ஆக்கிரமிப்புகளை அகற்ற - அரசாணை 540

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:59 | Best Blogger Tips
Image result for ஆக்கிரமிப்புகளை அகற்ற"

*ஆக்கிரமிப்புகளை அகற்ற*

*அரசாணை 540 என்ன சொல்கிறது?*

ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்தின் புல எண் உள்ளிட்ட விவரங்களுடன் அரசாணை எண்-540 மூலம் அகற்றவேண்டும் எனக் குறிப்பிட்டு... அந்தப் பகுதியின் வட்டாட்சியருக்கு பதிவுத் தபாலில் மனு அனுப்ப வேண்டும். உடனே, வட்டாசியர் ஆக்கிரமிப்புப் பகுதியைப் பார்வையிட்டு உறுதி செய்த பிறகு, ஆக்கிரமிப்பை அகற்றுமாறு, ஆக்கிரமிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட வேண்டும். ஆக்கிரமிப்பாளர் அகற்றவில்லை என்றால்... வட்டாசியர், நில அளவையாளர் உள்ளிட்ட துறை அலுவலர்கள் சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு, அகற்றியது தொடர்பான நடவடிக்கை அறிக்கையை மனுதாரருக்கு வழங்க வேண்டும். ஆக்கிரமிப்புகளைப் பார்வையிடுதல், அகற்றுதல், மனுதாரருக்கு அறிக்கை அளித்தல் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளும் 60 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்பது, காலக்கெடு.
Image result for ஆக்கிரமிப்புகளை அகற்ற"
ஆக்கிரமிப்பை அகற்றவில்லை என்றாலோ, அகற்றியதில் திருப்தி இல்லை என்றாலோ, வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். ஏற்கெனவே வட்டாசியரிடம் அளித்த மனுவின் நகலை இணைத்து மேல்முறையீடு செய்ய வேண்டும்.

ஒரு மாதத்துக்குள் வருவாய் கோட்டாட்சியர் நடவடிக்கை எடுத்து, மனுதாரருக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் இது தொடர்பான தகவலைத் தெரிவிக்க வேண்டும். அவரது நடவடிக்கையும் திருப்தி இல்லையென்றால், மாவட்ட வருவாய் அலுவலருக்கு மேல்முறையீடு செய்ய வேண்டும். அவரது நடவடிக்கையிலும் திருப்தி இல்லையென்றால்

மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், நில அளவைத் துறை உதவி இயக்குநர் உள்ளிட்ட உயரதிகாரிகள் தலைமையில் செயல்படும் வழிகாட்டும் நெறிப்படுத்தும் குழுவிடம் மேல்முறையீடு செய்யலாம்.

அக்குழுவின் நடவடிக்கையிலும் திருப்தி இல்லையென்றால், அனைத்து மனுக்களின் நகல்களையும் இணைத்து உயர் நீதிமன்றத்தில் பொது நல ரிட் மனு தாக்கல் செய்யலாம். எத்தகைய பழமையான ஆக்கிரமிப்புகள் இருந்தாலும், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிடும்.

மேற்படி அரசாணையைப் பயன்படுத்தி ஆக்கிரமிப்புகள் எங்கு இருந்தாலும் நாம் அகற்ற முயற்சிக்கலாம்


நன்றி இணையம்