மன
சோர்வு, டென்ஷன், கவலை, விரக்தி ஆகியவற்றில் இருந்து விடுபட்டு
புத்துணர்ச்சி பெறுவதற்கு சிம்பிளான 4 ஐடியாக்களை சொல்கின்றனர் ஜூரிச்
பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். மன உளைச்சல், மன சோர்வு பற்றி
சுவிட்சர்லாந்தின் ஜூரிச் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சமீபத்தில் ஆராய்ச்சி
நடத்தினர். விரக்தியான மனநிலை, டென்ஷன் ஆகியவற்றில் இருந்து எளிதில்
விடுபடும் 4 வழிமுறைகளை அவர்கள் கூறியுள்ளனர். அந்த 4 ஐடியாக்கள்.
* இதற்கு முன்பு நாம் சிக்கலான சூழ்நிலையை சந்தித்த நேரத்தில் நமக்கு உதவி
செய்தது யார் என்று பார்த்து, நன்றி தெரிவித்து அவருக்கு ஒரு இமெயில்
அல்லது கடிதம் எழுதலாம். எப்படி எல்லாம் அவர் உதவினார் என்பதை அதில்
நினைவுகூரலாம். இது கஷ்டமான சூழ்நிலையை சமாளிக்கும் ஆற்றலை, தைரியத்தை
நமக்கு வழங்கும்.
* ஸ்போர்ட்ஸ் பார்க்கும் உற்சாக கூட்டம், திறன்
மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் மேனேஜ்மென்ட் வகுப்பு, உடற்பயிற்சி
வகுப்பு.. என பலர் இருக்கும் கூட்டத்தின் நடுவில் போய் உட்கார்ந்து
கொள்ளலாம். நாம் சும்மா இருந்தாலும்கூட, சுற்றி இருப்பவர்களின் உற்சாகம்
நம்மையும் தொற்றிக் கொள்ளும்.
*
ஏற்கனவே நாம் சந்தித்த சிக்கலான, துரதிர்ஷ்ட சந்தர்ப்பங்களை அசைபோடலாம்.
நாம் சோதனையாக கருதிய தருணங்களை குறித்து வைத்துக் கொண்டு, அப்போது எந்த
வாய்ப்பு அந்த சூழ்நிலையை மாற்றியது.. அதிர்ஷ்ட கதவு எப்படி திறந்தது
என்பதை நினைத்துப் பார்க்கலாம்.
* சிக்கலான பொது விஷயங்களை பற்றிய
ஆய்வு கட்டுரைகளை படிக்கலாம். அல்லது ஏதேனும் ஒரு கண்காட்சிக்கு போகலாம்.
அங்கு அலசப்படும் சில விஷயங்களை பார்க்கும்போது பிரச்னையை தீர்ப்பதற்கான
பொறி தட்டும். இவ்வாறு ஜூரிச் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
Via Doctor Vikata
மன
சோர்வு, டென்ஷன், கவலை, விரக்தி ஆகியவற்றில் இருந்து விடுபட்டு
புத்துணர்ச்சி பெறுவதற்கு சிம்பிளான 4 ஐடியாக்களை சொல்கின்றனர் ஜூரிச்
பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். மன உளைச்சல், மன சோர்வு பற்றி
சுவிட்சர்லாந்தின் ஜூரிச் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சமீபத்தில் ஆராய்ச்சி
நடத்தினர். விரக்தியான மனநிலை, டென்ஷன் ஆகியவற்றில் இருந்து எளிதில்
விடுபடும் 4 வழிமுறைகளை அவர்கள் கூறியுள்ளனர். அந்த 4 ஐடியாக்கள்.
* இதற்கு முன்பு நாம் சிக்கலான சூழ்நிலையை சந்தித்த நேரத்தில் நமக்கு உதவி செய்தது யார் என்று பார்த்து, நன்றி தெரிவித்து அவருக்கு ஒரு இமெயில் அல்லது கடிதம் எழுதலாம். எப்படி எல்லாம் அவர் உதவினார் என்பதை அதில் நினைவுகூரலாம். இது கஷ்டமான சூழ்நிலையை சமாளிக்கும் ஆற்றலை, தைரியத்தை நமக்கு வழங்கும்.
* ஸ்போர்ட்ஸ் பார்க்கும் உற்சாக கூட்டம், திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் மேனேஜ்மென்ட் வகுப்பு, உடற்பயிற்சி வகுப்பு.. என பலர் இருக்கும் கூட்டத்தின் நடுவில் போய் உட்கார்ந்து கொள்ளலாம். நாம் சும்மா இருந்தாலும்கூட, சுற்றி இருப்பவர்களின் உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்ளும்.
* ஏற்கனவே நாம் சந்தித்த சிக்கலான, துரதிர்ஷ்ட சந்தர்ப்பங்களை அசைபோடலாம். நாம் சோதனையாக கருதிய தருணங்களை குறித்து வைத்துக் கொண்டு, அப்போது எந்த வாய்ப்பு அந்த சூழ்நிலையை மாற்றியது.. அதிர்ஷ்ட கதவு எப்படி திறந்தது என்பதை நினைத்துப் பார்க்கலாம்.
* சிக்கலான பொது விஷயங்களை பற்றிய ஆய்வு கட்டுரைகளை படிக்கலாம். அல்லது ஏதேனும் ஒரு கண்காட்சிக்கு போகலாம். அங்கு அலசப்படும் சில விஷயங்களை பார்க்கும்போது பிரச்னையை தீர்ப்பதற்கான பொறி தட்டும். இவ்வாறு ஜூரிச் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.