கிருஷ்ணனால் கொல்லப்பட்ட கம்சனின் மாமனார் ஜராசந்தன்...
மருமகன் கொல்லப்பட்ட கோபத்தில்...
கிருஷ்ணனைக் கொல்ல ஒரு "மஹா கூட்டணி"யை படை திரட்டி வந்து 17 முறை போரிட்டு உள்ளான்...
ஒவ்வொரு முறையும் கிருஷ்ணன் ஜராசந்தனை மட்டும் விட்டு விட்டு அவனுடன் வந்த மற்ற எதிரிகளை மட்டுமே கொல்வான்...
பலராமனுக்கு ஆச்சரியம்...
ஏன் இப்படி செய்கிறாய்? ஜராசந்தனை உன் எதிரில் இருக்கும்போதே கொல்லலாம் தானே என்று கிருஷ்ணனிடமே கேட்டான்...
மாயக்கண்ணன் சிரித்துக் கொண்டே கூறினார்...
எதிரிகளை தேட வேண்டிய அவசியம் இல்லாமல் ஒவ்வொரு முறையும் ஜராசந்தன் கூட்டமாக அவர்களை என்னிடம் அழைத்து வருகிறான்...
எனக்கும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே எதிரிகளை கொல்ல முடிகிறது நான் தேடி அலைய வேண்டாம்...
ஜராசந்தனை உடனே கொன்று விட்டால் என்னுடைய எதிரிகளைத் தேடி நானே அல்லவா மெனக்கெட வேண்டும்...
என்று கூறினான்... !