நோய்கள்ஏற்படக் காரணம்: மூட்டு வலி - சில காரணங்களும்

மணக்கால் அய்யம்பேட்டை | 6:20 PM | Best Blogger Tips

அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்பமனிதர்களுக்குஏற்படும்

நோய்களின் எண்ணிக்கையில் பெருகி வருகிறது எனலாம்.

நோய்கள் பெருகுவதற்குக் காரணமாக உண்ணும்உணவு
சுற்றுச்சூழல் சுகாதாரமின்மை போன்றபல காரணங்களைக் கூறலாம். இவற்றையெல்லாம் கண்காணித்து மிகுந்தகவனத்துடன் செயல்பட்டபபோதிலும் ஏதாவது ஒரு நோய் தாக்குதலுக்கு அவ்வப்போது ஆளாகி வருகிறோம்.

நோயின் அளவு ஒருபுறம் அதிகரித்துக் கொண்டே போனாலும் 

அதனைத் தடுக்க மருத்துவமுறைகளும் உருவாகிக்கொண்டுதான்
உள்ளன.

வயது முதிர்வு என்றாலே முதலில் எட்டி பார்க்கும் நோயில் முக்கியமானது இந்த மூட்டு வலி. அதிலும் தற்போது நச்சு கலந்த உணவு வகைகள், இயற்கையில் விளையும் பொருளை நேரடியாக உட்கொள்ள முடியாத நிலை, இது போன்ற பல காரணங்களால்
வராத வியாதி எல்லாம் வந்து பாடாய் படுத்துகின்றது.

வாத நோய்களில் நாள்பட்ட மூட்டு வலி மிகவும் கடுமையாக இருக்கும். அதிலும் இந்த காலத்தில் இளைஞர்களும் இதனால் அவதிப்படுகின்றனர். இந்த வலி வந்தால், மூட்டுகளில் வீக்கத்துடன் கடுமையான வலியும் வரும். இத்தகைய மூட்டு வலி வருவதற்கு காரணம் உடலில யூரிக் ஆசிட்டின் அளவு அதிகமாக இருப்பதே ஆகும்.

நாளடைவில் பெரிய நோயாக மாறும் இந்த மூட்டு வலிக்கு நமது அன்றாட உணவு முறைகளே போதுமானது. உணவில் உள்ள கரோட்டீன் மூலம் வலியை நிவாரணம் செய்யமுடியும். இந்த கரோட்டீன் நாம் அன்றாடம் உபயோகிக்கும் வெங்காயத்தில் அதிகப்படியாக உள்ளது.

அதே சமயம் எப்படி ஒருசில உணவுகள் மூட்டு வலிகளுக்கு தீர்வு தருகின்றதோ, அதேப் போல் ஒருசில உணவுகள் பாதிப்பையும் ஏற்படுத்தும்.

முக்கியமாக யூரிக் ஆசிட் அதிகம் உள்ள உணவுகளான தக்காளியை சாப்பிட்டால், இன்னும் மூட்டு வலியானது அதிகமாகுமே தவிர குணமாகாது. எனவே வாத நோய்கள் வந்துவிட்டால், உண்ணும் உணவில் கவனமாக இருக்க வேண்டும்.

இன்றைய தேதியில் முக்கிய வாத நோய்களில் ஒன்றானது ஆர்த்ரிடிஸ் (ARTHRITTIS), இதனை கட்டுப்படுத்த எந்தெந்த உணவுகளை உண்ண வேண்டும், எந்த உணவுகளை உண்ண கூடாது என்று தெரிந்து கொள்வதே புத்திசாலித்தனம்.

செர்ரி:

சாப்பிடவும், செர்ரியில் உள்ள ஆந்தோசயனின்கள், குருத்தெலும்புகள் மற்றும் ஜவ்வுகளை வலுப்படுத்த உதவும். இதனால் மூட்டு வலி இருப்பவர்கள், இதனை சாப்பிட்டால், வலியை குறைத்து, மூட்டுகளை வலுவாக்கலா,.

வெங்காயம்:

சாப்பிடவும் வெங்காயத்தில் க்யூயர்சிடின் (quercetin) என்னும் கெமிக்கல் உள்ளது. இந்த கெமிக்கல் அஸ்பிரின் (aspirin) போன்றே, ஒரு சிறந்வலி நிவாரணி.

சர்க்கரை:

தவிர்க்கவும், மூட்டு வலிகளுக்கு சர்க்கரை மிகவும் கேடு விளைவிக்கும் ஒரு உணவுப் பொருள். ஏனெனில் சர்க்கரை அதிகம் சாப்பிட்டால், உடல் எடை அதிகமாவதால், மூட்டுகளில் அழுத்தம் அதிகரித்து, வலியும் அதிகமாகும்.

தக்காளி:

தவிர்க்க வேண்டிய முக்கிய பழம். தக்காளியின் விதைகளில் யூரிக் ஆசிட் அதிகம் உள்ளது. எனவே தக்காளியை அதிகம் சாப்பிட்டால், உடலில் யூரிக் ஆசிட்டின் அளவானது அதிகமாகி, வலியானது இன்னும் கடுமையாகிவிடும். எனவே இதனை தவிர்ப்பது நல்லது.

தானியங்கள்:

தவிர்க்கவும், கோதுமை, பார்லி மற்றும் ஓட்ஸ் போன்றவற்றில் சிம்பிள் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. எனவே அவற்றை சாப்பிடும் போது, அவை ஆர்த்ரிடிஸ் நோய்க்கான அறிகுறியை அதிகரிக்கும்.

மஞ்சள்:

சாப்பிடவும், மசாலாப் பொருட்களில் மஞ்சளும் ஒன்று. அதுமட்டுமின்றி, மஞ்சள் ஒரு கிருமி நாசினி. எனவே இதில் உள்ள மருத்துவப் பொருளானது, உடலில் உள்ள காயங்களை குணப்படுத்தி, மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தை குறைத்துவிடும்.

கடல் சிப்பி:

தவிர்க்கவும், சிப்பிகளில் ப்யூரின் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், யூரிக் ஆசிட்டின் அளவி அதிகமாகி, மூட்டுகளில் வலியும் அதிகமாகும்.

கெஃப்பைன்:

தவிர்க்கவும், கெஃப்பைன் உடலில் வறட்சியை ஏற்படுத்தி, மூட்டுகளில் வலியை அதிகரிக்கும். மேலும் அவை உடலில் உள்ள சத்துக்களை வெளியேற்றி, மூட்டுகளில் வலியை அதிகரிக்கும்.

பூசணிக்காய்:

பூசணிக்காயில் கரோட்டீன் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை சாப்பிடுவதால், மூட்டுகளில் ஏற்படும் காயங்கள், வீக்கங்கள் மற்றும் வலிகள் போன்றவற்றை நாளடைவில் குணமாகும்.

ஆலிவ் ஆயில்:

சாப்பிடவும் , இந்த எண்ணெயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளதால், அவை மூட்டுகளில் எந்த பிரச்சனை இருந்தாலும் சரிசெய்யும்.

க்ரீன் டீ GREEN TEA:

சாப்பிடவும், க்ரீன் டீயில் நிறைய ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. எனவே அவை உடலின் மூட்டுகளில் ஏற்படும் வலியின் அளவை குறைத்துவிடும். மேலும் இதில் உள்ள நிக்கோட்டின் ஒரு சிறந்த வலி நிவாரணி.

பால்:

தவிர்க்கவும், பாலில் அதிகமான அளவில் ப்யூரின் இருப்பதால், அவை யூரிக் ஆசிட்டின் அளவை அதிகரிக்கும். எனவே இதனை தவிர்க்க வேண்டும்.

ஆரஞ்சு:

சாப்பிடவும், ஆரஞ்சு பழத்தின் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளதால், அவை எலும்புகளுக்கு ஆரோக்கியத்தை தரும்.

இஞ்சி:

சாப்பிடவும், இஞ்சியிலும் மஞ்சளைப் போன்ற மருத்துவக் குணம் உள்ளது. எனவே மூட்டு வலிகள் இருப்பவர்கள் தினமும் இஞ்சியை சேர்த்துக் கொள்வது சிறந்த நன்மையைத் தரும்.

சமையல் எண்ணெய்:

தவிர்க்கவும் சமையல் எண்ணெய்களான சோயா பீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய்களில் அதிகமான அளவில் ஒமேகா-6 ஃபேட்டி ஆசிட் இருக்கிறது. இந்த ஃபேட்டி ஆசிட்கள் மூட்டுகளில் காயங்கள் மற்றும் வலிகளை அதிகமாக்கும்.

மது:

தவிர்க்கவும், மது பழக்கத்தால் உடலில் கால்சியம் சத்துக்கள் சரியாக உறிஞ்சப்படாமல், எலும்புகளை வலுவிழக்கச் செய்யும். அதிலும் இதனை கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குடித்தால், கால்சியம் குறைபாடு ஏற்பட்டு, உடல் நிலை மோசமாகிவிடும்.

மீன்:

சாப்பிடவும், மீனில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளதால், அவை உடலின் மூட்டுகளில் உள்ள காயங்களை குணப்படுத்தும். மேலும் அவை உடலில் உள்ள குருத்தெலும்பு திசுக்களை(Cartilage tissue) சாப்பிடும் உற்பத்தியை தடுத்துவிடும்.

மாட்டிறைச்சி:

தவிர்க்கவும், மூட்டுகளில் வலி இருப்பவர்கள், பாஸ்பரஸ் அதிகம் உள்ள உணவுகளான மாட்டிறைச்சி போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த நேரம் உடலில் பாஸ்பரஸ் அதிகம் இருந்தால், எலும்புகளில் உள்ள நிறைய கால்சியத்தை இழக்க நேரிடும்.

காய்கறிகளில் தவிர்க்க வேண்டியவை:

கத்திரிக்காய், சிவப்பு குடைமிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவற்றில் அல்கலாய்டுகள் அதிகம் இருப்பதால், அவை மூட்டுகளில் காயங்களை அதிகப்படுத்தி, குணமாகிக் கொண்டிருக்கும் மூட்டு வலியையும் குணமாகாமல் தடுக்கும். எனவே இந்த காய்கறிகள் உணவில் சேரமால் கவனம் கொள்ளவும்.

Cardiospermum Halicacabum என்ற அறிவியல் பெயர் கொண்ட முடக்கத்தான் கீரை, முடக்கு+அறுத்தான் = முடக்கறுத்தான் என்பதிலிருந்து உருவானது. சில நாட்களுக்கு முன்பு கழுத்துவலிக்கு முடக்கத்தான் கீரையைப் பயன்படுத்த சொன்னோம். முடக்கத்தான் கீரையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம். அதன் பயன்கள் என்ன என்பதை முழுமையாகப் பார்க்கலாம்.

முடக்கத்தான் கீரை சூப் செய்யும் முறை:

முடக்கத்தான் கீரையை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் அலசி ஒரு தடவை அரிந்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்கவைத்து முக்கால் டம்ளர் நீராகி இறக்கி, அதில் சிறிது உப்பு, மிளகு போடி போட்டால் சூப் ரெடி. கசப்பாக இருக்காது. சூப் சுவையாய் இருக்கும். தினமும் காலையில் காபி டீக்கு பதிலாக இந்த சூப்பைக் குடிக்கலாம்.

இதை தொடர்ந்து காபி, டீக்குப் பதிலாக சாப்பிட்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை நெருங்காது.

இதை, குறைந்தது மாதம் இரு முறையாவது உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலியிலிருந்து நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும்.
முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும்.

கை, கால்கள் முடங்கிப் போய்விடாமல் தடுப்பதால் இந்தக் கீரைக்கு முடக்கு + அற்றான் என்றக் காரணப் பெயர் வந்தது. அது மருவி முடக்கத்தான் என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது.

இந்த‌ கீரையில் தோசை செய்வ‌துதான் வ‌ழ‌க்க‌ம். துவைய‌லும் செய்ய‌லாம். ப‌ச்சைக்கீரை சிறிது க‌ச‌க்கும். ஆனால் ச‌மைத்த‌ப்பின் அவ்வ‌ள‌வாக‌த் தெரியாது.

ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ் யுனிவர்சிட்டி முடக்கத்தான் கீரையிலுள்ள "தாலைட்ஸ்" ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி படைத்திருப்பதை அறிந்து, மேலும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டுள்ளார்கள்.

இதன் சிறப்புக் குணம் நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து. சிறு நீரகத்திற்கு எடுத்துச்சென்று விடும். இதுபோல் எடுத்துச்சென்று சிறுநீராக வெளியேற்றும்போது, அது சோடியம் மற்றும் பொட்டாசியம் இவைகளை நம் உடலிலே விட்டு விடுகிறது. இது ஒரு மிக முக்கியமான இணையான மாற்றத்தை நம் உடலில் ஏற்படுத்துகிறது. இதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை. மூட்டுகளுக்கு கனிப்பொருள் சக்தியும் அளிக்கிறது.

முடக்கத்தான் கீரையை தோசை மாவில் கரைத்து, தோசை செய்து சாப்பிட வேண்டும். அந்தக் கீரையைக் கொதிக்க வைத்து உண்ணக் கூடாது. அதனுள் உள்ள மருத்துவ சத்துக்கள், கொதிக்க வைப்பதின் மூலம் அழிந்து விடும்.

மழைக்காலங்களில் மட்டுமே இந்தக் கீரை கிடைக்கும். முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில், ஏறத்தாழ எல்லோர் வீட்டுக் கொல்லைப் புறத்திலும் இது படர்ந்து கிடக்கும்.

Via FB  ஆரோக்கியமான வாழ்வு

பழகிய பொருள்... அழகிய முகம்! பியூட்டி பார்லர் பக்கம் போகவேண்டாம் !!!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 5:56 PM | Best Blogger Tips

பளீர் பளபளப்பையும், சூரியனும் கொஞ்சம் வெட்கப்படக் கூடிய நிறத்தையும் அள்ளி அள்ளித் தருவதில் ஒரு வள்ளல் பப்பாளி. வறண்ட மேல் தோலை அகற்றி, புதிய தோலை உருவாக்குகிற அற்புத சக்தி பப்பாளிக்கு உண்டு. பப்பாளி மருத்துவத்தை செய்து பாருங்களேன்... பலே பப்பாளி தரும் பளீர் பளபளப்பில் சொக்கிப் போவீர்கள்!

எப்போது பார்த்தாலும் எண்ணெய் வழிந்து டல்லாக இருக்கிறோமே என்று கவலைப்படுகிறவர் களுக்காகவே இந்த பப்பாளி கூழ் மசாஜ்...

பப்பாளி பழ தோலை சீவி கூழாக்குங்கள். இந்த கூழ் & ஒரு டீஸ்பூனுடன், முல்தானி மட்டி | அரை டீஸ்பூன் கலந்துகொள்ளுங்கள்.

இதை முகத்தில் பூசி, நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு, மிதமான சுடுநீரில் கழுவுங்கள். முகம் ‘பளிச்’ என்று பிரகாசிக்கும். அதோடு, மேனியை சிவப்பாக்கும் மந்திரமும் இருக்கிறது இந்த மசாஜில்!

ஆண்களின் முகம் போல் சொரசொரப்பாக இருக்கும் சிலரின் முகம். அவர்களுக்கான சிறப்பு மருந்து இருக்கிறது, பப்பாளியின் தோலில்.

பப்பாளி தோலை வேகவைத்து அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்தக் கூழை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். இந்த சிகிச்சையைத் தொடர்ந்து செய்து வந்தால், தொடத் தொட மிருதுவான சருமம் கிடைக்கும்.

கண்ணுக்குக் கீழ் கருவளையம், கருமை படர்தல், கன்னத்தில் கருந்திட்டு என்று கருமை ஆக்கிரமித்த பகுதிகளை நார்மல் நிறத்துக்குக் கொண்டு வருவதில் பப்பாளி ஒரு நிபுணர்.

சோற்றுக் கற்றாழை இலை ஒன்றின் ஜெல்லுடன், பப்பாளி கூழ் & 1 டீஸ்பூன் கலந்துகொள்ளுங்கள்.

இதை கழுத்திலிருந்து மேல்நோக்கி முகம் முழுவதும் நன்றாகத் தேய்த்து, இது நன்றாகக் காய்ந்ததும் தண்ணீரால் கழுவுங்கள். வாரம் இருமுறை இந்த சிகிச்சை செய்தாலே கருப்பெல்லாம் காணாமல் போய்விடும்.

(நார்மல் சருமம் கொண்டவர்களும் இதை ஒரு ‘ஃபேஸ் பேக்’ ஆக உபயோகிக்கலாம்!)

இளமையையும் நிறத்தையும் அள்ளிக் கொடுக்கும் இந்த பப்பாளி பேஸ்ட் குளியல்...

பப்பாளி பழக் கூழ், மஞ்சள் வாழைப்பழக் கூழ், சந்தனப்பொடி, பயத்தமாவு பொடி... நான்கை யும் ஒரே அளவு எடுத்து, சூடான நீரை ஊற்றி, பேஸ்ட் ஆக்குங்கள்.

முகம் முதல் பாதம் வரை இதைப் பூசி, பத்து நிமிடம் ஊறவிட்டு, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை ஊற்றி குளியுங்கள். 10 நாளைக்கு ஒரு முறை இப்படி குளித்து வந்தால், இறந்த செல் புதுப்பிக்கப்பட்டு, அழகும் இளமையும் அள்ளிப் போகும்.

முகத்தைப் பராமரிக்கும் அளவுக்கு பலரும் பாதத்தின் மீது கவனம் செலுத்துவதில்லை. இதனால், ஒட்டுமொத்த உடம்பையும் தாங்கிப் பிடிக்கும் பாதத்தில் சுருக்கமும், கருமையும் படர்ந்து கரடு முரடாகிவிடும். இதற்கு பப்பாளி தரும் டிப்ஸ் இதோ...

பப்பாளி கூழ் & 2 டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் தூள் & கால் டீஸ்பூன், விளக்கெண்ணெய் & கால் டீஸ்பூன் மூன்றையும் கலந்து பேஸ்ட் ஆக்குங்கள்.

இந்த பேஸ்ட்டை பாதங்களில் தடவி, காய்ந்ததும் கழுவுங்கள். கருமையும் சுருக்கமும் காணாமல் போவதுடன் மெத்மெத்தென்ற பாதங்கள் கிடைக்கும்.

சிவந்த மேனியை விரும்புகிறவர்களுக்கான ஸ்பெஷல் பேக் இது...

உலர்ந்த திராட்சை & 10, கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம் & 1, இவற்றை முந்தைய நாளே வெந்நீரில் ஊறவைத்து, மறுநாள் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் பப்பாளி கூழ் & அரை டீஸ்பூன் கலந்துகொள்ளுங்கள்.

இதை முகத்துக்கு ‘பேக்’ ஆகப் போட்டு, 15 நிமிடம் கழித்து மிதமான சுடுநீரில் கழுவி வர, சிவப்பழகு க்ரீம் விளம்பரங்களில் வரும் பெண்கள் போன்ற மந்திர மாற்றத்துடன் ஜொலிப்பீர்கள்.
‘‘உறுத்தும் முடி நீக்க உதவுங்கள் ப்ளீஸ்...’’

‘‘என் முகத்திலும், கை, கால்களிலும் அதிகமாக முடி முளைத்திருந்தது. இதற்காக பியூட்டி பார்லர் போய் வாக்ஸிங்கும் த்ரெடிங்கும் செய்யத் தொடங்கினேன். இப்போது பார்த்தால் அந்த இடங்களில் முன்பைவிட அதிகமாகவும் தடிமனாகவும் முடி வளருகிறது. பார்லர் போகாமல் இருக்கவே முடியவில்லை. இந்தப் பிரச்னையிலிருந்து விடுபட, உதவுங்கள் ப்ளீஸ்...’’

‘‘பெண்களுக்கு முகம் மற்றும் இதர பாகங்களில் அதிக அளவு முடி வளர்வதற்குக் காரணமே, ஹார்மோன் மாற்றங் களும் பழக்கவழக்கங்களும்தான். த்ரெடிங், வாக்ஸிங் போன்ற வற்றைச் செய்யும்போது முடி அடர்த்தியாவதுடன், அதிகமாக வளரவும் தொடங்கும்.

முகத்தில் இருக்கும் மீசை, தாடியையும், கைகளில் புசுபுசுவென வளர்ந்த முடிகளையும் நிரந்தரமாக அகற்ற இயலாது. ஆனால், முடியின் கருமையையும், வளர்ச்சியையும் தடுத்து, வலுவிழக்கச் செய்வதுடன், முடிகளை உதிர வைக்கவும், மேற்கொண்டு முடி வளராமல் தடுக்கவும் சில சிகிச்சைகள் இருக்கின்றன.

சுட்ட வசம்புத்தூள், குப்பைமேனி கீரை பவுடர், கோரைக்கிழங்கு பவுடர், கஸ்தூரிமஞ்சள் பவுடர்... இந்த நான்கையும் சம அளவு கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

உடம்பில் இருக்கும் தேவையற்ற முடிகளை அகற்றி, அழகைக் கொடுக்கும் அசத்தல் மிக்ஸ் இது! மஞ்சள் பூசிக் குளிப்பதுபோல் இந்த பவுடரை முகம் முதல் பாதம் வரை நன்றாக தேய்த்து குளியுங்கள். புருவத்தில் இந்த பவுடர் படுவதால் முடி உதிர்ந்துவிடுமோ என்று பயப்பட வேண்டாம். வாரம் இருமுறை குளித்து வந்தாலே முகம், உடம்பில் இருக்கும் தேவையற்ற முடிகள் நிறம் மாறி, பின் உதிர்ந்துவிடும்.

மிருதுவான ப்யூமிக்ஸ்டோனை (நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்) வாங்குங்கள். கலந்து வைத்திருக்கும் மிக்ஸை குழைத்து ப்யூமிக்ஸ்டோனில் தடவி, முடி இருக்கிற பகுதிகளில் லேசாகத் தேயுங்கள். இதை தினமும் செய்து வந்தாலும் முடி உதிரும். மேற்கொண்டு முடி வளராது.

த்ரெடிங், வாக்ஸிங் என்று அடிக்கடி பியூட்டி பார்லர் பக்கம் போகிறவர்கள், தினமும் முகம், கை, கால்களை கழுவும்போதெல்லாம் சோப்புக்கு பதிலாக இந்த மிக்ஸை பயன்படுத்தலாம். இதனால், முடியை அகற்றியதால் ஏற்பட்ட கருமையும் புள்ளிகளும் மறைவதுடன் சருமமும் மிருதுவாகும்.’’

Via FB ஆரோக்கியமான வாழ்வு

திரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து

மணக்கால் அய்யம்பேட்டை | 5:55 PM | Best Blogger Tips

இன்றைய காலத்தில் கடினமாக உழைப்பதை விட, புத்திசாலித்தனமாக வேலையை முடிப்பதே மிகவும் முக்கியம். அதைப்போல் நமது பிரச்சனைகளை சரியாகத் தீர்க்கும் விதமாக எதையும் கையாள வேண்டியுள்ளது. இதற்கு உடலும் உள்ளமும் முழுத் தகுதியுடன் இருந்தால் தான் இவை சாத்தியமாகும். உடலும் உள்ளமும் முழுத்தகுதியுடன் விளங்குவதற்கு, அன்றாட வேலைகளை ஒரு ஒழுங்கு முறையுடன் செய்து வர வேண்டும். முறையான மற்றும் கட்டுப்பாடான உணவுப்பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். வாழ்க்கையை உடலளவில் மிகவும் வசதியான முறையில் வாழ்கிறோம். ஆனால், மனதளவில் மிகவும் அழுத்தம் நிறைந்த வாழ்க்கையை தான் வாழ்கிறோம். இத்தகைய வாழ்க்கை முறை சீக்கிரமாகவே முதுமையாக உணர வைத்து விடும் அல்லது பல நோய்களுக்கு வழிவகுக்கும்.

திரிபலா என்றால் என்ன?

திரிபலா என்பது பாரம்பரிய ஆயுர்வேத மருந்து. இது ஒரு ரசாயனமாகவும், காயகல்பமாகவும் கருதப்படுகிறது. மூன்று மூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள் தான் திரிபலா. அம்மூன்று மூலிகைகளாவன நெல்லிக்காய் (Emblica officinalis),கடுக்காய் (Terminalia chebula) மற்றும் தான்றிக்காய் (Terminalia belerica) ஆகும்.

திரிபலா எப்படி நமக்கு உதவுகின்றது?

திரிபலா என்பது அற்புதமான ஆயுர்வேத மருத்துவத் தயாரிப்பு ஆகும். ஆயுர்வேத மருத்துவர்களால், உலகம் முழுவதும் பரவலாக எந்த நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுவது திரிபலா. சர்க சம்ஹிதா என்னும் ஆயுர்வேத நூலில் முதல் அத்தியாயத்திலேயே திரிபலாவைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான விஷயமாகும். நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய இம்மூன்றின் கலவையானது அற்புதமான காயகல்பமாகி, தேவர்களின் அமிர்தத்தினைப் போல் எந்த ஒரு வியாதியையும் தீர்க்கும் அற்புத சக்தியினைப் பெற்றுள்ளது.

நோய் எதிர்ப்புச் சக்தி

ஆயுர்வேதத்தில் திரிபலா என்பது இளமையை பாதுகாக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நமக்கு முதுமைத் தன்மையை நீக்கி இளமைத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் என்று பொருள். இது உடல் ஆரோக்கியத்தினை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டவும் உதவுகிறது. ஆரோக்கியமான வாழ்வில் நோய் எதிர்ப்புச் சக்தி என்பது ஒரு முக்கியமான அங்கமாகும். இது எப்போதுமே அதிகமாகவே இருக்க வேண்டும். நமது உடலில் இயற்கையாகவே அமைந்திருக்கும் தடுப்பு அரண்களைத் தாண்டி, உடலின் உள்ளே நுழையும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் 'ஆன்டிபாடி' (antibodies) எனப்படும் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய, இந்த திரிபலா உதவுகிறது.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்

உடலில் செல்களுக்கிடையில் நடைபெறும் வளர்ச்சிதை மாற்றத்தில், சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்டாக திரிபலா செயலாற்றுகிறது. நமக்கு முதுமையைத் தரும் முக்கியமான காரணியான "கட்டற்ற காரணிகளை" (free radicals) உற்பத்தி செய்யும் வாய்ப்பைக் குறைக்கிறது. மேலும் செல்கள் முறையாகச் செயல்படுவதற்கு முக்கியமாகத் தேவைப்படும் மைட்டோகாண்டிரியா, கோல்கை உறுப்புகள், உட்கரு ஆகியவை சிறப்பாகச் செயல்படுவதையும் திரிபலா தூண்டுகிறது.

செரிமானமின்மை

செரிமானக் கோளாறுகளை திரிபலா அற்புதமாக குணப்படுத்துகிறது. அதிலும் உணவுப்பாதையில், மலத்தினை வெளித்தள்ளும் குடலியக்கத்தை சீராக செயல்பட வைக்கிறது. மேலும் இரத்தத்தில் உள்ள கொழுப்பினை கரைக்க தேவைப்படும் பைல் (Bile) திரவத்தினை கல்லீரலிலிருந்து சுரக்கவும் உதவுகிறது. உணவுப்பாதையில் தேவையான கார அமிலநிலையை (pH level) தேவையான நிலையில் பேணுவதற்கும் துணை புரிகிறது.

மலச்சிக்கல்

திரிபலா ஒரு சிறந்த குடல் சுத்திகரிப்பானாகச் செயல்படுகிறது. மலச்சிக்கலுக்கு அதிகமாகப் பரிந்துரைக்கப்படும் இயற்கை மருந்து திரிபலாவாகும். உடலிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்கும் நச்சு நீக்கியாகவும் இது செயலாற்றுகிறது. சிறந்த மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.

வயிற்றுப் பூச்சிகளும் தொற்றுகளும்

வயிற்றில் பூச்சி வளர்வதையும், தொற்றுக்களையும் கட்டுப்படுத்தும் சக்தி வாய்ந்தது தான் திரிபலா. குறிப்பாக வயிற்றிலிருந்து நாடாப்புழுக்களையும், வளையப்புழுக்களையும் வெளியே அகற்றுவதற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் உடலில் பூச்சிகளும், நுண்கிருமிகளும் வளர்வதற்கு உதவாத நச்சு நிலையை உடலில் பேணுவதற்கு திரிபலா உதவுகிறது.

இரத்தசோகை

இரத்தத்தில் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க திரிபலா உதவுகிறது. இதன் மூலம் இரத்த சோகை என்னும் நோயைத் தீர்க்க முடியும். (இரத்த சோகை என்பது இரத்தத்தில், ஹீமோகுளோபின் எனப்படும் இரத்த சிவப்பு அணுக்களின் அளவு குறைந்து காணப்படும் நிலையாகும்).

சர்க்கரை நோய்

திரிபலா சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு மிக்கது. நமது கணையத்தினைத் (pancreas) தூண்டி, இன்சுலினை சுரக்கச் செய்கிறது. கணையத்தில்தான் இன்சுலினைச் சுரக்கும் லாங்கர்ஹான் திட்டுக்கள் (langerhans) எனப்படும் சுரப்பிகள் உள்ளன. மேலும் உடலில் குளுகோஸின் அளவை சமநிலையில் பேணுவதில் பெரும் பொறுப்பு வகிப்பது இன்சுலின் ஆகும். மேலும் திரிபலா கசப்புச் சுவையுடன் இருப்பதனால், சர்க்கரை நோயின் ஒரு நிலையான ஹைப்பர்கிளைசீமியா (hyperglycemia) எனப்படும் அதிக சர்க்கரை நிலையில், இதனை எடுத்துக் கொள்வது சிறப்பானது.

உடல்பருமன்

இயல்பை விட உடல் பருமனானவர்கள், திரிபலாவை உட்கொள்வது மிகவும் பயன்தரும். இதனுடைய மருத்துவக் குணத்தினால் உடலிலுள்ள கொழுப்பின் அளவினைக் குறைக்க முடியும். நமது உடலில் கொழுப்பு படிவதற்குக் காரணமான அடிபோஸ் செல்களைக் குறி வைத்து செயல்படுவதால், கொழுப்பின் அளவு குறைகிறது. இதன் மூலம் உடல் பருமன் கட்டுப்படுத்தப்படுகிறது.

சருமப் பிரச்சனைகள்

இது இரத்தத்தினைச் சுத்தம் செய்து இரத்தத்திலுள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும் தன்மை கொண்டிருப்பதால், சரும நோய்களுக்கான மருத்துவத்தில் பெரும் பங்காற்றுகிறது. இரத்தத்தினைச் சுத்திகரிக்கும் தன்மை கொண்டிருப்பதால், தொற்று நோய்களையும் தீர்க்கும் குணம் கொண்டுள்ளது.

சுவாசக் கோளாறுகள்
சுவாசப் பாதையிலுள்ள அடைப்புகளை நீக்கி சீரான சுவாசம் ஏற்பட பெரிதும் உதவுகிறது. சைனஸ் என்னும் நோயைத் தீர்க்கும் மருந்தாகவும் இது செயல்படுகிறது. மேலும் நமது சுவாசப்பாதையிலுள்ள சளியில் பாக்டீரியாக்கள் வளராமலும் இது தடுக்கிறது.

தலைவலி

தலைவலிக்கு நிவாரணமாகவும் திரிபலா பயன்படுகிறது. குறிப்பாக வளர்சிதை மாற்றத்தின் இடையூறுகளால் உண்டாகும் தலைவலிக்கு சிறப்பான நிவாரணத்தை அளிக்கிறது.

புற்று நோய்

புதுடில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வுகளின் படி, திரிபலாவுக்கு புற்றுநோயைக் குணப்படுத்தும் திறன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் செல்களில் மைட்டேடிக் நிலையில் ஸ்பிண்டில் வடிவத்தோற்றம் உண்டாவதைக் குறைக்க உதவி செய்கிறது. அதன்மூலம், புற்றுநோய் செல்களில் மெடாஸ்டேடிஸ் (metastasis) வளரும் அபாயத்தையும் குறைக்கிறது.

Via FB ஆரோக்கியமான வாழ்வு

சர்க்கரை வியாதிக்கும் கொலஸ் ற்றாலுக்கும் மருந்தாகும் வெந்தயம்

மணக்கால் அய்யம்பேட்டை | 5:52 PM | Best Blogger Tips
 சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்டிரால் என்பது நமது மக்களிடையே காணப்படும் சில பொதுவான நோய்களாகும். சர்க்கரை நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளுடன், வெந்தயம் உட்கொள்வது, உறுதுணையாய் செயல்படுகிறது.

* ஆரம்பக்காலத்தில், 25 கிராம் வெந்தயத்தை தினமும் இரண்டு வேலை, ஒரு வேலைக்கு 12.5 கிராம் (தோராயமாக இரண்டு தேக்கரண்டி) என்ற அளவில், இரண்டு முக்கிய உணவுகளாகிய காலை மற்றும் இரவு உணவுகளோடு எடுத்தும் கொள்ளலாம்

* வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊரவைத்தோ அல்லது பொடியாக இடித்து தண்ணீரிலும் மற்றும் மோரிலும் கலந்தோ உணவிற்கு 15 நிமிடங்கள் முன்னதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

* இரவு முழுவதும் ஊறவைக்கப்பட்ட விதைகள் அல்லது பொடியாக இடித்தெடுக்கப்பட்ட விதைகளை, தோசை, சப்பாத்தி, இட்லி, பொங்கல், உப்புமா, தயிர், பருப்பு மற்றும் காய்கறி கூட்டுகள் செய்யும் போது அவற்றுடன் இணைந்து பயன்படுத்தலாம். இப்படி செய்யும்போது விதைகளின் கசப்புத்தன்மை ஓரளவிற்கு குறைகிறது.

* இவைகளை தயார் செய்யும்போது உண்பவரின் ருசிப்புத்தன்மைக்கேற்ப உப்பையோ அல்லது புளியையோ சேர்த்து தயார் செய்யலாம்.

* இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்டிரால் அதிகளவு இருக்கும்வரை இவ்விதைகளை உட்கொள்ளலாம்.

* வெந்தயம் எடுத்துக்கொள்வதுடன் தினமும் நடைபயிற்ச்சி போன்ற உடற்பயிற்சிகளை செய்வதும் மிகவும் அவசியம். உடல் எடையை குறைப்பதின் மூலம், இன்சுலின் ஹார்மோனின் செயல்களை அதிகரிக்க செய்யும்.

* இவ்விதைகளை உட்கொள்ளும் நோயாளிகளில் சிலருக்கு ஆரம்பத்தில் வயிற்றுபோக்கு மற்றும் குடலில் வாயு உற்பத்தியாவது அதிகமாக காணப்படும்.

* வெந்தயத்தை உணவாக பயன்படுத்துவதுடன் பரிந்துரைக்கப்பட்ட மற்ற சர்க்கரைநோய் சிகிச்சை முறைகளையும் பின்பற்ற வேண்டும்। இப்படி பயன்படுத்தும்போது சர்க்கரை வியாதிக்கான மருந்துகளின் அளவு குறையலாம்.

*ஆயினும் உங்கள் மருத்துவர் மாத்திரமே நோயின் தன்மையை கொண்டு எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்தின் அளவுகளை தீர்மானிக்க முடியும்.

சர்க்கரை நோயினால் திடீரென ஏற்படும் உடல் நலக் கேடுகளுக்கு உடனடியாக மருத்துவ ஆலோசனையை நாடுவது அவசியம்.

Via FB ஆரோக்கியமான வாழ்வு

ஏலக்காய், சுக்கு கொழுக்கட்டை

மணக்கால் அய்யம்பேட்டை | 5:48 PM | Best Blogger Tips
தேவையானவை:

பச்சரிசி மாவு - 2 க‌ப்.
கடலைப் பருப்பு - 1/4 க‌ப்.
துருவிய தேங்காய் - 1 மூடி.
வெல்லம் - 100 கிராம்.
ஏலக்காய் பொடி, சுக்குப் பொடி - சிறிதளவு.
நெய் - 1 தே‌க்கர‌ண்டி.

செய்முறை:

கடலைப் பருப்பை வேகவைத்துக் கொள்ளவும்.

அத்துடன் வெல்லம், சுக்குப்பொடி, ஏலப்பொடி கலந்து மிக்சியில் அரைத்து வைக்கவும்.

பச்சரிசியை நீரில் ஊறவைத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் அரை டம்ளர் தண்ணீரை சூடாக்கி அதில் நெய்யைக் கலந்து, பச்சரிசி மாவைக் கொட்டிக் கிளறி இளந்தீயில் வதக்கிக் கொள்ளவும்.

சூடு ஆறினதும் இதை சிறு உருண்டைகளாக்கிக் கொண்டு, பூரிக்கு இடுவது போல வட்டமாக இட்டு, நடுவில் கடலைப்பருப்பு பூரணத்தை வைத்து மூடவும்.

இவற்றை எண்ணெய் தடவிய இட்லி தட்டில் ‌சி‌றிது ‌சி‌றிதாக ஆ‌‌வி‌யி‌ல் வேக வைத்து எடு‌க்கவு‌ம்.

சுவையான ஏல‌க்கா‌ய், சுக்கு கொழுக்கட்டை தயார்!
 Via FB ஆரோக்கியமான வாழ்வு 

50 வயதில் ஆரோக்கியமாக வாழ !..

மணக்கால் அய்யம்பேட்டை | 5:37 PM | Best Blogger Tips

50 வயதில் ஆரோக்கியமாக வாழ!..

வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ” 50 வயதுக்கு மேல் போய்விட்டாலே எப்பேற்பட்டவராக இருந்தாலும் இந்த பாடல் ஞாபகத்திற்கு வந்துவிடும். காரணம் நம் நோய்வாய் பட்டால் நம்மை கவனிப்பது யார்? என்ற பயம். 

உடல் நலனை பேணி பாதுகாத்துக் கொள்ளுதல் என்பது வாழ்க்கை முழுவதும் தேவைப்படும் மிக முக்கியமான ஒரு பழக்கமாகும். அதிலும் வயது அதிகம் ஆக, ஆக இந்தப் பழக்கம் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில், இளமை வயதைக் காட்டிலும், முதுமை வயதில் உடலுக்கு அதிகமான பராமரிப்பு தேவைப்படும். 

இந்த பராமரிப்பு, உடல் நலம் மட்டுமல்லாது, மன நலத்தையும், உணர்வுப்பூர்வமான நலத்தையும் வழங்கக் கூடியதாக இருக்க வேண்டும். வயது கூடும்போது, பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகலாம். எனவே 50 வயதுக்கு மேற்பட்டோர் எவ்வாறு ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என்று திகைக்காதீர். 

ஆரோக்கியம் என்பது பெரும்பாலும் நாம் அன்றாடம் உண்ணும் உணவையும், செய்யும் உடற்பயிற்சியையும், பழக்கவழக்கங்களையும் பொறுத்தே அமைகின்றது. கட்டுக்கோப்பான வாழ்க்கை முறையை பின்பற்றுவது கடினமாக இருந்தாலும், முதுமை பருவத்தில் ஆரோக்கியத்துக்கான உத்தரவாதமாக இருப்பதனால், எப்பாடுபட்டேனும் பழக்கப்படுத்திக் கொள்ளவும். 

இப்போது சில அடிப்படையான விஷயங்களை பின்பற்றுவதன் மூலம் எல்லா விதத்திலும் ஆரோக்கியமாக இருக்கக்கூடிய ஒரு வாழ்க்கை முறையை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்று பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது. அதை முடிந்தவரை பின்பற்றி பாருங்கள். 

உணவுப் பழக்கம்......... அன்றாடம் உண்ணும் காய்கறிகளோடு, பழங்கள், புரத உணவுகள், முழு தானியங்கள் மற்றும் அதிக அளவிலான தண்ணீர் ஆகியவற்றையும் சேர்க்க வேண்டும். முக்கியமாக, ஆரோக்கியமான தேர்வை எளிதான தேர்வாக ஆக்கிக் கொள்ளுங்கள். 

உதாரணமாக, ஒரு நாளின் தொடக்கத்தில் தண்ணீரை ஒரு பாட்டிலில் நிரப்பிக் கொண்டு, அதனை கண் எதிரில் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், உணவு அட்டவணையில் இல்லாத உணவை எடுத்துக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் அதனை சாப்பிட நேர்ந்தால், சரியான அளவில் உண்ணுதல் நலம். 

நடைப்பயிற்சி........ வாழ்வின் பரபரப்புகளுக்கிடையே எளிதாக மேற் கொள்ளக்கூடிய உடற்பயிற்சி, நடைப்பயிற்சியே ஆகும். செல்ல நாயை நடைபழகக் கூட்டிச் செல்வதோ அல்லது பேரக் குழந்தைகளோடு பேசிக் கொண்டே நடந்து செல்வதோ, எதுவாயினும், குறிக்கோள் என்பது உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வதாக இருக்கட்டும். இப்பயிற்சி உடலை உறுதி அடைவதற்கான பயிற்சியளித்து, இதயத்தை சீரான முறையில் இயங்க வைக்கும். 

தூக்கம்......... நல்ல தூக்கம், ஆரோக்கியத்தைப் பேணுவதில் முக்கியபங்கு வகிக்கிறது. இது உடலுக்கு ஓய்வளித்து களைப்பை அகற்றி, மூளையை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது. கனவு கலையாமல் உறங்க வேண்டுமெனில் போன்கள், டேப்லெட்கள், லேப்டாப் போன்ற சாதனங்களை வேறு ஒரு அறையில் வைத்து விட வேண்டும். 

இதன் மூலம், படுக்கச் செல்லும் முன்பு கடைசியாகவோ அல்லது காலை எழுந்தவுடன் முதன் முதலாகவோ இச்சாதனங்களை பார்க்கக் கூடிய வாய்ப்பைத் தவிர்க்கலாம். மேலும், இவற்றிலிருந்து பளிச்சிடும் ஒளியோ அல்லது அதிர்வலைகளோ தொந்தரவு செய்யாமல் இருக்கும். 

உடல் பரிசோதனை........ வழக்கமான பரிசோதனைகளை செய்து கொள்வதன் மூலம் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பது பற்றிய தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கலாம். குறிப்பாக கொழுப்புச் சத்து, ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி மற்றும் எலும்புருக்கி நோய் ஆகியவற்றுக்கான மருத்துவ பரிசோதனைகளை முறையாக மேற்கொள்வது அதிமுக்கியமாகும். 

மேலும் ஃப்ளூ காய்ச்சல், நிமோனியா, பெர்டுஸ்ஸிஸ், டிப்தீரியா மற்றும் டெட்டனஸ் ஆகிய நோய்கள் தாக்காமல் தடுக்கும் ஆற்றல் வாய்ந்த தடுப்பூசிகளை போட்டுக் கொள்வதை பற்றி மருத்துவருடன் கலந்து ஆலோசிக்கவும். 

மதுபானம்...... உடல் நலத்தைப் பாதுகாக்க வேண்டுமெனில், மதுபானம் அருந்துவதை குறைத்து கொள்ள வேண்டும். இப்பழக்கத்தை அறவே தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே குறைவாக அருந்துவது சிறந்த யோசனையாகும். மேலும், சிகரெட் பிடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். இதில் எந்த வகை அல்லது எத்தனை முறை எடுத்துக் கொள்கிறோம் என்பதெல்லாம் பொருட்டல்ல. இதனை முற்றிலுமாக தவிர்ப்பது நலம். 

நண்பர்கள்......... நல்ல சமூகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் மனதளவில் சிறப்பான நலம் கிடைக்கும். எங்கேனும் ஒன்றாகக் கூடி சமைத்தோ அல்லது திரைப்படத்திற்கோ சென்று, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பொழுதை இனிமையாகக் கழிக்க வேண்டும். 

அதற்காக எப்போதும் கூட்டத்தின் மத்தியில் சிறகடிக்கும் சமூக பட்டாம்பூச்சியாக இருக்க வேண்டியதில்லை. மனதுக்குப் பிடித்த சில நண்பர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களோடு அடிக்கடி தொடர்பு கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். 

மூளையின் ஆற்றலை மேம்படுத்தவும்......... மூளைத் திறனை மேம்படுத்துவதன் மூலம் இன்னும் பல வருடங்கள் ஆரோக்கியமாக வாழலாம். மூளையை திறம்படுத்த, அறிவையும், ஞாபக சக்தியையும் கூர்மையாக்கக் கூடிய பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 

புத்தகம் படித்தல், திரைப்படம் பார்த்தல், மூளைக்கு வேலை கொடுக்கக்கூடிய விளையாட்டுக்களான செஸ் மற்றும் ஸ்க்ராபிள் ஆகியவற்றில் ஈடுபடுதல், புதிர் விளையாட்டுக்களான குறுக்கெழுத்து மற்றும் சுடோகு போன்றவற்றை நிரப்புதல் போன்றவை அறிவை கூர்மையாக்கக் கூடிய சில வழிகளாகும். 

வெளியுலகம்.......... சுத்தமான வெளிக்காற்றை சுவாசிப்பதும், சூரிய ஒளியில் செல்வதும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு வித்திடக்கூடியனவாகும். ஒவ்வொரு நாளும் வெறும் 15 முதல் 20 நிமிடங்கள் மட்டும் சூரிய ஒளியில் நின்றாலே, உடலுக்குத் தேவையான வைட்டமின் டி கிடைத்துவிடும். அதிலும் காலைச் சூரியனின் ஒளி, மனநிலையை ஊக்கப் படுத்தக்கூடிய செரோட்டோனின் என்ற சுரப்பை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் வாய்ந்ததாகும். 

படுக்கையறை........ ஆரோக்கியமான தாம்பத்திய உறவு நலமான வாழ்க்கை முறையைப் பேணுவதற்கு உதவுகின்றது. பாலியல் தேவைகள் அனைவருக்கும் பொதுவானவை. முதுமையடையும் பருவத்தின் அத்தியாவசிய மற்றும் ஆரோக்கியமான பகுதியாகும். 

ஆதலால் ஆரோக்கியமான பாலுறவு வாழ்க்கையின் அங்கமாகத் தொடர்வது அவசியம். சொல்லப்போனால், ஆரோக்கியமான தாம்பத்திய உறவு, உடல்நலம், மனநலம் மற்றும் உணர்வுகளின் மேம்பாடு ஆகியவற்றை அளித்து, ஆரோக்கியத்தின் அனைத்து கூறுகளுக்கும் நலம் பயக்கக்கூடியதாகும். 

மனப்பான்மை........ சிறந்த மனப்பான்மையுடன் இருப்பது நம்மை பற்றி உயர்வாக நினைப்பதற்கு வழிவகுக்கும். அதற்கு எப்போதும் நல்லதே நடக்கும் என்று நம்ப வேண்டும். அனைத்தையும் உயர்வான நல்ல எண்ணத்தோடு நோக்குவது மனப்பூர்வமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் தன்னிறைவு கொள்ள வைக்கும். 

அதிலும் மனரீதியாகவும், உணர்வுரீதியாகவும் நன்றாக உணர்ந்தால், நல்ல உடல் நலத்தைப் பெறுவதற்கான செயல்களில் நம்மால் மிக எளிதாக ஈடுபட முடியும். 50-ல் வரும் முதுமை நிச்சயம் ஒரு சுமையல்ல, இதனை பிள்ளைகளும் உணர வேண்டும்.

முடக்கற்றான் கொடி..!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:59 PM | Best Blogger Tips
முடக்கற்றான் கொடி..!

முடக்கறுத்தான்/ முடக்கற்றான்/ முடர்குற்றான்/ மொடக்கொத்தான்

முடக்கு+அறுத்தான்= முடக்கறுத்தான் ( Cardiospermum halicacabum )

"சூலைப்பிடிப்பு சொறிசிரங்கு வன்கரப்பான்
காலைத் தொடுவலியுங் கண்மலமும் - சாலக்
கடக்கத்தானோடிவிடுங் காசினியை விட்டு
முடக்கற்றான் தனை மொழி"
- சித்தர் பாடல்-

கீல்பிடிப்பு, கிரந்தி, கரப்பான், பாதத்தைப் பிடித்த வாதம், மலக்கட்டு அத்தனையும் முடக்கற்றான் உபயோகித்தால் இந்த உலகை விட்டே ஓடிவிடுமாம்.

முடக்கற்றான் கொடிவகையைச் சேர்ந்தது. இது இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகிறது.குளிர்ந்த ஈரச்சத்துள்ள இடத்தில்தான் முடக்கற்றான் பயிராகும்.தோட்டங்கள், வீட்டு வேலி இவைகளிலுள்ள பெரிய செடிகளின்மேல் படர்ந்து வளரும். உஷ்ண பிரதேசங்களில் முடக்கற்றான் கொடியைப் பார்க்கமுடியாது. வளமான இடங்களில் இந்தக் கொடிசற்று பெரிய இலைகளுடன் செழிப்பாகப் படரும். இந்தக் கொடியின்தண்டும் இலைக் காம்பும் மெல்லியதாகவே இருக்கும். இது ஏறுகொடியாக சுமார் 3.5 மீ. அளவு படரும்.

இதன் தண்டு, இலை, காம்பு எல்லாம் நல்ல பச்சை நிறமாகவே இருக்கும். இதன் பூ வெண்நிறமாக இருக்கும். இதன் காய் மூன்று பிரிவாகப் பிரிந்து உப்பலான மூன்று தனித் தனி அறைகளைக் கொண்டதாக இருக்கும். ஒவ்வோர் அறையிலும் ஒரு விதை வீதம் ஒரு காயில் மூன்று விதைகள் இருக்கும். காயைப் பறித்துத் தோலை உறித்தால் உள்ளே மிளகளவு, பச்சை நிறமான விதைகள் இருக்கும். அதன் ஒரு பகுதியில் நிலாப்பிறைபோல் ஒரு வெண்ணிறக் குறி தோன்றும்.

இதன் காய் முற்றிய பின் பழுப்பு நிரமாக மாறிக் காய்து விடும். இதை மற்ற கீரைகளுடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம்.இதை தனியாக மருந்தாகவும் பயன் படுத்தலாம்.

இதன் இலையில் அடங்கியுள்ள சத்துக்கள்:

ஈரப்பதம்-83.3, புரதச்சத்து-4.7, கொழுப்புச் சத்து 0.6, மாவு சத்து 9.1, தாது சத்து 2.3, சக்தி-6 கலோரி முதலியவை உள்ளது. விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப் படுகிறது.

முடக்கு+அறுத்தான் = முடக்கறுத்தான் / முடக்கற்றான். இது மூட்டுக்களை முடக்கி வைக்கும்மூட்டு வாத நோயை அகற்றுவதால் முடக்கற்றான் எனப்பெயர் பெற்றது.

குழந்தை பிரசவிக்கும் நேரத்தில் ஒரு சில பெண்கள் ரொம்ப கஷ்டப் படுவார்கள் இவர்கள் வேதனையைக் குறைத்து, சுகமாகசுலபமாக பிரசவிக்கச் செய்ய இந்த முடக்கற்றான் நன்கு பயன்படுகிறது.

சுகப்பிரசவம் ஆக: 

முடக்கற்றான் இலையைத் தேவையான அளவுகொண்டு வந்து அதைக் காரமில்லாத அம்மியில் வைத்து மை போல்அரைத்து, பிரசவிக்கக் கஷ்டப்படும் பெண்களின் அடிவயிற்றில் கனமாகப் பூசிவிட்டால் கால் மணி நேரத்திற்குள் சுகப் பிரசவம் ஏற்படும். கஷ்டமோ, களைப்போ தோன்றாது. மருத்துவமனை அருகிலில்லாத கிராமங்களில் உள்ள மருத்துவம் பார்க்கும் பெண்களும், பாட்டி மார்களும் இந்த முறையையே கையாண்டு வருகின்றனர். இது கை கண்ட முறையாகும்.

மலச்சிக்கல், வாயு, வாதம், குணமாக: 

மூன்று நாட்களுக்கு ஒருமுறை முடக்கற்றான் இரசம் வைத்துச் சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள வாய்வு கலைந்து வெளியேறி விடும். வாய்வு, வாதம்,மலர்ச்சிக்கள் சம்பந்தப் பட்ட எல்லாக் கோளாறுகளும் நீங்கும்.

முடக்கற்றான் இரசம் தயாரிக்கும் முறை: 

ஒரு கை பிடியளவுமுடக்கற்றான் இலை, காம்பு, தண்டு இவைகளை ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளரளவு தண்ணீர் விட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி அந்த நீரை மட்டும் வடித்து, சாதாரண புளி இரசம் வைப்பது போல் அந்த நீரில் புளி கரைத்து, மிளகு, பூண்டு,சீரகம் சேர்த்து இரசம் தயாரிக்க வேண்டும்.

பாரிச வாய்வு குணமாக -: கைப்பிடியளவு முடக்கற்றான் இலையைக்கொண்டு வந்து நைத்து ஒரு சட்டியில் போட்டு இதே அளவு வேலிப்பருத்தி இலையையும், சூரத்து ஆவரையிலையையும் இத்துடன் சேர்த்துஇரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராக வடிகட்டிக் காலைவேளையில் மட்டும் தொடர்ந்து மூன்று நாட்களுக்குக் கொடுத்து வந்தால்பாரிச வாய்வு குணமாகும். தேவையானால் மூன்று நாட்கள் இடைவெளிவிட்டு, மறுபடி 3 நாளாக மூன்று முறை கொடுத்து வந்தால், பாரிசவாய்வு பூரணமாகக் குணமாகும்.

சுக பேதிக்கு :

ஒரு கைப்பிடியளவு முடக்கற்றான் இலையை ஒருசட்டியில் போட்டு, வெள்ளைப் பூண்டு பற்களில் ஐந்து நைத்துஇதில் போட்டு அரைது தேக்கரண்டி அளவு மிளகை ஒன்றிரண்டாக உடைத்து அதையும் சேர்த்து, இரண்டு டம்ளர் அளவு தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்து ஒரு டம்ளர் அளவிற்கு சுண்டக் காய்ச்சிய கஷாயத்தை வடிகட்டி விடியற் காலையில் சாப்பிட்டு விட்டால் பலமுறை பேதியாகும். அதிகமான பேதியினால் ஒரு எலுமச்சப் பழசாறு சாப்பிட்டால் பேதி உடனே நின்று விடும். இரசம் சாதம்மட்டும் சாப்பிடலாம். இரவு தேவையான பதார்த்தம் சாப்பிடலாம்.

முடக்கற்றான் இலைகளை எண்ணெயில் இட்டுக் காச்சி மூட்டு வலிகளுக்குப் பூசினால் நீங்கும். இதன் இலையை இடித்துப் பிழிந்துஎடுத்த சாற்றினை இரண்டு துளிகள் காதில் விட்டு வர காது வலி,காதில் இருந்து சீழ் வடிவது முதலியவை நீங்கும்.

முடக்கற்றான் இலையையும், வேரையும் குடி நீரிட்டு மூன்று வேளையாக அறுபது மில்லி வீதம் தொடர்ந்து அருந்திவர நாள்பட்டஇருமல் குணமாகும்.

சில பெண்களுக்கு மாதந்தோறும் ஒழுங்காக மாதவிலக்கு ஏற்படாது. இவர்கள் முடக்கற்றான் இலையை வதக்கி அடி வயிற்றில் கட்டிவந்தால் மாத விலக்கு ஒழுங்காக வரும்.

முடக்கற்றான் இலையை உலர்த்தி எடுத்த பொடியுடன், சித்திரமூல வேர் பட்டை, கரிய போளம் இவைகளையும் பொடி செய்துகுறிப் பிட்ட அளவு மூன்று நாள் அருந்தி வர மாதவிலக்கு ஒழுங்காக வரும்.

முடக்கற்றான் கொடி மல மிளக்கி செய்கை உடையது. இதன் கொடியைமுறைப்படி குடிநீரிட்டு அத்துடன் ஆமணக்கு எண்ணெய் சேர்த்துஅருந்த மலத்தைக் கழிக்கச் செய்யும்.

முடக்கற்றான் வேரை உலர்த்தி பின்னர் முறைப் படி குடி நீர் அருந்திவர நாள் பட்ட மூல நோய் குணமாகும்.

Via FB  சித்தர்கள் உலகின் முதல் விஞ்ஞானிகள்

சில சுவாரசியமான தகவல்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:01 PM | Best Blogger Tips
1.மார்ட்டின் கார்னர் எனும் புகழ் பெற்ற அமெரிக்க விஞ்ஞான காதாசிரியர் எழுதிய மிக சிறிய திகில் கதை ---> "உலகின் கடைசி மனிதன் தனியாக அறையில் உட்கார்ந்து இருந்தான். கதவு தட்டப்பட்டது."
2.நாம் இந்தியர்களுக்கு கடமைபட்டுவர்கள். அவர்கள் தான் கூட்டல் முறையை கண்டு பிடித்தவர்கள். அந்த கண்டுபிடிப்பு மட்டும் இல்லையென்றால் எத்தனையோ அறிவியல் முன்னேற்றம் நிகழாமல் போயிருக்கும் என்று சொன்னவர் அறிவியல் விஞ்ஞானி ஐன்ஷ்டீன்.

3.இரண்டாம் ரமேசஸ் என்ற பண்டைய கிரேக்க மன்னன் கிமு 1213 இல் தனது 90 வயதில் காலமானார். சிறந்த வீரன் 66 வருடங்கள் ஆட்சி புரிந்தார். இவருக்கு 111 மகன்களும் 66 மகள்களும் இருந்தனர். அபுசிம்பல் என்ற சரித்திர புகழ் பெற்ற கோவிலை கட்டியவர் இவரே.

4.புகழ் பெற்ற ஆங்கில கவிஞர் மில்டன் திடீரென்று பார்வை இழந்தார். ஆனாலும் அவர் எழுதுவதை நிறுத்தவில்லை. அவர் புகழ் பெற்ற இலங்க்கியங்கள் அனைத்தும் அவர் பார்வையிழந்த பின் எழுதப்பட்டவை.

5.உலக மொழிகளிலே குறைந்த சொற்க்களை கொண்ட மொழி - டாகி. கயான நாட்டின் ஒருசில பகுதிகளில் இது பேசபடுகிறது. இம்மொழியில் வெறும் 340 சொற்கள் மட்டுமே உள்ளன.

6.அரபு மொழியில் வாளுக்கும் ஒட்டகத்திற்கும் ஆயிரம் ஆயிரம் வார்த்தைகளுக்கு மேல் உண்டு.

7.தொல்காப்பியத்தில் கடவுள் வாழ்த்து கிடையாது.

8.மாவீரன் நெப்போலியன் ஏராளமான நூல்கள் அடங்கிய நூலகம் வைத்திருந்தார். அந்த நூலகத்தில் இடம் பெற்ற ஒரு தமிழ் நூல் கம்பராமாயணம்.

9.மாவீரன் நெப்போலியன் பூனையை கண்டால் பயந்து நடுங்கி போய்விடுவாராம்.

10.நீர்யானை பன்றி வகையை சேர்ந்தது.

11.நீர்யானை சிந்தும் வியர்வை சிவப்பாக இருக்கும்.

12.நீர்யானை பிறந்ததும் ஒரு சுண்டெலியை விட சிறிதாக இருக்கும்.

13.நீர்யானை கொட்டாவி விட்டால் அது தன் எதிரியை கோபமுடன் தாக்க போகுது என்று அர்த்தம்.

14.ஜீரோ வால்ட் மின்விளக்கு - 15 வால்ட் மின்சக்தி உடையது.

15.அடிபட்டால் மனிதனைப் போல் அழும் தன்மையுடையது கரடி.

16.ஒரு ஒட்டகம் இறந்து கிடப்பதை கண்டால் மற்றொரு ஒட்டகமும் அதிர்ச்சியில் இறந்துவிடும்.

17.ஒட்டகம் எவ்வளவு பசியில் இருந்தாலும் மாலை 6 மணிக்கு மேல் சாப்பிடாது.

18.தேக்கு மரத்தையும் வேப்ப மரத்தையும் கரையான்கள் அரிக்காது.

19.பாலைன் மச்டர்ஸ் நெதர்லாந்து நாட்டின் பெண்மணி. இவர் காலம் 1876 - 1895. இவர்தான் உலகிலேயே மிக குள்ளமான பெண்மணி. இவர் உயரம் வெறும் 61cm தான். இன்று வரை இவரைவிட ஒரு குள்ளமான பெண்மணி இன்னும் பிறக்கவில்லை.

20.பாகிஸ்தானில் பிறந்த இந்திய பிரதமர் திரு மன்மோகன் சிங். இந்தியாவில் பிறந்த பாகிஸ்தான் அதிபர் திரு. பர்வேஸ் முஷாராப்.

21. 13 அடிகள் கொண்ட நம் தேசிய கீதத்தை 52 நொடிகளுக்குள் பாடி முடிக்க வேண்டும்.

22.எவரஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்டு சாதனை படைத்திருக்கிறார் திரு. எரிக் வேயின். அவர் பார்வையற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

23.நீங்கள் யாரையாவது ஏமாற்றிவிட்டால், அவர்கள் ஏமாந்துவிட்டதாக அர்த்தமில்லை. அவர்கள் உங்களை அதிகம் நம்பி இருந்தார்கள் என்று அர்த்தம்.
 
Via FB இந்தியாவின் தமிழனும், தமிழனின் சாஸ்திரங்களும்
 
எந்த எண்ணெய் நல்ல எண்ணெய்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:01 PM | Best Blogger Tips

எந்த எண்ணெய் நல்ல எண்ணெய் என்கின்ற தேடல் காலங்காலமாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தினம் ஒன்றாக சந்தைக்கு வரும் ஒவ்வொரு புது எண்ணெயுமே ‘ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம்’ என விளம்பரப்படுத்திக் கொள்ள, மக்களின் குழப்பம் இன்னும் அதிகமானது தான் மிச்சம். இந்தக் குழப்பத்துக்கு விடை காண்பதற்கு முன், எண்ணெய் நல்லதா, கெட்டதா, அது ஏன் நம் உடலுக்கு அவசியம் என்கிற தகவல் நமக்கு முக்கியமானது..
எண்ணெய் என்பது கொழுப்பு… கொழுப்பு ஏன் நமது உடலுக்கு தேவை?

உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்க, செல்களின் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலத்தைக் கொடுப்பதற்கு, உள் உறுப்புகளைப்
பாதுகாப்பதற்கு எண்ணெய் தேவைப்படுகின்றது.

புரதத்திலும் மாவுச் சத்திலும் உள்ளதைப் போல 2 மடங்கு ஆற்றல், கொழுப்பில் இருந்து கிடைக்கிறது. ஒரு கிராம் புரதத்தில் கிடைப்பது 4 கலோரிகள் என்றால் அதே அளவு கொழுப்பிலோ 9 கலோரிகள்! கண்ணுக்குத் தெரிந்தது, கண்ணுக்குத் தெரியாதது என கொழுப்பில் 2 வகை. எண்ணெய், நெய், வெண்ணெய் என எல்லாம் கண்ணுக்குத் தெரிந்து நாம் எடுத்துக்கொள்கிற கொழுப்பு. அரிசி, பருப்பு, முட்டை, மீன், இறைச்சி, எண்ணெய் வித்துகள் போன்ற உணவுகளின் மூலம் உடலுக்குள் சேர்வது கண்ணுக்குத் தெரியாத கொழுப்பு. இது தவிர, சாச்சுரேட்டட் மற்றும் அன்சாச்சுரேட்டட் என கொழுப்பை இன்னும் 2 வகைகளாகப் பிரிக்கலாம்.

விலங்குக் கொழுப்பில் சாச்சுரேட்டட் வகை மிக அதிகம். இந்த வகைகொழுப்பு உடல்நலத்துக்கு நல்லதல்ல. ஆனாலும், கொழுப்பில் கரையும் வைட்டமின்களான ஏ மற்றும் டி-யை நம் உடலுக்கு உறிஞ்சிக் கொடுக்கும் வேலையை இந்த வகைக் கொழுப்புகளே செய்கின்றன.

அன்சாச்சுரேட்டட் அல்லது பாலி அன்சாச்சுரேட்டட் வகையை நல்ல கொழுப்பு என்கிறோம். ரத்தக்குழாய்களில் கொழுப்பு படியாமல் செய்வது இதுவே. தாவரக் கொழுப்பு எல்லாமே அன்சாச்சுரேட்டட் வகையறாதான். வனஸ்பதி மட்டும் விதிவிலக்கு. அதனால், அதை அதிகம் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். வனஸ்பதி மட்டுமல்ல… அறை வெப்ப
நிலையில் கெட்டியாகக் கூடிய எந்த வகை எண்ணெய் வகைகளும் ஆரோக்கியத்துக்கு நல்லதில்லை.

எந்த எண்ணெயில் என்ன இருக்கிறது?

பாமாயில்
இந்த எண்ணையில் பீட்டா கேரட்டின் (வைட்டமின் ஏ) உள்ளது. ஆனாலும், இதில் உள்ளது சாச்சுரேட்டட் கொழுப்பு என்பதால் தொடர்ந்து உபயோகிக்க முடியாது.

சூரியகாந்தி எண்ணெய்
பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகம் என்பதால், இது உபயோகத்துக்கு ஏற்றது.

கடலை எண்ணெய்
பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு மிதமாக உள்ளது. ஆனாலும், ரத்தக் குழாய்களில் கொழுப்பு படியச் செய்வதில் இதற்கும் பங்குண்டு. பாமாயில் அளவுக்குக் கெடுதலானது அல்ல.

தவிட்டு எண்ணெய்
ரைஸ் பிரான்ட் எண்ணெய் எனக் கேள்விப்படுகிறோமே… அதுதான் தவிட்டு எண்ணெய். இதய நோயாளிகளுக்கு மிக நல்லது.

நல்லெண்ணெய்
இதுவும் பாலி அன்சாச்சுரேட்டட் வகையைச் சேர்ந்தது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து, நல்ல கொழுப்பாக மாற்றும் தன்மை கொண்டது.

ஆலிவ் ஆயில்
இதய நோயாளிகளுக்கு ஏற்றது. இதை சூடுபடுத்தக் கூடாது. பொரிக்க, வறுக்கப் பயன்படுத்த முடியாது. சாலட்டுக்கு உபயோகிக்கலாம்.

தேங்காய் எண்ணெய்
சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகமுள்ளதால், ஆரோக்கியத்துக்கு ஏற்றதல்ல.

கடுகு எண்ணெய்
ஆன்ட்டி ஆக்சிடெண்ட் அதிகமுள்ளது. ஆன்ட்டி பாக்டீரியல் தன்மையும் கொண்டது. இதயத்துக்கு நல்லது. கடுமையான வாசம் காரணமாக, நம்மூர் மக்களுக்கு இந்த எண்ணெய் பிடிப்பதில்லை. வட இந்திய மக்கள், கடுகு எண்ணெயை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

ஒரு நாளைக்கு எவ்வளவு எண்ணெய்?
ஒருவருக்கு ஒரு நாளைக்கு 15 முதல் 20 கிராம் எண்ணெய் போதுமானது. அந்த அளவு அதிகமாகும்போது, ரத்தத்தில் சேரும் கொழுப்பின் அளவும் அதிகமாகும். ஒரு நாளைக்கு ஒருவருக்குத் தேவையான 1,800 கலோரி உணவில், 30 சதவிகிதம் கொழுப்பு இருக்கலாம். அந்த 30 சதவிகிதமும் நல்ல கொழுப்பிலிருந்து கிடைப்பதாக இருக்க வேண்டும். அதாவது உணவிலிருந்து கிடைக்கும் கொழுப்பாக இருப்பது நல்லது. மற்றபடி எண்ணெய், வெண்ணெய், நெய் போன்றவற்றிலிருந்து கிடைக்கும் நேரடிக் கொழுப்பு 15 முதல் 20 சதவிகிதத்தை மிஞ்சாமலிருப்பதுதான் சரி.

உபயோகித்த எண்ணெயா..? வேண்டவே வேண்டாம்!
பொரிக்கவோ, வறுக்கவோ ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை திரும்பத் திரும்ப உபயோகிக்கக்கூடாது. அப்படிப் பயன்படுத்துவதால், ‘டிரான்ஸ்ஃபேட்டி ஆசிட்’ அதிகமாகி, அது ரத்தக்குழாய்களில் கொழுப் பாகப் படியும். புற்றுநோய்க்குக்கூட காரணமாகலாம் என்கிறார்கள். அதனால், கொதிக்க வைத்த எண்ணெயை, அதற்கடுத்த 2 நாள்களுக்குள் தாளிப்பதற்கு மட்டும் பயன்படுத்தித் தீர்க்கலாம் அல்லது கொட்டி விடலாம். பொரிப்பதற்கு எப்போதும் குறைவான எண்ணெயே உபயோகிக்க வேண்டும். இந்த விஷயத்தில் மிச்சம் பிடிப்பதாக நினைத்துக் கொண்டு, ஆரோக்கியக் கேட்டை விலைக்கு வாங்க முயற்சிச்கக்கூடாது!

எண்ணைய்களை எப்படி உபயோகிக்க வேண்டும்?
நல்லெண்ணெய், தவிட்டு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் – இந்த 3 எண்ணெய் களையும் சம அளவில் கலந்து உபயோகிக்கலாம் அல்லது 2 மாதங்களுக்கு ஒரு எண்ணெய் என மாற்றி மாற்றி உபயோகிக்கலாம். ஒரே எண்ணெயை வருடக்கணக்கில் உபயோகிப்பதைத் கண்டிப்பாக தவிர்ப்பது அவசியம்.

கிழங்கு சமைப்பதென்றால், லிட்டர் லிட்டராக எண்ணெயைக் கொட்டி வறுத்தும் பொரித்தும்தான் செய்ய வேண்டும் என்றில்லை. உருளைக் கிழங்கு, சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு என எல்லாவற்றையும் மசியலாகச் செய்து சாப்பிடலாம். நான்ஸ்டிக் கடாயில் செய்தால் எண்ணெய் செலவு குறையும். லேசாக தண்ணீர் தெளித்துச் செய்தாலும் அதிக எண்ணெய் குடிக்காது.

எந்தக் காய்கறியை சமைத்தாலும், முதலில் ஆவியில் வேக வைத்து விட்டு, பிறகு தாளிப்பதற்கு மட்டும் எண்ணெய் உபயோகிக்கலாம்.

மொறு மொறு தோசை வேண்டாமே!
தோசை ஊற்றும் போது அந்தக் காலத்தில் செய்தது போல கல்லை, துணியால் துடைத்து விட்டு செய்தால் எண்ணெய் செலவு குறையும். தோசை ஊற்றியதும், அதை மூடி வைத்து வேக விட்டாலும் எண்ணெய் அதிகம் தேவைப்படாது.

நோய்கள் நம்மைத் தேடிவருவதற்கு முதற் காரணம் நம்முடைய உணவுப்பழக்க வழக்கங்கள் தான்.. உணவுப் பழக்க வழங்கங்களில் அதிக கொழுப்புள்ள உணவுகளை தவிர்த்தோமானால் டாக்டர்களிடம் போக வேண்டிய அவசியம் இருக்காது..
 
Thanks Udhai Kumar & Aatika Ashreen

பெண்களே, ஆண்களுடன் பேச தயக்கமா? அப்ப இத படிங்க!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:00 PM | Best Blogger Tips
பெண்களே, ஆண்களுடன் பேச தயக்கமா? அப்ப இத படிங்க!!! ஆண்களிடம் பழகும் கலையை கற்றுக் கொள்வதென்பது மிகவும் சுலபமான விஷயமில்லை. இதை கற்றுக் கொள்வது மிகவும் கடினம். எனினும் கற்றுக் கொண்டால் பின்பு எளிமையாகி விடும். அப்புறம் என்ன? அஸ்திரத்தை பயன்படுத்தி, ஆண்களை எளிதாக ஈர்த்து விடலாம்.

தினமும் நாம் செல்லும் இடங்கள், சந்திக்கும் நபர்கள் என அனைத்து இடங்களிலும் பெண்களை மட்டுமே காண முடியாது. ஆண்களும் தான் இருப்பார்கள். எனவே அவர்களிடம் எப்படி அணுக வேண்டும், எப்படி பழக வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள சில டிப்ஸ்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

உடல் அமைப்பு
நடையும், நிற்கும் ஸ்டைலும், யார் என்பதை நன்கு வெளிக்காட்டிவிடும். அதிலும் இது ஆண்களின் மத்தியில், எந்த அளவிற்கு நாம் தன்னம்பிக்கையுடன் இருக்கிறோம் என்பதைக் வெளிக்காட்டும். எனவே எப்பொழுதும் முதுகை நிமிர்த்தி, கழுத்தை நேராக வைத்து இருந்தால், அது தன்னம்பிக்கையுடன் இருக்கும் தோற்றத்தைத் தரும்.

நன்றியுடன் இருங்கள்
ஆண்களை ஈர்க்க, மற்றொரு வழி நன்றியுடன் இருத்தல். சில பெண்கள் தன்னம்பிக்கையுடன் இருக்கின்றோம் என்று நினைத்துக் கொண்டு, திமிராக நடந்து கொள்வார்கள். ஆனால் அது தேவையற்றது. ஆகவே அடக்கத்துடனும், அமைதியுடனும் நடந்து கொண்டாலே போதுமானது.

பழக வேண்டும்
தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள அனைவருடனும், அடக்கத்துடன் பழக வேண்டும். எல்லா விதமான மனிதர்களுடனும் பழக முடியும் என்ற நிலையை அடைய, அனைவருடனும் சகஜமாக பழக வேண்டும் என்பது மிக முக்கியம்.

வெளிவர முயற்சியுங்கள்
பொதுவாக அனைவருடனும் பழகுவது என்பது, ஒருவரை முன்னோக்கி எடுத்து செல்லும். இதன் மூலம் ஆண்களிடையே, நன்றாக பழகக் கூடியவர் மற்றும் தன்னம்பிக்கை அதிகம் உடையவர் என்ற எண்ணங்கள் உண்டாகும்.

பேச வேண்டும்
பல பெண்கள் வெளி இடங்களில் பேசுவதே இல்லை. முக்கியமாக ஆண்களிடம் பேசுவதே இல்லை. இது முற்றிலும் தவறு. தோழமையோடு பேசினால் தான் அனைவருடனும், முக்கியமாக ஆண்களிடம் தன்னம்பிக்கையுடன் பழக முடியும்.

Read more at: http://tamil.boldsky.com/relationship/2013/06/tips-to-build-your-confidence-with-men-003491.html

திருமணத்தில் தாலி கட்டுவது எதற்காக?

மணக்கால் அய்யம்பேட்டை | 1:34 PM | Best Blogger Tips

தேவைதானா இதெல்லாம்? என்று கேள்வி கேட்டே பழகிவிட்ட நமக்கு, நம் முன்னோர் சிந்திக்காமல் எதையோ உருவாக்கிவிட்டார்கள் என்ற மனப்பிரமையும் கொஞ்சம் தூக்கலாகத்தான் இருக்கிறது. பிறப்பிலிருந்து இறப்பு வரை பல வழக்கங்களை நம் பாரம்பரியமாக உருவாக்கி, அதை நடைமுறையிலும் சாத்தியமாக்கிய பெருமை நம் முன்னோர்களைச் சேரும். அவர்களின் புரிதலின் ஆழத்தை வெளிப்படுத்தும் மற்றுமொரு பதிவு…

சத்குரு:

தாலி என்பது ஒரு புனித நூல். அதனை ஒரு குறிப்பிட்ட முறையில் உருவாக்க வேண்டும். அது மட்டுமல்ல, ஒவ்வொரு வருடமும் அந்த தாலியைப் புதுப்பிக்கவும் வேண்டும். ஆனால் இன்றோ இது வழக்கத்தில் இல்லாத நடைமுறையாகப் மாறிவிட்டது. பெண்கள், தாலி என்று சொல்லிக் கொண்டு தடிமனாக ஒரு தங்கச் சங்கிலியைப் போட்டுக் கொள்வதே இதற்கு காரணம்.
உண்மையில் தாலி என்பது நூலில்தான் இருக்க வேண்டும். அதுவும் குறிப்பிட்ட முறையிலான பருத்தி நூலாகவோ அல்லது பட்டு நூலாகவோ இருக்க வேண்டும். இந்த புனித நூல், சம்பந்தப்பட்ட இருவரின் சக்திநிலைகளைப் பயன்படுத்தி, தாந்திரீக வழியில் உருவாக்கப்படுகிறது.
அதாவது, ஆணின் குறிப்பிட்ட ஒரு நாடியையும் (சக்திநிலை) பெண்ணின் ஒரு குறிப்பிட்ட நாடியையும் இணைத்து, அந்த புனித நூல் ஒரு குறிப்பிட்ட வழியில் தயாரிக்கப்பட்டு பிறகு அணிவிக்கப்படுகிறது. 

அதன் பின் அந்த ஆணும் பெண்ணும் உடலளவில் இணையும்போது அந்த இரு உடல்களின் இணைப்பு மட்டுமல்ல; அந்த இருவரின் சக்திநிலையும் கூட பின்னிப் பிணைந்த சங்கமமாக இருக்கும். இப்படி இருவரின் சக்திநிலைப் பிணைப்பு சாதாரணமானதல்ல. 

இதுபோல் செய்யும்போது அந்த இணைப்பை, உறவை சுலபத்தில் முறிக்க இயலாது. அப்படியும் வலிய முறித்தால் குறிப்பிட்ட இருவருக்கும் மிக மோசமான விளைவுகள் ஏற்படும். இப்படித்தான் முன் காலத்தில் விவாகங்கள் நடத்தப்பட்டன. 

இளம் வயதிலேயே, அதாவது 10, 11 வயதிலேயே விவாகங்கள் செய்து வைக்கப்பட்டன. இதுபோன்ற சக்திநிலை பிணைப்பால், அவர்களின் கவனம் தவறான வழியில் செல்லாமல் எப்போதும் பாதுகாப்புடன் காக்கப்பட்டது. இன்றைய மனிதர்களுக்கு இவை கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தலாம்.
ஆனால் நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும், அந்த உறுதியான பிணைப்பு கணவன்-மனைவி இருவருக்கும் ஒரு அபரிமிதமான சக்தியைக் ஏற்படுத்திக் கொடுத்தது. அந்த சக்தி ஒரு சமநிலையிலும் இருந்ததால் தங்கள் வாழ்க்கையில் என்ன செய்ய நினைக்கிறார்களோ, அதை எந்த மனச் சிதறலும் இல்லாமல் அவர்களால் செய்ய முடிந்தது. 

இவர் தன்னை விட்டுப் பிரிந்து விடுவாரோ என்பது போன்ற பாதுகாப்பற்ற தன்மையால் அவர்கள் பாதிக்கப்படவில்லை. அந்த அளவிற்கு அவர்களிடம் உறுதியான பிணைப்பு, பந்தம் இருந்தது. இப்போது காணப்படும் பாதுகாப்பற்ற தன்மை பாரதத்திற்கு மிகவும் புதிதான ஒரு சமாச்சாரம்.

கணவன் என்னை விட்டுப் பிரிந்து விடுவாரோ, மனைவி என்னை விட்டுப் பிரிந்து விடுவாரோ என்கிற பாதுகாப்பற்ற உணர்வுகள் முன்பு இருந்ததில்லை. ஆனால் தற்போது தாலி அல்லது மங்கள சூத்திரம் என்பது வெறும் சடங்காகி விட்டது. 

நாம் சில திருமணங்களை முறைப்படி செய்து வைக்கிறோம். அந்த திருமணத்தால் அவர்களுக்குள் இருக்கும் பிணைப்பு அபரிமிதமானதாக இருக்கிறது. அவர்கள் இருவரும் ஒன்றிணைந்து எப்படி ஒரே சக்தியாகப் பணிபுரிகிறார்கள் என்பதையும், அப்போது அந்தப் பணி எவ்வளவு சக்தியுடன் நடக்கிறது என்பதையும் நீங்கள் பார்க்க முடியும். 

வாழ்க்கையில் நாம் செய்ய நினைப்பதை பயமோ, பாதுகாப்பற்ற தன்மையோ இன்றி உறுதியுடன் செய்து முடிக்க முடியும். இதற்காகத்தான் திருமணம், தாலி போன்ற அமைப்புகள் எல்லாம் நம் வாழ்விற்கு ஒத்தாசையாக உருவாக்கப்பட்டது.

Thanks & Copy from : www.tamilblog.ishafoundation.org/taali-katuvadhu-edarkaaga/?utm_source=fb&utm_medium=social&utm_campaign=culture

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி-யின் கடைசிக் காலம் துயரமாக இருந்ததாமே?

மணக்கால் அய்யம்பேட்டை | 1:29 PM | Best Blogger Tips
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி-யின் கடைசிக் காலம் துயரமாக இருந்ததாமே?

உண்மைதான். நான்கரை ஆண்டு சிறைவாசத்துக்குப் பிறகு, 1912 டிசம்பரில் அவர் விடுதலையானார். சென்னை சிந்தா திரிப்பேட்டை, மயிலாப்பூர், பெரம்பூர் எனப் பல்வேறு இடங்களில் குடியேறினார். சென்னை, கோவை, ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, தூத்துக்குடி எனப் பல ஊர்களில் வாழ்ந்துபார்த்தார். ஆனால், வறுமை அவரை வாழவிடவில்லை. அரிசி விற்றார், நெய் விற்றார், மண்ணெண்ணெய் விற்றார். போராட்டக்காரனுக்கு வர்த்தகம் எப்படித் தெரியும்? முடியவில்லை. சுயராஜ்யா நிதியில் இருந்து திலகர் மாதம்தோறும் அனுப்பிவைத்த 50 ரூபாய் அவருக்கு ஓரளவு உதவியாய் இருந்தது.

தென்ஆப்பிரிக்கா தமிழர்கள் சிலர் வ.உ.சி-யிடம் கொடுப்பதற்காக ஒரு தொகையை காந்தியிடம் கொடுத்து அனுப்பினர். ஆனால், ஏனோ அது வ.உ.சி-க்கு வந்து சேரவில்லை. 'இப்போது இருக்கும் நிலையில் அந்தப் பணம் வேண்டாம் என்று நான் சொல்லப்போனால், அது நான் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் இழைத்த தவறாகும்’ என்று வெட்கத்தைவிட்டு காந்திக்கு கடிதம் எழுதும் அளவுக்கு வ.உ.சி. இருந்தார். அவர் இறுதிக் காலத்தில் எழுதிவைத்த உயில் கண்ணீர் வரவைக்கும். தூத்துக்குடி சரோஜினி ஸ்டோர்ஸ் ஜவுளிக் கடைக்கும், வன்னியத் தெரு எண்ணெய் கடைக்கும் எவ்வளவு கடன் வைத்துள்ளேன் என்று சொல்லியிருக்கிறார். தியாகிகளைக் கவனிக்காமல் கடனாளியாக்கிய பாவத்துக்குத்தான் கடன்கார நாடாக நாம் மாறிக்கொண்டு இருக்கிறோம்.

- ஜூனியர் விகடன்உண்மைதான். நான்கரை ஆண்டு சிறைவாசத்துக்குப் பிறகு, 1912 டிசம்பரில் அவர் விடுதலையானார். சென்னை சிந்தா திரிப்பேட்டை, மயிலாப்பூர், பெரம்பூர் எனப் பல்வேறு இடங்களில் குடியேறினார். சென்னை, கோவை, ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, தூத்துக்குடி எனப் பல ஊர்களில் வாழ்ந்துபார்த்தார். ஆனால், வறுமை அவரை வாழவிடவில்லை. அரிசி விற்றார், நெய் விற்றார், மண்ணெண்ணெய் விற்றார். போராட்டக்காரனுக்கு வர்த்தகம் எப்படித் தெரியும்? முடியவில்லை. சுயராஜ்யா நிதியில் இருந்து திலகர் மாதம்தோறும் அனுப்பிவைத்த 50 ரூபாய் அவருக்கு ஓரளவு உதவியாய் இருந்தது.

தென்ஆப்பிரிக்கா தமிழர்கள் சிலர் வ.உ.சி-யிடம் கொடுப்பதற்காக ஒரு தொகையை காந்தியிடம் கொடுத்து அனுப்பினர். ஆனால், ஏனோ அது வ.உ.சி-க்கு வந்து சேரவில்லை. 'இப்போது இருக்கும் நிலையில் அந்தப் பணம் வேண்டாம் என்று நான் சொல்லப்போனால், அது நான் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் இழைத்த தவறாகும்’ என்று வெட்கத்தைவிட்டு காந்திக்கு கடிதம் எழுதும் அளவுக்கு வ.உ.சி. இருந்தார். அவர் இறுதிக் காலத்தில் எழுதிவைத்த உயில் கண்ணீர் வரவைக்கும். தூத்துக்குடி சரோஜினி ஸ்டோர்ஸ் ஜவுளிக் கடைக்கும், வன்னியத் தெரு எண்ணெய் கடைக்கும் எவ்வளவு கடன் வைத்துள்ளேன் என்று சொல்லியிருக்கிறார். தியாகிகளைக் கவனிக்காமல் கடனாளியாக்கிய பாவத்துக்குத்தான் கடன்கார நாடாக நாம் மாறிக்கொண்டு இருக்கிறோம்.

- ஜூனியர் விகடன்

யுத்தத்தை தொடங்கியது நாம் அல்ல. நம் விருப்பமும் அல்ல

மணக்கால் அய்யம்பேட்டை | 1:28 PM | Best Blogger Tips

பலர் என்னை பார்த்து கேட்கும் கேள்விகள், ஏன் என் மனசாட்சியும் என்னை பார்த்து இதை கேடபதுண்டு. எதற்காக மத ரீதியான பதிவுகளை இட வேண்டும் ? எதற்காக மற்ற மதத்தவரின் ஈனச் செயல்களை எதிர்த்து, அற்பமான மனிதர்களோடு வாக்கு வாதம் செய்துக் கொண்டிருக்க வேண்டும் ?. எதற்காக இந்த அற்பமான மனிதர்களுக்கு நடுவே இருக்கும் பல நல்லவர்களையும் எதிர்க்க வேண்டும் ? நல்ல விஷயங்களை குறித்து எழுதலாமே ? நம் தர்மங்களை குறித்து எழுதலாமே ? நம் உயிரினும் மேலான தேசத்தில் இருக்கும் யாருக்கும் தெரியாத அற்புதமான மனிதர்களை குறித்து எழுதலாமே ? பலரின் எதிர்ப்பார்பில்லாத சேவைகளை பாராட்டி எழுதலாமே ? இப்படி பல பல கேள்விகள்.

இந்த கேள்விகள் வரும் பொழுதெல்லாம் என்னுள்ளும், உங்களுள்ளும் உரைந்திருக்கும் இறைவனே உள்ளுனர்வாய் பதில் தருகிறான். இதே சூழ்நிலைதானே அர்ஜுனனுக்கு ? கௌரவர்கள் பக்கம் கேடு கெட்ட மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால் பீஷ்மர், துரோனர், கர்ணன் போன்ற பல நல்லவர்களும் இருக்கிறார்கள். பாண்டவர்கள் சமாதனத்திற்காக எத்தனையோ முயற்சி எடுத்தும் யுத்தத்திற்கு ஆசைப்பட்டது கௌரவர்கள் தான்.

இங்கே இறைவன் சொல்வது இதுதான். பல தீயவர்களுக்கு எதிராக சில நல்லவர்கள் இருந்தால் அவர்களையும் எதிர்த்து நீ போராடிதான் ஆகவேண்டும். நல்லவர்களின் முழுமுதல் கடமை தீமையோடு சேராது இருப்பது. தீமையோடு சேர்ந்துக் கொண்டு நான் மட்டும் நல்லவன் என்று சொன்னால், அது சரியாகாது. நீ யார் என்பது முக்கியமல்ல, நீ யாரோடு இருக்கிறாய் என்பதுதான் முக்கியம் !!

இன்று இந்த தேசத்தில் ஹிந்துக்களுக்கும் அதே நிலைதான். இந்த யுத்தம் ஹிந்துக்களால் தொடங்கப்பட்டதல்ல. கேடுகெட்ட பல அந்நிய சக்திகளால் தொடங்கப்பட்டது. யார் வீட்டுக்கும் போய் கதவை தட்டி என் ஆண்டவன் உன்னை அழைக்கிறார் என்று நாம் சொல்லவில்லை. உங்கள் கடவுள் எல்லாம் காலாவதி ஆகிவிட்டனர் ஆகையால் என் ஆண்டவன் ஒன்றே சத்தியம் என்று நாம் சொல்லவில்லை. கற்சிலைகள் வழிகெடுக்கும், என் இறைவனே அளப்பெரியவன் என்று நாம் பிரச்சாரம் செய்யவில்லை. படைத்தவனை விட்டு விட்டு படைப்புகளை வணங்காதே என்று நாம் மற்றவர்களின் அடிப்படை சித்தாந்தம் தெரியாமல் உளறவில்லை. பனத்தை நாம் இறைக்கவில்லை. ஏழ்மையை நாம் பயன்படுத்தவில்லை. பெண்களை கொண்டு ஆள்பிடிக்கவில்லை. பெண்களை தந்திரமாய் பிடிக்கவும் இல்லை. மூளை சலவை செய்யும் ஈனமான முயற்சிகளில் இறங்கவுமில்லை. இப்படி எதுவுமே நாம் செய்யவில்லை.

உலகமெங்கும் "தனதே உண்மை, மற்றதெல்லாம் வீண்", என்ற கேடுகெட்ட நம்பிக்கையை கொண்ட இந்த இரு கூட்டங்க‌ளும் மனித இனத்திற்கு ஏற்படுத்தியுள்ள இழப்பு கணக்கில் அடங்காது. இழந்த உயிர்கள் எண்ணிக்கையில் அடங்காது. ஆனால் இந்தியாவில் நம் தர்மத்தை எதிர்த்து இந்த இரு கூட்டங்களும் ஒன்று கூடியுள்ளன. இந்தியாவுக்குள் மட்டுமே இந்த கூட்டனி, இந்திய எல்லைகளை தாண்டினால் இவை இரண்டும் பரம எதிரிகள். இந்த விஷக் கூட்டனியை எதிர்த்து போராடுவது நம் கடமை. சொல்லப்போனால் நமக்கு வேறு வழியே இல்லை.

யுத்தம் என்று வந்துவிட்டால் அதில் நம் விருப்பு வெறுப்பு என்று எதுவுமில்லை. தொடங்கியது நாம் அல்ல. வன்முறை நம் வழியும் அல்ல. தர்மமே நம் ஆதாரம். தர்மமே நம் நோக்கம். தர்மமே நம்மை வழி நடத்திச் செல்லும். தர்மத்தை காப்பாற்றுபவனை தர்மம் காக்கும். இது பொய்க்காத வேத சத்தியம்.

அதர்மத்தை எதிர்த்து போராடுவதை விட சிறந்த தர்மம் இல்லை.

நீங்கள் தர்மத்தின் பக்கம் இல்லாது இருந்தால், அதர்மத்தின் பக்கத்தில் இருக்கிறீர்கள். யுத்தத்தில் நடுநிலை என்பதே இல்லை

Via FB  Enlightened Master

மனிதனை குடிக்கும் மது

மணக்கால் அய்யம்பேட்டை | 1:23 PM | Best Blogger Tips

மது உணர்வூட்டும் பொருள் அல்ல. உணர்வை, உடலை அழிக்கும் ஒரு நச்சுப் பொருள். மது அருந்துவதால் சுதந்திர உணர்வு தோன்றுவதாகவும், அதிக சக்தி கிடைப்பதாகவும், களைப்பு நீங்குவதாகவும் பலர் நினைக்கின்றார்கள். இளமைப் பருவத்தில் மதுவால் அதிக பாதிப்பு ஏற்படுவதில்லை என்றாலும் பிற்காலத்தில் மதுவினால் பாதிப்புகள் ஏராளம். மது நேரடியாக இரத்தத்தில் கலந்து விடுவதால் மது குடித்தவுடன், சிறிது நேரத்திற்கு உற்சாம் பிறக்கிறது. மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் நாளடைவில் எல்லா நோய்களையும் கொடுத்து சிறிது சிறிதாக நம்மை அழிக்கிறது.

மதுவின் தீமைகளை உணர்ந்த உலக சுகாதார நிறுவனம் "மது நீண்ட நாளைய நலக்கேடு என்றும், தீய செயல்" என்றும் கூறுகிறது. மது உடல் நலத்தைக் கெடுப்பதோடு சமுதாயச் சீர்கேடுகளையும் ஏற்படுத்துகிறது.

மதுவிற்கு அடிமையாகின்றவர்கள்

ஏழைகள், கூலித் தொழிலாளர்கள், கடின உழைப்பாளிகள், கவலைப்படுகின்றவர்கள், மன நிம்மதி இழந்தவர்கள் போன்றவர்களே, அதிகம் மது அருந்துவதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது. சந்தோசத்திற்காக குடிக்க ஆரம்பித்தவர்கள் பிறகு மதுவிற்கு அடிமையாகி விடுவதோடு குடும்பத்தையும் துயரத்தில் ஆழ்த்தி விடுகின்றார்கள். குடிப் பழக்கம் உள்ள வீட்டுக் குழந்தைகளும் நாளடைவில் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி கெட்டுப் போகும் நிலை ஏற்படுகிறது.

மதுவால் ஏற்படும் பிரச்சனைகள்

மது மூளையையும், நரம்பு மண்டலத்தையும் பாதித்து உடல் நலத்தை சீர்குலைக்கிறது.

மது குடிப்பதினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு கல்லீரல் இறுக்க நோய் (Cirrhosis) ஏற்படுகிறது. பின்னர் கல்லீரல் புற்று நோய் ஏற்படுவதற்கும் காரணமாகிறது.

மது வயிற்றுக்குள் செல்லும் போது குடல் பாதிக்கப்பட்டு இரைப்பை சுழற்சி (Gastritis) ஏற்பட்டு குடலில் புண் ஏற்படுகிறது.

வாய், தொண்டை, உணவுக் குழாய்களில் புற்றுநோய் ஏற்பட வழி வகுக்கிறது.

தோளிலும், காலிலும் தசை நார் இழப்பு ஏற்படுகிறது.

உடலில் சர்க்கரை சத்தைச் சீர்படுத்தும் கணையம் பாதிக்கப்படுகிறது.

அடிக்கடி மறதி ஏற்பட்டு சோர்வு ஏற்படும்.

கோர்ஸா காஃப்ஸ் சின்ட்ரோம் (Korsakoff's Syndrome) என்ற மூளை பாதிப்பு நோய் ஏற்பட வழி வகுக்கிறது.

உயிர்சத்து `பி' குறைவால் வெர்னிக் சின்ட்ரோம் (Wernike's Syndrome) என்ற நோய் ஏற்பட்டு நடக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

மது அருந்துபவர்களுக்கு மன நோய்கள் பல ஏற்பட்டு மன நோயாளிகளாகி விடும் வாய்ப்பு அதிகமுண்டு.

மது அருந்துபவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு தன்மை குறைவதால் தொற்று நோய்கள் வந்தால் எளிதில் தீராது.

இன்னும் எத்தனையோ பிரச்சனைகள். அத்தனையும் மதுவினால் ஏற்படுவதே. மதுப்பிரியர்களே! முதலில் மதுவை குடிப்பீர்கள். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மது மனிதனைக் குடிக்கும் என்பது மட்டுமே உங்க ள்நினைவில் நிற்கப்படும்.

மது அடிமைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் ஹோமியோபதி மருத்துவம்

மதுவுக்கு அடிமை என்பது உடல் ரீதியான பிரச்சனை மட்டுமல்ல. மனரீதியான, சமூக ரீதியான பிரச்சனையாகும். ஆகவே இவர்களை குணமாக்க உளவியல் ரீதியாகவும் அணுக வேண்டியது அவசியம். அந்த வகையில் ஹோமியோபதி மருந்துகள் உடலில் மதுவினால் உண்டான நலக்கேடுகளை சீர்படுத்துவதோடு மனரீதியான தூண்டுதல்களையும் சரி செய்து நல்வாழ்வுப்படுத்த உதவுகிறது.

ஹோமியோபதியில் மது பழக்கத்தை ஒழிக்க பல மருந்துகள் இருந்த போதிலும் "கொர்கஸ் கிளாண்டஸ் ஸ்பிரிடஸ்" (Quercus Glandus spritus Q) எனும் மருந்து மதுவினால் உண்டான கோளாறுகள், தலைச்சுற்றல், நடுக்கம் போன்றவைகளை குணமாக்க உதவுவதோடு மதுவை மறக்கவும் துணை புரிகிறது.

மதுப்பழக்கம் ஏற்படுத்தும் நரம்புத் தளர்ச்சி, மன ரீதியான பிரச்சனைகள், குழப்பம், தூக்கமின்மை போன்றவைகளைக் குணப்படுத்த "அவினா சடைவா" என்ற மருந்தும், எப்போதும் எரிச்சலுடன் கூடிய மனநிலையுடனும் தலைவலி, காலையில் எழுந்த உடன் தலைச்சுற்றல், கண்களில் கூச்சம் போன்ற தொல்லைகளுக்கு "நக்ஸ்வாமிகா" போன்ற மருந்துகள் சிறந்தவை. இம்மருந்துகளை தொடர்ந்து டாக்டரின் ஆலோசனையின்படி உட்கொண்டால் மதுப்பழக்கத்திலிருந்து விடுபடுவதோடு மறுவாழ்வு பெறுவது நிச்சயம்.

ஆதாரம் - -டாக்டர் அக்னஸ் ஜாய்

விநாயகரின் மற்ற பெயர்கள் !

மணக்கால் அய்யம்பேட்டை | 1:07 PM | Best Blogger Tips
விநாயகரின் மற்ற பெயர்கள்;
---------------------------------------
எளியவர்களுக்கெல்லாம் எளியவராய் விளங்கும் விநாயகருக்கு மொத்தம் 21 பெயர்கள் உள்ளன. பெரும்பாலும் அரச மரத்தடி, குளக்கரை போன்ற இடங்களில் அமர்ந்துதான் தரிசனம் தருகிறார். இவருக்கு படைக்கப்படும் பொருட்களும் எளிமையானவையே. 

கவனிப்பாரற்று காட்டில் பூத்துக் கிடக்கும் எருக்கம் பூ, வாய்க்கால் வரப்புகளில் பரவலாக முளைந்திருக்கும் அறுகம்புல் போன்ற மிக எளிமையான பொருட்களைத் தாம் ஏற்றுக் கொண்டு, தன் பக்தர்களுக்கு அருளை வெள்ளமென பெருக்கி அருள்கிறார். இவருக்கு இருபத்தோரு திருநாமங்கள் உள்ளதாக புராணங்கள் சொல்கின்றன. என்ன அவை?

கணேசன்: 

உலக உயிர்களுக்கும், பிரம்மத்துக்கும் தலைவன்.

ஏகதந்தன்:  

ஏக எனில் மாயை; தந்தன் எனில் மறைந்திருப்பவன். மாயைக்கு ஆட்படாமல் விலகி நிற்பவன் இவன். ஏகம் என்றால் ஒன்று என்றும் ஒரு பொருள் உண்டு. வியாசர் சொல்லச் சொல்ல, மகாபாரதத்தை, தன் தந்தம் ஒன்றை உடைத்து எழுதியதால், எஞ்சிய ஒரு தந்தத்துடன் விளங்குபவர் என்றும் கொள்ளலாம்.  

சிந்தாமணி: 

சிந்தை - மனம்; மணி - பிரகாசம். பக்தர் தம் மனதில் அஞ்ஞான இருள் நீக்கி, ஒளி பரவச் செய்பவன்.

விநாயகன்: 

வி - நிகரற்ற; நாயகன் - தலைவன். தனக்கு யாரும் நிகரில்லாத தலைவன்.

டுண்டிராஜன்: 

மோட்சத்தை அடைய விரும்புவோருக்கு வழிகாட்டுபவர்.

மயூரேசன்: 

வணங்காதவரை மாயையில் மூழ்கச் செய்தும், பக்தர்களை மாயை நெருங்காமலும் செய்பவன். 

லம்போதரன்: 

உலகினையே உள்ளடக்கியிருப்பதால் பெரிதாகக் காணப்படும் வயிற்றினை உடையவன். 

கஜானனன்: 

ஆணவம் எனும் யானையை அடக்கும் வல்லமை உள்ளவன்,  யானைமுகன்.

ஹேரம்பன்:  

ஹே - கஷ்டப்படுபவர்கள். ரம்ப - காப்பவன் ஆகிய பிரம்மன். துன்பப்படுவோரைக் காத்து ரட்சிப்பவன்.

வக்ர துண்டன்: 

பக்தர் தம் வாழ்வில் வரும் தீமைகளை தடுப்பவன். பிள்ளையாருக்கு இப்பெயரை அன்னை உமாதேவி வைத்தார்.

ஜேஷ்டராஜன்: 

ஜேஷ்டன் - முன்னவன், அனைத்துக்கும் முதல்வனாக, முதற் பொருளாகத் தோன்றி, அனைத்து உயிரினங்களையும் வழிநடத்திச் செல்பவன்.

நிஜஸ்திதி: 

உலகில் உள்ள அனைத்து உயிர்களாகவும் இருப்பவன்.

ஆசாபூரன்: 

எல்லோரது ஆசைகளையும் நிறைவேறச் செய்பவன். இப்பெயரை கணபதிக்கு சூட்டியவர் புருசுண்டி முனிவர்.

வரதன்:  

வேண்டுவோர் வேண்டும் வரமளிப்பவன்.

விகடராஜன்: 

மாயையான உலகில், உண்மை பரம்பொருளாகத் திகழ்பவன்.

தரணிதரன்: 

பூமியை ஆபரணமாக அணிந்து எப்போதும் காப்பவன்.

சித்தி - புத்தி பதி: 

சித்தி எனும் கிரியா சக்திக்கும், புத்தி எனும் இச்சா சக்திக்கும் இடையே அவற்றின் தலைவனாக இருந்து ஞானத்தை அளிப்பவன்.

பிரும்மணஸ்தபதி:  

இப்பெயர், பிரம்மாவினால் வைக்கப்பட்டது. பிரும்மம் என்றால் சப்தம். வேத சப்தத்திற்கு ஆதாரமாக விளங்குபவர்.

மாங்கல்யேசர்: 

அழியக்கூடிய உலகில், தான் மட்டும் அழியாமலிருந்து அனைத்தையும் பரிபாலிப்பவர். 

சர்வ பூஜ்யர்: 

எங்கும் எத்தகைய பூஜைகளிலும், எல்லா தெய்வ வழிபாட்டின் போதும் முன்னதாக பூஜிக்கப்படக்கூடியவர். எல்லோராலும் வணங்கப்படுபவர்.

விக்னராஜன்: 

தன்னை வணங்கும் பக்தர்கள் அனைவரது வாழ்விலும் எந்த விக்னமும் ஏற்படாமல் காப்பவர். 

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன். எளியவர்களுக்கெல்லாம் எளியவராய் விளங்கும் விநாயகருக்கு மொத்தம் 21 பெயர்கள் உள்ளன. பெரும்பாலும் அரச மரத்தடி, குளக்கரை போன்ற இடங்களில் அமர்ந்துதான் தரிசனம் தருகிறார். இவருக்கு படைக்கப்படும் பொருட்களும் எளிமையானவையே.

கவனிப்பாரற்று காட்டில் பூத்துக் கிடக்கும் எருக்கம் பூ, வாய்க்கால் வரப்புகளில் பரவலாக முளைந்திருக்கும் அறுகம்புல் போன்ற மிக எளிமையான பொருட்களைத் தாம் ஏற்றுக் கொண்டு, தன் பக்தர்களுக்கு அருளை வெள்ளமென பெருக்கி அருள்கிறார். இவருக்கு இருபத்தோரு திருநாமங்கள் உள்ளதாக புராணங்கள் சொல்கின்றன. என்ன அவை?

கணேசன்:

உலக உயிர்களுக்கும், பிரம்மத்துக்கும் தலைவன்.

ஏகதந்தன்:

ஏக எனில் மாயை; தந்தன் எனில் மறைந்திருப்பவன். மாயைக்கு ஆட்படாமல் விலகி நிற்பவன் இவன். ஏகம் என்றால் ஒன்று என்றும் ஒரு பொருள் உண்டு. வியாசர் சொல்லச் சொல்ல, மகாபாரதத்தை, தன் தந்தம் ஒன்றை உடைத்து எழுதியதால், எஞ்சிய ஒரு தந்தத்துடன் விளங்குபவர் என்றும் கொள்ளலாம்.

சிந்தாமணி:

சிந்தை - மனம்; மணி - பிரகாசம். பக்தர் தம் மனதில் அஞ்ஞான இருள் நீக்கி, ஒளி பரவச் செய்பவன்.

விநாயகன்:

வி - நிகரற்ற; நாயகன் - தலைவன். தனக்கு யாரும் நிகரில்லாத தலைவன்.

டுண்டிராஜன்:

மோட்சத்தை அடைய விரும்புவோருக்கு வழிகாட்டுபவர்.

மயூரேசன்:

வணங்காதவரை மாயையில் மூழ்கச் செய்தும், பக்தர்களை மாயை நெருங்காமலும் செய்பவன்.

லம்போதரன்:

உலகினையே உள்ளடக்கியிருப்பதால் பெரிதாகக் காணப்படும் வயிற்றினை உடையவன்.

கஜானனன்:

ஆணவம் எனும் யானையை அடக்கும் வல்லமை உள்ளவன், யானைமுகன்.

ஹேரம்பன்:

ஹே - கஷ்டப்படுபவர்கள். ரம்ப - காப்பவன் ஆகிய பிரம்மன். துன்பப்படுவோரைக் காத்து ரட்சிப்பவன்.

வக்ர துண்டன்:

பக்தர் தம் வாழ்வில் வரும் தீமைகளை தடுப்பவன். பிள்ளையாருக்கு இப்பெயரை அன்னை உமாதேவி வைத்தார்.

ஜேஷ்டராஜன்:

ஜேஷ்டன் - முன்னவன், அனைத்துக்கும் முதல்வனாக, முதற் பொருளாகத் தோன்றி, அனைத்து உயிரினங்களையும் வழிநடத்திச் செல்பவன்.

நிஜஸ்திதி:

உலகில் உள்ள அனைத்து உயிர்களாகவும் இருப்பவன்.

ஆசாபூரன்:

எல்லோரது ஆசைகளையும் நிறைவேறச் செய்பவன். இப்பெயரை கணபதிக்கு சூட்டியவர் புருசுண்டி முனிவர்.

வரதன்:

வேண்டுவோர் வேண்டும் வரமளிப்பவன்.

விகடராஜன்:

மாயையான உலகில், உண்மை பரம்பொருளாகத் திகழ்பவன்.

தரணிதரன்:

பூமியை ஆபரணமாக அணிந்து எப்போதும் காப்பவன்.

சித்தி - புத்தி பதி:

சித்தி எனும் கிரியா சக்திக்கும், புத்தி எனும் இச்சா சக்திக்கும் இடையே அவற்றின் தலைவனாக இருந்து ஞானத்தை அளிப்பவன்.

பிரும்மணஸ்தபதி:

இப்பெயர், பிரம்மாவினால் வைக்கப்பட்டது. பிரும்மம் என்றால் சப்தம். வேத சப்தத்திற்கு ஆதாரமாக விளங்குபவர்.

மாங்கல்யேசர்:

அழியக்கூடிய உலகில், தான் மட்டும் அழியாமலிருந்து அனைத்தையும் பரிபாலிப்பவர்.

சர்வ பூஜ்யர்:

எங்கும் எத்தகைய பூஜைகளிலும், எல்லா தெய்வ வழிபாட்டின் போதும் முன்னதாக பூஜிக்கப்படக்கூடியவர். எல்லோராலும் வணங்கப்படுபவர்.

விக்னராஜன்:

தன்னை வணங்கும் பக்தர்கள் அனைவரது வாழ்விலும் எந்த விக்னமும் ஏற்படாமல் காப்பவர்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

கண்ணுக்கு கீழ் உள்ள கருப்பு வளையம் மறைய !

மணக்கால் அய்யம்பேட்டை | 1:06 PM | Best Blogger Tips
கண்ணுக்கு கீழ் உள்ள கருப்பு வளையம் மறைய:

*சில பெண்களுக்கு கண்களைச் சுற்றி கருப்பு வளையம் இருக்கும். இந்த பிரச்சினை தான் பெண்களை வயதானவர் போல் காட்டும். இதை எளிதாக நீக்கி விடலாம். வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் சம அளவு எடுத்து அதை நன்றாக அரைத்து கொள்ளவும்.

*ஒரு மெல்லிய வெள்ளை துணியை பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைத்து, அதன் மேல் அரைத்த கலவையை வைத்து படுக்க வேண்டும். இப்படி முப்பது நிமிடம் இருக்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது.

*கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். சரியான தூக்கம் இல்லாமல் போனாலும் கண்களில் கரு வளையம் தோன்றும்.தினமும் குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும்.

*அல்லது, வெள்ளரிக்காய்ச்சாறை முகத்தில் தேய்த்து, ஒரு மணி நேரத்திற்கு பின் கழுவிவிட வேண்டும். தொடர்ந்து இதுபோல் செய்து வந்தால், கண் அழகை பாழாக்கும் கரு வளையம் படிப்படியாக மறைய ஆரம்பித்து விடும்.

*உணவில் அதிகளவு காய்கறிகளை சேர்த்து கொள்ளவேண்டும்.தினமும் குறைந்தது நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.*சில பெண்களுக்கு கண்களைச் சுற்றி கருப்பு வளையம் இருக்கும். இந்த பிரச்சினை தான் பெண்களை வயதானவர் போல் காட்டும். இதை எளிதாக நீக்கி விடலாம். வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் சம அளவு எடுத்து அதை நன்றாக அரைத்து கொள்ளவும்.

*ஒரு மெல்லிய வெள்ளை துணியை பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைத்து, அதன் மேல் அரைத்த கலவையை வைத்து படுக்க வேண்டும். இப்படி முப்பது நிமிடம் இருக்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது.

*கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். சரியான தூக்கம் இல்லாமல் போனாலும் கண்களில் கரு வளையம் தோன்றும்.தினமும் குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும்.

*அல்லது, வெள்ளரிக்காய்ச்சாறை முகத்தில் தேய்த்து, ஒரு மணி நேரத்திற்கு பின் கழுவிவிட வேண்டும். தொடர்ந்து இதுபோல் செய்து வந்தால், கண் அழகை பாழாக்கும் கரு வளையம் படிப்படியாக மறைய ஆரம்பித்து விடும்.

*உணவில் அதிகளவு காய்கறிகளை சேர்த்து கொள்ளவேண்டும்.தினமும் குறைந்தது நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
 
Via FB பிணி இல்லா பெருவாழ்வுக்கான உணவுமுறைகளும்,உடற்பயிற்சிகளும்.