உள்ளாட்சி தேர்தல் யாருக்கு வெற்றி

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:31 | Best Blogger Tips
Image may contain: 5 people, people smiling, people standing and text

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக காங்கிரசு பிரச்சாரத்தில் கடன் தள்ளுபடி என்ற வார்த்தை தான் மிகப்பெரிய பீரங்கியாக இருந்தது

"உங்கள் நகையெல்லாம் இப்பவே வங்கியில் அடமானம் வைத்து விடுங்கள் நாங்கள் வெற்றிப்பெற்றவுடன் தள்ளுபடி செய்து விடுவோம்"

"நீங்கள் ஏற்கனவே வாங்கியுள்ள
வீட்டு கடன், கல்வி கடன், விவசாய கடன் போன்ற எல்லா வங்கி கடன்களையும் தள்ளுபடி செய்து விடுவோம்"

"விவசாயிகளுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் வீட்டுக்கு வீடு கொடுப்போம்"

என்றெல்லாம் மக்களின் ஆசையை தூண்டிவிட்டு அப்படி இப்படி அடிச்சு விட்டும் 38 MP க்களை திமுக காங்கிரசு கூட்டணி பிடித்தது

தமிழகம் ஆசையில் மதி மயங்கி அதிமுக பாஜக கூட்டணியை புறக்கணித்த போதும் மோடி பிரதமர் ஆவதை தடுக்க முடியவில்லை

இப்ப இவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் அறிவித்த கடன் தள்ளுபடிகள், விவசாயிகளுக்கு மாதம் 6 ஆயிரம் வீட்டுக்கு வீடு கொடுப்போம் என்ற வாக்குறுதியை எல்லாம் மறக்கடிக்க வேண்டும் என்பதற்காக அப்பாவி சிறுபான்மை மக்களை குடியுரிமை சட்டத்தினை பற்றி தவறான வதந்திகளை பரப்பி அவர்கள் மத்தியரசுக்கு எதிராக தூண்டிவிட்டு போராட்டம் செய்ய வைத்து வருகின்றனர்...

இப்படி பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு ஒரு பயனும் இல்லாமல் இப்ப மோடிக்கு எதிராக கோலம் போடும் அவலங்களை சாமானிய மக்கள் ரசிக்காது அதிமுக பாஜக கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர்

இஸ்லாமிய மக்கள் தங்கள் ஜமாத்திலும், கிருஸ்த்துவ மக்கள் தங்கள் சர்ச் சபைகளிலும் பகிரங்கமாக அதிமுக பாஜக கூட்டணி புறக்கணித்து ஓட்டு போட சொல்லி இருக்கிறார்கள்

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சிறுபான்மை மக்கள் அதிமுக பாஜக கூட்டணிக்கு வாக்குகளிக்க மாட்டோம் என்று என்று புறக்கணித்த போதும் மற்ற சாமானிய மக்கள் அதிமுக பாஜக கூட்டணியை பெருவாரியாக ஆதரித்து வாக்களித்துள்ளனர்...

அடுத்து

அரசு ஊழியர்கள் தபால் ஓட்டு 95 சதவீத வாக்குகள் திமுக காங்கிரசு கூட்டணிக்குதான் சென்ற நாடாளுமன்ற தேர்தலிலும் தற்போதுய உள்ளாட்சி தேர்தலிலும் விழுந்துள்ளது

இதற்கு காரணம்

பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வாருங்கள் என்று போராட்டம் நடத்தினார்கள் அதை தற்போதைய அதிமுக அரசு நிறைவேற்ற முடியாது என்று காரணங்களை சொன்ன போதும் போராட்டம் செய்தனர், இந்த நியாயமற்ற போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்தது அதிமுக அரசு

பழைய பென்ஷன் திட்டத்தை நீக்கியது முந்தைய திமுக காங்கிரசு கூட்டணி ஆட்சியில் தான், அவர்கள் ஆட்சியில் கொண்டு வந்த புதிய பென்ஷன் திட்டத்திற்கு எதிராக இவர்களே அரசு ஊழியர்களை தூண்டிவிட்டு இப்ப எதிர்த்து போராட்டம் செய்ய வைத்தார்கள்..

அரசு ஊழியர்களை தங்கள் வாக்கு வங்கிக்காக எதிர்கட்சிகள் தூண்டிவிட்ட காரணத்தினால் அரசு ஊழியர்கள் ஆதரவு அதிமுக பாஜக கூட்டணிக்கு கண்டிப்பாக இல்லை என்ற போதும் சாமானிய மக்கள் அதிமுக பாஜக கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர்......

தமிழகத்திலுள்ள மொத்த ஊடகங்களும் அதிமுக பாஜக கூட்டணிக்கு எதிராக இரவு பகலாக எதிர்மறையான பிரசாரத்தை செய்து வந்த போதும் சாமானிய மக்கள் அதிமுக பாஜக கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர்...

சென்ற நாடாளுமன்ற தேர்தலில் 95 இடங்களை பிடித்து 59%சதவீதம் வாக்குகளளோடு நாற்பதுக்கு நாற்பது என்று மிகப்பெரிய வெற்றியை பெற்ற திமுக காங்கிரசு கூட்டணி இந்த உள்ளாட்சி தேர்தலில் 45% இடங்களை மட்டுமே பிடித்துள்ளது, 15 சதவீதம் வாக்குகள் சரிவு கண்டுள்ளது..

அதிமுக பாஜக கூட்டணியை விட ஒரு சில இடங்களை கூடுதலாக உள்ளாட்சி தேர்தலில் பெற்றாலும்

தமிழகத்தில் உள்ள

26
மாவட்ட ஊராட்சிகளில்

திமுக காங்கிரசு கூட்டணி

13
மாவட்டத்தையும்,
அதிமுக பாஜக கூட்டணி

13
மாவட்டங்களையும்
சரிசமமாக பிடித்து உள்ளது....

சென்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்று 19% சதவீதம் வாக்குகளை பெற்று மிகப்பெரிய தோல்வியை சந்தித்தனர்,

தற்போதய உள்ளாட்சி தேர்தலில் 7மாதத்தில் அதிமுக பாஜக கூட்டணிக்கு 44%சதவீதம் வாக்குகளை 

சாமானிய மக்கள் அளித்து உள்ள காரணத்தினாலேயே
அதிமுக பாஜக கூட்டணியும்

திமுக காங்கிரசு கூட்டணியும்
உள்ளாட்சி தேர்தல் ஆட்டத்தில் "ட்ராவில்" முடிந்து சரிசமமாக ஆகி உள்ளது

இதுவே அதிமுக பாஜக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி தான்...


நன்றி !
சிவ பரமசிவம்
திருவாரூர்