2019 பார்லிமென்ட் தேர்தலில் பிரதமர் மோடி முழு மெஜாரிட்டியுடன்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:42 PM | Best Blogger Tips
Image result for மோடி big size modi pm

2019 பார்லிமென்ட் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி, முழு மெஜாரிட்டியுடன் அமையும் என்று வெளி நாட்டு உளவு நிறுவனங்கள் அந்தந்த நாட்டு அரசாங்கங்களுக்கு செய்திகளை அனுப்பிவிட்டன.

மீண்டும் மோடி பிரதமராக வந்தால் இந்தியாவின் விஸ்வரூப வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. ஏற்கனவே விவசாயப் பொருள்களின் உற்பத்தி, உள் நாட்டு உபயோகம் மற்றும் ஏற்றுமதியில் தன்னிறைவு அடைந்துள்ளது.

பெட்ரோல், டீசல், நிலக்கரி, இவற்றின் இறக்குமதியை குறைத்து ஆல்டர்நேட் எனர்ஜி ௭னப்படும் சூரிய ஒளி, காற்றாலை, அணுமின் ஆற்றலை பயன்படுத்தி தன்னிறைவு பெறுவதற்கான வழிகள் முழுமூச்சில் நடைபெறுகின்றது.

உலகிலேயே மிகப்பெரிய இந்திய ரயில்வே தனது அனைத்து டீசல் இன்ஜின்களையும் எலக்ட்ரிக் இன்ஜினனகளாக மாற்றி விட்டது. டீசல் உபயோகம் படிப்படியாக குறைந்து விட்டது.
Image result for மோடி big size modi pm
தற்போது மென்பொருள் ஏற்றுமதியிலும், இன்ஜினியரிங் பொருள்கள் ஏற்றுமதியிலும் நமக்கென ஒரு இடத்தை இந்தியா பெற்றுள்ளது.

அடுத்து ராணுவத்திற்கான ஆயுத கொள்முதல்.
நமது தமிழ்நாட்டில் டாஸ்மாக் மூலம் எப்படி கோடிக்கணக்கான வருமானம் வருகிறதோ, அதே போல பல வெளிநாடுகளுக்கு இந்த ஆயுத வியாபாரம்தான் அரசுக்கு வருமானமே...

70 ஆண்டுகளாக இந்த நாடுகளிடமிருந்து இந்தியா தனது ராணுவத்திற்கு தேவையான குண்டூசி முதல், ஷூவிலிருந்து, யூனிஃபார்மிலிருந்து

பீரங்கியிலிருந்து, ஏவுகணை வரை இறக்குமதி செய்து மற்ற நாடுகளை வாழ வைத்துக்கொண்டிருந்து.
மோடி அரசு ஐஎஸ்ஆர்ஓ மூலம் ராக்கெட் தொழில்நுட்பத்தில் தன்னிறைவு கண்டுள்ளது. அதே போல் ராணுவ தளவாட உற்பத்தியிலும் தன்னிறைவு கண்டால் நமது இறக்குமதி படிப்படியாக குறையும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் உயரும், இந்தியா உலக அளவில், சீனாவை மிஞ்சி தவிர்க்க முடியாத நாடாக உயரும்.

இப்போது எதிரி நாடுகளுக்கு மிகப்பெரிய சவால் மீண்டும் மோடி பிரதமராகிவிட்டால் இந்தியா அடிமை நாடாக எல்லாவற்றிர்க்கும் கையேந்தி நிற்காது, இதில் இந்தியாவின் எதிரி நாடுகள் ஒன்று சேர்ந்து அரசியல்வாதிகளையும், பத்திரிக்கைகளையும், சோசியல் மீடியாக்களில் பலறையும், சமூக சீர்திருத்தவாதி என்ற பேயரில் உலா வரும் பலறையும் இறக்கி விட்டுள்ளது. இவர்கள் பணி மோடியை வீழ்த்துவது, மழை வந்தாலும் மோடி காரணம், இடி இடித்தாலும் மோடி காரணம், வெயில் அடித்தாலும் மோடியே காரணம் என்ற பிம்பத்தை உருவாக்குவது. மோடிக்கு எதிராக போராட்டங்களை தூண்டுவது.

இந்த எதிரி நாடுகளின் திட்டம் ...

இந்தியாவை தன்னிறைவு பெறாத நாடாக, உபயோகிப்பாளர் சந்தை உள்ள நாடாக, நாளை எதிரி நாடுகளுக்கு உடல் உழைப்பு தேவைப்படும் தொழிலாளர்களின் பற்றாக்குறை ஏற்படின் இந்திய இளைஞர்களை பயன்படுத்திக்கொள்ளும் நாடாக, பெட்ரோல், டீசல் முதலியவற்றிற்கு எப்போதும் கையேந்தும் நாடாக வைத்திருக்க வேண்டுமாயின் மோடியை அடுத்த முறை ஜெயிக்க விடக்கூடாது.

இது வரை மோடி மீதோ, அவர்களின் அமைச்சர்கள் மீதோ எந்தவித ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. இப்போது பரப்பப்படும் ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்திலும் இந்தியாவில் போர் விமானம் தயாரிக்க HAL இருக்கும்போது அம்பானிக்கு ஏன் கொடுக்க வேண்டும்? என்றுதான் கேள்வி எழுப்ப முடிகிறது.

இந்தியாவை அழிக்க நினைக்கும் நாடுகளுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவை அடிமையாக வைத்திருக்க நினைக்கும் சில அந்நிய கைக்கூலிகள் ஒரு முக்கியமான விஷயத்தை மறந்து விட்டார்கள்.
இந்த போர் விமானம் தயாரிக்கும் பணி இந்தியாவில் தான் நடைபெற வேண்டும்.

பிரான்ஸ் அரசால் அங்கீகரிப்பட்ட நிறுவனமும் இந்திய அரசால் அங்கீகரிப்பட்ட நிறுவனமும் கூட்டு ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவில் தயாரிக்க வேண்டும்.

எச்ஏஎல், ஐஎஸ்ஆர்ஓ போன்றவைகள் இந்திய அரசின் நிறுவனங்கள், அங்கு நடைபெறும் ஆராய்சிகள், தயாரிப்புகள் அனைத்தும் highly confidential, அதில் கூட்டு ஒப்பந்த அடிப்படையில் அந்நியரை உள்ளே அனுமதிக்க முடியாது. அப்படி செய்தால் அது இந்திய நாட்டின் பாதுககப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாய் முடியும்.

அந்நிய சக்திகளின் சதி இந்த தேர்தலில் மிக அதிகமாக இருக்கும். மோடியை தோற்கடிக்க எந்த நிலைக்கும் இறங்க தயாராக இருப்பார்கள். மோடியை பற்றி அவதூறு பரப்ப சன்மானம் வழங்கப்படும், இந்தியன் என்பதிலிருந்து பிரித்துக்கொண்டு நான் தனி இனம் என்று குட்டையை குழப்புபவர்களுக்கு மேலும் அதிக சன்மானம் வழங்கப்படும்.

இந்திய வரலாற்றிலேயே வரப்போகும் தேர்தல் ஒரு முக்கியமான தேர்தல். இந்த முறை மோடி வெற்றி பெற்றால் இந்தியா மிகப்பெரிய அளவில் வளரும், அந்நிய சக்திகள் வெற்றி பெற்றால், இந்தியாவை அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது.
ஜெய் ஹிந்த்....


நன்றி இணையம்