ஆயுர்வேத வைத்தியம் - ஸ்ரீகாஞ்சி சுவாமிகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:19 PM | Best Blogger Tips
வேத காலத்திலிருந்தே இருந்துவரும் ஆயுர்வேத வைத்தியம், நவீன மருத்துவத் துறையில் காணப்படும் அறிவியல் தத்துவங்களுக்கு எந்த விதத்திலும் குறைவு இல்லாத அரிய முறையாகும். அதில் காணப்படுபவை ஆராய்ச்சிப் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட அரிய தத்துவங்களாகும். அதைப் பற்றி ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதி பதி பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், "ஆயுர்வேதத் தில் அறிவியல்' என்ற உபன்யாசத் தில் கூறிய அருமையான கருத்துக் களை இங்கு தொகுத்துத் தருகி றோம்.

""மினரல் தாதுக்களைக் கலந்தும் மருந்து செய்வதால் "கெமிஸ்ட்ரி' என்ற ரசாயன சாஸ்திரமும் நம் வைத்திய சாஸ்திரத்தில் வந்துவிடு கிறது. கெமிஸ்ட்ரி மட்டுமல்ல; இன்னும் ஏழெட்டு சயின்ஸ்களும் மெடிக்கல் சயின்ஸ் (ஙங்க்ண்ஸ்ரீஹப் நஸ்ரீண்ங்ய்ஸ்ரீங்) என்ற இது ஒன்றிலேயே அடங்கி விடுவதைப் பார்த்தால் ஆச்சரிய மாயிருக்கும். மூலிகைகளின் இயற்கையைத் தெரிந்துகொண்டே மருந்து பண்ண வேண்டும் என்ப தால், தாவர தத்துவ சாஸ்திரமான பாட்டனியையும் (இர்ற்ஹய்ஹ்) நன்றாகத் தெரிந்து சொல்லியிருக்கிறார்கள். மருந்துகளின் இன்னொரு மூலச் சரக்கான ரஸ வர்க்கங்களைப் பற்றி அறியப்போவதிலும் ரசாயனம் (கெமிஸ்ட்ரி) வந்துவிடுகிறது.

என்ன மருந்து கொடுக்க வேண்டும், அதில் என்னென்ன சாமான்கள் சேர்க்க வேண்டும் என்று தெரிந்தால் போதுமா? அது செலுத்தப்படுகிற தேக அமைப்பைப் பற்றி நன்றாகத் தெரிய வேண்டுமல்லவா? நோயாளியின் தேக தத்துவத்தைத் தெரிந்து கொள்ளாமல் சிகிச்சை எப்படி? இவ்வாறு பிசியாலஜியும் (டட்ஹ்ள்ண்ர்ப்ர்ஞ்ஹ்) வைத்திய சாஸ்திரத்தில் வந்துவிட்டது. "வெட்னரி' என்கிற பிராணி வைத்தியமும் புராதனமாகவே நம்மிடம் உண்டு. வீட்டுக்கு வீடு பசு, விவசாயத் துறைக்கு எருது, சைன்யத்தில் ரத, கஜ, துரகம் என்பதில் யானை, குதிரை- இப்படிப் பல மிருகங்களை ஆரோக்கியமாகக் காப்பாற்ற வேண்டியதை முன்னிட்டு, பிராணி தத்துவ சாஸ்திரமான ஜுவாலஜியையும் (ழர்ர்ப்ர்ஞ்ஹ்) நம் பூர்வீகர்கள் ஆயுர்வேதத்திலேயே சேர்த்துக் கொடுத்திருக்கிறார்கள். எந்த சத்தியத்தையும் துளைத்துக் கொண்டு பார்க்கிற அதீந்த்ரிய சக்தியால் ரிஷிகள் இந்த எல்லா சயின்ஸ்களை யும் தெரிந்துகொண்டு, ஆயுர்வேதம் முதலான சாஸ்திரங்களில் தெரிவித்திருக்கிறார்கள். கருணை மிகுந்த ரிஷிகள், பிராணிகளுக்கு மட்டுமில்லாமல், மரம், செடி, கொடிகளுக்கு வருகிற நோய்களைக்கூடப் போக்க வேண்டுமென்று "வ்ருக்ஷாயுர் வேதம்' என்றே ஒரு சாஸ்திரம் செய்திருக்கிறார்கள்.

சரக்குகளை இன்னவிதத்தில் கலக்கணும், ஒவ்வொன்றும் இன்ன எடை இருக்கணும், நோயாளி இன்ன அளவு சாப்பிடணும் என்று துல்லியமாய்க் கணிப்பதில் கணிதமும் வந்து விடுகிறது. இப்படி பௌதீக சாஸ்திரம் என்கிற பிசிக்ஸைத் (டட்ஹ்ள்ண்ஸ்ரீள்) தவிர பாக்கி முக்கியமான சயின்ஸ்களையெல்லாம் ஆயுர்வேதம் ஒன்றிலேயே அகப்படும்படியாகக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறார்கள். வேறு சாஸ்திரங் களிலும் தனியாகவும் பிசிக்சையும் அலசி ஆராய்ந்து கொடுத்திருக்கிறார்கள். சர்.பி.சி.ரே என்பவர் நம்முடைய பிராசீன சாஸ்திரங்களில் நவீன சயின்ஸ்கள் எல்லாவற்றுக்கும் மூலம் இருக்கிறதென்று ஆராய்ச்சி செய்து நிரூபித்தி ருக்கிறார். வெள்ளைக்காரர்களே ஒப்புக் கொள்ளுகிறபடி குறைந்தபட்சம் இரண்டாயி ரம் வருடங்களுக்கு முற்பட்ட சரகம், ஸூச்ருதம் முதலிய கிரந்தங்களில், "இந்த இருநூறு முந்நூறு வருடங்களில் நாங்கள் கண்டுபிடிப்ப தற்கு முன்னர் எவருக்குமே இந்த உண்மைகள் தெரிந்திருக்கவில்லை' என்று அவர்கள் சொல்லிக் கொள்ளும் நவீன சயின்ஸ்களையெல்லாம் அடங்கியிருக்கின்றன.

மற்றவர்கள் (வெளிநாட்டவர்)- நவீனர்கள் நம்முடைய ஆயுர்வேதத்தில் சிலாகித்துச் சொல்கிற ஒரு விஷயம், இதில் மருந்துகளைச் சொன்னதோடு மாத்திரமன்றி, அதைவிட முக்கியமான பத்தியங்களையும் சொல்லியிருப்பதாகும்.

பத்தியம் என்றால் ஒரு வழியில் போகப் பண்ணுவது. பாதை (டஹற்ட்) என்பதெல்லாம் "பதி'யிலிருந்து வந்ததுதான். ஆரோக்கியப் பாதையில் செலுத்துவதற்காக ஏற்பட்டதே பத்தியம். மருந்து சாப்பிட்டால் மட்டும் போதாது. உடம்பு சரியாவதற்கு இன்ன ஆகாரங் களை நீக்கிவிட்டு, இன்ன ஆகாரத்தை மட்டுமே இன்ன அளவில் சாப்பிட வேண்டுமென்பது முக்கியம். இதுதான் பத்தியமாயிருப்பது. இந்தப் பத்தியத்தில் ஒன்றாக சகல ஜனங்களுக்குமே பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை உபவாசம் இருக்க வேண்டுமென்று வைத்திருக்கிறது. சகல ஜனங்களுமே அவ்வப்போது ஒரு வேளை லங்கனம் போடுவது நல்லது. பக்ஷத்துக்கு ஒரு நாள் பூராவும் பட்டினியிருப்பது விசேஷம் என்று வைத்திய சாஸ்திரம் கருதுகிறது. இதையே ஏகாதசி என்று விரதானுஷ்டானமாகவும் பெற்றிருக்கிறோம். தர்ம சாஸ்திரமும், நம் பூர்வீக வைத்திய முறை சாஸ்திரமும் கைகோர்த்துக் கொண்டு போகின்றன என்பதற்கு இதுவும் உதாரணம்.

இந்தியாவிலுள்ள நாம் நம் தேசத்திலேயே ஏற்பட்ட ஆயுர்வேத முறைகளைத்தான் பின்பற்ற வேண்டுமென்பது ஒரு காரணம். அப்போதுதான் கூடிய மட்டும் சாஸ்திர விரோதமான அனா சாரங்கள் சேராமலிருக்கின்றன என்ற இன்னொரு காரணமும் உண்டு. அது இயற்கையாக அமைந்திருப்பது. அதாவது இந்தப் பிரபஞ்சத்தை உண்டாக்கி நடத்துகிற ஈசுவரனே சகஜமாக ஏற்படுத்தி வைத்திருக்கிற அமைப்புகளைச் சேர்ந்தது. ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு விதமான சீதோஷண நிலை இருக்கிறது. ஒவ்வொரு விதமான பயிர் பச்சைகள் விளைவித்து அவற்றை அங்கே உள்ளவர்கள் ஆகாரம் பண்ணுகிறார்கள். அவற்றையொட்டி அவர்களுடைய ஆரோக்கி யம், வியாதி இரண்டும் ஏற்படுகின்றன. அந்தந்த சீதோஷணமும் அங்கே கிடைக்கிற ஆகார பதார்த்தங்களும்தான் ஒவ்வொரு தேசத்த வருக்கும் "ஸூட்' ஆகிறது என்பதைப் பார்க்கி றோம் அல்லவா? இப்படியே ஆங்காங்கே இந்த சீதோஷணம், ஆகாரம் முதலியவற்றை அனுசரித்து அனாரோக்யத்தைப் போக்கிக் கொள்ளவும், அங்கே உள்ளவர்களுக்கு ஒவ்வொரு வைத்தியமுறை தோன்றுமாறு பகவான் புத்தி கொடுக்கிறான்.

அந்த வைத்தியத்துக்கு வேண்டிய சரக்குகள் அந்தந்த தேசத்தில் கிடைக்கும்படியாகவும் வைத்திருக்கிறான். சாத்விகர்களாக வாழ வேண்டிய நம் தேச ஜனங்களுக்கு நம்முடைய சீதோஷணம், ஆகாரம் முதலியவற்றுக்கு அனுசரணையாகப் பச்சிலை, ரஸவர்க்கம் போன்ற சாத்வீக மருந்துகளாலேயே வியாதி நிவர்த்தி ஏற்படுமாறு அவன் ஏற்படுத்தியிருக்கும் சகஜமான அமைப்பிலே இருக்கிறது. "கர்ம பூமியிலுள்ளவர்கள் கர்மானுஷ்டானத்துக்கு முதுகெலும்பாயிருக்கிற தர்மசாஸ்திரத்தை மீறாமலே சரீர ரக்ஷை, வியாதி நிவர்த்தி, ஆயுர்விருத்தி முதலியவற்றைப் பெறட்டும்' என்றே நம் ரிஷிகளுக்கு ஆயுர்வேதம் புரிபடும்படியாக அனுக்ரஹித்திருக்கி றான். அந்தந்த தேசத்திலுள்ள ஜனங்க ளின் பக்குவ நிலைக்கு ஏற்ப அவர் களுக்கு தேசாச்சார, மதாச்சாரங்களைக் கொடுத்து, இவற்றுக்கு அனுசரணை யாகவே வைத்தியமுறை முதலியவை ஆங்காங்கே தோன்றும்படிச் செய்திருக் கிறான்.

வைத்தியம் மட்டுமில்லை; "சில்பம்' என்று வீடு வாசல் கட்டிக் கொள்கிற முறை, க்ருஷி என்பதான விவசாய முறை எல்லாவற்றிலும் இப்படி ஒவ்வொரு தேசத்திற்கும் "ஸூட்' ஆகிற ஒன்று உண்டு. நாம் வெள்ளைக்கார ஃபாஷனில் வீடு கட்டிக்கொண்டால் நம் அனுஷ்டானங்கனையே பண்ண முடியாமல் விடவேண்டியதாகிறது. ஓஹல்ஹய்ங்ள்ங் ஙங்ற்ட்ர்க் ர்ச் ஆஞ்ழ்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங் பண்ணி நாலு மடங்கு மகசூல் காட்டுவேன் என்று போனால், நம் கையை மீறி அதிவ்ருஷ்டி, அநாவ்ருஷ்டி (பெருமழை அல்லது வறட்சி) என்று ஏற்பட்டு பஞ்சநிலை உண்டாகிறது. "நேச்சரை டிஸ்டர்ப்' பண்ணக் கூடாது. அதுவே ஏற்றத் தாழ்வுகளை "பாலன்ஸ்' பண்ண விட வேண்டும் என்று அறிவாளிகள் ஒரு பக்கம் சொல்கிறார்கள். இது மெடிக்கல் சயின்ஸ் உள்பட எல்லா வற்றிலும் ஆலோசனைக்குக் கொண்டு வரவேண்டிய விஷயம்.

ஆயுர்வேதத்தின் பிரமாண நூலான "சரக ஸம்ஹிதை'யிலேயே இந்த விஷயத்தைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறது.

"யஸ்மித தேசேஹி யோ ஜாத:/

தஸ்மை தஜ் ஜெஷதம் ஹிதம்//

ஒரு தேசம் என்றால் அதில் பல மனுஷ்யர்கள் உண்டாகிறார்கள். மனுஷ்யர்களைப்போலவே ஒவ்வொரு தேசத்திலும் மூலிகை முதலான மருந்து சரக்குகளும் உண்டாகின்றன. ஈச்வர நியதியில் இது ஏதோ குருட்டாம் போக் கில் நடப்பதல்ல; இந்த தேசத்துக் காரனுக்கு இந்தச் சரக்கால் பண்ணின ஔஷதம்தான் ஏற்றது என்று இது காட்டுகிறது. இதைத்தான் எந்த தேசத்தில் ஒருவன் பிறந்திருந்தாலும் அவனுக்கு அங்கேயே உண்டான சரக்குகளால் ஏற்பட்டதுதான் மருந்து என்று சரகத்தில் சொல்லியிருக்கிறது.''

-எச். திவ்யாஹரி

நன்றி நக்கீரன்

மின்னஞ்சலை (Email) கண்டுபிடித்தவர் யார் ?

மணக்கால் அய்யம்பேட்டை | 1:17 PM | Best Blogger Tips
யாராவது வெளிநாட்டுக்காரர்தான் என்று நினைத்திருப்பீர்கள். நீங்கள் நினைத்தது உண்மைதான். அவர் வெளிநாட்டில் வசிக்கும் ஒரு தமிழர். அதுவும் தனது 14வயதில் (Email) லை கண்டுபிடித்துச் சாதனை செய்தவர் ஒரு தமிழன் சிவா அய்யாதுரை. இப்போது அவருக்கு வயது 48.

ஒரு வீடியோ, போட்டோ, கடிதமாகா, இருக்கட்டும் உடனே ஒருவருக்கு அனுப்ப வேண்டும் என்றால் உடனே (Email) லில் அனுப்பினால் அனுப்பிய மறு நிமிடம் உங்களுக்குக் கிடைத்துவிடும்

மின்சாரம் இல்லாத மனிதனுடைய வாழ்க்கையை எப்படிக் கற்பனை செய்ய முடியாதோ, அதைப் போலவே (Email) இல்லாத மனித வாழ்க்கையை இனி நினைத்துப் பார்க்கவும் முடியாது. தனிநபர்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றமாகட்டும், நிறுவனங்களுக் கிடையிலான தகவல் பரிமாற்றமாக இருக்கட்டும் இப்போது (Email) சரணம் என்ற நிலை உருவாகிவிட்டது.

இந்த இ-மெயிலைக் கண்டுபிடித்த சிவா அய்யாதுரையை பற்றி அவரே கூரி இருந்தார்

அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தில் உள்ள நெவார்க் என்ற ஊரைச் சேர்ந்தவர்.

அவருடைய அம்மா மீனாட்சிக்குச் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பரமன்குறிச்சி. எனது தாத்தா அரசுத்துறையில் சிவில் என்ஜினியர். அப்பாவுக்குச் சொந்த ஊர் ராஜபாளையம் அருகேயுள்ள முகவூர். அம்மா அந்தக் காலத்திலேயே எம்எஸ்ஸி படித்தவர். மாநில அளவில் தங்கப் பதக்கம் வென்றவர். அப்பா யுனிலீவர் போன்ற பெரிய நிறுவனங்களில் உற்பத்தித்துறைத் தலைவராக இருந்தவர். எனது சிறிய வயதிலேயே நாங்கள் மும்பைக்குச் சென்றுவிட்டோம்.

நான் நன்றாகப் படிப்பதைத் தெரிந்து கொண்ட என் பெற்றோர், என்னை மேலும் நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக 1970 இல் அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்தார்கள். அப்போது எனக்கு வயது ஏழு. அமெரிக்காவில் நியூஜெர்ஸி மாகாணத்தில் உள்ள பேட்டர்சன் டவுனுக்குப் போனோம். அம்மா கணிதவியல் நிபுணராகவும், ஸிஸ்டம் அனலிஸ்ட்டாகவும் இருந்தார்.

எனக்குச் சிறுவயதிலேயே படிப்பிலும் விளையாட்டிலும் அதிக ஆர்வம். எனது சிறுவயதில் நான் இருவேறு உலகங்களில் வாழ்ந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். வீட்டில் இந்தியனாகவும், வெளியே அமெரிக்கனாகவும் வாழ்ந்தேன்.

பள்ளியில் படிக்கும்போது கோடை விடுமுறையில் நியூயார்க் பல்கலைக் கழகத்தில் FORTRAN, COBOL, PL/1, SNOBOL, BASIC ஆகிய ஐந்து வித்தியாசமான கம்ப்யூட்டர் மொழிகளைப் படித்தேன். உலகம் முழுவதிலும் இருந்து 40 பேரைத் தேர்ந்து எடுத்து அந்தப் பல்கலைக் கழகத்தில் சொல்லித் தந்தார்கள். அதில் நானும் ஒருவன். கம்ப்யூட்டர் புரோகிராம் என்றால் என்ன என்று யாருக்கும் தெரியாத அந்த நாளில் நான் அங்கே கற்றுக் கொண்டது பெரிய விஷயமாக இருந்தது.

இந்தப் பின்னணியில்தான், 1978 இல் நியூஜெர்ஸி மாகாணத்தில் நெவார்க்கில் உள்ள “யுனிவர்சிட்டி ஆஃப் மெடிஸின் அண்ட் டென்ஸ்ட்ரி’யில் கம்ப்யூட்டர் புரோகிராம் பணிக்காகச் சேர்ந்தேன். பின்னாளில் உலகம் முழுவதும் பயன்படுத்தப் போகும் ஒரு கம்ப்யூட்டர் மென்பொருளை நான் அங்கே வடிவமைப்பேன் என்று கனவிலும் நினைத்ததில்லை.

அப்போது அங்கே உள்ள அலுவலகத்தில் உள்ள எல்லா தகவல் பரிமாற்றங்களும் காகிதத்தில் எழுதப்பட்டு அதன் மூலமே நடந்தன. இது மனித உழைப்பையும், நேரத்தையும் அதிகமாக எடுத்துக் கொண்டதால், இந்தத் தகவல் தொடர்பு பணியைக் கம்ப்யூட்டர்மயமாக்க முடியுமா? என்று என்னைக் கேட்டார்கள். அப்போது எனக்கு 14 வயது.

தொடர்ந்து பலநாட்கள் தூக்கம் இல்லாமல், கடுமையாக உழைத்து தகவல் தொடர்புக்கான கம்ப்யூட்டர் புரோகிராமை உருவாக்கினேன். அதன் Code ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வரிகளை உடையதாக இருந்தது. அதை E MAIL என்று அழைத்தேன்.

நான் இந்த E MAIL-ஐக் கண்டுபிடிப்பதற்கு முன்பு கம்ப்யூட்டரின் மூலம் செய்திகளை அனுப்புவது இருந்ததா? என்றால் இருந்தது. ஆனால் ஒரு கம்ப்யூட்டருக்கும் இன்னொரு கம்ப்யூட்டருக்கும் இருந்த நேரடி இணைப்பின் மூலமாக இருந்தது. அப்படி அனுப்பியதும் வெறும் டெக்ஸ்ட் மெசேஜ்ஜாக மட்டுமே இருந்தது.

நான்தான் முதன்முதலில் கம்ப்யூட்டர் மூலம் செய்திகளை அனுப்புவதற்கு புரோகிராமை உருவாக்கியவன். FORTRAN IV என்ற programming language -ஐப் பயன்படுத்தி அதை உருவாக்கினேன். இது DATABASE, LAN(LOCAL AREA NETWORK) உடன் தொடர்புடையதாக இருந்தது. இ மெயில் என்பது டெக்ஸ்ட் மெசேஜ் அல்ல. அது ஒரு ஸிஸ்டம். இ – மெயிலில் உள்ள INBOX, OUTBOX, FROM, TO, SUBJECT, CC, BCC, DATA, BODY, FORWARD, REPLY எல்லாம் நான் உருவாக்கியவை.

அதற்குப் பிறகு “மசாசூùஸட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி’யில் (MIT) மேற்படிப்புக்காகச் சென்றேன். மிக அதிகமான திறமையுள்ள, கண்டுபிடிப்புகள் செய்யும் மாணவர்களை அந்தக் கல்லூரி ஆண்டுதோறும் அடையாளம் காட்டிச் சிறப்பிக்கும். 1980 இல் 1040 மாணவர்கள் படித்தனர். இ – மெயிலைக் கண்டுபிடித்தற்காக, அப்படி அடையாளம் காட்டிச் சிறப்பிக்கப்பட்ட நான்கு மாணவர்களில் நானும் ஒருவன்.

எனது கண்டுபிடிப்புக்கான காப்புரிமையை வாங்க 1982 இல் அமெரிக்காவின் காப்புரிமை அலுவலகத்தை அணுகினேன். அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது எப்படி என்று ஆலோசனை கூறக் கூட அப்போது யாரும் இல்லை. எனக்கு அப்போது 19 வயது. 1982 ஆகஸ்ட் 30 இல் இ-மெயிலைக் கண்டுபிடித்ததற்காக எனக்கு காப்புரிமை கிடைத்தது.

ஆனால் பலர் தாங்கள்தாம் இ – மெயில் கண்டுபிடித்ததாகக் கூறிக் கொள்கின்றனர். ஆனால் நான் இ-மெயில் கண்டுபிடிக்க செய்த முயற்சிகளைப் பார்த்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் உலக அளவில் புகழ்பெற்ற மொழியியல், தத்துவத்துறைப் பேராசிரியர் நோம் சாவ்ஸ்கி. நான்தான் இ மெயில் கண்டுபிடித்தேன் என்று அவர் பகிரங்கமாக அறிவித்து வருகிறார். நான் கண்டுபிடிப்பதற்கு முன்பு இ மெயில் என்ற சொல் உலகத்தில் எந்த அகராதியிலும் இல்லை.

இ-மெயிலை நான் கண்டுபிடிக்கவில்லை என்று சிலர் கூறுவதற்குக் காரணம்,

1. நான் ஓர் இந்தியன், 2. நான் புலம் பெயர்ந்தவன், 3. தமிழன், 4. கறுப்புநிறத்தவன். 5.நெவார்க் என்ற சிறிய ஊரைச் சேர்ந்தவன். இவற்றைத் தவிர வேறு எந்தக் காரணமும் எனக்குத் தெரியவில்லை. அது போகட்டும்.

அதற்குப் பின்பு நான்தான் இ-மெயிலைக் கண்டுபிடித்தேன் என்பதை அங்கீகரித்தது, உலக அளவில் புகழ்பெற்ற “சுமித்சோனியன் தேசிய அமெரிக்க வரலாற்று அருங்காட்சியகம்’.

இ-மெயிலை நான் கண்டுபிடிக்கும்போது பயன்படுத்திய நாடாக்கள், பதிவுகள், காப்புரிமை மற்றும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வரிகளில் உள்ள Code கள் எல்லாவற்றையும் அங்கே பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை என்னை Dr.Email என்றே குறிப்பிடுகிறது.

1993 இல் அப்போதைய அமெரிக்க அதிபராக பில் கிளிண்டன் இருந்தபோது, வெள்ளை மாளிகைக்கு ஒரு நாளைக்கு 5000 – 6000 இ-மெயில்கள் வந்தன. அந்த இ-மெயில்களைத் திறந்து படித்துப் பார்த்து, அவற்றுப் பொருத்தமான நடவடிக்கைகள் எடுப்பதற்குச் சொல்லவோ, இ – மெயில்களுக்குப் பதில் அனுப்பவோ இருநூறுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் தேவைப்பட்டனர். அதனால் பில் கிளிண்டன் ஒரு போட்டியை அறிவித்தார். இந்த இ – மெயில்களைக் கையாள்வதை தானியங்கிமயமாக்குபவர்களுக்குப் பரிசு என்று அறிவித்தார்.

அதாவது வெள்ளை மாளிக்கைக்கு வரும் இ – மெயில்களைப் படித்துப் பார்த்து, அந்த இ – மெயில் எதைப் பற்றியது? என்ன சொல்கிறது? குறை சொல்கிறதா? பாராட்டுகிறதா? என்ன வேண்டும் என்று அது கேட்கிறது? எதைப் பற்றிப் புகார் சொல்கிறது? இது எந்தவகையான இ – மெயில்? என்று ஒரு மனிதன் எப்படிப் படித்துப் பார்த்து முடிவெடுத்துச் செயல்படுவானோ, அதுபோல ஒரு கம்ப்யூட்டர் செயல்பட வேண்டும். அதற்கு ஏற்ற மென்பொருளை உருவாக்கித் தர வேண்டும். அதற்குப் பரிசு என்று அறிவித்தார்.

அந்தப் போட்டியில் அமெரிக்காவில் உள்ள பல பெரிய நிறுவனங்கள் கலந்து கொண்டன. அதில் கலந்து கொண்ட தனிநபர் நான் மட்டுமே.

பில் கிளிண்டன் கேட்டுக் கொண்டபடி நான் ECHO MAIL என்ற சிஸ்டத்தை உருவாக்கிக் கொடுத்தேன். எனக்குப் பரிசு கிடைத்தது. நான் உருவாக்கிய இந்த ECHO MAIL என்ற சிஸ்டம் உலகிலேயே முதன்முதல் உருவாக்கப்பட்ட இ மெயில் மேனேஜ்மென்ட் சிஸ்டமாகும். இது எனது குறிப்பிடத்தக்க இன்னொரு கண்டுபிடிப்பு.

பின்பு 1994 இல் ECHO MAIL.Inc என்ற நிறுவனத்தை ஆரம்பித்து, அந்த சிஸ்டத்தை பல அமெரிக்க நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள உதவி வருகிறேன்.

எனக்கு கம்ப்யூட்டர்துறையில் மட்டுமல்லாமல், மருத்துவத்திலும் ஆர்வம் உண்டு.

எனது சிறிய வயதில் எனது அப்பாவின் சொந்த ஊரான இராஜபாளையத்துக்குப் பக்கத்தில் உள்ள முகவூருக்குப் போயிருக்கிறேன். எனது அப்பாவின் அம்மா சின்னத்தாய், ஒரு சித்த மருத்துவர். அவர் அங்குள்ள மக்களுக்கு பலவிதமான நோய்களுக்கு மூலிகைகளிலான மருந்துகளைக் கொடுப்பதைப் பார்த்திருக்கிறேன். அது இயல்பாகவே எனக்கு நமது பாரம்பரிய மருத்துவத்தின் மீது ஆர்வத்தைத் தூண்டியது.

தமிழகத்தில் உள்ள சித்த மருத்துவம் எப்படி அறிவியல்பூர்வமாகச் செயல்படுகிறது என்ற அடிப்படையில் ஆராய்ச்சி செய்து வருகிறேன். இன்றைய உலக மருத்துவத்துக்கு நிகரான – அதைவிட மேம்பட்ட – பல மருத்துவ வழிமுறைகள் சித்த மருத்துவத்தில் உள்ளன. வெளி உலகுக்குத் தெரியாமல் ஓலைச் சுவடிகளில் மக்கி மறைந்து போனவை நிறைய.

நான் “மசாசூùஸட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி’யில் பாரம்பரிய மருத்துவம் மற்றும் சிஸ்டம்ஸ் டெக்னாலஜி, சிஸ்டம் விசுவலைசேஷன் வகுப்புகளை எடுக்கும் பேராசியராகவும் இருக்கிறேன்.

ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேனே… 2008 இல் இந்திய அரசின் அழைப்பின் பேரில் இந்தியாவுக்கு வந்து “அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சிக் கழகம்’ (CSIR) என்ற அரசு நிறுவனத்தில் வேலை செய்ய வந்தேன். மூன்று மாதங்கள் இந்தியாவில் உள்ள 1500 க்கும் மேற்பட்ட இந்திய விஞ்ஞானிகளைச் சந்தித்து ஆய்வறிக்கை ஒன்றைத் தயார் செய்தேன்.

இங்கே அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு உரிய சூழ்நிலை நிலவவில்லை என்பதை அறிந்தேன். இங்குள்ள விஞ்ஞானிகள் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் திறனுடையவர்கள் என்றாலும் அதற்குத் தடையாகப் பல விஷயங்கள் உள்ளன. சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவில் எந்த உருப்படியான கண்டுபிடிப்புகளும் இல்லாமல் இருப்பதற்கு இந்த அமைப்பின் மேலிருந்து அமுக்குபவர்களே காரணம் என்று சொன்னேன். இது இந்தியாவில் உள்ளவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதால் அமெரிக்காவுக்குத் திரும்பிவிட்டேன்” என்கிறார் சிவா அய்யாதுரை.

அவருடைய கண்டுபிடிப்பான இ – மெயிலுக்குக் காப்புரிமை பெற்று 30 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, “இன்னோவேஷன் கார்ப்ஸ்’ என்ற நிறுவத்தை ஆரம்பித்து இருக்கிறார். அதன் மூலம் இவர் வளர்ந்த நெவார்க் நகரத்தில் பயிலும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினால், அவர்களுக்கு 1 லட்சம் டாலர் பரிசளிக்கப் போவதாக அறிவித்துள்ளார். இதை அமெரிக்காவின் பிற ஊர்களுக்கு மட்டுமல்ல, சென்னை வரை இதை விரிவுபடுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு என்ன காரணம்? என்று கேட்டோம்.

“இந்த நெவார்க் நகரம் எனக்கு நிறையக் கொடுத்திருக்கிறது. அதனால் அதற்குத் திருப்பி எதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். எனக்கு அமைந்ததைப் போன்ற குடும்பம், எனக்கு அமைந்ததைப் போன்ற சூழல் எல்லாருக்கும் அமைந்தால், எல்லாரும் பல புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும். உருவாக்குவார்கள்.

இந்தியாவில் 25 வயதுக்குட்பட்டோர் பாதிக்கும் மேல் – 50 கோடிக்கும் மேல் உள்ளனர். வெளிநாடுகளின் அவுட்சோர்சிங் மூலமாகக் கிடைக்கும் வேலைவாய்ப்பெல்லாம் வருங்காலத்தில் இந்த இளம் வயதினருக்குப் போதவே போதாது. புதிய புதிய கண்டுபிடிப்புகளின் மூலமாகத்தான் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். கண்டுபிடிப்புகளை பெரிய பெரிய பல்கலைக் கழகங்களின் மூலமாக, தொழில்நுட்பக் கல்லூரிகள் மூலமாகத்தான் உருவாக்க முடியும் என்ற மாயை இந்தியாவில் உள்ளது. உண்மையில் புதியனவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வமும், கண்டுபிடிப்பவர்களுக்கு உரிய வசதிகளும் செய்து தரப்பட்டாலேயே போதும். அதற்கு ஊக்கமூட்டும்விதமாகவே இந்த பரிசளிப்புத் திட்டத்தை அறிவித்திருக்கிறேன்” என்ற அவரிடம், அவருடைய குடும்பத்தினரைப் பற்றிக் கேட்டோம்.

“அம்மா சமீபத்தில் இறந்துவிட்டார்கள். அம்மாவால்தான் நான் இந்த அளவுக்கு உயர்ந்தேன் . அம்மா இல்லாதது எனக்குப் பெரிய இழப்பு. மனவேதனை. அப்பாவுக்கு 80 வயதாகிவிட்டது. சகோதரி உமா தனபாலன் டாக்டராக இருக்கிறார்” என்றார்.

சிவா அய்யாதுரையின் சமீபத்திய கண்டுபிடிப்பு முயற்சி: கணையத்தில் வரும் புற்றுநோய்க்கு மருந்து.
மின்னஞ்சலை (Email) கண்டுபிடித்தவர் யார் ? யாராவது வெளிநாட்டுக்காரர்தான் என்று நினைத்திருப்பீர்கள். நீங்கள் நினைத்தது உண்மைதான். அவர் வெளிநாட்டில் வசிக்கும் ஒரு தமிழர். அதுவும் தனது 14வயதில் (Email) லை கண்டுபிடித்துச் சாதனை செய்தவர் ஒரு தமிழன்  சிவா அய்யாதுரை. இப்போது அவருக்கு வயது 48.

பாட்டி வைத்தியம் 6!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:40 PM | Best Blogger Tips

* சாணி வரட்டிசியை பற்ற வைத்து அது எரியும் போது மஞ்சள் தூளை தூவி வரும் புகையை நுகர்ந்தால் மூக்கடைப்பு தீரும்.

* தணல் மூட்டி அதில் ஏலக்காய் போட்டு வரும் புகையை நுகலாம்.

* ஓமத்தை துணியில் கட்டி அடிக்கடி நுகர்ந்தால் மூக்கடைப்பு குணமாகும்.

* ஓமத்தை காட்டன் துணியில் கட்டி தயணைக்கு அடியில் வைத்து தூங்கலாம்.

* துளசி, பூண்டு, மிளகு, இஞ்சியுடன் தண்ணீர் சேர்த்து, அதை நான்கில் ஒரு பங்காக காய்ச்ச வேண்டும். பின்னர் வடிகட்டி தேன் கலந்து குடித்தால் சளி தீரும்.

* உடல்சூடு காரணமாக சிலருக்கு மூக்கில் ரத்தம் வடியும். அப்போது எலுமிச்சை சாறு சில சொட்டுகளை மூக்கில் விட்டால் நிவாரணம் கிடைக்கும்.

* அதுபோல மல்லி இலைச்சாறு சிறு சொட்டுகளையும் மூக்கில் விடலாம்.

* மூக்கில் துர்நாற்றத்தை உணர்ந்தால், பரங்கிக்காயை அரைந்து சாறு எடுத்து சில சொட்டுகள் மூக்கில் விடலாம். உணரு செரிமானத்தை சரிபடுத்துவதும் முக்கியம்.

* நெல்லிக்காயை தண்ணீரில் ஊற வைத்து, வடிகட்டிய தண்ணீரை அருந்தலாம். நீரில் ஊறிய நெல்லிக்காயை அரைத்து நெற்றில் பற்று போடலாம்
பாட்டி வைத்தியம்:-

Thanks to FB Karthikeyan Mathan
 
பென்சிலின் (மருந்து)உருவான கதை..!!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:35 PM | Best Blogger Tips
அறிவியல் உலகில் தற்செயலாக பல பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் ஒன்று தான் பென்சிலின். மரத்தில் இருந்து ஆப்பிள் விழுவதைப் பார்த்ததும்தான், நியூட்டன் புவி ஈர்ப்பு விசையையே கண்டுபிடித்தார். அதேபோல் தான் அலெக்சாண்டர் பிளமிங்கும் பென்சிலினைக் கண்டறிந்தார். அந்த சுவையான சம்பவத்தைப் பற்றிப் பார்ப்போமா.
பிளமிங், 1881ல் ஸ்காட்லாந்தில் பிறந்தார். முதலாம் உலகப் போரின் போது படை வீரர்கள் பலர் காயமடைந்து தொற்றுநோய்க் கிருமிகளால் தாக்கப்பட்டு இறந்தனர். இதைக் கேள்விப்பட்டு பாக்டீரியாவைக் கொல்லும் மருந்தைக் கண்டுபிடிப்பேன்’ என்று சபதம் கொண்டார் பிளமிங்.

1928ல் லண்டனில் உள்ள செயிண்ட் மேரி மருத்துவமனையில் ஒரு விடுமுறை நாளில் கிருமிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்தார். அன்று விடுமுறை நாளாக இருந்ததால் ஆய்வுப் பொருட்களை அப்படியே வைத்துவிட்டுச் சென்றார். அதில் ஒரு தட்டு மூடாமல் இருந்தது. சுற்றுப்புறமும் அசுத்தமாக இருந்தது. அப்போது வீசிய காற்றால் மெல்லிய பூஞ்சணம் அந்த தட்டில் படித்திருந்தது.
சில நாட்கள் கழித்து அந்த தட்டை ஆராய்ந்து பார்த்தார் பிளமிங். அப்போது பூஞ்சணம் படிந்த இடத்தில் கிருமிகள் முழுவதும் அழிந்திருந்தன மற்ற பகுதியில் பெருகி இருந்தன, உடனே பிளமிங் அந்த பூஞ்சணத்தைப் பயன்படுத்தி ஒரு மருந்து தயாரித்தார். பூஞ்சணத்தின்பெயர் பென்சிலினா நோடேடம். அதனால், அந்த மருந்துக்கு பென்சிலின் என்று பெயரிட்டார்.

இது நடந்து பல ஆண்டுகளுக்குப் பின் பிளமிங் ஒரு நவீன ஆய்வு கூடத்துக்குச் சென்றார். அங்கே ஆய்வுக் கருவிகள் பளபளப்பாகவும், தூய்மையாகவும் இருந்தன. சுற்றுச் சூழல் தூசியற்றும் குளிரூட்டப்பட்டும் இருந்தது. அப்போது ஒருவர் ‘உங்களுக்கு அதிர்ஷ்டமே இல்லை. ஒரு தரமான ஆய்வகம் கூட உங்களுக்குக் கிடைக்கவில்லையே? அப்படி கிடைத்தால் நீங்கள் இன்னும் நிறைய மருந்துகளைக் கண்டுபிடித்திருப்பீர்களே’ என்று சொன்னார். அதற்கு பிளமிங் அமைதியாக, ‘நீங்கள் சொல்வது சரிதான். ஆனால், நிச்சயமாக பென்சிலினைக் கண்டுபிடித்திருக்க மாட்டேன்’ என்றார்.
 
T

பச்சரிசி மாவில் கோலம் போடுவதன் தத்துவம் என்ன?

மணக்கால் அய்யம்பேட்டை | 1:49 PM | Best Blogger Tips
மற்றவர்களுக்கு அன்னதானம் செய்தல் புண்ணியம். அதிலும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தல் பெரும் புண்ணியமாகும். வசதி படைத்த பணக்காரர்கள் அக்காலத்தில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தார்கள். ஆனால், ஏழை என்ன செய்வான்? அந்த ஏழையும் ஆயிரம் உயிர்களுக்கு அன்னதானம் செய்யும் வழிவகைகளை நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். பச்சரிசி மாவில் கோலம் போட்டால் அம் மாவை ஆயிரக்கணக்கான எறும்புகள் சாப்பிட்டபின், மீதமிருக்கும் அரிசி மாவை எடுத்துச் சென்று தங்கள் வலைகளில் சேமித்து வைக்கும். எனவே, ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு உணவளித்து மகிழ்ச்சிப்படுத்தும், இந்த முறையைப் போல் ஆன்ம நேயத்தையும், ஆன்மீகத்தையும் சிறப்பிக்கும் செயல் வேறு உண்டோ எனில் இல்லையெனக் கூறலாம்.

" உன்னிலும் என்னிலும் இருக்கும் ஈசன், ஈயெறும் புடலிலும் இருக்கிறான்" எனபது நினைவு கூறத்தக்கவை. ஆயிரம் உயர்களுக்கு உணவளித்த அந்த மகிழ்ச்சி, உணவளித்தவரின் உள்ளம், உடல் ஆகிய இரண்டையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் அல்லவா?

கோலம் போடுவதில் இன்னொரு தத்துவமும் அடங்கியிருக்கிறது. பல புள்ளிகள் வைத்து பல வடிவங்களில் வளைத்து போடப்படுகின்ற கோலம், பார்ப்பவரின் மனத்தைக் கவரும். யாராவது வீட்டில் தகராறு செய்ய வேண்டும் என்று நினைத்து வருகின்றபோது, அந்த அழகுக் கோலங்கள், வருபவரின் எண்ணத்தைச் சிதற வைக்கிறது. அதனால், வருபவர் கோபம் தணிந்துதான் வீட்டுக்குள்ளே வருவார். இப்படிப்பட்ட மனோவசிய சக்தி கோலங்களுக்கு உண்டு என அறிந்தே முன்னோர்கள் கோலம் போடுவதைப் பரவலாக செய்தார்கள்.

Thanks to FB இந்து மத வரலாறு - Religious history of Hinduism's