ஐரோப்பிய கிறிஸ்தவர் வரவில்லை என்றால் இங்கு கல்வியே வந்திருக்காது : வைரமுத்து
வைரமுத்துவிற்கு வாயில் சனி, இது இனி பரிகாரம் செய்யாமல் தீராது, இல்லாவிட்டால் இப்படி எல்லாம் பேசமாட்டார்
வெள்ளையனிடம் அன்று என்ன மன்ணாங்கட்டி இருந்தது? அப்படி எல்லாம் இருந்தால் ஏன் எதனையோ தேடி இங்குவரப்போகின்றான்?
அட அலெக்ஸாண்டரே இந்தியா என் கனவு என்றுதான் ஓடிவந்திருக்கின்றான்
உண்மையில் அரேபிய, சீன, இந்திய தொடர்பு கிடைத்தபின்பே அவனின் கல்வி மேம்பட்டிருக்கின்றது
எண்கள் முதல் பல குறியீடுகள் இங்கிருந்துதான் மேற்கே சென்றன
கிரேக்கர் கிரேக்க மொழியிலும், ரோமர் லத்தீன் மொழியிலும் அதனை மொழிமாற்றி படித்தனர். அவர்கள் கல்வியின் அடித்தளம் ஆசியாவே
வெள்ளையன் காலத்தில் இந்தியா அவனின் கனவு, சீனா பெருங்கனவு
பட்டுச்சாலை வழியே இந்திய பொருளும், சீன பொருளும் அவனுக்கு சென்றுகொண்டே இருந்தன, அவனும் ஓடோடி வந்து இங்கெல்லாம் பார்த்து வியந்தான்
சீனாவில் அன்றைய மங்கோலியர் பயன்படுத்திய காகிதம், திசைகாட்டும் கருவி, வெடிமருந்து எல்ல்லாம் கண்டு வியந்த வெள்ளையன் அதை ஐரோப்பாவில் அறிமுகபடுத்தினான்
அப்படித்தான் வளர ஆரம்பித்தது ஐரோப்பா
பின் சிலுவை போர்களால் துருக்கியர் பட்டுசாலையினை கைபற்றி சீல் வைக்க கடலெல்லாம் வழிதேடி வந்தான் வெள்ளையன், அதாவது அந்த அளவு இந்தியா அவனுக்கு தேவைபட்டிருக்கின்றது
பிரிட்டிடார் அன்றைய இந்திய மன்னன் ஜஹாகிங்கீரிடம் அனுமதி வாங்க சென்று, அவன் அரண்மனையினை கண்டுவிட்டு மூன்று நாள் வியப்பில் பேசவே இல்லை என்கின்றது வரலாறு
அந்த அளவு அற்புத வாழ்வு இந்தியாவில் இருந்திருக்கின்றது, வெள்ளை ஐரோப்பா அன்று தரித்திர தேசமாக இருந்திருக்கின்றது, கல்வியும் இல்லை செல்வமும் இல்லை
அவனின் கல்வியின் மூலம் கிழக்கே இருந்து சென்றதே, ஆதிச்சநல்லூர் முதல் தஞ்சை சரஸ்வதிமகால் வரை அவன் தேடியது கொஞ்சமல்ல
சீன , இந்திய தொடர்பு கிடைத்தபின்பே ஐரோப்பா பெரும் பாய்ச்சலில் எழும்பியது, வரலாறு அதனைத்தான் சொல்கின்றது. அவர்கள் வல்லராசகிவிட்டு, கல்வியில் சாதித்துவிட்டு இங்கு வரவில்லை
இங்கு வந்தபின்புதான் வாழவே ஆரம்பித்தார்கள்
இங்கும் அவன் பெரும் கல்வி எல்லாம் கொடுக்கவில்லை, அவன் நிர்வாகத்திற்கு தேவையான கல்வியினையே முதலில் கற்றுகொடுத்தான், தன் மொழியான ஆங்கிலத்தை கற்றுகொடுத்தான்
ஆங்கிலம் மொழியே தவிர அறிவு அல்ல
வெள்ளையன் வரவால் நிறைய வளர்ந்திருக்கலாம் அதெல்லாம் காலத்தின் மாற்றம் , ஆனால் வெள்ளையனால் இழந்ததும் அதிகம் பல அடையாளங்களை இந்தியா இழந்தது, மறுக்க முடியாது
பல அரிய கலைகளும், போர் முறையும், கப்பல் கட்டும் தொழிலும் கூட தனக்கு எதிரானது என வெள்ளையனால் இங்கு ஒழிக்கபட்டது, இன்னும் ஏராளம்
இந்தியாவில் வெள்ளையன் கல்வி கொடுத்தான், அவன் வரவில்லை என்றால் அழிந்திருப்போம் என்பதெல்லாம் சரியான கருத்து அல்ல.
சீனா இன்று உலக வல்லரசாக நிற்கின்றது, வெள்ளையன் அங்கு ஆண்டானா?
ஜப்பானில் ஆண்டானா? அவை எல்லாம் தலைநிமிர்ந்து நிற்கவில்லையா?
வெள்ளையன் வராவிட்டாலும் இங்கு எல்லா கல்வியும் வந்திருக்கும், என்ன? சீனாவில் மாண்டரினிலும் ஜப்பானில் ஜப்பானிய மொழியிலும் வந்தது போல் இந்திய மொழிகளிலும் வந்திருக்கும்
நிச்சயம் வந்திருக்கும் காரணம் இது காலமாற்றம்
வைரமுத்துக்கு சனி உச்த்தில் இருப்பதால் கொஞ்ச நாளைக்கு மவுனவிரதம் இருப்பது நல்லது. இப்படியான பைத்தியகார உளரல்கள் எல்லாம் அவருக்கு நல்லதல்ல
மிஸ்டர் வைரமுத்து ஒரே ஒரு கேள்வி, நீர் படித்த பச்சையப்பா கல்லூரி யாரால் நிறுவபட்டது?
அதை தொடங்கியது ஐரோப்பியனா? இல்லை இந்தியன் பச்சையப்பரா?