மக்களுக்கான அரசு.. இது மக்களின் அரசு..திரு. எடப்பாடியார்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 10:37 | Best Blogger Tips


முதல்வராக எடப்பாடியார் பதவி ஏற்றது முதல் 24 மணி நேரமும் முதல்வரை கேலி கிண்டல் என்று விமர்சனம் செய்தவர்களுக்கு...
01.முதல்வர் எடப்பாடியார் பதவி ஏற்றதும்
ஆறுகளில் மணல் எடுக்க தடை விதித்தார்!
(ரொம்ப வருசமா சமூக ஆர்வலர்கள் மணல் கொள்ளையை தடுக்கணும்னுங்கிற சத்தம் இப்போ கேட்கிறது இல்லை)
02. ஏரி குளம்களை தூர்வாற உத்தரவு பிறப்பித்தார்!
(நீர்நிலைகளை அகலப்படுத்த வேண்டும்னு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றினார்)
03. அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து பொதுமக்களின் மனக்குமுறல்களை முதல்வர் தன் அமைச்சரவை கூட்டத்தில் வெளிப்படையாக பேசி பொதுமக்களின் பாராட்டை பெற்றார்..
04. உள்ளாட்சி மற்றும் நகராட்சி நிர்வாகங்களுக்கு தேவையான நிதிகளை உடனடியாக ஒதுக்கி அனைத்து திட்டங்களுக்கு அனுமதி கொடுத்து பணிகளை துவக்கி வைத்தார்!
05. அரசு கல்வித்துறையை தனியார் பள்ளிகளுக்கு இணையாக கொண்டுவர கல்வித்துறை அமைச்சருக்கு முழு சுதந்திரம் அளித்து அனைத்து முயற்சிகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளித்தார்!!
06. போக்குவரத்து துறையில் பழுதடைந்த பேருந்துகளுக்கு மாற்றாக புதிய பேருத்துகளுக்கு ஒப்பந்தம் அளித்து சிறப்பான போக்குவரத்து துறையாக மாற்றி செயல்படுத்தினார்!!
07. கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தமிழக தலைவர்கள் முதல் பிரதமர் வரை பாராட்டை பெற்றார்!!
08. மத்தியரசின் கடுமையான அரசியல் நெருக்கடியிலும் தமிழக நலனுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக அவைகளை முற்றுகையிட்டு போராட ஆலோசணையும் வழங்கினார்
09. உள்ளடி அரசியல்களையும் எதிரிகளின் அரசியலையும் சமாளித்து தனக்கு வரும் நெருக்கடியை சாமானியராக இருந்து சாணக்கியராக செயல்பட்டு சமாளித்து வென்று கொண்டிருக்கிறார்.
10. பிளாஸ்டிக் பொருளுக்கு தடையை ஆறு மாதங்களுக்கு முன்பே அறிவித்து இன்று அதை கண்டிப்பாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டுமென முடிவுடன் செயல்படுத்தி வருகிறார
(இயற்கை ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகளின் பாராட்டை பெற்றார் )
11. பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் அறிவித்து ஏழைகளின் ஆதரவையும் பாராட்டையும் பெற்றார்.
12. கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்து தன் அரசியல் வரலாற்றிலும் தமிழக அரசியல் வரலாற்றிலும் தன்பெயரை முத்திரையாக பதித்தார்.....
இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..
ஏளனம் பேசுபவர்களை எதார்த்த பேச்சால் வெல்லும் எங்கள் எடப்பாடியார் சிறந்த முதல்வர்தான்..
இது அம்மாவின் அரசு..
இது மக்களுக்கான அரசு..
இது மக்களின் அரசு..