பிராமணர் இங்கு ஆண்டான் , ஆட்சி செய்தான், சூத்திரனை அடக்கி வைத்தான் என்பதெல்லாம் அபத்தம்
மாறாக அன்று வாழ்வாங்கு வாழ்ந்த இனங்களில் செட்டி இனம் இருந்தது, அன்றே உலகளாவிய வியாபாரமும் இன்னும் பல விஷயங்களும் அவர்களுக்கு சாதகமாயின
கிழக்காசியா முழுக்க அவர்கள் கப்பல்கள் ஓடின, அவர்களும் ஓடினார்கள் செல்வமாய் குவித்தார்கள், வெள்ளையன் ஆட்சியிலும் அவர்கள் செல்வம் குவிந்தது
ஏகபட்ட்ட செட்டிகளை காட்டமுடியும் என்றாலும் நம்பெருமாள் செட்டியும் ஒருவர்
ஆம் அவர் அன்று சொந்தமாக ரயிலே வைத்திருந்தார்
அவர் அன்றே பெரும் புள்ளி, கட்டட தொழில் அவருக்கு இயல்பாய் வந்தது , அந்த தொழிலில் காலத்தால் அழியா கட்டங்களை உருவாக்கினார்
அவர் அன்றே பெரும் புள்ளி, கட்டட தொழில் அவருக்கு இயல்பாய் வந்தது , அந்த தொழிலில் காலத்தால் அழியா கட்டங்களை உருவாக்கினார்
சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற பல சிவப்பு நிற கட்டிடங்களை உருவாக்கியவர். உயர் நீதிமன்றம், சட்டக்கல்லூரி, எழும்பூரில் உள்ள சிற்பக் கலை கல்லூரி, மியூசியம், கன்னிமாரா நூலகம் போன்றவை இவரால் கட்டப்பட்டவையே
இந்தோ அரேபிய ஐரோப்பிய கட்டகலை எனப்படு சாயல் கட்டங்களை அவர் அற்புதமாக உருவாக்கினார்
அவர் சொந்தமாக உருவாக்கிய செங்கல் சூளை பகுதியே இன்று சூளைமேடு
அந்த பகுதியின் ராஜா அவர்தான், அவர் வாழ்ந்த ஏரியா அதாவது முத்து படத்து பெரிய ரஜினிபோல் அவர் வலம்வந்த ஏறியா செட்டியார் பேட்டையாகி பின் சேட்பட் ஆனது
இன்று சேத்துபட் என்றாயிற்று
நம்பெருளாள் செட்டி நல்லோருக்கு உதவினார், கணிதமேதை சீனிவாச ராமானுஜத்தை சொந்த பந்தம் கைவிட்ட நிலையில் தன் வீட்டில் வைத்து பாதுகாத்தார் நம்பெருமாள்
அவரை அழைத்து வந்து, தனி அறை, தனி சமையல், சிறப்பு வைத்தியம் முதலிய ஏற்பாடுகள் செய்து, அவரைக் காப்பாற்ற எல்லா முயற்சிகளையும் செய்தார்.
காலம் ராமானுஜனை பறித்துவிட நம்பெருமாள் செட்டி அவர்களே அவரது ஈமச் சடங்குகளை செய்தார், ராமானுஜத்தின் மரணச் சான்றிதழ், இன்றும் செட்டியார் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இன்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என்றும் அன்று இம்பீரியல் வங்கி எனவும் அறியபட்ட வங்கிக்கு நியமனம் செய்யபட்ட முதல் இந்திய டைரக்டர் அவர்
சென்னை மாகாணத்தின் மேல் சட்டசபைக்கு நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் அவர்
முதன் முதலாக வெளிநாட்டு கார் ( பிரெஞ்ச் டிட்கன் ) வாங்கிய முதல் தமிழர் அவரே
(தற்போது இந்த கார் விஜய் மல்லையாவிடம் உள்ளது. தன் வின்டேஜ் கலெக்ஷன் கார்களில் ஒன்றாக அதை வைத்திருந்தார் மல்லையா..)
தான் ஈட்டிய பணத்தில் பெரும் பகுதியை, சமஸ்கிருத வளர்ச்சி, வைணவ கோயில்களின் திருப்பணி, ஏழைகளின் கல்வி, மருத்துவம் போன்றவற்றிற்கு கொடுத்து உதவினார்.
வட சென்னையில் பல பள்ளிகளும் சேத்துப்பட்டிலுள்ள சேவா சதனம் வளாகத்தில், தாட்டிகொண்ட நாச்சாரம்மா மருத்துவமனையும் இவருடை அறக்கட்டளை சார்பில் நடைபெறுகின்றன.
சென்னையின் வளர்ச்சியில் இவரது சேவை சிறப்பானது.
இந்த நம்பெருமாள் செட்டியார்தான் தன் சொந்த உபயோகத்துக்காக, நான்கு பெட்டிகள் கொண்ட தனி ரயில் வண்டி வைத்திருந்தார்.
சென்னை இருக்கும் காலம் வரை அவர் புகழ் இருக்கும், சென்னையின் ஜார்ஜ் கோட்டைக்கு அடுத்து அழியா கட்டங்களை கொடுத்து புதுவடிவம் கொடுத்தது செட்டியாரே
இன்னும் ஏராளமான முதலியார்கள், செட்டிகள் இன்னும் பலர் அக்காலத்திலே வாழ்வாங்கு வாழ்ந்தனர், அரசனுக்கு நிகரான செல்வாக்கு அவர்களுக்கு இருந்தது
பிராமணர் இவர்களுக்கு கணக்கு வழக்கு பார்த்த கூலியாட்களாய் இருந்தனர்
எல்லோரும் படிக்க வாய்ப்பு இருந்தது, அன்றே அதாவது ஈரோட்டு ராம்சாமிக்கு முன்பே கல்வியும் படிப்பும் பட்டமும் படித்தோரும் இருந்தனர்
தாழ்த்தபட்டோரில் கூட பன்னீர்செல்வமும், ரெட்டைமலை சீனிவாசனும் பல பட்டங்களை முடித்திருந்தனர், வாய்ப்பு எல்லோருக்கும் இருந்தது
வரலாறு இப்படி இருக்க, எவனாவது பிராமணர் ஆண்டான் மற்ற எல்லோரும் மாண்டான் என சொன்னால் அவனிடம் பேசவே செய்யாதீர்கள்
நன்றி இணையம்