ஒரே தேசம்! ஒரே வரி! தற்போது ஒரே கல்வி!

மணக்கால் அய்யம்பேட்டை | 3:45 PM | Best Blogger Tips
Image may contain: 1 person, text

ஒரே தேசம்! ஒரே வரி! தற்போது ஒரே கல்வி!
நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறை அமலுக்கு வருகிறது
-12
ம் வகுப்பு வரை இலவச கட்டாய கல்வி திட்டம்
* ரூ.75 ஆயிரம் கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கீடு
* பெண் கல்வி, தொழில், விளையாட்டு திட்டங்கள் சேர்ப்பு
நாகர்கோவில்: நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்விமுறையை அமலுக்கு கொண்டு வரும் வகையில் மத்திய அரசு 12ம் வகுப்பு வரை இலவச கட்டாய கல்வியை நடைமுறைப்படுத்த 75 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தொடக்க கல்வி முதல் பிளஸ் 2 வரை நாடு முழுவதும் ஒருங்கிணைந்த ஒரே மாதிரியான கல்விமுறையை கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான பூர்வாங்க பணிகள் ஏப்ரல் 1ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இதற்காக 75 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. சர்வ சிக்ஷா அபியான் (எஸ்எஸ்ஏ), ராஷ்ட்ரிய மத்தியமிக் சிக்ஷா அபியான் (ஆர்.எம்.எஸ்.), மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் (டயட்) எல்லாம் ஒரே கட்டமைப்பின் கீழ் கொண்டுவரப்பட இருக்கிறது. புதிய திட்டத்திற்கு எஸ்.எஸ்..எஸ்., சப்கோ சிக்ஷா - அச்சி சிக் ஷாஎன புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2020 வரை செயல்பாட்டில் இருக்கும்.
பெண்கள் குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உள்ளபேட்டி பச்சாஓ பேட்டி படாஹோ’, விளையாட்டு துறையில் தனித்துவம் அளிக்கும் வகையில்கேலோ இந்தியா’, தொழில்துறையில் மேம்பாடு அளிக்கும் வகையில், ‘கவுசல் விகாஸ்ஆகிய திட்டங்கள் கல்வித்துறையில் புதியதாக இணைக்கப்பட உள்ளது. புதிய திட்டத்தின்படி அரசு பள்ளிகளிலும் டிஜிட்டல் சார்ந்த கல்விமுறை பெருமளவு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். ஆசிரியர்கள் தொழில்நுட்ப உதவிகளை முழுமையாக பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடம் போதிக்க வாய்ப்பு கிடைக்கும். இதன் வாயிலாக கல்வித்தரம் மேலும் உயரும். ஆண், பெண் என்ற பாகுபாடின்றி சமூக நீதிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். கல்வித்துறை சார்ந்த அனைத்து வகையான பிரிவுகளின் ஒத்துழைப்பும் இந்த திட்டத்தில் இடம்பெறும். தொழில் சார்ந்த பயிற்சிகளும் மாணவ மாணவியருக்கு வழங்கப்படும். மாநில, மாவட்ட, வட்டார அளவிலான ஆசிரியர் பயிற்சி மையங்களில் கூடுதல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும்.
ஆசிரியர்களுக்கு பயிற்சி, மாணவர்களுக்கு பள்ளிகள் சார்ந்த பயிற்சி வகுப்புகள் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். ஸ்மார்ட் வகுப்பறைகள், டிஜிட்டல் போர்டுகள் வழியாக பாடம் போதிக்கப்படும். அரசு பள்ளிகளிலும் இந்த திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்படும். ‘ஸ்வச் வித்யாலயாதிட்டத்துடன் இணைத்து கல்விக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. கல்வித்துறையில் புதிய திட்டங்களை கொண்டுவரவும், அவற்றை செயல்படுத்தவும் மாநிலங்களுக்கு உரிய அதிகாரமும், சுதந்திரமும் வழங்கப்படும். இதன் வாயிலாக குழந்தைகளின் கல்வி அறிவை மேலும் மேம்படுத்த இயலும் என்பது நோக்கமாகும். கல்வி சார்ந்த விஷயங்களில் மிகவும் பின்தங்கியுள்ள கிராமங்கள், மலையோர பகுதிகளுக்கு தனி முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இத்திட்டத்தில் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் பின்தங்கிய மாவட்டங்கள், வட்டாரங்கள் மற்றும் மாநில எல்லை பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
கல்வித்துறையில் இணையும் திட்டங்கள்
பேட்டி பச்சாஓ பேட்டி படாஹோ: பெண் குழந்தைகளின் மேம்பாட்டிற்கான திட்டம் ஆகும். ஆயிரம் ஆண்களுக்கு 918 பெண்கள் என்ற நிலையில் இருந்து இந்த திட்டம் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் திட்டம் ஆகும். பெண் குழந்தைகளின் பிறப்பு, கல்வி, பொருளாதாரம்,பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையிலான திட்டம். பிரதான் மந்திரி கவுசல் விகாஸ் யோஜனா: தேசிய திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து, மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தின் கீழ், 31 கவுன்சில்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே பணியாற்றும் தொழிலாளர்களுக்கும், புதிதாக பணியில் சேரும் தொழிலாளர்களுக்கும், திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கம். தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிப்பது மட்டுமின்றி, மத்திய அரசின் சான்றிதழும் வழங்கப்படுகிறது. வருங்காலங்களில் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெறவும், இந்த சான்றிதழ் உதவும்.
கேலோ இந்தியா: இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்களாக தனிநபர் வளர்ச்சி மற்றும் சமூக மேம்பாட்டு வளர்ச்சி அடங்கும். புதிய கொள்கையின் விளையாட்டு வீரர்களுக்கு முழுமையான அணுகுமுறைகள் வழங்கப்படும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் எட்டு ஆண்டுகளுக்கு 5 லட்சம் உதவித் தொகையாகப் வழங்கப்படும். இருபதுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் விளையாட்டு சிறப்பு மையமாக மாற்றப்படும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் மக்களை வழிநடத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்!
ஜெய் பாரத்; ஜெய் மோதி!
***********
நரேந்திர மோதி அவர்களே ...
தலைவா! நீர் நேர்மையான தேசபக்தனாக அனைவருக்குமான தலைவனாக இருப்பதால் தானே சுற்றி சுற்றி எதிராளிகள் உம்மை வீழ்த்த நினைக்கிறார்கள் ....
72 வருட சுதந்திர இந்தியாவில் ஊழல் இல்லாத ஒரு ஆட்சியை திறம்பட நடத்திக்கொண்டு இருப்பதனாலேயே கூட்டு சேர்ந்து குள்ள நரிகள் எதிர்க்கிறார்கள் .
அடுத்த தேர்தலுக்காக திட்டங்களை வகுப்பவன் தலைவன் இல்லை , அடுத்த தலைமுறைகான திட்டங்களை வகுப்பவனே தலைவன் ...அதுவே எங்கள் பிரதம சேவகன் #மோடி_ஜி
நன்றி இணையம்