இந்திய அரசியலமைப்புச் சட்டம்

மணக்கால் அய்யம்பேட்டை | 5:45 PM | Best Blogger Tips

அம்பேத்கார் தலைமையிலான இந்திய அரசியல் அமைப்புச் சட்ட வரைவுக்குழு அதன் பணியை முடித்து நாடாளுமன்றத்திடம் சட்ட வரைவை ஒப்படைத்த நாள் நவம்பர் 26, 1949. இந்த நாள் ஆண்டுதோறும் இந்தியாவிற்கான சட்ட நாளாக நினைவுகூறப்படுகிறது.
அம்பேத்கார் தலைமையிலான குழு எழுதிய இந்திய அரசியல் சட்டத்தைப் பலரும் புகழ்ந்து கொண்டிருந்த நிலையில், "இந்திய அரசியலமைப்புச் சட்டம்" என்பது மாற்றப்பட கூடாத வேதப்புத்தகம் அல்ல. குடி மக்களின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றத்திற்குரியதே என்பதை உணர்த்தி, தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீடுக்கு வழிவகுக்கும் வகையில் இந்திய அரசியல் சட்டத்தில் முதல் சட்டதிருத்தத்திற்கு வழி வகுத்தவர் தோழர் பெரியார்.
பெரியாரின் தோழரான திருச்சி வே. ஆனைமுத்து அவர்கள், “இந்திய அரசியலமைப்புச் சட்டம் - ஒரு மோசடி” என்ற தலைப்பில் ஒரு புத்தகமே எழுதி வெளியிட்டார். அந்தப் புத்தகத்தில் அவர் எழுப்பியுள்ள பல விவகாரங்களுக்கு இன்னும் பதில் அளிக்க முடியாத நிலையே உள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனால் இவற்றில் மக்களுக்கு தேவையான வகையில் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் மிகக்குறைவே. ஆட்சியில் இருப்பவர்களின் வசதிக்கும், அதிகாரத்தை ஒரிடத்தில் குவிப்பதற்குமே இந்திய அரசியலமைப்பு சட்டம் பலமுறை திருத்தப்பட்டுள்ளது.
இத்தகைய நடவடிக்கைகளின் நடுவே, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முக்கிய அம்சங்களாக அம்பேத்கார் முன்வைத்த பல கொள்கைகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. அந்தக் கொள்கைகளுக்கு எதிரான திசையிலேயே அனைத்து அரசு அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பகுதி-4, அரசு கொள்கைகளுக்கு வழிகாட்டும் கோட்பாடுகள் (DIRECTIVE PRINCIPLES TO STATE POLICY) என்ற பிரிவின்கீழ் பல முக்கிய அம்சங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. அவையாவன...
38. மக்களின் நலமேம்பாட்டிற்காக அரசு சமூக ஒழுங்கைப் பாதுகாத்தல்:
(1) பொதுமக்களின் நலன் மற்றும் சமூக மேம்பாட்டிற்காகவும் பாதுகாப்பிற்காகவும், அரசு, நீதி, சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் விவகாரங்கள் அனைத்தையும் ஒழுங்குபடுத்த வேண்டும். தேசிய வாழ்வில் உள்ள எல்லா அமைப்புகளிலும் அவற்றைத் தெளிவுபடுத்த வேண்டும்.
(2) அரசு, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மற்றும் தனிப்பட்டவர்களுக்கிடையில், தனிப்பட்ட குழுக்களுக்கிடையில் காணப்படும் ஏற்றத் தாழ்வுகளை குறைத்தல்.
39. சில கொள்கைகளை அரசு பின்பற்றுதல் வேண்டும்:
அரசு குறிப்பாக-
(அ) குடிமக்கள், ஆண்-பெண் பேதமின்றிச் சரிசமமாக வாழ்வதற்குத் தேவையான வசதிகளைப் பெறுவதற்கும்;
(ஆ) உற்பத்தியாகும் பொருள்கள் அனைத்தும் சமுதாயத்தின் பொதுநலன் கருதி அனைவருக்கும் கிடைப்பதற்காக அவற்றின் உரிமை - கட்டுப்பாடு பொதுவாக பகிர்ந்தளிக்கப்படுவதற்கும்;
(இ) செல்வமும், உற்பத்தியும் பொதுத்தீங்கின்றி, தேக்கமடைவதைத் தவிர்க்கும் பொருளாதார அமைப்பை செயல்படுத்துவதற்கும்;
(ஈ) ஆண், பெண் இருபாலாருக்கும் இணையான வேலைக்கு, இணையான ஊதியம் அளிப்பதற்கும்;
(உ) வேலையாட்களின் உடல்நலத்தையும், திறத்தையும், ஆண், பெண், சிறு குழந்தைகள் ஆகியோரை தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதற்கும், மற்றும் குடிமக்களைத் தமது வயதுக்கும் திறனுக்கும் பொருத்தமில்லாத ஒரு வேலைக்குப் பொருளாதார தேவையின் பொருட்டு தள்ளப்படாது தடுப்பதற்கும்;
(ஊ) குழந்தைகள் சுதந்திரமான நிலையில் கண்ணியத்தோடும் நல்வாழ்வுடனும் வளர்வதற்கும், அப்படி வாழ்வதற்கான வசதிகளையும், வாய்ப்புகளையும் அளிப்பதற்கும், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் சுரண்டப்படுவதினின்றும் பாதுகாப்பதற்கும், ஒழுக்கம் மற்றும் பொருளாதாரம் காரணமாக நிராதரவாக விடப்படாமல் காப்பதற்கும் தமது கொள்கையைத் தேர்வு செய்ய வேண்டும்.
40. கிராம ஊராட்சி அமைப்புகள்:
கிராம ஊராட்சிகளை அமைக்கவும், அவை தன்னாட்சி பெற்று செயல்பட தேவையான அதிகாரங்களை வழங்க வேண்டும்.
41. சில தறுவாய்களில் வேலை, கல்வி, பொது உதவிக்கான உரிமை:
வேலை, கல்வி உரிமையின் பொருட்டு, வேலையில்லாதபோது முதிய வயதினர், நோயுற்றோர், தொழில் புரிய இயலாதோர் மற்றும் தேவையற்ற வறுமையில் வாடுவோர் ஆகியோரைப் பாதுகாக்கும் வகையில் அரசு கொள்கைகளை வகுக்க வேண்டும்.
42. நியாயமானதும், மனிதத்தன்மையோடு கூடியதுமான தொழில் மற்றும் மகப்பேறு நிவாரணங்களுக்கான வகையங்கள்:
நியாயமானதும் மனிதத்தன்மையோடு கூடியதுமான தொழில் மற்றும் மகப்பேறு நிவாரணங்களைப் பாதுகாப்பதன் பொருட்டு, அரசு வகையங்களை உருவாக்க வேண்டும்.
43. வேலையாட்களுக்கான வாழ்வூதியமும் இன்ன பிறவும்:
வேளாண்மை, தொழிற்சாலை மற்றும் வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வாழ்வூதியம், நாகரிகமான வாழ்க்கைத்தரத்திற்கு உறுதியளிக்கும் வகையிலான தொழில்கள், போதுமான ஓய்வு, சமூக மற்றும் பண்பாட்டுக்கான வாய்ப்பு ஆகியன கிடைப்பதற்கு உரிய முயற்சிகளைத் தகுந்த சட்டத்தின் வாயிலாகவும் அல்லது பொருளாதார அமைப்புகள் மூலமாகவும் அல்லது வேறு ஏதேனும் வகையிலும் அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
43அ. தொழிற்சாலைகளில் நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கேற்றல்:
தொழிற்சாலைகளை நடத்தும் அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் அல்லது நிர்வாகங்களின் நிர்வாகப்பணியில், தொழிலாளர்கள் பங்கு கொள்ளும் வகையில், அரசு தகுந்த சட்டத்தின் மூலம் அல்லது வேறு ஏதேனும் வகையில் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
44. குடிமக்களுக்கு ஒரே மாதிரியான உரிமையியல் சட்டம்.
குடிமக்களுக்கு இந்திய நிலவரை முழுவதும் ஒரே மாதிரியான உரிமையியல் சட்டத்திற்கு அரசு முயற்சித்தல் வேண்டும்.
45. ஆறு வயதுக்கு உட்பட்ட இளங்குழந்தைகளைப் பாதுகாப்பதும் கல்வி அளிப்பதும்:
ஆறு வயது நிறைவடைகின்றவரையில் அனைத்து இளங்குழந்தைகளையும் பாதுகாக்கவும் அவர்களுக்குக் கல்வி அளிக்கவும் அரசு முயற்சிக்க வேண்டும்.
46. பட்டியல் மரபினர், பட்டியல் பழங்குடி மரபினர் மற்றும் வேறு பலவீனப் பிரிவினர்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல்:
பலவீனப் பிரிவு மக்களிடையே பொருளாதார மற்றும் கல்வி முன்னேற்றத்திற்கு அரசு சிறப்பாகக் கவனம் செலுத்த வேண்டும். அதிலும் குறிப்பாகப் பட்டியல் மரபினர் மற்றும் பட்டியல் பழங்குடி மரபினரின் பொருளாதார மற்றும் கல்வி முன்னேற்றத்திற்கு அரசு சிறப்பாகக் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமானதாகும். மற்றும் அவர்களை சமூக அநீதியினின்றும், அனைத்து வித சுரண்டல்களிலிருந்தும் பாதுகாத்தல் வேண்டும்.
47. ஊட்டச்சத்து, வாழ்க்கைத்தரம், உடல்நல மேம்பாட்டை உயர்த்துவதற்கான அரசின் கடமை:
ஊட்டச்சத்தை மேம்படுத்துவதையும், மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதையும் உடல்நலத்தை உயர்த்துவதையும் அரசு தமது கடமையாக கொள்ளவேண்டும். அதிலும் குறிப்பாக போதையூட்டும் மதுபானங்கள், போதைமருந்துகள் ஆகியன மருந்துக்காகப் பயன்படுத்துவதைத் தவிர வேறுவிதமாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
48. வேளாண்மை மற்றும் கால்நடை பராமரிப்புக்கான அமைப்பு:
வேளாண்மை மற்றும் கால்நடை பராமரிப்புக்கு நவீன அறிவியல் முறைகளைப் புகுத்துவதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக உயர்ரகக் கால்நடைகளைப் பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவற்கும் பசுக்கள், கன்றுகள் மற்ற பால்தரும் விலங்குகள் வறட்சியுள்ள கால்நடைகள் ஆகியவற்றைக் கொல்வதைத் தடுப்பதற்கும் வேண்டிய முயற்சிகளை அரசு எடுத்தல் வேண்டும்.
48அ. சுற்றுச்சூழலை பாதுகாத்தலும், மேம்படுத்தலும் மற்றும் வனங்கள் வனவிலங்குகளை பாதுகாத்தலும்:
நாட்டின் சுற்றுச்சூழலை, அரசு பாதுகாக்கவும், மேம்படுத்தவும் வேண்டும். மற்றும் நாட்டின் வனங்கள், வனவிலங்குகளைப் பாதுகாத்தல் வேண்டும்.
49. தேசிய முக்கியத்துவமுள்ள நினைவுச்சின்னம், இடங்கள், பொருள்களைப் பாதுகாத்தல்:
தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்று அறிவிக்கப்பட்ட நினைவுச்சின்னம், அல்லது இடம் அல்லது கலைப் பொருட்கள் அல்லது வரலாற்றுச் சின்னங்களைச் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் சிதைப்பது, நீக்குவது, முடிவு செய்வது அல்லது ஏற்றுமதி செய்வதினின்று பாதுகாப்பது ஆகியவை அரசின் கடமை.
50. நிர்வாகத்தினின்று நீதித்துறையைத் தனியே பிரித்தல்:
அரசின் பொதுப்பணியிலிருந்து நீதித்துறையைத் தனியாகப் பிரிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
....என்பன உள்ளிட்ட மக்கள் நல அம்சங்கள் அரசின் கொள்கைகளுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளாக இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 37, “இந்தப் பகுதியில் காணப்படும் கொள்கைகள் அனைத்தும் நாட்டின் ஆட்சிமுறைக்கு அடிப்படையானவைகள்; இந்த கொள்கைகளின் அடிப்படையில் சட்டங்களை இயற்றுவது அரசின் கடமை” என்று கூறப்பட்டிருந்தாலும், “இந்த அம்சங்களை நீதிமன்றத்தின் மூலம் அமல்படுத்த முடியாது” என்றும் கூறப்பட்டுள்ளது.
அதாவது, இந்த அம்சங்களை நிறைவேற்றுமாறு உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டபோது சுதந்திர இந்தியாவின் வயது இரண்டுதான். அந்த நிலையிலேயே மக்களுக்கான அனைத்து உரிமைகளையும் கோரி வழக்குகள் தொடரப்பட்டால் நிர்வாகம் ஸ்தம்பித்துவிடக்கூடும் என்ற நிலையில் இந்த பிரிவு 37 எழுதப்பட்டது. காலப்போக்கில் அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளில் சொல்லப்பட்ட அம்சங்களை உள்ளடக்கிய சட்டங்களை இந்திய ஆட்சியாளர்கள் நிறைவேற்றி விடுவார்கள் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் இந்த சட்டப்பிரிவு உருவாக்கப்பட்டது. ஆனால் சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் இந்த அம்சங்கள் நிறைவேற்றப்படவில்லை என்பதோடு இந்த அம்சங்களுக்கு எதிரானதும், மக்கள் விரோதத் தன்மை கொண்டதுமான பல சட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் அரசியல் சட்டத்தின் பிரிவு 37 நீடிப்பது மக்களுக்கு எதிரானது.
இந்தியாவில் உள்ள சட்டங்களில் அரசியலமைப்பு சட்டமே மேலானது; இந்த அரசியலமைப்பு சட்டத்தின் கொள்கைகளுக்கு எதிரான சட்டங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டியதே உச்ச நீதிமன்றம் உள்ளடக்கிய நீதித்துறையின் முதன்மை பணியாகும். ஆனால் இன்றைய நிலையில் உலகமயம்; தனியார்மயம்; தாராளமயம் என்ற அடிப்படையில் இயங்கும் அரசு அமைப்புகள் உலக வர்த்தக கழக நிபந்தனைகளின்படி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கொள்கைகளுக்கு நேரெதிரான பல சட்டங்களை அமல்படுத்தி வருகிறது.
புதிய பொருளாதாரக்கொள்கை இந்தியர்களின் வாழ்வை மருத்துவத் துறையில் மட்டுமல்ல, விவசாயம், தொழில் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் தலைகீழாக மாற்றி வருகிறது. மக்களின் அடிப்படை தேவைகளான கல்வி, மருத்துவம், உணவுப்பொருள் உற்பத்தி மற்றும் வினியோகம் உள்ளிட்ட அனைத்தும் தனியார்மயமாக்கப்படுகிறது. மதுபான விற்பனை, மணல் விற்பனை போன்ற தேவையற்ற துறைகளில் அரசு ஈடுபடுகிறது. தொழிலாளர் நலன் காக்கும் சட்டங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்கள் அனைத்தும் செயலற்றுப்போகும் வகையில் நடைமுறைகள் மாற்றியமைக்கப்படுகின்றன. அனைத்துத் துறை பணியாளர்களும் எந்தவிதமான சமூக பாதுகாப்புமின்றி நிராதரவான நிலையில் உள்ளனர். இந்த நிலை காரணமாக முதியவர்கள் மற்றும் நோயாளிகள் வீட்டில் இருந்து விரட்டப்படும் நிலை உருவாகி வருகிறது.
கல்வி தனியார் மயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதிக விலை கொடுத்தே உயர்கல்வி பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எதைச் செய்தாவது பொருள் ஈட்டுவதே பிழைக்கும் வழி என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் மாட்டிக் கொள்ளாமல் தவறு செய்பவன் சாமர்த்தியசாலி என்ற கருத்தாக்கம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. பெரிய தவறுகளை செய்பவர்கள், அரசியல் தலைவர்களாகவும், சிறிய தவறுகளை செய்பவர்கள் குற்றவாளிகளாகவும் மாறும் நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக சமூகத்தில் யாருக்குமே எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாத நிலை நிலவுகிறது.
இதெல்லாம் இப்போதுதான் தெரியுமா? அப்போதே எச்சரித்திருக்கலாமே என்ற கேள்வி எழலாம். அப்போதும் இதுபோன்ற விமர்சனங்கள் எழுந்தன. உலக வர்த்தக கழகத்தின் முன்னோடியான காட் (General Agreement on Trade and Tariff) ஒப்பந்தத்தை வரைந்த டங்கல் என்பவரின் பரிந்துரைகளை முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஏ.தேசாய், சின்னப்ப ரெட்டி, வி.ஆர். கிருஷ்ணய்யர், தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜிந்தர் சச்சார் ஆகியோர் பரிசீலித்தனர். பின்னர் அவர்கள் அளித்த அறிக்கை மிக முக்கியமானது. “சந்தைக்கு இணக்கமான பொருளாதாரம், தாராளமயமாக்கல், உலகப் பொருளாதாரத்துடன் இணைத்தல், பெருமளவு அன்னிய முதலீட்டுடன் கூடிய தனியார் மயமாக்கல் முதலியன இந்திய தொழில்களின் வளர்ச்சி, இந்திய அரசியல் சட்ட விதிகள் 14, 19, 21-ன் கீழான அடிப்படை உரிமைகளுக்கு எதிரானவை ஆகும்.”
“இந்திய அரசியல் சட்டம் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கிறது. மாநிலங்களுக்கென சில அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அரசியல் சட்டவிதி 13, 14-ன் கீழ் மத்திய அரசுக்குக் கிடைக்கும் அதிகாரத்தின் அடிப்படையில் காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் இந்த கூட்டாட்சி முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் எதுவும் இல்லை” என்று அந்த அறிக்கையில் தெள்ளத்தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த விமரிசனம் விழ வேண்டியவர்களின் காதுகளில் இன்று வரை விழவில்லை. எனவே மக்கள் எக்கேடு கெட்டாலென்ன? என்ற போக்கிலேயே அனைத்து அரசு அமைப்புகளும் இயங்குகின்றன. மாநில சுயாட்சி குறித்து உரத்து முழங்கிய கட்சித் தலைவர்கள்கூட பில்கேட்ஸூக்கும், அவரது உள்நாட்டு எடுபிடிகளுக்கும் காவடி தூக்கும் அவலநிலை நிலவுகிறது.
இதற்குத்தானா இந்தியா சுதந்திரம் பெற்றது? அப்படியானால் “இந்திய அரசியல் அமைப்பு சட்டம்” உண்மையிலேயே ஒரு மோசடிதானா? இந்த கேள்விகளுக்கான பதில் அரசியல்வாதிகளிடமும், ஆட்சிப்பொறுப்பில் உள்ளவர்களிடமும், சட்டத்துறை சார்ந்தவர்களிடம் மட்டுமே இல்லை. இந்தியாவில் உருவாகும் அனைத்து சட்டங்களும், பொது மக்களாகிய நாம் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம்தான் நிறைவேற்றப்படுகிறது. எனவே நல்ல சட்டங்களோ, கெட்ட சட்டங்களோ - அவை உருவாவதில் நமது பங்கும் இருக்கிறது.
என்ன செய்யப்போகிறோம்?

Thanks & Copy from classle.net

அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

மணக்கால் அய்யம்பேட்டை | 5:42 PM | Best Blogger Tips

விதிக‌ள்

விதி 2. எப்பொருளில் இருப்பதும் ஏனைய எதிலேனும் இருக்கும்.
விதி 3. எப்பொருளும் ஏனைய‌வைக‌ளோடு இணைந்து தொட‌ர்பில் இருக்கும்.
விதி 4. எப்பொருளும் ஏனைய‌வைக‌ளால் பாதி‌ப்ப‌டையும். அதுவும் ஏனைய‌வைகளைப் பாதிக்கும்.
விதி 5. எப்பொருளும் ஒரே உருவில் நிலையாக‌ நில்லாமல் அத‌ன் பிற‌ உருக்க‌ளுக்குத் தொடரும்.
விதி 6. எப்பொருளுக்கும் ப‌திலாக‌ மாற்றுகள் இருக்கும்.
விதி 7. எப்பொருளுக்கும் பயன் இருக்கும்.
  1. எப்பொருளும் பாகம் பாகமாகப் பகுபடக்கூடியது’ என்பது விதி. பகுக்கமுடியாத பொருள் என்று எதுவும் இல்லை. பகுக்கமுடியாத ஒரு பொருளை மனிதனால் படைக்க முடியாது.
  2. எப்பொருளில் இருப்பதும் மற்ற ஏதாவது ஒரு பொருளில் இருக்கும்’ என்பது விதி. இணையற்ற பொருள் என்று எதுவும் இல்லை. இப் பிரபஞ்சத்திலிருக்கும் கூறுகளைக் கொண்டே பொருட்கள் படைக்கப்படுவதால், ஒரு பொருளில் இருப்பது மற்ற ஏதாவது ஒரு பொருளிலும் இருக்கும். இணையற்ற ஒரு பொருளை மனிதனால் படைக்க முடியாது.
  3. எப்பொருளும் மற்ற பொருட்களுடன் தொடர்பிலிருக்கும்’ என்பது விதி. எதனோடும் தொடர்பில்லாத பொருள் என்று எதுவும் இல்லை. உன் மனதால் தொடர்புகொள்ள முடியாத பொருளை உன்னால் எண்ணமுடியாது. எதனோடும் தொடர்பு இல்லாத ஒரு பொருளை மனிதனால் படைக்க முடியாது.
  4. எப்பொருளும் மற்ற பொருட்களால் பாதிக்கப்படும்’ என்பது விதி. எதனாலும் பாதிக்கப்படாத பொருள் என்று எதுவும் இல்லை. எதனாலும் பாதிக்கப்படாத ஒரு பொருளை மனிதனால் படைக்க முடியாது.
  5. எப்பொருளும் ஒரே உருவில் நிலையாக‌ நில்லாமல் அத‌ன் பிற‌ உருக்க‌ளுக்குத் தொட‌ர‌க்கூடிய‌து’ என்பது விதி. ஒரே ஒரு உருவில் மட்டுமே இருக்கும் பொருள் என்று எதுவும் இல்லை. ஒரே ஒரு உருவில் மட்டுமே இருக்கும் பொருளை மனிதனால் படைக்க முடியாது. அதாவது, எப்பொருளுக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட உருக்கள் இருக்கும்.  உனக்கு ஒரே ஒரு உருதான் எனும் பட்சத்தில் உன்னால் அசைய முடியாது. நீ அசையும்போது, நீ ஒரு உருவில் இருந்து மற்றொரு உருவிற்கு மாறுகிறாய். உனக்கு ஒரே ஒரு உருதான் எனும் பட்சத்தில் மாற்றம் என்பதை ஒருபோதும் உன்னில் காணமுடியாது.
  6. எப்பொருளுக்கும் மாற்றுப்பொருட்கள் இருக்கும்’ என்பது விதி. மாற்றற்ற பொருள் என்று எதுவும் இல்லை. ஒரு பொருள் மறையும்போது மற்றொரு பொருள் தோன்றியே ஆக வேண்டும். மாற்றற்ற ஒரு பொருளை மனிதனால் படைக்க முடியாது.
  7. எப்பொருளுக்கும் பயன் உண்டு’ என்பது விதி. பயனற்ற பொருள் என்று எதுவும் இல்லை. சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
‘விதியை ம‌தியால் வெல்ல‌ முடியும்’ என‌க்கூவும் அறிவிலிக‌ளே, இவ்விதிக‌ளை உங்க‌ளால் அழிக்க முடியுமா? அறிவிருந்தால் அழித்துக் காட்டுங்க‌ள்!

4 + 2 = 6
நாலுட‌ன் இர‌ண்டைக் கூட்ட‌ விதிப்ப‌டி வ‌ருவ‌து ஆறு.
6 + 2 = 8.
ஆறுட‌ன் இர‌ண்டைக்கூட்ட‌ விதிப்ப‌டி வ‌ருவ‌து எட்டு.
6 + 6 = 12.
ஆறுட‌ன் ஆறைக்கூட்ட‌ விதிப்ப‌டி வ‌ருவ‌து ப‌ன்னிரெண்டு.
எதை எப்படிச் செய்தால் எது வரும், எது வராது என்பதை நிர்ணயிப்பது விதி. விதியைக் காண்பதுதான் மதி (அறிவு). எது வருகிறதோ அது கதி.



அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.
ஆவது = வருவது. அதாவது, விதியை அறியாதவன் அறிவில்லாதன். விதியை அறியாதவனால் வருவதைச் சரியாகக் கணிக்க முடியாது. அறிவியலின் அனைத்துப் பிரிவுகளும் விதியைத்தான் முன்னிறுத்துகின்றன. எது வரும்? எது வராது? What would be the outcome? What will happen? What will not happen? [விதியை வகுத்தது யார்? விதியை வகுத்தவன் கடவுள் என்கின்றன மதக் கோட்பாடுகள்.] 4 + 2 = 6
நாலுடன் இரண்டைக் கூட்டினால் விதிப்படி வருவது என்னவென்பதை அறிவது கணிதம்.
What would be the outcome if four is added to two?
H2O + CO2 → H2CO3
நீருடன் கார்பன் டைஆக்ஸைடு கூடினால் விதிப்படி வருவது என்னவென்பதை அறிவது வேதியியல்.
What would be the outcome if water reacts carbon dioxide?
ஆண் + பெண் → ஆணா/பெண்ணா?
ஆணுடன் பெண் கூடினால் விதிப்படி வருவது என்னவென்பதை அறிவது உயிரியல்.
உனக்கு நாளை விதிப்படி வருவது என்னவென்பதை அறிவது ஜோதிடம்.
இதே ரீதியில்,
உன்னை நோய்க்கிருமிகள் தாக்கினால் விதிப்படி வருவது என்னவென்பதை அறிவது pathology.
எருமைச்சாணியையும் கழுதை மூத்திரத்தையும் கலந்து வைத்தால் விதிப்படி வருவது என்னவென்பதை அறிவது biotechnology. இப்படியே சொல்லிக்கொண்டு போகலாம்.

பொருளுக்குப் பொருள் விதி மாறுமா?

விதிப்ப‌டி பொருளா? பொருட்ப‌டி விதியா? எதுவும் விதிப்ப‌டிதான் என்கிறது அறிவிய‌ல். விதிப்ப‌டிதான் விமான‌ங்க‌ள் உருவாக்கப்ப‌டுகின்ற‌ன‌. விதிப்ப‌டிதான் ஏவுக‌ணைக‌ளும், ராக்கெட்டுக‌ளும் உருவாக்க‌ப்ப‌டுகின்ற‌ன. விதிப்ப‌டிதான் ர‌யில் என்ஜினும், உன் இத‌ய‌மும் இய‌ங்குகிற‌து. நீ உண்ணுவ‌து செரிப்ப‌தும் விதிப்ப‌டிதான். விதிப்படிதான் நீயும், நீ அறிவதும். பூமி சூரிய‌னைச் சுற்றுவ‌தும் விதிப்ப‌டிதான். கணினிகள் இயங்குவதும் விதிப்படிதான். எதுவும் விதிப்ப‌டிதான் இய‌ங்குகிற‌து. விதிப்ப‌டிதான் எதுவும் தோன்றி ம‌றைகிற‌து. விதிப்ப‌டிதான் உன் பிற‌ப்பும், இற‌ப்பும். விதிப்ப‌டிதான் திட்ட‌ங்க‌ள் உருவாக்க‌ப்படுகின்ற‌ன‌. விதிய‌றியாத‌வ‌ன் திட்ட‌மிட்டு ஏவுக‌ணைக‌ளையும், விமானங்க‌ளையும், ராக்கெட்டுக‌ளையும், ர‌யில் என்ஜின்க‌ளையும், க‌ணிணிக‌ளையும் உருவாக்குவ‌தில்லை. பொருளுக்குப் பொருள் விதி மாறாது. நேரத்திற்கு நேரம் விதி மாறக்கூடிதல்ல. இடத்திற்கு இடம் விதி மாறக்கூடிதல்ல. விதியில் புதிய விதி என்றும், பழைய விதி என்ற பாகுபாடில்லை. விதியில் புதுமையைப் புகுத்த முடியாது. புதியன புகுதலும் பழையன கழிதலும் என்பது பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும். விதிக்குப் பொருந்தாது. தோன்றி மறைவது பொருள். விதி என்பது அப்படி தோன்றி மறையும் பொருளல்ல. விதியில், உன் விதி என் விதி என்ற பாகுபாடு கிடையாது. விதிப்படிதான் நீயும் நானும் தோன்றி மறைகிறோம். விதிப்படி தான் பொருட்கள் அசைகின்றன, நகர்கின்றன என்கிறது இயற்பியல்.
பொருளுக்குப் பொருள் நியூட்டன் விதி மாறக்கூடியதல்ல. பொருளுக்குப் பொருள் கூலூம் விதி மாறக்கூடியதல்ல. பொருளுக்குப் பொருள் வெப்பவியலின் விதிகள் மாறக்கூடியதல்ல. விதி பற்றி அறியாத மூதேவிகள் தான் தங்களால் அனைத்தையும் மாற்ற முடியும் என்று கூவுகின்ற‌ன‌. பல மேடைகளில் நமது மேதகு முட்டாள் துணைவேந்தர்கள் கூறும் அறிவுரைகளில் ஒன்று: நம்மால் எதையும் மாற்ற முடியும். அரசியல்வாதிகள் தான் ஏதோ அறியாமல் உளறுகிறார்கள் என்றால், இந்த மூதேவிகளுக்கு அறிவிருக்கிறதா என்ற மிகப்பெரிய சந்தேகம் ஏற்படுகிறது. பல்கலைக்கழக துணைவேந்தர்களின் அறிவு இந்த நிலை என்றால், இந்த முட்டாள்களுக்கு கீழுள்ள ஆசிரியர்கள், பேராசிரியர்களின் மற்றும் அவர்களிடம் பயிலும் மாணவர்களின் அறிவுத்திறன் எப்படி இருக்கும் என்பதைச் சொல்லவே தேவையில்லை. இத்தகைய முட்டாள் மூதேவிகள் எப்படிப் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களாக நியமனம் பெறுகிறார்கள் என்பது உலகறிந்த விஷயம்.
1. ‘எந்த ஒரு பொருளும் பகுதிகளைக் கொண்டது’ என்பது விதி.
பகுதிகளாகப் பிரிக்க முடியாத எந்த ஒரு பொருளையும் மனிதன் படைக்க முடியாது. பகுதிகளாகப் பிரிக்க முடியாத பொருள் எது? எந்தப் பொருளையும் பகுதிகளாகப் பிரிக்க முடியாத பட்சத்தில் எந்த செயலையும் ஒருவனால் செய்ய முடியாது. எந்தப் பொருளையும் பகுதிகளாகப் பிரிக்க முடியாத பட்சத்தில் உண்ண முடியாது, சுவாசிக்க முடியாது. பகுதிகளாகப் பிரியக்கூடிய பொருளைத்தான் உண்ண முடியும். நீ சுவாசிக்கும் காற்றும் அதன் பகுதிகளாகப் பிரியவில்லையெனில் நீ உயிர் வாழ முடியாது.
2. ‘எந்த ஒரு பொருளில் இருப்பதும் மற்ற ஏதாவது ஒரு பொருளிலும் இருக்கும்’ என்பது விதி.
இணையற்ற பொருளை எவனாலும் படைக்க முடியாது. படைக்கப்படும் பொருட்களின் கூறுகள் இவ்வுலகத்திலிருந்தே எடுக்கப்படுவதால், எந்த ஒரு பொருளில் உள்ளதும் மற்ற ஏதாவது ஒரு பொருளில் இருக்கும்.
3. ‘எந்த ஒரு பொருளுக்கும் மற்ற பொருட்களுடன் தொடர்பு இருக்கும்’ என்பது விதி.
உன் மனதால் தொடர்பு கொள்ள முடியாத எந்த ஒரு பொருளையும் உன்னால் எண்ண முடியாது.
4. ‘எந்த ஒரு பொருளும் மற்ற பொருட்களால் பாதிக்கப்படும்’ என்பது விதி.
எவ்வொரு பொருளும் மற்ற பொருட்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். அதே ரீதியில், எவ்வொரு பொருளும் மற்ற பொருட்களால் பாதிப்பிற்கு உள்ளாகும்.
5. ‘எந்த ஒரு பொருளுக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட உருக்கள் இருக்கும்’ என்பது விதி.
‘ஒரே ஒரு உருவத்தில் மட்டுமே அது இருக்கும்’ என இருக்கும் பொருளுக்கு உருமாற்றம் என்பது கிடையாது. பிறப்பு முதல் இறப்பு வரை உனக்கு பல உருக்கள். குழந்தையாக, வாலிபனாக, முதியவனாக… உனக்கு ஒரே ஒரு உருவம்தான் எனில், நீ என்றும் குழந்தையாகவே இருந்திருப்பாய். நீ என்றும் வாலிபனாக ஆகவே முடியாது.
6. ‘எந்த ஒரு பொருளுக்கும் மாற்றுப் பொருள் இருக்கும்’ என்பது விதி.
தோன்றிய எதுவும் மறைந்தே ஆக வேண்டும். தோன்றிய எதுவும் மறையவில்லையெனில், மாற்றம் என்ற ஒன்று இருக்காது. ஒரு பொருள் மறையும்போது அப்பொருளுக்குப் பதிலாக மற்றொரு பொருள் தோன்றியே ஆக வேண்டும்.
7. ‘எந்த ஒரு பொருளுக்கும் பயன் இருக்கும்’ என்பது விதி.
சிறு துரும்பும் பல் குத்த உதவும்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.          (குறள் எண் : 423)
மெய்ப்பொருள் = அழியாப்பொருள் = விதி. விதியைக் காண்பதுதான் அறிவு.
அறிவுடையார் ஆவது அறிவார். [ஆவது = விதிப்படி வருவது] விதியைக் காணும் முறைதான் அறிவியல். The laws of nature let you to expand your knowledge about anything. You cannot expand your knowledge if the laws of nature do not let you to expand it.
• Divisibility lets you know the parts of that which is under study. Anything which has no divisibility will never let you to know what it has in it. What is that which has nothing in it? What will you do if nothing has divisibility? What would your knowledge be if nothing has divisibility?
• Comparability lets you compare and find the abundance of that which is under study. Do you have that which I have? How many of them have that? How many times it is? How frequent it is? How often it is? No quantification can be done without a unit of comparison. The multiplicity, numerosity, relative distribution or the relative abundance of a thing cannot be found in the absence of comparability.
• Connectivity lets you know those which are connected to that which is under study. Anything which has no connections has no bounds.
• Sensitivity lets you know those which can affect that which is under study. Sensitivity allows you to know the cause of an effect and the effect of a cause. No cause can have an effect on that which has no sensitivity.
• Transformability lets you know the forms of that which is under study. You can never transform that which can exist only in one form.
• Substitutability lets you know ‘what can’ instead of ‘that which is under study’.
• Satisfiability lets you to know the conditions that can be satisfied by that which is under study.
The laws of nature which constitute and let you expand your knowledge are discoverable in anything and everything.
அழிவ‌து பொருள். அழியாத‌து விதி. அழியா விதியை வ‌குத்த‌வ‌ன் க‌ட‌வுள். There is a difference between a thing and its properties. The failure to distinguish the difference between a thing and its properties is the prime cause of many human confusions.

Thanks & Copy  from arivuu.wordpress.com

அறிவை வ‌ள‌ர்த்துக் கொள்வ‌து எப்ப‌டி?

மணக்கால் அய்யம்பேட்டை | 5:41 PM | Best Blogger Tips


அறிவை வ‌ள‌ர்த்துக் கொள். இது ஒவ்வொருவ‌ரும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு கூறும் அறிவுரை. அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள‌ ஒருவ‌ன் ப‌ல‌ ஆண்டுக‌ள் ப‌ள்ளி சென்று, புத்த‌க‌ங்க‌ள் ப‌ல ப‌டித்து, பாட‌ங்க‌ள் ப‌ல‌ ப‌யின்று, தேர்வுக‌ள் ப‌ல எழுதி, ப‌ட்ட‌ங்க‌ள் ப‌ல பெற‌வேண்டுமா? தேவையில்லை. சிந்திக்கும் திற‌னிருக்கிறதா உன்னிட‌ம்? அது போதும். நான் காட்டும் வ‌ழியில் சிந்தித்துப் பார். வ‌ள‌ரும் உன் அறிவு.

கேள்வி: ஒன்றைப்ப‌ற்றி என் அறிவை வ‌ள‌ர்த்துக் கொள்வ‌து எப்ப‌டி?
ப‌தில்: ஒன்றைப்ப‌ற்றி அறிய‌ப்ப‌ட‌ வேண்டிய‌வைக‌ளை அறியும்போது அதைப்ப‌ற்றிய‌ உன் அறிவு வ‌ள‌ரும்.
ஒன்றைப்ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
5. அத‌ன் உருக்க‌ள் எவை?
6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?
இருக்கும் அறிவைத்தான் திரும்பத் திரும்பப் பயன்படுத்தி வளர்க்க முடியும். இல்லாத அறிவைப் பயன்படுத்தவோ, வளர்க்கவோ யாராலும் முடியாது.
உன்னைப்ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
1. உன் பாக‌ங்க‌ள் எவை?
2. உன்னிட‌மிருப்ப‌து, ம‌ற்ற‌ எவ‌ரிட‌ம் இருக்கிற‌து?
3. உன்னோடு இணைந்திருப்ப‌வ‌ர்க‌ள் யார்?
4. உன்னைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
5. உன் உருக்க‌ள் எவை?
6. உன‌க்குப் ப‌திலாக‌ இருப்ப‌வ‌ர்க‌ள் யார்?
7. உன்னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?
என்னைப்ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
1. என் பாக‌ங்க‌ள் எவை?
2. என்னிட‌மிருப்ப‌து, ம‌ற்ற‌ எவ‌ரிட‌ம் இருக்கிற‌து?
3. என்னோடு இணைந்திருப்ப‌வ‌ர்க‌ள் யார்?
4. என்னைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
5. என் உருக்க‌ள் எவை?
6. என‌க்குப் ப‌திலாக‌ இருப்ப‌வ‌ர்க‌ள் யார்?
7. என்னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?
ஒரு ஆணைப்ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
1. அவ‌ன் பாக‌ங்க‌ள் எவை?
2. அவ‌னிட‌மிருப்ப‌து, ம‌ற்ற‌ எவ‌ரிட‌ம் இருக்கிற‌து?
3. அவ‌னோடு இணைந்திருப்ப‌வ‌ர்க‌ள் யார்?
4. அவ‌னைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
5. அவ‌ன் உருக்க‌ள் எவை?
6. அவ‌னுக்குப் ப‌திலாக‌ இருப்ப‌வ‌ர்க‌ள் யார்?
7. அவனால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?
ஒரு பெண்ணைப் ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
1. அவ‌ளின் பாக‌ங்க‌ள் எவை?
2. அவ‌ளிட‌மிருப்ப‌து, ம‌ற்ற‌ எவ‌ரிட‌ம் இருக்கிற‌து?
3. அவ‌ளோடு இணைந்திருப்ப‌வ‌ர்க‌ள் யார்?
4. அவ‌ளைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
5. அவ‌ளின் உருக்க‌ள் எவை?
6. அவ‌ளுக்குப் ப‌திலாக‌ இருப்ப‌வ‌ர்க‌ள் யார்?
7. அவ‌ளால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?
2832408373_da6de471ae
ஒன்றைப்பற்றி ஒருவன் அறியவிருப்பதெவை என்பதைக் கணிக்கமுடியாதா? ஒன்றைப்பற்றி ஒருவன் அறியவிருப்பதெவை என்பதைக் கணிக்கமுடியும். ஒன்றைப்பற்றி ஒருவன் அறியவிருப்பதெவை? ஒன்றைப்பற்றி ஒருவன் அறியவிருப்பவை:
1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
5. அத‌ன் உருக்க‌ள் எவை?
6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?
பள்ளிக்கும் கல்லூரிக்கும் பல ஆண்டுகள் சென்று, பல புத்தகங்களில் பல பாடங்களை பல ஆசிரியர்கள் வழிகாட்டப் படித்து, விழுந்து விழுந்து மனப்பாடஞ் செய்து, பல தேர்வுகள் எழுதி, விடிய விடிய விஞ்ஞான ரீதியாக ஆராய்ச்சி செய்து, சிந்தித்து, ஒன்றைப்ப‌ற்றி ஒருவ‌ன் கூற‌விருப்ப‌வை:
அது பாக‌ம் பாக‌மாக‌ப் ப‌குப‌ட‌க்கூடிய‌ ஒன்றாகும்.
அதிலிருப்ப‌து ஏனைய‌வைக‌ளிலும் இருக்கிற‌து.
அது ஏனைய‌வைக‌ளோடு இணைந்து தொட‌ர்பில் இருக்கிற‌து.
அது ஏனைய‌வைக‌ளால் பாதி‌ப்ப‌டைகிற‌து. அதுவும் ஏனைய‌வைகளைப் பாதிக்கிற‌து.
அது ஒரே உருவில் நிலையாக‌ நில்லாமல் அத‌ன் பிற‌ உருக்க‌ளுக்குத் தொட‌ர‌க்கூடிய‌து.
அத‌ற்குப் ப‌திலாக‌ மாற்றுகள் இருக்கின்ற‌ன‌.
அது ப‌ய‌ன‌ற்ற‌ ஒன்ற‌ல்ல‌, தேவையான‌ ஒன்றாகும்.
இவை த‌விர‌, ஒன்றைப்ப‌ற்றி ஒருவ‌ன் கூற‌விருப்ப‌தெவை?


“மெய்ப்பொருள் அறிவல்ல! மெய்ப்பொருள் காண்பது தான் அறிவு!”
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.          (குறள் எண் : 423)

ஒரே விஷயத்தை பல விதங்களில் கூறமுடியும். கூறிய விதம் புதிது என்பதால் கூறிய விஷயமும் புதிது என்று அர்த்தமல்ல. ஒன்றைப் பற்றி மேற்கூறிய விஷயங்களை வெவ்வேறான வார்த்தைகளைக்கொண்டு வெவ்வேறான புதிய விதங்களில் கூறமுடியும். ஒன்றைப் பற்றி ஒரு விஷயத்தை ஒருவர் புதுவிதமாகக் கூறினாலும், அவர் கூறும் விஷயம் புதிதுதானா என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும். அறியப்படும் விஷயமும் பொருளுக்குப் பொருள் மாறுபடுகிறதா என்பதையும் எண்ணிப் பார்க்கவேண்டும்! அறியப்படும் விஷயங்கள் பொருளுக்குப் பொருள் மாறக்கூடியதல்ல. You will discover the same laws of nature in anything and everything! இது குறித்து மேலும் விவரங்கள் வேண்டுவோர் KNOWLEDGE EXPANSION MANUAL-ஐ பார்க்கவும். ஒரு விஷயத்தைக் கூற வெவ்வேறான வார்த்தைகள்:

1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
பாகம், பகுதி, பிரிவு, அங்கம், அங்கத்தினர், உறுப்பு, உறுப்பினர், கட்டம், பக்கல், கூறு, காண்டம், மூலகம், மூலகத்துவம், பின்னம், துண்டு, துணுக்கு, உள்ளடங்கிய பொருள், வகுப்பு, பகுப்பு, துளிமம், பங்கு, துண்டம், வெட்டுத் துண்டம், பகவு, துறை, உள்ளடக்கமாகக் கொண்டிரு, உட்கூறாகக் கொண்டிரு, உட்பொதி, கால அளவு, பருவம், Part, Component, Element, Factor, Fraction, Fragment, Ingredient, Member, Quantum, Section, Sector, Segment, Division, Piece, Portion, Compartment, Region, Domain, Unit, Phase, Particular, consists of, comprise, contains, includes, content, constituents, be a part of, not whole, period
2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
‘எங்கிட்ட இருப்பது வேற எவங்கிட்ட இருக்கு’ என பலர் கூறக் கேட்டிருக்கிறோம். ‘அவங்கிட்ட இருப்பது என்னிடமில்லையே’ என சிலர் புலம்பக் கேட்டிருக்கிறோம். இது ஒப்பிடுதல். எங்கிட்ட இருப்பது வேற எத்தனை பேரிடம் இருக்கு? இது ஒப்பிட்டபின் எண்ணிக் கணக்கிடல். பரவல், ஒப்பீடு, ஒத்துப்பார், ஒப்பிடு, ஒரே மாதிரியானதென்று தெரிவி, ஒத்ததென விவரித்துரை, ஒப்புப்படிகளைத் தா, ஒப்பீடு செய், ஒப்புமை காட்டு, ஒப்பாக, ஒப்புமை, ஒத்த தன்மை, ஒப்பு, ஒத்திசைவு, ஒப்புடைமை, அமைப்பொற்றுமை, அமைப்பொப்பு, உடனொத்திசையும் பண்பு, ஒத்தவடிவ, ஒத்த, ஒப்புமையுடைய, போன்றிருக்கிற, நகலி, போலிகை, படியெடு, பிரதி, நகல், அதே மாதிரி, பிரதிமை, போன்றிருத்தல், ஒத்திருத்தல், ஒரே மாதிரியான, ஒன்று போன்ற, அதுபோலவே, ஒரேமாதிரி, ஒரே வகைமை, அதே தன்மையான, ஒரே இயல்புடைய, அதே வகையான, ஒரே மாதிரிப்பட்ட, ஒரே வகையான தன்மை, அதுவே போன்ற, சமன், சமம், சரிசமமான, நிகரான, சமானப் பகுதி, சமான, சமன்பாட்டுத் தத்துவம், Distribution, Abundance, Comparable, Analogy, Homology, Homologue, Clone, Copy, Analog, Analogous, Resembling, Resemblance, Alike, Similar, Same, Sameness, Identical, Equal, Similarly, Equally, Synonymous, Equivalence, Equivalent, Different, Difference, Unique, Unlike, Dissimilar, Distinct, எங்கிட்ட இருப்பது வேற எத்தனை பேரிடம் இருக்கு? How often, How frequent, How many, frequency, எண்ணிக்கை, எண்ணுதல், அளவிடல், அளவீடு [frequency = எண்ணிக்கை, எத்தனை தடவை, எத்தனை முறை]
3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
இணைப்பு, பிணைப்பு, உறவு, தொடர்பு, தொகுத்தவரிசை, இணை, சேர், பொருந்தவை, ஒன்றுபடுத்து, சேர்த்துக்கட்டு, இணக்கி ஒருநிலைப்படுத்து, கருத்தில் இணை, தொடர்புபடுத்து, பிறவற்றுடன் கூடு, சம்பந்தம், இணைத்தல், பிணை, தொடர் கோவை, கொக்கி, கொளுவி, இடையிணைப்புக்கருவி, இடையிணைப்புப் பொருள், இடை இணைப்பாளர், இடைநிரப்பீடு, கட்டு, கட்டுப்பாடு, கோவைப்படுத்து, Connectivity, Connect, Connection, Relation, Link, Bond, Bind, Associate, Attachment, interconnection, Hookup, Joining, Joint, Junction, Join, Ligament, Ligation, Relationship, Tie, Combine, Affix, Fasten, Append, Linkage, Connective, Concatenate
4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
பாதிப்பு, தாக்கம், தாக்கு, இயக்கு, தொந்தரவு செய், அமைதியைக்குலை, உலைவுசெய், இடையிட்டுத் தடு, தொல்லைகொடு, குழப்பு, கலக்கு, கிளர்ச்சி, தூண்டு , தூண்டல், தூண்டிச் செயலாற்றுவி, Disturb, Induce, Influence, Kick, Knock, Bang, Crush, Injure, Motivate, Affect, Tamper, Disturbance, Force, push, pull, Arouse, Evoke, Perturb, Excite, Inspire, Rouse, Stimulate, Stimuli, Stimulant, Compel, Cause, Effect, Response
5. அத‌ன் உருக்க‌ள் எவை?
உரு, உருவம், வடிவம், ரூபம், மூர்த்தி, தோற்றம், படிவம், வடிவு, உருவு, உருவரைத்தோற்றம், தோற்றம், உருக்காட்சி, காட்சியுரு, பிழம்புரு, மெய்யுருவம், புறவடிவம், வடிவவேறுபாடு, வகை மாதிரி, கோலம், சீர், ஒழுங்கமைப்பு, ஒழுங்கமைவான வடிவம், உருச்செப்பம், உருவாக்கம், தொற்றுவித்தல், உருமாற்றம், உருவம் மாறுதல், மாற்றம், ஸ்திதி, நிலை, நிலைமை, Form, Shape, Topology, Order, reorder(=change), transformation, transition, state
6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
‘இவ போன என்ன, இவளுக்குப் பதிலா இன்னொருத்தி சிக்கவா மாட்டா’, ‘இந்த இடம் இல்லாட்டா என்ன, இதற்குப் பதிலா இன்னொரு இடம் இருக்குமல்ல’, ‘இப்ப போன போகுது, இதற்கு பதிலா பின்னாடி செஞ்சுக்கலாம்’, ‘இந்த வேலை போனால் போகட்டும், இதற்குப் பதிலா இன்னொரு வேலை தேடிக் கொள்ளலாம்’ – மாற்று, பகரம், பதிலீடு , பதிலி, ஈடு, பதிலாள் , மாற்றாள் , மாற்றீடு செய், ஈடுகொடு, மாற்றாள், பதிற்பொருள், மாற்றுப்பொருள், பகரப்போலி, பதில் ஏற்பாடு செய், பதிலாள் அமர்த்து, மாற்றீடு செய், இருந்தும், பகரமாக, பதிலாக, ஈடாக, அது இருந்தால் என்ன செய்வது? அது இல்லாவிட்டால் என்ன செய்வது? மற்றபடி, இல்லையெனின், நிலைமைகள் வேறானவையாயிருந்தால், அல்லது, பெயராள், பதிலாக அனுப்பு, மாற்று மருந்து, வாய்ப்பு, Substitute, Instead, Else, Instead of, Spare, Surrogate, Depute, As an alternative to, In lieu of, In place of, In preference, Either, or, otherwise, possibilities, opt, option [Note: comparison ≠ substitution]
7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?
அது எதுக்கு? அவள் எதுக்கு? அவன் எதுக்கு? அது எதுக்குப் பயன்? அவள் எதுக்குப் பயன்? அவன் எதுக்குப் பயன்? அது எதுக்குத் தேவை? அவள் எதுக்குத் தேவை? அவன் எதுக்குத் தேவை? அதனாலென்ன பலன்? அதனாலென்ன பயன்? அவளாலென்ன பயன்? அவனாலென்ன பயன்? அது எனக்கு ஏன் தேவை? அவன் எனக்கு ஏன் தேவை? அவள் எனக்கு ஏன் தேவை? உபயோகம், பயன்பாடு, பயன், பலன், நற்பலன், தூர்பலன், பிரயோஜனம், அவசியம், தேவையுள்ளவனாயிரு, வேண்டு, வேண்டியிரு, வேண்டிய பொருள், நாட்டம், வேண்டப்படும் பொருள், பூர்த்தி செய், Use, useful, fulfill, need, requirement

Thanks & Copy from  arivuu.wordpress.com

இந்திய அரசியலமைப்பு 1

மணக்கால் அய்யம்பேட்டை | 5:37 PM | Best Blogger Tips

இந்திய அரசியலமைப்பு (இந்தி; भारतीय़ संविधान ) இந்தியாவின் தலைமைச் சட்டத் தொகுப்பாகும். இந்தியாவின் அடிப்படை அரசியல் கொள்கைகளை, கட்டமைப்பு, அதிகாரங்கள் மற்றும் அதன் கடமைகளை அதன் அரசுக்கும் அதன்மூலம் அடிப்படை உரிமைகளை ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் வழங்குகின்ற வகையில் இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தால் நவம்பர் 261949ல்அறிமுகப்படுத்தப்பட்டு சனவரி 261950 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு இதுகாரும் பின்பற்றப்பட்டு வருகின்றது.
இதன் மூலம் இந்தியா ஒரு ஒருங்கிணைந்த நாடாக, தன்னாட்சி கொண்ட நாடாக, குடியரசின் மக்களாட்சிக் கோட்பாட்டின்படி வழிநடத்துகின்ற நாடாக அறிவித்துக் கொண்டது. இதற்கு வலுசேர்க்கும் விதமாக 1976 ல் நடைபெற்ற திருத்தங்களில் இந்தியா கடைப்பிடிக்கும் மூன்று கொள்கைகளாக பொதுவுடமை, மதச்சார்பின்மை மற்றும் நேர்மை இவைகளை தன் கொள்கைகளாக அறிவித்தது.
இந்திய அரசியலமைப்பின் படி இந்தியா ஒரு கூட்டாட்சி(federalism) நாடாகும். இருப்பினும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 'கூட்டாட்சி' (கூட்டரசு - federal government) என்ற சொல்லிற்குப் பதிலாக 'ஒன்றியம்' (union) என்ற சொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பின் முன்னுரை (preamble), இச்சட்டத் தொகுப்பின் ஒரு முழுப் புரிதலையும் தரும் படி அமைக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியக் குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள் தொடக்கத்திலேயே வழங்கப்பட்டிருந்தாலும், பின்பு அடிப்படைக் கடமைகளும் உருவாக்கப்பட்டன. இந்திய அரசமைப்பின் தனிச் சிறப்புக்களில் (salient features) 'அடிப்படை உரிமைகளும்' அடங்கும்.

[தொகு]பகுதிகள்

பகுதி 1 (உட்பிரிவு 1-4) இந்திய யூனியன் பற்றியது. அதாவது மாநில அமைப்பு. மாநில எல்லை வரையறை போன்றவை.
பகுதி 2 (உட்பிரிவு 5-11) இந்திய குடியுரிமை பற்றியது.
பகுதி 3 (உட்பிரிவு 12-35) அடிப்படை உரிமைகள்/ அது மறுக்கப்படும் போது அதற்கான தீர்வுகள்.
பகுதி 4 (உட்பிரிவு 36-51) அரசு கொள்கைக்கான வழி காட்டும் நெறிகள்.
பகுதி 5 ( உட்பிரிவு 51 A) அடிப்படை கடமைகள்.
பகுதி 6 (உட்பிரிவு 52- 151) மத்திய அரசமைப்பு அதாவது குடியரசு தலைவர், துணைக் குடியரசு தலைவர், நடுவண் அமைச்சரவை, பாராளுமன்றம் மற்றும் அதன் அமைப்பு, உச்ச நீதிமன்றம் மற்றும் அதன் அமைப்பு.
பகுதி 6( உட்பிரிவு 152-237) மாநில அரசமைப்பு, கவர்னர், மாநில அமைச்சரவை. மாநில சட்டமன்றம் / சட்ட மேலவை அதன் அமைப்பு உயர் நீதி மன்றம் அதன் அமைப்பு.
பகுதி 7 (உட்பிரிவு 238) அரசமைப்பு சட்டம் முதல் பட்டியலில் உள்ள மாநிலங்கள் பற்றியது- இந்தப் பிரிவு இப்போது நீக்கப் பட்டுள்ளது.
பகுதி 8 (உட்பிரிவு 239 -242) ஒன்றியப் பகுதிகள் குறித்து.
பகுதி 9 ( உட்பிரிவு 243) உள்ளாட்சி நிர்வாகம் இந்த உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளன.
பகுதி 10 உட்பிரிவு 244) பழங்குடியினர் பகுதிகள் குறித்து.
பகுதி 11 (உட்பிரிவு 245-263) மத்திய மாநில அரசு உறவு, மாநிலங்ளுக்கிடையேயான உறவு.
பகுதி 12 (உட்பிரிவு 264-300) அரசின் நிதி குறித்த உட்பிரிவுகள் நிதி / நிதியினைக் கையாளும் நெறிகள்.
பகுதி 12( உட்பிரிவு 301- 307) இந்திய நாட்டில் வணிகம் செய்யும் நடைமுறைக்கான உட்பிரிவுகள்.
பகுதி 13( உட்பிரிவு 308-323) அரசுப் பணிகள்
பகுதி 14 (உட்பிரிவு 324ஏ மற்றும் 323 பி) மத்திய தீர்ப்பாயங்கள்.
பகுதி 15 (உட்பிரிவு 324-329) தேர்தல்கள், தேர்தல் ஆணையம்.
பகுதி 16 (உட்பிரிவு 330-342) ஆதிதிராவிடர்/ பழங்குடியினர்/ ஆங்கிலோ இந்தியர் ஆகியோர் குறித்து.
பகுதி 17 (உட்பிரிவு 343-351) அலுவல் மொழி, வட்டார மொழி, நீதி மன்றங்களில் மொழி.
பகுதி 18 (உட்பிரிவு 352-360) அவசர நிலைக்கானது (எமெர்ஜென்சி)
பகுதி 19 (உட்பிரிவு 361-367) இதர (இதில் குடியரசு தலைவர், கவர்னர் இந்தப் பதவிக்கான சட்ட சிறப்பு பாதுகாப்பு மற்றும் சில)
பகுதி 20 (உட்பிரிவு 368) இந்திய் அரசமைப்புச் சட்டம் திருத்தம் அதற்கான நடைமுறை.
பகுதி 21 (உட்பிரிவு 369-392) TEMPORARY, TRANSITIONAL AND SPECIAL PROVISIONS அதாவது சில நேரத்தில் மாநில அரசின் நிர்வாகப் பொறுப்பிலும் அதே நேரம் மத்திய அரசும் அந்தப் பொருளில் சட்டமியற்ற வழி செய்யும் concurrent list குறித்த நெறிகள்.
பகுதி 22 (உட்பிரிவு 392-395) SHORT TITLE, COMMENCEMENT, AUTHORITATIVE TEXT IN HINDI AND REPEALS.

Thanks & Copy from classle.net

பிரபஞ்சம் பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

மணக்கால் அய்யம்பேட்டை | 5:31 PM | Best Blogger Tips

universe
பிரபஞ்சம் ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
5. அத‌ன் உருக்க‌ள் எவை?
6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?
இவைகளிலெதையும் அறிந்திருக்காதவன் பிரபஞ்சம் பற்றி அறிவேதுமில்லாதவன்.


[The Expected Knowledge    ஞானசூத்திரம்]
பிரபஞ்சம் ப‌ற்றி ஒருவ‌ன் கூற‌விருப்ப‌வை:
அது பாக‌ம் பாக‌மாக‌ப் ப‌குப‌ட‌க்கூடிய‌ ஒன்றாகும்.
அதிலிருப்ப‌து ஏனைய‌வைக‌ளிலும் இருக்கிற‌து.
அது ஏனைய‌வைக‌ளோடு இணைந்து தொட‌ர்பில் இருக்கிற‌து.
அது ஏனைய‌வைக‌ளால் பாதி‌ப்ப‌டைகிற‌து. அதுவும் ஏனைய‌வைகளைப் பாதிக்கிற‌து.
அது ஒரே உருவில் நிலையாக‌ நில்லாமல் அத‌ன் பிற‌ உருக்க‌ளுக்குத் தொட‌ர‌க்கூடிய‌து.
அத‌ற்குப் ப‌திலாக‌ மாற்றுகள் இருக்கின்ற‌ன‌.
அது ப‌ய‌ன‌ற்ற‌ ஒன்ற‌ல்ல‌, தேவையான‌ ஒன்றாகும்.
மேற்கூறியவைகள்,
பிரபஞ்சம் பற்றி பள்ளி கல்லூரிகளில் பயின்றவன் கூறவிருப்பவைகளில் எவை பள்ளி கல்லூரிகளில் பயிலாதவனால் கூறமுடியாதவைகள்?
idli
2832408373_da6de471ae







Thanks &* Copy arivuu.wordpress.com


இந்திய அரசியலமைப்பு 2 !

மணக்கால் அய்யம்பேட்டை | 5:25 PM | Best Blogger Tips


 
இந்தியாவின் முதல் அரசியலமைப்பு சபைக் கூட்டம் டிசம்பர்- 9, 1946-ம் ஆண்டு நடை பெற்றது
  தலைவராக சச்சிதானந்த சின்ஹா செயல் பட்டார். அவர் மறைவுக்குப் பின்னர் டாக்டர் இராஜேந்திர பிரசாத் தலைவராகச் செயல் பட்டார்
 டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்கள் வரைவுக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார்
  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் நவம்பர் 26, 1949. 
  இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது ஜனவரி 26, 1950.
  இந்திய அரசியலமைப்பு மிக விரிவாக எழுதப்பட்ட ஆவணமாகும்
 பிரிட்டன், அயர்லாந்து, கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் அரசிய லமைப்புகளே இந்திய அரசியலமைப்புக்கு மூலாதாரமாக இருந்தன
 இந்திய அரசியலமைப்பு வரையப்பட்டபோது இருந்த சரத்துகள் மற்றும் பட்டியல்களின் எண்ணிக்கை: 395 சரத்துகள், 8 பட்டியல்கள்
 தற்போது இந்திய அரசியலமைப்பில் உள்ள சரத்துகள் மற்றும் பட்டியல்களின் எண்ணிக்கை 444 சரத்துகள், 12 பட்டியல்கள்
  இந்திய அரசியலமைப்பு நெகிழும் இயல்பும், நெகிழா இயல்பும் கொண்டுள்ளது.
  இந்திய அரசியலமைப்பு கூட்டாட்சி முறையும் ஒற்றையாட்சி முறையும் ஒன்றாகக் கொண்டுள்ள ஓர் அரசியலமைப்பாக விளங்குகிறது
  மத்திய அரசாங்கத்திற்கும் மாநில அர சாங்கத்திற்கும் அதிகாரங்கள் தனித்தனியே வரையறுக்கப்பட்டுள்ளன
 அதிகாரங்கள் மத்திய பட்டியல், மாநில பட்டியல், பொதுப் பட்டியல் என்ற மூன்று பட்டியல்களில் வைக்கப்பட்டுள்ளன
  நெருக்கடிகாலச் சமயங்களில் அதிகாரங்களை மத்திய அரசே, ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒற்றையாட்சிக் கூறுகள் உள்ளன
 இந்தியா ஒரு மதச்சார்பற்ற அரசாக விளங்குகிறது. அரசு மதத் தலையீட்டிலிருந்து விடுபட்டது. எந்தக் குறிப்பிட்ட மதத்தையும் சாராதது. குடிமக்கள் அனைவருக்கும் சுதந்திரமான தெய்வ நம்பிக்கை, வழிபாட்டுச் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது
 இந்திய அரசியலமைப்பின் மூன்றாம் பகுதியில் அடிப்படை உரிமைகள் இடம் பெற்றுள்ளன. (அங்கங்கள் 12 முதல் 35 வரை).
 அடிப்படை உரிமைகள் சட்டத்தின் முன் எல்லா குடிமக்களுக்கும் சமத்துவத்தை வழங்குகின்றன
 அடிப்படை உரிமைகள் தனிமனித நலனுக்கும், பொது நலனுக்கும் இடையே சம நிலையை ஏற்படுத்துகின்றன.
  இந்திய அரசியலமைப்பின் நான்காம் பகுதியில் அரசுக் கொள்கையினை நெறிபடுத்தும் கோட் பாடுகள் இடம் பெற்றிருக்கின்றன (அங்கங்கள் 36 முதல் 51 வரை). 
  நமது நாட்டில் பொது நல அரசு அமைப்பதற்கும் இவைகளே வழிகாட்டி வருகின்றன.
 நமது அரசியலமைப்பு, சுதந்திரமான நீதித்துறையை வழங்குகிறது. இந்திய உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் சட்டங்களை நீதிப் புனராய்வு செய்யும் அதிகாரம் பெற்றுள்ளன
 ஒரு சட்டம் அரசியலமைப்புக்கு உட்பட்டது அல்லது புறம்பானது என்று தீர்ப்பு வழங்கத்தக்க அதிகாரத்திற்கே நீதிப் புனராய்வு என்று பெயர்
  அரசியலமைப்பின் காவலனாக நீதித்துறை விளங்குகிறது. இந்திய குடிமக்களின் உரிமை களையும் சுதந்திரங்களையும் நீதித்துறை இதன் மூலம் பாதுகாக்கிறது.
 இந்திய அரசியலமைப்பு வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை வழங்க உறுதியளிக்கிறது
 பதினெட்டு வயது நிரம்பிய ஒவ்வொரு குடிமகனும், சாதி, மதம், நிறம், பாலினப் பாகுபாடு இன்றி தேர்தலில் வாக்களிக்க உரிமை பெற்றுள்ளனர்
இந்திய அரசியலமைப்புமுறை பெறப்பட்ட நாடுகள் மற்றும் கொள்கைகள்


 இங்கிலாந்து:
1. சட்டமியற்றும் முறை:
2. சட்டத்தின் பணி
3. ஒற்றைக் குடியுரிமை
4. பாராளுமன்ற முறை அரசாங்கம்
5. கேபினட் முறை அரசாங்கம்
6. வெஸ்ட் மினிஸ்டர் முறை அரசாங்கம்
7. சட்டத்தில் இருந்து பாதுகாப்பு
8. மேல் சபையை விட கீழ் சபைக்கு அதிக அதிகாரம்
9. பாராளுமன்றத்திற்கு பொறுப்பான அமைச் சர்கள்
 அமெரிக்கா:
1. சுதந்திரமான நீதித்துறை
2. நீதிப்புனராய்வு
3. அடிப்படை உரிமைகள்
4. உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம்
5. நீதிபதிகளை நீக்கும் முறை
  குடியரசு முறை அரசாங்கம்
அரசியலமைப்பின் முன்னுரை
துணை ஜனாதிபதியின் பொறுப்புகள்
அரசியலமைப்பைத் திருத்தும் முறைகள்
உச்சநீதிமன்றத்தின் அமைப்பும் இயக்கமும்
அயர்லாந்து அரசின் வழிநெறிக் கோட்பாடுகள்
ஜனாதிபதி முறை தேர்வு (தேர்தல்)
ஜனாதிபதியால், ராஜ்யசபைக்கு நியமிக்கப்படும் நியமன உறுப்பினர்கள்


பலமான மத்திய அரசாங்கம்
எஞ்சிய அதிகாரங்கள் மத்திய அரசின் கீழ் வருவது
 ஜெர்மனி: நெருக்கடிநிலையின் போது அடிப்படை உரிமைகள் நீக்கப்படுவது
  ஆஸ்திரேலியா: பொதுபட்டியல் முறை
 ரஷ்யா: அடிப்படைக் கடமை கள்
 கனடா: மாநிலங்களுக்கு இடை யேயான இலவச வர்த்தக முறை
  தென் ஆப்பிரிக்கா: பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் சட்டத் திருத்த முறை
அரசியல் அமைப்பு சட்டத் திருத்தங்கள்
 முதல் அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் 1951-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது
 இந்திய அரசியலமைப்பு "கூட்டாட்சி முறை' என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது
 அரசியலமைப்பு சட்டம் என்பது அரசிய லமைப்பில் அடங்கியுள்ள வகையங்களைக் குறிக்கும்
 சட்டமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள் சாதாரண சட்டங்கள் ஆகும்.
 அரசியலமைப்புச் சட்டம் சாதாரணச் சட்டத்தினின்றும் வேறுபட்டது
இந்திய அரசியலமைப்பு முகவுரை
 இந்திய ஜனநாயகத்திற்கு அடிப்படையான பண்புகளை விளக்கும் பகுதியாக முகவுரை (Preamble) அமைகிறது
 அமெரிக்க நாட்டின் அரசியலமைப்பைப் முக வுரை எனும் கொள்கையை இந்திய அரசியல மைப்பு வல்லுநர்கள் எடுத்துக் கொண்டனர்
 இந்திய அரசியலமைப்பிற்கு முகப்புரை வழங்கிய பெருமை ஜவஹர்லால் நேருவைச் சாரும்.
 இந்திய அரசியலமைப்பின் திறவுக்கோல், "இந்திய அரசியலமைப்பின் இதயம்' என்று போற்றப்படுவது முகவுரைதான்.
 இந்திய அரசியலமைப்பு முகவுரை இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே திருத்தப்பட்டுள்ளது
 1976-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட 42-வது சட்டத் திருத்தத்தின்படி முகவுரையில் சமதர்ம (Socialist), மதச்சார்பற்ற (Secular), ஒருமைப் பாடு (Integrity) எனும் மூன்று சொற்கள் சேர்க்கப்பட்டன.
இந்திய அரசும் அதன் எல்லைகளும்
 இந்திய அரசியலமைப்பில் பகுதி-1, இந்திய அர சும் அதன் எல்லைகளும் பற்றி விளக்குகிறது.
 இந்தியாவில் உள்ள மாநிலங்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆகும். மத்திய ஆட்சிப் பகுதி யான யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை மொத்தம் 6 ஆகும். ஒரு தேசிய தலைநகர் பகுதி (டெல்லி)யும் உள்ளன.
 புதிய மாநிலங்களை உருவாக்கும் பாராளுமன்ற உரிமைகளை விவரிப்பது சட்டப்பிரிவு- 2 
 புதிய மாநிலத்தை உருவாக்குவது, பழைய மாநிலங்களைச் சுருக்குவது, எல்லைகளை மாற்று வது இவற்றை விவரிப்பது சட்டப்பிரிவு- 3 
 புதிய மாநிலங்களை உருவாக்கத் தேவையான சட்ட வழிமுறைகளைப் பற்றிப் பேசுவது சட்டப்பிரிவு- 4 
இந்தியாவில் மொழிவாரி மாநிலமாக, முதன்முதலாக அமைக்கப்பட்ட மாநிலம் ஆந்திரப்பிரதேசமாகும். இது 1953-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
 இந்தியாவின் 28-வது மாநிலம் ஜார்கண்ட்.


அடிப்படை உரிமைகள்
 இந்திய அரசியலமைப்பு, தொடக்கத்தில் ஏழு அடிப்படை உரிமைகளைக் கொண்டிருந்தது.
 1978-ல் 44-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி சொத்துரிமையானது அடிப் படை உரிமையிலிருந்து நீக்கம் செய்யப் பட்டதால், தற்போது ஆறு அடிப்படை உரிமைகள் உள்ளன
  1. சமத்துவ உரிமை (அரசியலமைப்பு பிரிவு 14-18):
  2. சுதந்திரத்திற்கான உரிமை (அரசியலமைப்புப் பிரிவு 19-22)
 3. சுரண்டலுக்கு எதிரான உரிமை (அரசிய லமைப்புப் பிரிவு 23-24):
4. சமயச் சுதந்திரத்திற்கான உரிமை (அரசிய லமைப்புப் பிரிவு 25-28):
 5. பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள் (அரசிய லமைப்புப் பிரிவு 29-30):
 6. அரசியலமைப்பு தீர்வு வழிகளுக்கான உரிமை (அரசியலமைப்புப் பிரிவு - 32):


ஐந்து வகையான நீதிப் பேராணைகள்:


1.
ஆட்கொணர் நீதிப்பேராணை (Writ of Habeas Corpus) :
தவறாக ஒருவர் காவலில் வைக்கப்பட்டால், அவருக்கு நீதி வழங்கும் நீதிமன்றம் காவலில் வைத்த அதிகாரிக்கோ அல்லது அரசாங்கத் திற்கோ ஆணை வழங்கி, காவலில் வைக்கப்பட்ட வரை நீதிமன்றத்தின்முன் கொண்டுவரச் செய்வதாகும். காவலில் வைக்கப்பட்டது சரியென நியாயப்படுத்த வேண்டியது காவல் துறையின் கடமை, இல்லையேல் அவரை விடுதலை செய்ய வேண்டும்.


2.
கட்டளை நீதிப்பேராணை (Writ of Mandamus):
ஒரு குறிப்பிட்ட செயலை உடனடியாக செய்யக்கோரி நீதிமன்றம் ஆணை பிறப்பிப்பதாகும். இவ்வாணை பிறப்பிக்கப்பட்டதும் குறிப்பிட்ட அலுவலர் அச்செயலை உடனடியாகச் செய்ய வேண்டியவராகிறார்.


3.
தடை நீதிப்பேராணை (Writ of Prohibition): 
நீதிமன்றம் ஓர் அதிகாரிக்கு ஆணை பிறப்பித்து அவரது எல்லைக்குட்படாத ஒரு செயலைச் செய்யாதிருக்குமாறு ஆணை பிறப்பிப்ப தாகும்.


4.
உரிமைவினா நீதிப் பேராணை (Writ of Quo warranto):
பாதிக்கப்பட்ட ஒரு நபரின் நியாயமான கோரிக் கையின் அடிப்படையில், அரசாங்கத்தின் அலுவலர் ஒருவரை அவர் எந்த அடிப்படையில் குறிப்பிட்ட பதவியை வகிக்கிறார் என்பதைத் தெளிவுபடுத்தக் கோரும் நீதிமன்றத்தின் உத்தரவாகும்.


5.
தடைமாற்று நீதிப்பேராணை (Writ of Certiorary):
நீதிமன்றம் தனது கீழ்பட்ட ஒரு அதிகாரிக்கோ அல்லது நீதிமன்றத்துக்கோ ஆணை பிறப்பித்து, குறிப்பிட்ட நீதிமன்றச் செயல்முறைகளையும் ஆவணங்களையும் தனக்கோ அல்லது உரிய அதிகாரிக்கோ மாற்றச் செய்து நியாயமான பரிசீலனைக்கு அனுப்பச் செய்வதாகும்.
 டாக்டர் அம்பேத்கர் அடிப்படை உரிமையை மனிதனின் இருதயமும் உயர்சக்தியும் ஆகும் என்று குறிப்பிடுகிறார்.
 அடிப்படை உரிமையை நெருக்கடி கால அறிவிப்பின் மூலம் குடியரசுத் தலைவர் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியும்.


அடிப்படைக் கடமைகள்
 அடிப்படைக் கடமைகள் என்ற பகுதி 1976-ம் ஆண்டில்தான் இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது
 42-வது சட்டத்திருத்தம் மூலம் பகுதி ஒய லி (அங்கம் 51 )லி ல் அடிப்படைக் கடமைகள் சேர்க்கப்பட்டன
 ரஷ்யாவின் அரசியலமைப்பிலிருந்து இவை பெறப்பட்டன.


மாநிலங்கள் அவை (Rajya Sabha)
 இந்திய நாடாளுமன்றம், இந்திய குடியரசுத் தலைவரையும், மாநிலங்கள் அவை, மக்கள் அவை எனப்படும் இரண்டு அவைகளையும் கொண்டுள்ளது
 மாநிலங்கள் அவை 250-க்கு மிகாத உறுப் பினர்களைக் கொண்டது. இதில் பன்னிருவரை (12) இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூக சேவை இவற்றில் சிறந்த அறிவும் அல்லது அனு பவமும் கொண்டவர்களைக் குடியரசுத் தலைவர் உறுப்பினர்களாக நியமிப்பார். மீதமுள்ள 238 உறுப்பினர்கள் வெவ்வேறு மாநிலங்களிலிருந்தும், மத்திய ஆட்சிப் பகுதி களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
 உறுப்பினர்கள் அந்தந்த மாநிலங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
 மாநிலங்கள் அவைக்கான தேர்தல் மறைமுகமானது
 மாநிலங்கள் சார்பாக உறுப்பினர்கள் மாநிலங் களின் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற பேரவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்
 மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் இரண் டாண்டுகளுக்கு ஒரு முறை விலக காலியான இடங்களுக்கு மீண்டும் தேர்தல் நடைபெறும்
 இதன் உறுப்பினர்கள் ஆறு ஆண்டு காலம் பதவி வகிப்பார்கள்.
 இந்தியத் துணைக்குடியரசுத் தலைவர் தன்னு டைய பதவியின் அடிப்படையில் மாநிலங்கள் அவையின் தலைவராகப் பொறுப்பேற்பார்
 ஒரு துணைத்தலைவர், மாநிலங்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்
 துணைக் குடியரசுத் தலைவர் இல்லாத காலங்களில் துணைத் தலைவர் மாநிலங்கள் அவைக்குத் தலைமை தாங்குவார்.


மக்கள் அவை (Lok Sabha):
 மக்கள் அவை 565-க்கு மிகாத உறுப்பினர் களைக் கொண்டது
 525 உறுப்பினர்கள் மாநிலங்களிலிருந்தும், 18 உறுப்பினர்கள் யூனியன் பிரதேசங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
 ஆங்கிலோ - இந்திய சமூகத்தினருக்கு குடியரசுத் தலைவர் இருவரை நியமன உறுப்பினர்களாக நியமிப்பார்.
 மக்கள் அவையின் பதவிக்காலம் ஐந்து ஆண்டு காலம் ஆகும்
 நெருக்கடி நிலைமை (Emergency) பிரகடனப் படுத்தும் காலங்களில் மக்கள் அவையின் காலத்தை ஓர் ஆண்டுக்கு மேற்படாமலும் நெருக்கடி நிலையை முடிவுக்கு கொண்டுவந்த பிறகு ஆறு மாதத்திற்கு மேற்படாமலும் சட்டத்தினால் நீட்டிக்கலாம்
 தற்போது மக்களவையில் 545 உறுப்பினர்கள் உள்ளனர்.
 மக்கள் அவையின் தலைவர் (Speaker) நாடாளுமன்ற முதல் கூட்டத்தில் அவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்
 மக்கள் அவை ஒரு துணைத்தலைவரையும் (Deputy Speaker) தேர்ந்தெடுக்கும்.


நாடாளுமன்றத்தின் பணிகள்(Functions of Parliament):
 சட்டம் இயற்றுதல், நிர்வாக மேற்பார்வை, வரவு - செலவு அறிக்கை நிறைவேற்றுதல், பொது மக்களின் குறைகளைப் போக்குதல், முன்னேற்றத் திட்டங்களை உருவாக்குதல், பன்னாட்டு உறவுகளைப் பராமரித்தல் போன்ற பணிகளை ஆற்றி வருகிறது.
 சட்டமியற்ற மசோதா நாடாளுமன்ற இரு அவைகளின் ஒப்புதலைப் பெற வேண்டும்
 நிதி மசோதாவைப் பொறுத்தவரை மக்கள் அவையின் ஒப்புதலே முடிவானது
 நிதி மசோதாக்கள் மாநில அவையினால் 14 நாட்கள் மட்டுமே தாமதப்படுத்தலாம்
 சட்டங்கள் இயற்றும் அதிகாரங்களோடு நாடாளுமன்றத்திற்கு அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரும் அதிகாரமும் வழங்கப்பட் டுள்ளது.


நாடாளுமன்றக் கூட்டத் தொடர்கள் (Sessions of Parliament) :
 அரசியலமைப்பின்படி நாடாளுமன்றம் ஒரு ஆண்டில் குறைந்தது இரண்டு முறை கூட்டப்பட வேண்டும்
 இரண்டு கூட்டங்களுக்கும் இடையில் ஆறு மாதங்களுக்கு மிகாமல் இடைவெளி இருக்கும் வகையில் குடியரசுத் தலைவர் நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்ட ஆணையிடுவார்
 நாடாளுமன்றம் ஆண்டிற்கு மூன்று முறை கூட்டப்படுகிறது.


கூட்டத் தொடர்கள் பின்வருமாறு:
 1. வரவு - செலவு அறிக்கை கூட்டத் தொடர் - பொதுவாக ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் கூடும்.
 2. பருவக்காலக் கூட்டத்தொடர் - பொதுவாக ஜூலை மாதத்தில் கூடும்.
 3. குளிர்காலக் கூட்டத்தொடர் - பொதுவாக நவம்பர் மாதத்தில் நடைபெறும்.


குடியரசுத் தலைவர்
 இந்திய நாட்டின் முதல் குடிமகன் குடியரசுத் தலைவர் ஆவார்
 இவர் இந்திய அரசின் தலைவரும் ஆவார். "பெயரளவிலான தலைவர்' (Nominal Chief), "சட்டப்படியான தலைவர்' (Legal Chief), "நாட்டின் தலைவர்' (ஐங்ஹக் ர்ச் ற்ட்ங் ள்ற்ஹற்ங்), "நடைமுறைத் தலைவர்' (எர்ழ்ம்ஹப் ஈட்ண்ங்ச்), "முப்படைகளின் தலைவர்' என்ற சிறப்புப் பெயர்களும் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு உண்டு.
 இந்தியக் குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் 
 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்வுக் குழுமம் (Electoral College) மூலம் தேர்ந்தெடுக்கப்படு கிறார்
 மக்களவையில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும், மாநிலச் சட்டமன்றங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் குடியரசுத் தலைவரைத் தேர்ந்து எடுப்பார்கள். ஒற்றை மாற்று வாக்கு எனப்படும் ரகசியத் தேர்வு முறையில் குடியரசுத் தலைவர் தேர்வு செய்யப்படுகிறார்
 குடியரசுத் தலைவர் தேர்வு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அது உச்சநீதிமன்றத்தால் தீர்த்து வைக்கப்படும்
 ஒருவர் குடியரசுத் தலைவர் பதவிக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியிடலாம்
 குடியரசுத் தலைவர் தனது ராஜினாமாவை துணைக் குடியரசுத் தலைவரிடம்தான் அளிக்க வேண்டும்.
 குடியரசுத் தலைவரைப் பதவி நீக்கம் செய்ய குற்ற விசாரணை முறை மூலம் இதைச் செய்யலாம்
 குடியரசுத் தலைவர் மீதான குற்ற விசாரணைக் கான முன்னறிவிப்பு கால அவகாசம் 14 நாட்களாகும்
 குடியரசுத் தலைவரை பதவிநீக்கம் செய்யக் கோரும் குற்றச்சாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஏதேனும் ஒன்றில் கொண்டுவரப் பட்டு குற்ற விசாரணை நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஒப்புதல் தேவைப்படும்.


குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்


1.
நிர்வாக அதிகாரங்கள்
 மத்திய அரசின் நிர்வாக அதிகாரம் இந்தியக் குடியரசுத் தலைவரிடம் உள்ளது
 மத்திய அரசின் அனைத்து நிர்வாக அதிகாரங் களுக்கு குடியரசுத்தலைவரின் பெயரிலேயே செயல்படுத்தப்படுகின்றன
 பிரதமரை நியமிக்கும் அதிகாரம் படைத்தவரும் அவரே, பிரதமரின் ஆலோசனைப்படி மற்ற அமைச்சர்களைக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்
 இந்தியத் தலைமை வழக்கறிஞர், இந்திய தலைமை கணக்காய்வர், தலைமைத் தேர்தல் ஆணையர், இந்தியாவின் தூதுவர்கள், மாநில ஆளுநர்கள், உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், மத்திய தேர்வாணையத்தின் தலை வர், முப்படைகளின் தலைமைத் தளபதிகள் போன்ற முக்கியமான பதவிகளில் உரிய நபர்களை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.


2.
சட்டமன்ற அதிகாரங்கள் :
  பாராளுமன்றத்தைக் கூட்டும் உரிமை பெற்றவர் குடியரசுத் தலைவர் ஆவார்
 பாராளுமன்றத்தின் இரு அவைகளையோ அல்லது ஏதேனும் ஒரு அவையையோ ஒத்திப்போடவோ அல்லது கூட்டங்களை முடிவுக்குக் கொண்டு வரவோ அதிகாரம் பெற்றவர் குடியரசுத் தலைவர்
 மாநிலங்களவை 12 உறுப்பினர்களை நியமனம் செய்யவும், மக்களவையில் 2 ஆங்கிலோ - இந்திய இனத்தினரை நியமனம் செய்யவும் அதிகாரம் அவருக்கு உண்டு
  பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரமும் குடியரசுத் தலைவருக்கு உண்டு
 இவரது அங்கீகாரம் இல்லாது எந்த மசோதாவும் சட்டமாகாது
 பாராளுமன்றம் கூடாதபோது அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரமுள்ளது.


3.
நிதி தொடர்பான அதிகாரங்கள்
 நிதி மசோதாவை பாராளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் முன் அனுமதியின்றி தாக்கல் செய்ய இயலாது
 இந்திய அரசின் எதிர்பாராத செலவு (Contingency Fund) நிதிக்குப் பொறுப்பானவர் குடியரசுத் தலைவர்
 இந்தியாவின் நிதி ஆணையகத்தை (Finance Commission) அமைக்கும் பொறுப்பு இவருக்கு உண்டு.


4.
நீதி தொடர்பான அதிகாரங்கள் :
 குற்றவாளிகள் எவரையும் மன்னிக்கவோ தண்டனையை நிறுத்தி வைக்கவோ, குறைக் கவோ குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு, மரண தண்டனையில் இருந்து மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தை பெற்றவர் குடியரசுத் தலைவர்
  அரசியலமைப்பு சட்டங்கள் பற்றிய சந்தேகம் குடியரசுத் தலைவருக்கு ஏற்பட்டால் அவர் உச்சநீதிமன்றத்தை அணுகி விளக்கம் பெற இயலும்.


5.
நெருக்கடி நிலை தொடர்பான அதிகாரங்கள்:
 போர் அல்லது அயல்நாட்டு ஆக்கிரமிப்பு அல்லது ஆயுதம் தாங்கியோரின் தேசிய நெருக்கடி நிலையை அறிவிக்கலாம்.
 மாநிலங்களில் அரசியலமைப்பு இயங்குமுறை செயலற்றுப் போகும் போது மாநில நெருக்கடி நிலையை அறிவிக்கலாம்.
 நிதி நிலை மிகவும் மோசமாகும் போது குடியரசுத் தலைவர் நிதி நெருக்கடி நிலையை அறிவிக்கலாம்.


துணைக் குடியரசுத் தலைவர்
 துணைக் குடியரசுத் தலைவர் ஐந்தாண்டு காலம் பதவி வகிப்பார்
 ராஜ்யசபாவின் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவ தில்லை. இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் தமது பதவியின் வாயிலாகவே ராஜ்யசபாவின் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்
 குடியரசுத் தலைவர் இறக்க நேரிட்டாலோ, பதவி காலியாகும் போதோ, நீக்கப்பட்டாலோ, அப் பதவி காலியாக இருக்கும் போதோ அப் பதவியை ஏற்பவர் துணைக் குடியரசுத் தலைவர் ஆவார்.
  பாராளுமன்றத்தின் இரண்டு அவை உறுப்பினர் களைக் கொண்ட வாக்காளர் குழுமம் (Electoral College) மூலமாக, விகிதாச்சார பிரதிநிதித்துவ அடிப்படையில் ஒற்றை வாக்குமுறை மூலமாக, துணைக் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப் படுவார். இதில் இரகசிய வாக்களிப்பு முறை பின்பற்றப்படுகிறது.
 துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டி இடலாம்
ஸ் துணைக் குடியரசுத் தலைவர் ஐந்தாண்டு காலம் பதவி வகிப்பார். துணைக் குடியரசுத் தலைவர்மீது குற்ற விசாரணை ஒன்றை மாநிலங்கள் அவையில் தாக்கல் செய்து மக்களவையிலும் அது நிறைவேற்றப்பட்டால் அவர் பதவி நீக்கம் செய்யப்படலாம்
 துணைக் குடியரசுத் தலைவர் தனது ராஜினாமா கடிதத்தைக் குடியரசுத் தலைவரிடம்தான் கொடுக்க வேண்டும்
 மாநிலங்களவையில் ஒட்டெடுப்பின் போது சமநிலை ஏற்படும் போது மட்டும், ஒட்டுப் போடும் உரிமை பெற்றவர் துணைக் குடியரசுத் தலைவர்.


பிரதமர்
 பிரதமர் அரசாங்கத்தின் செயல்பாட்டுத் தலைவர், நிர்வாகத் துறையின் தலைவருமாவார்
 குடியரசுத் தலைவர் மக்கள் அவையில் பெரும்பான்மையான உறுப்பினர் கொண்ட கட்சியின் தலைவரை அழைத்து பிரதமராக நியமித்து அமைச்சரவையை அமைக்குமாறு கேட்டுக் கொள்வார்.


அமைச்சரவை
 அமைச்சர்கள், மக்கள் அவைக்கு தனித்தனி யாகவும், கூட்டமாகவும் பொறுப்புடையவர்கள்.
 அமைச்சர்கள் மூன்று வகையாக பிரிக்கப்படு கிறார்கள். அவை,
1. காபினெட் அமைச்சர்கள் 2. மாநில அமைச் சர்கள் 3. துணை அமைச்சர்கள்
  காபினெட் என்பது சிறிய குழுவாயினும் அது அரசாங்கத்தின் அதிகாரம் மிக்க உறுப்பாகும்
 மாநில அமைச்சர்களில் சிலர் சில துறைகளில் தனித்துப் பொறுப்பு வகிக்கிறார்கள்
 மாநில அமைச்சர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள் துணை அமைச்சர்கள் எனப் படுவர்.


மாநிலச் சட்ட மேலவை
 மாநிலச் சட்டமன்றம் ஓரவை அல்லது ஈரவை யைக் கொண்டிருக்கலாம். அவை சட்டப் பேரவை அல்லது விதான் சபா என்றும் சட்டமேலவை அல்லது விதான் பரிஷத் என்றும் அழைக்கப்படுகின்றன
 ஒரு மாநிலத்தின் சட்டமன்ற மேலவையை உருவாக்க அல்லது நீக்க அரசியலமைப்பின் அங்கம் 169-ன் கீழ் மூன்றில் இரண்டு பங்குப் பெரும்பான்மையுடன் ஒரு தீர்மானத்தைச் சம்பந்தப்பட்ட மாநிலச் சட்டப்பேரவை நிறைவேற்ற வேண்டும்.


மாநிலச் சட்டப் பேரவை
 சட்டப் பேரவை ஓர் உண்மையான மக்கள் அவையாகும்
 சட்டப் பேரவையின் உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை மாநிலத்திற்கு மாநிலம் மக்கள் தொகையைச் சார்ந்து வேறுபடுகின்றது
 சட்டப் பேரவையின் பதவி காலம் ஐந்து ஆண்டுகளாகும். ஆனால் அது முன்கூட்டியே கலைக்கப்படலாம். நாட்டில் நெருக்கடி நிலை நிலவும் பட்சத்தில் அதன் ஆயுட்காலம், நாடாளுமன்றச் சட்டத்தினால் நீட்டிக்கப் படலாம்.
 வயது வந்தோர் வாக்குரிமையின் அடிப்படையில், சட்டமன்றத் தொகுதிகளிலிருந்து மக்களால் நேரிடையாகத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப் பினர்களை அது கொண்டுள்ளது
 ஆங்கிலோ - இந்தியர் சமூகத்தினர் சட்டப் பேரவையில் பிரதிநிதித்துவம் பெறத்தவறினால் ஆங்கிலோ இந்தியர் சட்டப் பேரவையில் உறுப்பினராக நியமனம் செய்யப்படுகின்றார்
 சட்டப்பேரவையின் அதிகபட்ச உறுப்பினர் எண்ணிக்கை 500-க்கு மிகையின்றியும் குறைந்த பட்ச உறுப்பினர் எண்ணிக்கை 60-க்குக் குறைவின்றியும் இருத்தல் வேண்டும்
 இதில் சிக்கிம் மாநிலச் சட்டப்பேரவை ஒரு விதிவிலக்காகும். அங்கு 30 உறுப்பினர்களை மட்டுமே பெற்றுள்ளது.
 சட்டப் பேரவையின் ஓர் உறுப்பினராக இருக்க குறைந்தது 25 வயதடைந்தவராயிருத்தல் வேண்டும்
 சட்டப் பேரவையின் அனுமதியின்றி அதன் கூட்டங்களில் அறுபது நாட்களுக்குப் பங்கேற் காத ஓர் உறுப்பினரின் பதவியைப் பேரவை பறிக்கலாம்.


சபாநாயகர்
 சட்டப் பேரவை தனது உறுப்பினர்களுள் இருவரை முறையே சபாநாயகராகவும், துணைச் சபாநாயகராகவும் தேர்ந்தெடுக்கின்றது
 மாநிலச் சட்டப்பேரவைச் சபாநாயகரின் கடமைகள், அதிகாரங்கள், சலுகைகள் யாவும் மக்களவைச் சபாநாயகர் பெற்றுள்ளவை களுக்குப் பெருவாரியாக ஒத்துள்ளன.


ஆளுநர்
 ஆளுநராக நியமனம் செய்யப்படுவதற்கு முன் னர் மாநில முதலமைச்சர் கலந்தாலோசிக்கப் படுகின்றார்.
 மாநில ஆளுநரின் பதவிக்காலம் பொதுவாக ஐந்து ஆண்டுகளாகும். ஆனால் அவர் குடியரசுத் தலைவர் மனநிறைவைப் பெற்றுள்ள காலம் வரை பதவி வகிக்கின்றார்
 ஆளுநருக்குரிய தகுதிகள், பதவிக்காலம், தனிச் சலுகைகள் மற்றும் பலவற்றை அரசியலமைப்பு விவரிக்கின்றது
 மாநில அரசாங்கத்தின் செயலாட்சி அதிகாரங் கள் அனைத்தும் ஆளுநரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன
 முதலமைச்சரை ஆளுநர் பதவியில் அமர்த்து கின்றார். முதலமைச்சரின் அறிவுரையின்படி ஏனைய அமைச்சர்கள் அவரால் நியமனம் செய்யப்படுகின்றனர்
 மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மாவட்ட நீதி பதிகள், தலைமை வழக்குரைஞர் ஆகியோரையும் ஆளுநரே நியமனம் செய்கின்றார்
 ஆளுநரின் கலந்தாலோசிப்புடன் மாநில உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் நியமனம் செய்யப்படுகின்றனர்
 சட்ட மேலவை உறுப்பினர்களுள் ஆறில் ஒரு பங்கினரையும் சட்டப் பேரவையில் ஆங்கிலோ இந்தியச் சமுதாயத்தைச் சார்ந்த ஒன்று அல்லது இரண்டு உறுப்பினர்களையும் ஆளுநர் நியமிக்கிறார்
 மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களையும் அவர் நியமனம் செய்கின்றார்
 சட்டமன்றத்தால் இயற்றப்படும் ஒரு சட்டம் பெற்றுள்ள அதே சக்தியை ஆளுநரால் பிறப் பிக்கப்படும் அவசரச் சட்டமும் பெற்றுள்ளது.
 ஒரு நபரின் தண்டனையைக் குறைக்கவும் அல் லது அதை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்கவும் அல்லது குற்ற மன்னிப்புகள் வழங்க வும் ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனினும், மரண தண்டனையை மன்னிக்கும் அதிகாரத்தை அவர் பெற்றிருக்கவில்லை.
முதலமைச்சர்
 அமைச்சரவையின் தலைவர் முதலமைச்ச ராவார்
 மாநிலத்தின் பெயரளவிலான ஒரு தலைவராக ஆளுநர் உள்ளார். உண்மை செயலாக்க அதிகாரங்கள் யாவும் முதலமைச்சரின் தலைமையிலான ஓர் அமைச்சர் குழுவினால் செயல்படுத்தப்படுகின்றன
 அரசியலமைப்பின் 164-ம் அங்கத்தின் கீழ் முதலமைச்சரையும் முதலமைச்சரின் பரிந்துரை மீது அனைத்து அமைச்சர்களையும் ஆளுநர் நியமனம் செய்கின்றார்
 முதலமைச்சரின் தலையாய பணி தனது அமைச் சரவையை அமைப்பதாகும்
 முதலமைச்சரின் நம்பிக்கையை ஓர் அமைச்சர் இழப்பாராயின், அவர் பதவி விலக வேண்டும்.
 அமைச்சகத்திலிருந்து ஆளுநருக்குச் செல்லும் ஒவ்வொரு தகவலும் முதலமைச்சரின் வாயிலாகவே செல்ல வேண்டும்
 முதலமைச்சர் கட்சித் கொறடாக்களையும் நியமனம் செய்கின்றார்
அமைச்சர்குழு
 சட்டமன்ற உறுப்பினரல்லாத ஒருவரும் அமைச் சராக நியமிக்கப்படலாம். ஆனால் அவர் ஆறுமாத காலத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
உச்சநீதிமன்றம்
 இந்திய உச்சநீதிமன்றம் ஒரு தலைமை நீதிபதியையும் மற்றும் இருபத்தைந்து நீதிபதிகளையும் கொண்டிருக்கும்
 தலைமை நீதிபதியும் மற்ற நீதிபதிகளும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார்கள்
 உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் அறுபத்தைந்து வயது நிறைவுபெறும் வரை பதவி வகிப் பார்கள்
 உச்சநீதிமன்றத்தின் அதிகார வரம்பு (Jurisdiction of supreme court) அடிப்படை உரிமைகள் செயலாக்குவது தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தின் முதலேற்பு அதிகார வரம்புக்கு உட்பட்டது. உச்சநீதிமன்றம் இந்த உரிமைகள் தொடர்பாக பணிப்புரைகள் (உண்ழ்ங்ஸ்ரீற்ண்ர்ய்ள்) ஆணைகள் (ஞழ்க்ங்ழ்ள்) அல்லது நீதிப்பேராணைகள் (ரழ்ண்ற்ள்) பிறப்பிக்கும் அதிகாரத்தைக் கொண் டுள்ளது.


உள்ளாட்சி அல்லது பஞ்சாயத்துராஜ்
 பஞ்சாயத்து இராஜ்யம் 1959-ம் ஆண்டு அக் டோபர் திங்கள் 2-ம் நாளன்று பண்டித ஜவ ஹர்லால் நேருவினால் துவக்க செய்த முதல் மாநிலங்கள் ஆந்திரப் பிரதேசமும் ராஜஸ் தானும் ஆகும்
  அரசியலமைப்பின் 73-வது மற்றும் 74-வது திருத்தங்கள் 1992-ம் ஆண்டு டிசம்பர் திங்களில் இயற்றப்பட்டன. 1993-ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 
 73-வது திருத்தத்தின்கீழ் 11-வது இணைப்புப் பட்டியல் 29 வகை அதிகாரங்களைக் கொண்டுள்ளது. அவற்றின்மீது முழுமையான அதிகாரத்தைப் பஞ்சாயத்துக்கள் பெற்றுள்ளன
 12-வது இணைப்புப் பட்டியல் 18 வகை அதி காரங்களை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு களைக் கொண்டுள்ளன
 ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கிராம சபைக்கும் மற்றும் கிராமம் இடைப்பட்ட மற்றும் மாவட்ட நிலைகளில் பஞ்சாயத்துக்கள் அமையப்பெறவும் 73-வது திருத்தம் வகை செய்கின்றது.


அவசர நிலைகள்
 இந்திய அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள நெருக்கடி நிலைகள் - மூன்று
1. தேசிய நெருக்கடி நிலை
2. மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி
3. நிதி நெருக்கடி நிலை
 தேசிய நெருக்கடியை (National Emergency) விவரிக்கும் ஷரத்து - ஆழ்ற் 352
 தேசிய நெருக்கடி நிலையை அறிவிப்பவர் - ஜனாதிபதி
 தேசிய நெருக்கடி நிலையை அறிவிப்பதற்கான காரணங்கள்
1. போர்
2. போர் மூலம் அபாயம்
3. வெளிநாட்டவர் ஆக்கிரமிப்பு
4. வெளிநாட்டவர் ஆக்கிரமிப்பிற்கான அபாயம்
5. உள்நாட்டுக் கலவரம்
 தேசிய நெருக்கடியின் கால அளவு 6 மாதங்கள் மட்டும்.
  6 மாதத்திற்குப் பிறகு, மேலும் 6 மாதத்திற்கு நீட்டிக்க அதிகாரம் பெற்றவர் ஜனாதிபதி
 ஜனாதிபதி ஆட்சியை குறிக்கும் ஷரத்து - ஆழ்ற் 356
  முதன்முதலில் ஜனாதிபதி ஆட்சி அமலான வருடம் 1951
 முதன்முதலில் ஜனாதிபதி ஆட்சி அமல் படுத்தப்பட்ட மாநிலம் பஞ்சாப்
 இந்தியாவில் இதுவரை ஜனாதிபதி ஆட்சி 102 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.
 இந்தியாவில் அதிக முறை ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட மாநிலம் பஞ்சாப்
 இந்தியாவில் அதிகமுறை ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியவர் இந்திராகாந்தி
 நிதி நெருக்கடி நிலையைப் பற்றிக் கூறும் ஷரத்து- ஆழ்ற் 360
 நிதி நெருக்கடி நிலை பயன்படுத்தப்படும்போது பாராளுமன்றத்தின் அனுமதி பெறவேண்டிய கால அளவு 6 மாதங்கள்
 நிதி நெருக்கடி நிலைக்கு ஆறுமாதத்திற்கு ஒருமுறை பாராளுமன்ற அனுமதி தேவையில்லை.
 நிதி நெருக்கடி நிலை இந்தியாவில் ஒருமுறை கூட பயன்படுத்தப்படவில்லை.
 1. மாநில அரசுப் பணியாளர்களின் (உயர்நீதிமன்ற நீதிபதிகள் உட்பட) சம்பளம் குறைக்கப்படும்.
 2. மத்திய அரசின் பணியாளர்களின் (உச்சநீதிமன்ற நீதிபதிகள் உட்பட) சம்பளம் குறைக்கப்படும்.
 நெருக்கடி நிலையின்போது பாதிக்கப்படாத அடிப்படை உரிமை ஆழ்ற் 21
நிதி ஆணையகம்
 நிதி ஆணையகத்தை நிர்மாணிப்பவர் - ஜனாதிபதி
  நிதிஆணையத்தின் பதவிக்காலம் - 5 ஆண்டுகள்
 நிதி ஆணையகத்தின் மொத்த உறுப்பினர்கள் - 5 பேர்
 நிதி ஆணையகத்தின் தலைவர் - ஐவரில் ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவர்
 நிதி ஆணையகம் என்பது - இந்திய அரசியல் அமைப்பின்படி அமைக்கப்பட்டது.
 முதல் நிதி ஆணையகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1951
 முதல் நிதி ஆணையகத்தின் தலைவர் - கே.சி. நிகோய்
 பத்தாவது நிதி ஆணையகத்தின் தலைவர் - கே.சி. பந்த்
 பதினோராவது நிதி ஆணையகத்தின் தலைவர் பேராசிரியர் - .எம். குஸ்ரோ
 நிதிக்குழுவின் முக்கியப் பணிகள்: மத்திய - மாநில அரசுகளுக்கிடையே வரி ஆதாரங்களைப் பிரித்துக் கொடுப்பது மத்திய அரசினால் மாநில அரசுகளுக்கு கொடுக்கப்படும் நிதி உதவியை பெறுவதற்கான விதிமுறைகளை வகுப்பது
தேர்தல் ஆணையம்
 தேர்தல் ஆணையகம் என்பது ஒரு நிரந்தர அமைப்பு.
 தேர்தல் ஆணையகம் அமைக்கக் காரணமான அரசியல் சாசனம் ஆழ்ற் லி 324
 தேர்தல் ஆணையகம் என்பது மூன்று நபர் கமிஷன் ஆகும்.
 தேர்தல் ஆணையகத்தின் மூன்று ஆணையர் களுக்கும் வழங்கப்பட்ட அதிகாரங்கள் சமம்.
 தேர்தல் ஆணையம் அரசியல் சாசனத்தின்படி பாதுகாப்பப்படும் ஷரத்து ஆழ்ற் லி 324 (5)
  தேர்தல் ஆணையர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை
  தேர்தல் ஆணையகத்தின் ஆணையர்களை நியமிப்பவர் ஜனாதிபதி.
  ஜனாதிபதி, உபஜனாதிபதி, லோக்சபா, ராஜ்யசபா தேர்தல்களை நடத்தும் பொறுப்பை பெற்றது தேர்தல் ஆணையகம்.
  தேர்தலின்போது வாக்குசீட்டுகளைப் பாதுகாப்பது மற்றும் சீரமைக்கும் பணியைச் செய்வது தேர்தல் ஆணையகம்
 புதிய கட்சிகளைப் பதிவு செய்வது மற்றும் தேர்தல் கட்சிகளை அங்கீகரிப்பது - தேர்தல் ஆணையகம்.
  முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் கட்சிகளுக்கு இடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்க்கும் பொறுப்பைப் பெற்றது - தேர்தல் ஆணையகம்.
  கட்சியில் பிளவு தோன்றினால் தாய் கட்சியை யும் புதுக் கட்சியையும் தீர்மானிப்பது - தேர்தல் ஆணையகம் ஆகும்.
திட்டக்குழு
 திட்டக்குழுவின் தலைவர் - பிரதமர்
 திட்டக்குழுவின் உறுப்பினர்கள் - மாநில முதலமைச்சர்கள்
 திட்டக்குழு என்பது - ஒரு ஆலோசனைக் குழு
 தற்போதைய திட்டக் குழுவின் தலைவர் - பிரதமர் மன்மோகன் சிங்
 தற்போதைய திட்டக் குழுவின் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா
  ஐந்தாண்டு திட்டங்களின் மீதான ஆலோசனையைத் தரும் அமைப்பு - திட்டக்குழு
தேசிய வளர்ச்சிக்குழு
 தேசிய வளர்ச்சிக் குழுவின் தலைவர் - பிரதமர்
 ஐந்தாண்டுத் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட முடிவான அங்கீகாரம் தரவேண்டிய அமைப்பு - தேசிய வளர்ச்சிக்குழு ஆகும்.
இணைப்புப் பட்டியல்கள
  தற்போது இந்திய அரசியலமைப்பில் உள்ள பட்டியல்களில் எண்ணிக்கை 12 ஆகும்
 அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட போது இருந்த பட்டியல்களின் எண்ணிக்கை 8 தான்
 1951, 1985, 1992, 1992 ஆகிய ஆண்டுகளில் நான்கு பட்டியல்கள் அரசியலமைப்புச் சட்டத்திருத் தங்கள் மூலம் பின்னர் இணைத்துக் கொள்ளப் பட்டன
பட்டியல் -1
இந்திய யூனியனின் அடங்கியுள்ள மாநிலங் களையும், மத்திய ஆட்சிப்பகுதிகளையும் பற்றி விவரிப்பது முதல் பட்டியலாகும். தற்சமயம் 28 மாநிலங்களும், 6 மத்திய ஆட்சிப் பகுதிகளும் (யூனியன் பிரதேசங்கள்) ஒரு தேசிய தலைநகர் பகுதியும் இந்தியாவில் உள்ளன.
பட்டியல் -2
இந்தியக் குடியரசுத் தலைவர், துணைக் குடியர சுத் தலைவர், மக்களவை மற்றும் மாநிலங்களவை சபாநாயகர்கள், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாநில ஆளுநர்கள், தலைமைக் கணக்காய்வர், சட்டமன்றத் தலைவர் ஆகியோரது சம்பளம் மற்றும் பிற வசதிகள் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன. இது ஐந்து பிரிவுகளைக் கொண்டது.
பட்டியல் -3
பதவிப்பிரமாணம் மற்றும் உறுதி மொழிகள் பற்றி விளக்குவது மூன்றாவது பட்டியலாகும். மத்திய மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், தலைமைக் கணக்காய்வர் ஆகியோரது பதவிப்பிரமாணம், இரகசியக் காப்புக் பிரமாணம் மற்றும் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழிகள் இப்பட்டியலில் விளக்கப் பட்டுள்ளன.


பட்டியல் -4
மாநிலங்களவையில் உறுப்பினர்கள் ஒதுக்கீடு தொடர்பானது நான்காவது பட்டியல். மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மாநிலங்களவையில் (ராஜ்யசபா) உறுப்பினர் களைப் பிரித்தளிப்பது பற்றிய விளக்கம் தரப்படுகிறது


பட்டியல் -5
தாழ்த்தப்பட்டோர் (SC) மற்றும் பழங்குடி மக்கள் (ST) வாழும் பகுதிகளின் கட்டுப்பாடும் நிர்வாகமும் பற்றி விளக்குகிறது. பாராளுமன்றத் தில் எளிதான மெஜாரிட்டி மூலம் இப்பட்டியல் களைத் திருத்த இயலும் என்பது குறிப்பிடத் தகுந்தது.


பட்டியல் -6
அசாம், மேகாலயா, மிசோரம் மாநிலங்களில் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளின் நிர்வாகம் பற்றி ஆறாவது பட்டியல் விவரிக்கிறது.இப்பட்டியலும் எளிமையான மெஜாரிட்டி மூலம் பாராளுமன்றத்தில் திருத்தப்படலாம்.


பட்டியல் -7
மத்திய - மாநில அரசுகளின் அதிகாரம் செயல்பாடுகள் பற்றி ஏழாவது பட்டியல் விளக்குகிறது. இதில் மூன்று பட்டியல்கள் இடம் பெற்றுள்ளன.


(
) மத்தியப் பட்டியல்
இது மத்திய அரசுக்கு உள்ள அதிகாரங்கள் பற்றியது. மத்தியப் பட்டியலில் மொத்தம் 97 துறைகள் உள்ளன. இவற்றில் சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்டது மத்திய அரசு, பாதுகாப்பு, அணுசக்தி, தேசிய நெடுஞ்சாலைகள், விமான, கப்பல் போக்குவரத்துக்கள், காப்பீட்டுக் கழகங்கள், மக்கள்தொகை, நதிகள், தொலைபேசி, பண அச்சடிப்பு இது போன்ற முக்கியமான 97 துறைகள் மத்திய அரசின் அதிகாரத்தில் உள்ளன.
() மாநிலப்பட்டியல்
இது மாநில அரசுக்கு உள்ள அதிகாரங்கள் பற்றியது. ஆரம்பத்தில் மாநிலப் பட்டியலில் இருந்த துறைகள் 66. இவற்றில் கல்வியும், விளையாட்டும் பொதுப்பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டமையால், தற்போது 64 துறைகள் மட்டுமே மாநில அரசின் அதிகாரத்திற்குள் வருகின்றன. விவசாய வருமானவரி, நகராட்சி. சிறைச்சாலைகள், சுங்கக் கட்டணங்கள், கேளிக்கை வரி போன்ற 64 துறைகள் மாநிலப்பட்டியலில் உள்ளன. இத்துறைகளில் சட்டம் இயற்றும் உரிமை பெற்றவை மாநில அரசுகள்.


(
) பொதுப்பட்டியல்
இது மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் உள்ள பொதுவான அதிகாரங்களைப் பற்றிப் பேசுகிறது. பொதுப் பட்டியலின் தொடக்கத்தில் 47 துறைகள் இருந்தன. கல்வியும் விளையாட்டும் தற்போது பொதுப் பட்டியலுக்குக் கொண்டு வரப்பட்டதால் தற்போது பொதுப்பட்டியலில் உள்ள துறைகள் மொத்தம் 49. காடுகள், மின்சாரம், தொழிற்சாலைகள், உணவுப் பொருட்கள், திருமணம், கல்வி, விளையாட்டு உட்பட 49 துறைகள்மீது சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்றவை மத்திய அரசும், மாநில அரசுகளும் ஆகும்.
பட்டியல் -8
அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளைப் பற்றி விவரிப்பது எட்டாவது பட்டியல் ஆகும். அசாம், பெங்காளி, குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மலையாளம், மணிப்புரி, மராத்தி, நேபாளி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது, மைதிலி, போடோ, சாந்தலி, டோக்ரி என்பன எட்டாவது பட்டியல் குறிப்பிடும் மொழி களாகும். 2003-ம் ஆண்டு மைதிலி, போடோ, சாந்தலி, டோக்ரி ஆகிய நான்கு மொழிகள் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டன.
பட்டியல் -9 :
நீதிமன்றங்களின் மறுபரிசீலனைக்கு அப்பாற் பட்ட சட்டங்களைப் பற்றி விவரிப்பது ஒன்பதா வது பட்டியலாகும். அரசியல் சட்டத்திருத்தம் -1 இன் மூலம் 1951-ம் ஆண்டு இப்பட்டியல் இணைக் கப்பட்டது. நிலக்குத்தகை, நிலவரி, ரயில்வே, தொழிற்சாலைகள் இது போன்றவற்றின் சட்டங் களும் ஆணைகளும் இதில் உள்ளன. 9-வது பட்டியலில் சேர்க்கப்பட்ட முதல் சட்டம் ஜமீன் தாரி ஒழிப்புச் சட்டமாகும். தமிழ்நாட்டில் 69% பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் மசோதா 1993-ல் 85-வது சட்டத்திருத்தத்தால் நிறைவேற்றப்பட்டு இப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன.
பட்டியல் -10 :
கட்சித் தாவல் தடைச் சட்டம் பற்றி விவரிப்பது பத்தாவது பட்டியலாகும். 1985-ம் ஆண்டு 52-வது சட்டத் திருத்தத்தின் மூலமாக இப்பட்டியல் அர சியலமைப்பில் இணைக்கப்பட்டது. இச்சட்டப்படி பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் தாய்க்கட்சியை விட்டு விலகி புதிய கட்சியில் சேர்ந்தாலோ, புதிய கட்சியை உருவாக்கினாலோ அவரது உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும். மூன்றில் ஒரு பங்கு கட்சியினர் தாய்கட்சியை விட்டு விலகினால் அச்சமயம் பதவி பறிபோகாது. அது கட்சிப்பிளவு எனக் கருதப்படும்.
பட்டியல் -11 :
பஞ்சாயத்து மற்றும் ஊராட்சி நிறுவனங் களுக்கு வழங்கப்பட்டுள்ள சுய ஆட்சி அதிகாரம் பற்றி பதினோராவது பட்டியல் விளக்குகிறது. 1992-ம் ஆண்டு, 73-வது சட்டத் திருத்தத்தின்படி, 29 துறைகளில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பட்டியல் -12:
இது நகர்பாலிகா மற்றும் நகரப்பஞ்சாயத்து களுக்கு வழங்கப்பட்டுள்ள சுய அதிகாரம் தொடர்பானது பனிரெண்டாவது பட்டியலாகும். 1992-ல் 74 சட்டத்திருத்தத்தின்படி, இது அர சியலமைப்பில் சேர்க்கப்பட்டது. நகரப் பஞ்சாயத்துக்கள் 18 துறைகளில் பெற்றுள்ள அதிகாரங்கள் பற்றி இப்பட்டியலில் விளக்கப்பட்டுள்ளன.
எதிர்த்து வழக்கு போடுவதையும் இது தடை செய்தது.
இந்திய மொழிகள்
 இந்தியாவில் 1652-க்கும் மேற்பட்ட மொழிகள் பேச்சு வழக்கில் உள்ளன.
 ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள் 33 மொழிகளை பேசுகின்றனர்.
 தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகள் தென்னிந்தியாவில் பேசப்படும் முக்கிய மொழிகள் ஆகும்.
 இந்தி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி போன்ற மொழிகள் வட இந்தியாவில் பேசப்படும் முக்கிய மொழிகள் ஆகும்.
 இந்தியாவில் பொதுவான இணைப்பு மொழியாக ஆங்கில மொழி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
 இந்திய அரசியலமைப்பால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் எண்ணிக்கை 22 ஆகும்.

 Thanks & copy from classle.net/