குருடன் போன்று பாசாங்கு காட்டுவது

மணக்கால் அய்யம்பேட்டை | 1:03 PM | Best Blogger Tips
Image result for குருடன் போன்று பாசாங்கு காட்டுவது
ஒருவன் மிகவும் அழகான ஒரு பெண்ணை மணமுடித்தான். அவள் மீது அளவு கடந்த பாசத்தையும் காட்டினான்.
இவ்வாறிருக்க 
ஒரு நாள் அவள் ஒரு தோல் நோய்க்கு ஆளானாள். அதனால் அவளது அழகு படிப்படியாக குறைவடையத் தொடங்கியது. அவ்வேளை அவளது கணவன் ஒரு பயணமொன்றை மேற்கொண்டிருந்தான்.
அவன் திரும்பி வரும் போது ஒரு விபத்துக்குள்ளாகி அவனது கண் பார்வையை இழந்தான்.
ஆனால் எவ்வித பிரச்சினையும் இன்றி அவர்களது மண வாழ்வு தொடர்ந்தது.
நாற்கள் செல்லச் செல்ல மனைவி தனது அழகும் படிப்படியாக குறைவடைந்து செல்வதை உணர்ந்தாள். ஆனால் குருடனான கணவனுக்கோ இது ஒன்றும் தெரியாது. இருவரும் அவர்களிருவரினதும் அன்பில் எவ்வித வேறுபாடும் மாற்றமும் காட்டாது வாழ்ந்தனர்.
அவன் அவளை அதிகமாக நேசித்தான் அவளுடன் அன்பாக நடந்து கொண்டான். அவளும் அவனுடன் அவ்வாறு தான் இருந்தாள்.
அப்படியிருக்க ஒரு நாள் அவள் இறந்துவிட்டாள்.
அவளது மரணம் அவனை மிகவும் வேதனைப்படுத்தியது.
தன் அன்பு மனைவியின் இறுதி கிரிகைகளை நிறைவேற்றி அவளை அடக்கம் செய்த பின் அவன் தனி மனிதனாக அவ்விடத்தை விட்டு வீடு திரும்பினான்.
அவன் திரும்பி வரும் போது அவனுக்கு பின்னாலிருந்து ஒரு மனிதர் அவனை அழைத்து
"
எவ்வாறு நீ தனியே நடந்து செல்கிறாய்? இது வரைக்காலமும் நீ உன் மனைவியின் உதவியுடன் அல்லவா நடந்தாய்? 
எனக் கேட்டான்.
அதற்கு அவன்
நான் குருடன் இல்லை. எனது மனைவி நோய் வாய்பட்டுள்ளாள் என்பதை நான் அறிந்தால் அவள் மனம் காயப்படக் கூடும் என்பதால் தான் குருடன் போன்று பாசாங்கு செய்தேன். 
அவள் சிறந்ததொரு மனைவியாக இருந்தாள். அவள் பின்னடைவதற்கு ஒரு காரணமாக இருக்க பயப்பட்டேன்.
அதனால் தான் குருடன் போன்று பாசாங்கு செய்து இதற்கு முன் எவ்வளவு பாசமாக நடந்து கொண்டேனோ அவ்வாறே இது வரையும் அவளுடன் வாழ்ந்தேன்" 
எனப் பதிலளித்தான்.
https://www.facebook.com/images/emoji.php/v5/f68/1/16/1f495.png💕பிறரின் குறைகள் எங்கள் கண்களுக்கு தென்படாமல் இருக்க சில வேளைகளில் நாமும் குருடன் போன்று பாசாங்கு காட்டுவது அவசியம்.
https://www.facebook.com/images/emoji.php/v5/f49/1/16/1f4da.png📚படித்ததிலிருந்து ஒரு பகிர்வு 
நன்றி:
இணையம்


வாடகை அல்லது சொந்த வீட்டுக்கு குடியேறும்போது

மணக்கால் அய்யம்பேட்டை | 12:59 PM | Best Blogger Tips
Image result for சொந்த வீட்டுக்கு குடியேறும்போதுImage result for சொந்த வீட்டுக்கு குடியேறும்போது
நீங்கள் வாடகை அல்லது சொந்த வீட்டுக்கு குடியேறும்போது,அந்த வீட்டுக்குள் முதலில் கொண்டு செல்ல வேண்டியவை மகாலட்சுமியின் அம்சமாகிய உப்பு,அம்மனின் அம்சமாகிய மஞ்சள் பொடி அல்லது மஞ்சள் கிழங்கு,ஒரு நிறை குடம் தண்ணீர்,உங்களின் குல தெய்வத்தின் படம் அல்லது இஷ்ட தெய்வத்தின் படம் இவைகளைக் கொண்டு செல்ல வேண்டும்.
வீட்டில் பண வரவு அதிகரிக்க,வெள்ளிக்கிழமைகளில் காலை 6.00 முதல் 6.15க்குள்ளும்,மதியம் 1.00 முதல் 1.15க்குள்ளும்,இரவு 8.00 முதல் 8.15க்குள்ளும் கடையில் உப்பு வாங்கி வரவேண்டும்.இப்படி வாரா வாரம் சிறிதளவு உப்பு வாங்கி வர,செல்வச் செழிப்பு அதிகரிக்கும்.
கல் உப்புதான் மகா லட்சுமியின் அம்சமாகும்.
எந்த வீட்டினுள் நுழைந்ததும்,துர்நாற்றம் இல்லாமலிருக்கிறதோ,நறுமணம் கமழுகிறதோ,அங்கே செல்வச் செழிப்பு அதிகரித்துக் கொண்டே செல்லும்.
எந்த வீட்டில் அழுக்குத் துணிகள் வீடெல் லாம் இறைந்து கிடக்காமலிருக்கின்ற தோ, வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை தோறும் தண்ணீரால் அலசி விடப்படுகிறதோ,பொருட்கள் எல்லாம் சுத்தமாக அடுக்கி வைக்கப்பட்டு இருக்குமோ,அங்கெல்லாம் செல்வம் சேரும் .
எங்கெல்லாம் நெகடிவ்வான வார்த்தைகள் பேசப்படாமலிருக்குமோ,எங்கெல்லாம் விட்டுக்கொடுத்தலும்,இனிய வார்த்தைகள் பேசப்படுமோ அங்கெல்லாம் செல்வச் செழிப்பு அதிகரிக்கும்.
ஒரு வீட்டில் ருத்ராட்சம் இருந்தாலே அங்கே பேய் பிசாசு,பில்லி சூனியம் வேலை செய்யாது;யார் தினமும் ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று அம்மனின் அருட் பிரசாதமான எலுமிச்சை பழம் அல்லது மஞ்சள் காப்பு அல்லது குங்குமம் அல்லது இவை அனைத்தும் வாங்கி வந்து வீட்டு பூஜை அறையில் நிரம்புமோ அங்கே நிம்மதியும்,செல்வச் செழிப்பும் நிரம்பிக் கொண்டே இருக்கும்.
சகலமும் சிவார்ப்பணம் 
ஓம் நமச்சிவாய

 நன்றி இணையம்

வாட்ஸ் ஆப்(பு) உலகம்-போதும் சொந்தமே.,

மணக்கால் அய்யம்பேட்டை | 12:57 PM | Best Blogger Tips
Image result for வாட்ஸ் ஆப்(பு) உலகம்-போதும் சொந்தமே.,
முன்
 கடந்து போவோரின் முகம் காண முடியவில்லை.
பின் நின்று சிரிப்போரின் எண்ணம் எனக்கு புரியவில்லை.
தலை தாழ்ந்தே எங்கும் பயணம்.
தொடுதிரையை தொட்டபடி உள்ளங்கையில் தான் உலகம்.
என் கைபேசி காதலியானாள்- நான்
கட்டிய மனையாள் நெடுந்தூரம் போனாள்...
உற்றாரும் உறவினரும் Family குரூப்பில்,
நண்பனும் அவனின் நண்பனும் நட்பெனும் குரூப்பில்.
சாமக் கோழி கூவிய பின்னும், கொக்கரக்கோ கேட்கும் முன்னும்,
வாட்ஸ்சாப்பில் மூழ்கலானேன் - நிஜமெனும் வசந்தத்தை நிழலாலே மறந்தும் போனேன்.
எவர் எவருக்கோ பிறந்த நாள் வாழ்த்து.. அடுத்தவர் இழப்பிற்கு  துக்கச்சேதி.
Hi என எவரோ அனுப்ப
Hai என பதிலுரைத்தேன் - ஏனோ
நான் பெற்ற பிள்ளை
'அப்பா'என்றழைக்க,
சற்றே புருவம் உயர்த்தி
பார்வையாலே சுட்டெரித்தேன்...
அடுத்தவரின்,
Status பார்த்து ரசித்தேன்,
profile பார்த்து வியந்தேன்,
Picture Msg பார்த்து லயித்தேன்,
video பதிவிறக்க ஆர்வத்தில்.
கை அலம்பியபின் யோசித்தேன்.
நான் என்ன சாப்பிட்டேன் என்பதை...
மாமன் வீட்டு மீன் குழம்பு,
மாமி பொறித்த அப்பளம்,
தங்கை வீட்டு தக்காளிச்சோறு,
மதனி சொன்னாள் கூட்டுக்கறி என்று இத்தனையும் மனதில் கொண்டு, நித்தம் நித்தம் சண்டையிட்டேன்,
அமிர்தம் தந்த மனையாளிடம்.
இது நஞ்சை விட கேவலமென்று...
நானாய் சிரித்தேன்,
நானாய் அழுதேன்,
நானாய் வியந்தேன்,
நானாய் ரசித்தேன்-ஏனோ
நான்,
நானாய் மட்டும் இல்லை...
ஆண்ட்ராய்டில் அனைத்தும் உள்ளதென அங்கலாய்த்தேன்.
என் குடும்பம் விலகி போவதை கண்டும் கூட
Network கிடைக்கும் இடம் தேடி அலையலானேன்...
கீமோஜியில் கூட
சிரிப்பு, அழுகை, சோகம், வெட்கம் ,
ஆடல், பாடல், குடும்பம், நட்பு என அனைத்தும்.
ஆனால்...
நான் நிமிர்ந்து பார்க்கும் போது
என் முன்னே எவருமில்லை.,
சுற்றமும், நட்பும்
உள்ளங்கை உலகத்தோடு எனை கடந்து போயினர்...
இது வாட்ஸ் ஆப்(பு) உலகம்-போதும்
சொந்தமே.,
இனி என்னோடு நேரினில் புன்னகையிடுங்கள்.
நட்பே., வா தெருவோர டீக்கடை நமக்காய் தவம் தவம் கிடக்கிறது...! படித்ததில் மனதை நெருடியது.....

நன்றி இணையம்