முடிவுக்கு வருகிறது 160 ஆண்டுகால தந்தி சேவை!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:28 | Best Blogger Tips

Photo: முடிவுக்கு வருகிறது 160 ஆண்டுகால தந்தி சேவை!

செல்போன், எஸ்.எம்.எஸ்., இமெயில் என்று தகவல் பரிமாற்றங்கள் ஹைடெக்காக மாறிவிட்ட நிலையில், தந்தி சேவையை வருகிற ஜூலை 15 ஆம் தேதியுடன் நிறுத்திக்கொள்ள பி.எஸ்.என்.எல். முடிவு செய்துள்ளது.

செல்போன்கள் 90 களின் மத்தியிலேயே இந்திய சந்தைக்கு வந்தபோதிலும் 2001 - 2002 வரை செல்போன்களின் விலையும், அதில் பேசுவதற்கான கட்டணமும் அதிகமாக இருந்ததால், மரணச் செய்தி, திருமண, பிறந்த நாள் வாழ்த்து என ஆத்திர அவசரத்திற்கு பொது தொலைபேசி சேவையுடன், தந்தி சேவையும் ஓரளவு பயன்படுத்தப்பட்டுதான் வந்தது.

ஆனால் 2003 வாக்கில் 500 ரூபாய்க்கு செல்போன், இன்கம்மிங் கட்டணம் இலவசம், அவுட்கோயிங் ரூ. 1 அல்லது 2 ரூபாய்தான் என தனியார் செல்போன் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு செல்போன் சேவை சந்தையில் களமிறங்கியதிலிருந்து, குடிசை வீடு முதல் கோபுரங்கள் வரை அங்கிங்கெனாதபடி எல்லார் கையிலும் செல்போன்கள்.

இது தொடர்பாக பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ( தந்தி சேவை) சீனியர் ஜெனரல் மேனஜர், பல்வேறு தொலைபேசி மாவட்ட மற்றும் சர்க்கிள் அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளதாகவும், அதில் 2013 ஜூலை 15 ஆம் தேதியுடன் தந்தி சேவையை நிறுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் டெல்லி பி.எஸ்.என்.எல். வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நன்றி : விகடன்
செல்போன், எஸ்.எம்.எஸ்., இமெயில் என்று தகவல் பரிமாற்றங்கள் ஹைடெக்காக மாறிவிட்ட நிலையில், தந்தி சேவையை வருகிற ஜூலை 15 ஆம் தேதியுடன் நிறுத்திக்கொள்ள பி.எஸ்.என்.எல். முடிவு செய்துள்ளது.

செல்போன்கள்
90 களின் மத்தியிலேயே இந்திய சந்தைக்கு வந்தபோதிலும் 2001 - 2002 வரை செல்போன்களின் விலையும், அதில் பேசுவதற்கான கட்டணமும் அதிகமாக இருந்ததால், மரணச் செய்தி, திருமண, பிறந்த நாள் வாழ்த்து என ஆத்திர அவசரத்திற்கு பொது தொலைபேசி சேவையுடன், தந்தி சேவையும் ஓரளவு பயன்படுத்தப்பட்டுதான் வந்தது.