பொன்னான தருணங்களைப் பெற

மணக்கால் அய்யம்பேட்டை | 12:06 PM | Best Blogger Tips
பொன்னான தருணங்களைப் பெற க்கான பட முடிவு

கிரேக்க தத்துவஞானி சாக்ரடீஸ் ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளை எழுப்பியதால் தான் தலைசிறந்த தத்துவஞானியாக அவரின் பெருமை உலகுக்கு தெரியவந்தது.
வாழ்க்கையில் முன்னேற மனோதிடம் உறுதி, எதையும் எதிர்கொள்ளும் பக்குவம் வேண்டும். முயற்சிதான் முன்னேற வழிவகுக்கும்.
விண்ணில் பிரகாசிக்கும் சந்திரனின் தொலைவு அதிகம். ஆனாலும் அதன் வெளிச்சம் பூமி முழுவதும் ஒளிர்கின்றதே..
எழில் நிறைந்த இந்த உலகில் எதையும் பெறலாம். அதற்கு கடினமுயற்சி வேண்டும்.
மலையிலிருந்து பெயர்க்கப்பட்ட கற்பாறையில் சிற்றுளியால் செதுக்கும்போது கிடைக்கும் உயிர் நம்மை பிரம்மிக்க வைக்கிறது,
வாழ்க்கைக்கும் இது பொருந்தும்.
ஒருமுறை வெடிஉப்பு நிரப்பப்பட்ட குடுவையைத் துடைத்துக் கொண்டிருந்த ஒரு இளைஞனின் கை தவறி கீழே விழுந்தததும் தீப்பொறி சிதறியது. இதைக்கண்ட இளைஞர்களுக்குள் ஒரு பொறி எழுந்தது. இரு இரசாயனக் கலவையை தனித்தனியே எடுத்து ஒரு குச்சியில் தேய்த்து மற்றொன்றின் மீது உரசியதன் விளைவில் தீ உண்டானது. தீக்குச்சியையும், தீப்பெட்டியும் கண்டுபிடிக்க இது பெருந்துணையாக இருந்தது.
தினமும் 24 மணிநேரத்தை நமக்கு இயற்கை அளித்துள்ளது. இதில் 6 மணிநேரம் உறங்கிக் கழிக்கிறோம். இப்படியிருக்க ஓராண்டு காலம் தூங்கும் நேரம் 2190 மணித்துளிகள்.
ஏதோ உழைத்தோம் உண்டோம் உறங்கிறோம் என்கிற ரீதியில் தான் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது
மனிதர்களின் சராசரி ஆயுள்காலம் 70 என்கிறது மருத்துவம். அந்த ஆயுள்காலம் தற்போது குறைந்து வருகிறது. இந்த வயதிற்குள் நீ சாதித்தது என்ன என்று உள்மனம் கேட்கும்போது நம்மை நாமே திட்டிக்கொள்கிறோம். ஆக நேரம் என்பதை யாரும் திரும்பப் பெற முடியாத ஒன்று.
நேரத்தைப் பயனுள்ளதாக, செலவிடுவதன் மூலம் பல வரவுகளைப் பெற வேண்டும். நேரம் மதிப்பு மிக்கது என்ற உணர்வும் உண்மையும் பெற வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் பல சாதனைகள் நிகழப் பெற்று வருகின்றன. வாழ்க்கையின் பொன்னான தருணங்களைப் பெற வேண்டுமென்றால், நேரத்தை நமதாக்கிக் கொண்டு வருங்காலத்தையும் நமதாக்குவோம் என்ற உறுதியை மனதில் கொள்ள வேண்டும்.இன்றைய நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்*