நம்பியவர்க்கே அனைத்தும் கிடைக்குமா .....

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:07 | Best Blogger Tips

 

Ganga And Parvati – The Indian Mythologyஒரு முறை சிவனும் பார்வதியும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது பார்வதி கேட்டார்

ஐயனே கங்கையில் குளித்தால் அனைவருக்கும் மோட்சம் என சொல்கிறார்கள்

ஆனால் குளிக்கும் அத்தனை பேரும் மோட்சத்துக்கு வந்தால் மோட்சம் தாங்காதே அது ஏன் அப்படி நடக்கவில்லைஎன கேட்டார்.

சிவன் சொன்னார்அது ஏன் எனும் காரணத்தை விளக்குகிறேன் என்னோடு வா,

ஆனால் இப்படியே வராதே

இருவரும் வயதான பெரியவர்களாக போவோம் வாஎன அழைத்து சென்றார்

கங்கைக் கரையினை அடைந்த சிவன்நான் இப்போது கங்கையில் விழுந்து விடுவேன்

Holy Bath In Ganga,கங்கையில் குளித்தால் பாவங்கள் கரையுமா ? அந்த பாவங்கள்  எங்கே செல்லும் ? - will holy bath in ganga dissolves human sins :  auspicious story about ganga river - Samayam Tamil

நீ உதவிக்கு யாரையாவது கூப்பிடு

ஆனால் இது வரை பாவமே செய்யாதவர்கள் மட்டுமே வந்து காப்பாற்றுங்கள்என கூறிச் சென்று ஆற்றில் விழுந்ததை போல நடித்தார்

உடன் பார்வதி தேவி அங்கிருந்தவர்களை உதவிக்கு அழைத்தார்.

அழைத்த்தவுடன் ஓடி வந்தவர்களிடம் தேவிபாவம் செய்யாதவர்கள் மட்டும் போய் காப்பாற்றுங்கஎன கூறினார்

கங்கையில் புனித நீராடுவோர் பற்றி பார்வதி கேள்வி! | Tamil and Vedas

அனைவரும் தயங்கி நின்றார்கள்.

அப்போது , இளைஞன் ஒருவன்

ஓடி சென்று எம்பிரானை காப்பாற்றி கரை சேர்த்தான்.

மக்களுக்கு எல்லாம் அதிர்ச்சி எப்படி ஒருவன் பாவமே செய்யாமல் இருக்க முடியும் ? என நினைத்து அவனை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

உடன் பார்வதி அன்னை

அப்பா நீ பாவமே செய்யவில்லை யா

சாஸ்திரம் பற்றிய திரட்டு: காசி சுவாசி - பகுதி 5

என வினவினார்.

அவன் சொன்னான்எனக்கு எதுவுமே தெரியாது அம்மா.

கங்கையில் குளித்தால் பாவம் போகுமென கேள்விப்பட்டு இருக்கேன் அப்படியிருக்கும் போது கங்கையில் இறங்கியவுடன் என் பாவங்கள் மறைந்து விடுமல்லவா

அப்புறம் என்னால் அவரை காப்பாற்ற முடியுமென நினைத்தேன் நம்பி செய்தேன் அவ்வளவு தான் அம்மாஎன்றான்.

சிவன் சொன்னார் "

குளிக்கும் அனைவரும் நம்பிக்கையோடு குளிப்பதில்லை ,

நம்பி செய்பவர்கள் மட்டுமே மோட்சம் போக முடியும்,

என சொல்லி அழைத்து சென்றார்

*நம்பியவர்க்கே அனைத்தும் கிடைக்கும்*....

ஓம்நமசிவாய ஓம்நமசிவாய 🙏🙏

🙏

  நன்றி இணையம்

நன்றி இணையம்