கள் அனைவருக்கும் நன்றி.!
இந்தநாள் வாழ்வில் மறக்க முடியாத நாளாக மாறிவிட்டது. காரணம் ...
எங்கள் மகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டோம். இனி, இளைப்பாற விரும்புகிறோம். அதை அனுபவிக்க தயாராகிவிட்டோம். ஆனால், அதற்கு நீங்கள் அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
நான் எதிர்பார்ப்பதை விட நீங்கள் அவளை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்வீர்கள் என நான் நம்புகிறேன்.
அவள் என் வீட்டில் துள்ளித் திரிந்ததை விட உங்கள் வீட்டில் மகிழ்ச்சி துள்ளளோடு இருப்பாள் என நம்புகிறேன்.
இருந்தாலும், எல்லா சராசரி தந்தையைப் போலவும் நான் இதை திரும்பத் திரும்ப சொல்கிறேன் "தயவு செய்து அவள் மகிழ்ச்சிக்கு குறை ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்"
அவள் எப்போதுமே எனக்கு பாரமாக இருந்ததில்லை. இனியும் ஒருபோதும் பாரமாக கருத மாட்டேன்.
ஏனெனில், என் சுவாசம் இயல்பாக இருப்பதற்கும், என் இதழ்களில் புன்னகை பூப்பதற்கும் காரணம் அவளே. இருந்தும் அவளை நான் திருமணம் செய்து கொடுக்கிறேன்.
ஏனென்றால் அது ஓர் இயற்கை நியதியாக இருக்கிறது. கலாச்சாரத்துக்கு கட்டுப்பட்டு மட்டுமே அவளை உங்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன். என் வீட்டின் மகிழ்ச்சிப் பேழை உங்கள் வீட்டில் ஒளி வீச வருகிறது.
எனது உலகத்தை உங்களுக்கு தாரை வார்த்துத் தருகிறேன். அந்த உலகம் என்றென்றைக்கும் அழகாக இருப்பதை நீங்களே உறுதி செய்ய வேண்டும்.
எனது இளவரசியை உங்களிடம் அனுப்புகிறேன். அவள் உங்கள் வீட்டின் ராணியாக திகழ வழிவகை செய்யுங்கள். எனது ரத்தமும், வியர்வையும் அவளை ஆளாக்கியிருக்கிறது. இப்போது அவள் மாசறு பொன்னாக இருக்கிறாள்.
அவள் உங்கள் வீட்டுக்கு கொண்டு வரும் அன்பு, அக்கறை, அரவணைப்பு, அழகு, இதம் என எல்லாப் பண்புகளுக்கும் பரிசாக அவளுக்கு மகிழ்ச்சியைத் தாருங்கள்.
ஆம், அவளை தயவுசெய்து மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள்.
எப்போதாவது அவள் சிறு தவறு செய்துவிட்டாள் என நினைத்தால் அவளை தாராளமாக திட்டுங்கள் ஆனால் அதே வேளையில், அவள் மேல் செலுத்தும் அன்பில் குறை வைக்காதீர்கள்.
அவள் மிகவும் நளினமானவள். அவள் எப்போதாவது துவண்டு போய் இருந்தால் அவளுடன் இருங்கள்.
உங்களது சிறு கவனம் அவளுக்கு போதும், ஆறுதல் தர. அவள் உடல்நலன் பாதிக்கப்பட்டால் அவள் மீது அக்கறை காட்டுங்கள். அதுவே அவளுக்கு அருமருந்து.
அவளது பொறுப்புகளில் எப்போதாவது விலகிவிட்டால் அதைச் சுட்டிக்காட்டுங்கள்.
அவளைப் புரிந்து கொள்ளுங்கள். தயவு செய்து அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.
என் மகளின் மகிழ்ச்சி மட்டுமே என் வாழ்நாள் லட்சியம். எனவே, தயவு செய்து அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.
அன்பிற்குரிய மருமகனே…
இந்த வார்த்தைகளின் அர்த்தம் இப்பொழுது உங்களுக்கு புரியாமல் போகலாம். ஆனால், நாளை நீங்கள் ஒரு மகளைப் பெற்றெடுக்கும் பாக்கியவான் ஆகும் போது எனது வார்த்தைகளின் அர்த்தம் புரியும்.
அப்பொழுது உங்கள் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் 'என் மகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்' என்று சொல்லும். எனவே, தயவு செய்து எனது மகளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த உரையை மகளைப் பெற்ற ஒவ்வொரு தந்தைக்கும் அர்ப்பணிக்கிறேன் ....!

 நன்றி இணையம்