கேசட் வெளிவந்த காலத்தில்
இதை வீட பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகள்
வருவதற்கு வாய்ப்பு இல்லை எனும் அளவுக்கு
அதை கொண்டாடி மகிழ்ந்தோம் 

கேசட் ல பதிவு செய்ய பாடல்களை தேர்வு செய்ய
பரிட்சை க்கு தயாராவதை போல முழு
ஈடுபாட்டுடன் செய்வோம் 

60 கேசட் ல 12 பாடல்கள்
90 கேட்டு ல 18 பாடல்கள்
கடைக்கார அண்ணாச்சி இடம் பதிவு செய்ய
கொடுத்து விட்டு ஒரு வாரம் நடையாய் நடப்போம்
அந்த காலகட்டத்தில் அவர் நமக்கு கடவுளாக
தெரிவார்

இளையராஜா பாடல்கள்
ரஜினி ஹிட்ஸ்
மோகன் ஹிட்ஸ்
என தனித்தனியாக தேர்வு செய்து பதிவு செய்து
அதை கேட்கும் போது அடடா என்ன ஒரு ஆனந்தம் 

ஒரு லைப்ரரி வைக்கும் அளவிற்கு
கேசட் அடுக்கி வைத்து இருப்போம்
என்ன என்ன பாடல்கள் என்று தேர்வு செய்து மறந்து
போகாமல் இருக்க எழுதி வைத்து கொள்ளவும் ஒரு
தனி நோட் வைத்து இருப்போம் 

ஸ்கெட்ச் பேனாவில் ஒவ்வொரு கேசட் முகப்பிலும்
அழகாக எழுதி ஆசையாக பார்த்து இருப்போம் 

நிலா தென்றல் வானவில் மயில் குயில் என்று
வரிசைப்படுத்தி அதற்குண்டான பாடல்கள் என்று
தனி தொகுப்பாக பல கேசட்டுகள் வைத்து
இருப்போம் 

பாடல் கேட்டு கொண்டு இருக்கும் போது ஒலிநாடா
மாட்டி கொள்ளும்...
அதை நாசூக்காக வெளியே எடுத்து
அதை பழைய படி கேசட்ல சுற்றி கொள்ள ஒரு
நட்ராஜ் பென்சில் தயாராக இருக்கும் 

இன்று பல அறிவியல் சாதனங்கள் நம்மை
ஆக்ரமித்தாலும் அன்று நாம் அடைந்த இதுபோன்ற
ஆனந்தங்கள் என்றென்றும் நம் மனதில் பசுமையாக
இருக்கும் 
