நெற்றியில் குட்டி வழிபடுவது ஏன்?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:07 | Best Blogger Tips
நெற்றியில் குட்டி வழிபடுவது ஏன்?

காவிரி நதியை கமண்டலத்தில் அடக்கிக் கொண்டுகுடகு மலையில் அகத்தியர் சிவபூஜை செய்தார். அப்போது காக்கை வடிவத்தில் இருந்த விநாயகர் கமண்டலத்தின் மீது அமர்ந்தார். அதனை விரட்டியபோது கமண்டலம் கவிழ்ந்து காவிரி பெருக்கெடுத்து ஓடியது. கோபமடைந்த அகத்தியர் அடிக்க துரத்தினார். காகம் சிறுவனாக மாறியது. தலையில் குட்ட முயன்றபோது விநாயகர் காட்சி தந்தார். திகைத்துப்போன அகத்தியர் வேத வித்தகனையே குட்ட கையை ஓங்கி விட்டேனே என கூறி தனது நெற்றியில் குட்டிக் கொண்டார். அவருக்கு கணபதி அருள்புரிந்தார். இதனால் கணபதி முன் நெற்றியில் குட்டி வழிபட்டால் அறிவும், செல்வமும் கொழிக்கும் என்பது ஐதீகமானது.காவிரி நதியை கமண்டலத்தில் அடக்கிக் கொண்டுகுடகு மலையில் அகத்தியர் சிவபூஜை செய்தார். அப்போது காக்கை வடிவத்தில் இருந்த விநாயகர் கமண்டலத்தின் மீது அமர்ந்தார். அதனை விரட்டியபோது கமண்டலம் கவிழ்ந்து காவிரி பெருக்கெடுத்து ஓடியது. கோபமடைந்த அகத்தியர் அடிக்க துரத்தினார். காகம் சிறுவனாக மாறியது. தலையில் குட்ட முயன்றபோது விநாயகர் காட்சி தந்தார். திகைத்துப்போன அகத்தியர் வேத வித்தகனையே குட்ட கையை ஓங்கி விட்டேனே என கூறி தனது நெற்றியில் குட்டிக் கொண்டார். அவருக்கு கணபதி அருள்புரிந்தார். இதனால் கணபதி முன் நெற்றியில் குட்டி வழிபட்டால் அறிவும், செல்வமும் கொழிக்கும் என்பது ஐதீகமானது.
 
Via இந்து மத வரலாறு - Religious history of hinduism