இவரை பற்றி அறிவோமா??!!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:43 AM | Best Blogger Tips


 


நடிக,நடிகையரை பற்றி அறிந்த நாம் இவரை பற்றி அறிவோமா??!!

வத்லகுண்டுவிலே ஜனித்தாலும் தமிழகம் முழுவதும் வலம் வந்து சுதந்திர கணலை கக்கியவர்....

சிவம் பேசினால் சவம் கூட எழுந்து நின்று சிவத்தின் பேச்சை கேட்கும்.....

தனக்காக இல்லாது தேசத்திற்காகவே வாழ்ந்து தன்னுயிரை நீத்தவர்....

திருமணம் ஆன சில ஆண்டுகளிலேயே துறவறம் பூண்டவர்.....

தேசமே பெரிது என பல தடவை சிறை வாழ்க்கை வாழ்ந்த மகான்...

பாளையங்கோட்டை மத்திய சிறையில் வ.உ.சி அவர்களோடு சிறை வாசம் அனுபவித்து தேசம் நலம் பெற தான் தொழு நோயாளியானவர்.....

பாப்பிரெட்டிப்பட்டி மில் பாரத அன்னைக்கு ஆலயம் அமைக்க முயற்சித்த முதல் தமிழர்....

வீரமுரசு என அனைவராலும் அழைக்கப்பட்ட சிம்மம்....

இவர் தான் சுப்பிரமணிய சிவா......

1884 அன்று அக்டோபர் 4 ஆம் தேதி பாரதத்தாயின் தவப்புதல்வனாக அவதரித்த மஹான்...

இன்று 137 வது ஜென்ம தினம் போற்றுவோம் அவரை.... கற்றுக்கொடுப்போம் அவர் வரலாற்றை நம் குழந்தைகளுக்கு....

 





நன்றி இணையம்