



--------------------------------------------------------


கோபிரளயர் என்னும் இரண்டு முனிவர்கள் இருந்தனர். இவ்விருவரும்
கண்ணனின் லீலைகளைக் கேட்டு, அவரைப் பார்க்க துவாரகை கிளம்பினர்.
வழியில் அவர்களை சந்தித்த நாரதர், கிருஷ்ணாவதாரம் முடிந்து விட்டதாக
கூறினார்.


அவ்விருவரும் கண்ணனைக் காண நாரதரின் ஆலோசனைப்படி தவமிருந்தனர்.
பகவான் 'கிருஷ்ணராக" அவர்களுக்கு காட்சி தந்தார்.

தனது 32 லீலைகளைக் காட்டியருளினார். அவர்களது வேண்டுதலுக்காக
இத்தலத்தில் எழுந்தருளினார்.


பாலகனாக காட்சி தருகிறார். ஒரு வேஷ்டி அணிந்து அதையே
தலைப்பாகையாக சுருட்டி, வலது கையில் வெண்ணெய் மற்றும் சாட்டை
வைத்து காட்சி தருகிறார்.

கொலுசு ஆகிய 'குழந்தை" அணிகலன்கள் அணிந்திருக்கிறார். உடன் ஒரு
பசுவும், இரண்டு கன்றுகளும் உள்ளன.
தாயார் சன்னதி அருகே பெருமாள் சன்னதி எதிரே பெண் வடிவ கருடாழ்வார்
இருக்கிறார்.

நைவேத்யம் படைக்கப்படுகிறது. இங்கு வெண்ணைதாழி உற்சவம் சிறப்பாக
நடைபெறுகிறது.

ராஜாதி ராஜ சதுர்வேதி மங்கலம் என்றும், செண்பக மரங்கள் அடர்ந்த காடுகள்
நிறைந்து காணப்பட்டதனால் சென்பகாரண்யா க்ஷேத்திரம் எனவும்,


குலோத்துங்க சோழ விண்ணகரம் என்றும், ஸ்ரீ ராஜகோபாலன் கோயில்
கொண்டிருப்பதால் ராஜமன்னார்குடி என்றும், மன்னர்கள் கோபாலனுக்கு
கோயில் கட்டியதால் மன்னார்கோயில் என்றும், இவ்வூர் அழைக்கப்படுகிறது.

செங்கல் கொண்டு கிபி 1070-1125 இல் கட்டப்பட்டது. மன்னார்குடி ஸ்ரீ ராஜாதி
ராஜா சதுர்வேதி மங்கலம் என குறிப்பிடப்படுகிறது,







-------------------------------------------------




