🔴 "இந்திய ராணுவத்திற்கு. சல்யூட்!" - பிரதமர் நரேந்திர மோடிக்கு சல்யூட்🙏

மணக்கால் அய்யம்பேட்டை | 10:41 AM | Best Blogger Tips

 May be an image of 1 person and text that says "OPERATION SINDOOR OR SIND Keep Calm & TRUST MODI"

 

"எனதருமை 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳நாட்டு மக்களே, 🙏🙏🙏வணக்கம். 🇮🇳 ✨🙏

May be an image of 1 person and text that says "BREAKING NEWS 12-05 12-05-2025 05- 2025 BEHINDWOODS "இந்திய ராணுவத்திற்கு சல்பூட் "நமது வீரப் படைகளின் வீரத்துக்கு நான் தலைவணங்குகிறேன்; நாட்டின் படைகளுக்கும், உளவுத் துறைகளுக்கும், விஞ்ஞானிகளுக்கும் எனது சல்யூட்!" -பிரதமர் நரேந்திர மோடி"

கடந்த சில நாள்களாக நாம், பொறுப்புணர்வோடு கூடிய தேசத்தின் வலிமையை தொடர்ந்து பார்த்து வருகிறோம். முதலில் நம் நாட்டின் வீரம் பொருந்திய ராணுவத்திற்கும், ஆயுத தளவாடங்களுக்கும், உளவுத் துறை, ராணுவ துறையை சார்ந்த அறிவியலாளர்களுக்கும் இந்த நாட்டின் சார்பாக salute (வணக்கத்தை ) தெரிவித்துக் கொள்கிறேன்.

May be an image of 1 person and text that says "Operaton Sindoor மாண்டு விட்டோம் என நினைத்தாயோ BHARAT ΜAATHA KI JAI"

நம் வீரர்கள் ஆபரேஷன் சிந்தூரின் குறிக்கோள்களை எட்டுவதற்கு பெரும் வீரத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். நம் நாட்டின் தாய்மார்களுக்கு, சகோதரிகளுக்கு, மகள்களுக்கு இந்த வீரர்களின் வீரத்தை சமர்ப்பிக்கிறேன்.

 

ஏப்ரல் 22 இல் இந்தியாவில் நடந்த கொடுமையான தீவிரவாத தாக்குதல் உலகையே உலுக்கியது. விடுமுறையை கழிக்க வந்த அப்பாவி பொதுமக்களை, "மதத்தின் அடிப்படையில்" அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், குழந்தைகளின் முன்னாலேயே சுட்டுக் கொல்லும் கொடூரம் நிகழ்ந்தது. இந்த "நாட்டின் நல்லிணக்கத்தை" கெடுப்பதற்கு முயற்சி நடந்தது. தனிப்பட்ட முறையில் எனக்கு இந்த சம்பவம் "மிகுந்த வலியை" கொடுத்தது.

May be an image of 1 person

இந்த சம்பவத்தினால் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும், ஒவ்வொரு பிரிவும், ஒவ்வொரு கட்சியும் ஒரே குரலில் தக்க தண்டனை அளிக்க, நீதி கேட்டு குரல் எழுப்பினார்கள். நான் தீவிரவாத குழுக்களை மண்ணோடு மண்ணாக ஆக்க நம் படைக்கு முழு சுதந்திரம் அளித்தேன்

May be an image of 1 person and map

நம் பெண்களின் நெற்றி வகிட்டிலிருக்கும் 🔴 சிந்தூரத்தை அழித்தால் என்னவாகும் என்பதை ஒவ்வொரு பயங்கரவாத குழுவும் இன்று புரிந்து கொண்டிருப்பார்கள்.

🔴 ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் பெயரல்ல. இது கோடிக்கணக்கான இந்திய மக்களின் "உணர்வோடு" தொடர்புடையது.

இது "நீதியின்" வெளிப்பாடு

May be an image of 1 person

மே 6 ஆம் தேதி இரவு முதல் மே 7 காலை வரை உலகம் இதன் விளைவை கண்கூடாக பார்த்தது. நம் ராணுவம், தீவிரவாத குழுக்களை, பயிற்சி முகாம்களை அடையாளம் கண்டு முழு பலத்துடன் தாக்கியது . இந்தியா இப்படிப்பட்ட முடிவை எடுக்கும் என பாகிஸ்தான் கனவிலும் நினைத்திருக்காது. எப்போது நாட்டு மக்கள் ஒன்றிணைந்து nation first என்ற கண்ணோட்டத்திற்கு வருகிறார்களோ, அப்போது வலிமையான முடிவுகள் எடுக்கப்படுகிறது.

May be an image of 1 person, temple and text that says "DINAMALAR National Daily மகள்களுக்கு சமர்ப்பணம்! இந்திய பெண்களின் குங்குமத்தை அழித்ததன் விலை என்ன என்பதை தீவிரவாதிகளுக்கு காட்டி உள்ளோம் இந்தியா தன்னுடைய எதிர்ப்பையும், பலத்தையும் முழுமையாக காட்டியுள்ளது 'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றியை, நாட்டின் மகள்களுக்கு சமர்ப்பிக்கிறேன் -பிரதமர் மோடி உரை Downlood Dinamolor DewaloodDinemelorAPPS APPS ApoStore GooglePlay BY Follow 千ロス白9Pe ® MAY/ MAY/12/25"

இந்தியாவின் ஏவுகணைகளும், ட்ரோன் களும் தீவிரவாதிகளின் கட்டுமானத்தை மட்டும் சிதைக்கவில்லை, அவர்களின் மனவுறுதியையும் உடைத்தன. உலகின் எல்லா தீவிரவாத செயல்களிலும் அது 9/11 ஆகட்டும், London tubing , இந்தியாவில் இதற்கு முன் நடந்த வெறிச் செயல்களாகட்டும் அவையனைத்தும் ஏதோ ஒரு விதத்தில் பாஹவல்பூர், முர்தி போன்ற தீவிரவாத தலைமையிடங்களோடு தொடர்புடையன

May be an image of 1 person and text that says "May 12, 2025 INDIA asianet enews e தமிழ் மகள்களின், தாய்மார்களின் குங்குமத்தை அழித்தால் என்ன நடக்கும் என்பதை உலகம் அறிந்தது பிரதமர் மோடி"

தீவிரவாதிகள் நம் சகோதரிகளின் சிந்தூரத்தை அழித்தார்கள். அதற்காகவே நாம் அவர்களின் தலைமையிடத்தை அழித்தோம்.

பாரதத்தின் இந்த தாக்குதலில், 100 க்கும் அதிகமான கொடும் தீவிரவாதிகள் வதம் செய்யப்பட்டனர். எத்தனையோ வருடங்களாக இவர்கள் சுதந்திரமாக பாக். கில் சுற்றி திரிந்தனர். இந்தியா இவர்களை ஒரேடியாக தீர்த்து கட்டியிருக்கிறது

May be an image of 1 person and text that says "Polimer NEWS இந்தியாவின் பதிலடி மிக உக்கிரமாக இருக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக தாக்குதல்கள் தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளன, முடிவுக்கு வந்து விடவில்லை; அணு ஆயுத மிரட்டல்களை கண்டு பாரதம் ஒரு போதும் அஞ்சாது; பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் பாகிஸ்தான் அரசின் நடவடிக்கை உலகத்திற்கே ஆபத்தானது; இனி இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த முயன்றால் இந்தியாவின் பதிலடி மிக உக்கிரமாக இருக்கும் பிரதமர் மோடி foox X /Polimernews 12-05-2025"

இதனால் பாக் கடும் அயற்சியில் சிக்கியிருக்கிறது. ஆனாலும், தீவிரவாதத்திற்கு எதிரான இந்த நடவடிக்கைகளில் இந்தியாவிற்கு துணை நிற்காமல், தீவிரவாதத்தின் பக்கம் நின்றது. நம் மீதே தாக்குதல் நடந்த ஆரம்பித்தது. பாகிஸ்தான், நம் மக்களின் பள்ளிகள், கல்லூரிகள், கோவில்கள், குருத்வாரக்கள், வீடுகளை தாக்க முற்பட்டது. நம் ராணுவ தளவாடங்களை குறி வைத்தது. ஆனால் தோல்வி அடைந்தது.

May be an image of 1 person and text that says "தமிம் Janarn YORO 218 காங். எம்.பி பி ஆதரவு போர் தொடர்வதற்கு காரணம் இருந்தால் மட்டுமே போரை நடத்த வேண்டும் இந்த முறை பாக். பயங்கரவா பயங்கரவாதிகளுக்கு திகளுக்கு தகுந்த பாடம் புகட்டுவது மட்டுமே இந்தியாவின் நோக்கம், அது நிறைவேறிவிட்டது எனவே 1971-ல் இந்தியா- பாகிஸ்தான் யுத்தத்துடன் தற்போதைய மோதலை இணைத்து பேசத்தேவையில்லை -சசி தரூர், காங்கிரஸ் எம்.பி"

நமது air defense system எதிரிகளின் மிஸைல்களை, ட்ரோன் களை ஆகாயத்திலேயே உடைத்து தள்ளியது. நம் missiles & drones மிக தீவிரமாக செயல்பட்டு, பாக் கின் airbase களை உடைத்தெறிந்தது. அவர்கள் அதை உணரும் முன்னரே, தளவாடங்களை நொறுக்கினோம்.

இத்தனை அடிவாங்கிய பின், பாக் தப்பிக்க வழி தேடியது. உலக நாடுகளின் கால்களின் விழுந்து காப்பாற்ற கதறியது. மே 10 அன்று , நமது DGMO யை தொடர்பு கொண்டு தாக்குதலை நிறுத்த கோரியது. அதற்குள் நாம் முழுமையாக அவர்களின் முக்கிய தளவாடங்களை அழித்திருந்தோம்.

இனி தீவிரவாத செயல்களோ, ராணுவ ஊடுருவல்களோ நடக்காது என பாக் உறுதியளித்திருக்கிறது. அதனால் சில நாட்களுக்கு நம் செயல்பாடுகளை நிறுத்தி வைத்துள்ளோம்.

✨🙏✨🇮🇳திரும்ப சொல்கிறேன் , நிறுத்தி தான் வைத்துள்ளோம்🇮🇳. வரும் காலங்களில் திரும்பவும் பாக் தீவிரவாத செயல்களை இந்தியாவில் நிகழ்த்த தலைப்பட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரும்.

May be an image of 1 person and text that says "BREAKING NEWS புதிய புதிய தலைமுறை OPERATION SIND OR முகத்திலேயே குத்துவோம்- பிரதமர் மோடி ஆபரேஷன் சிந்தூர் ஒரு புதிய தொடக்கம்; இது தற்காலிக நிறுத்தம்தான்; நம்முடைய அனைத்து படைகளும் அவர்களைக் கண்காணிக்கின்றன இனிமேல் அவர்கள் அத்துமீறினால் முகத்திலேயே குத்துவோம்- பிரதமர் மோடி 12/05/2025- 12/05/2025-08:30PM 08:30 PM www.puthiyathalaimural.cor"

நம் காலாட்படை, கடற்படை, வான் படை, எல்லை பாதுகாப்பு படை, துணை ராணுவப் படை ஆகியவை அனைத்தையும் விழிப்போடு பார்த்து வருகின்றன. Air strike Surgical strike க்கு பிறகு operation sindoor தான் இந்தியா கையில் எடுத்திருக்கும் புது ஆயுதம். புதிய விதியை எழுதியிருக்கிறோம். இனி இவ்வித்திலேயே பாக் deal செய்யப்படும்.

இனி தீவிரவாதத்தின் முகத்திரையை கிழித்து பதிலடி கொடுப்போம். நமக்கான நீதி வழங்கல் முறைப்படி , நம் terms படி தான் அவர்களை தண்டிப்போம். இனிமேலும் அணு ஆயுத பூச்சாண்டியை காட்டி இந்தியாவை பயமுறுத்த முடியாது.

தீவிரவாதத்தையும், அதற்கு ஆதரவளிக்கும் நாட்டையும் இனி நாம் தனித்தனியே பார்க்கப் போவதில்லை. தீவிரவாதிகளின் இறுதி ஊர்வலத்திற்கு, பெரிய பெரிய ராணுவ அதிகாரிகள் வந்திருந்ததை உலகமே பார்த்தது. State sponsored terrorism என்பது இது தான்.

மலைப்பகுதிகளில் நம் பராக்கிரமத்தை வெளிக்காட்டியதோடு, new age warfare இல் நம் சாமர்த்தியத்தையும் காட்டினோம். இந்த சண்டையின் மூலம் made in India ஆயுதத் தளவாடங்களின் வலிமையை உலகமே பார்த்தது.

ஒற்றுமையே வலிமை. அதுவே மிகப் பெரிய சக்தி. இந்த யுகம் போருக்கானது இல்லை தான். அதே நேரத்தில் தீவிரவாதத்திற்குமானதும் இல்லை.

தீவிரவாதத்திற்கு எதிராக zero tolerance என்பதே நம் கொள்கை. எவ்விதம் பாகிஸ்தான் தீவிரவாத்தை நீறுற்றி வளர்க்கிறதோ, அதே தீவிரவாதத்தால் அந்நாடு முடித்து வைக்கப்படும். இதிலிருந்து தப்பிக்க நினைத்தால், பாக் அதன் தீவிரவாத பாசத்தை விட்டே ஆக வேண்டும்.

Terror & talk ஒரு சேர செய்ய முடியாது. அதே போல், தண்ணீரும், ரத்தமும் ஒன்றாக பாயாது என்பதே நம் தெளிவான முடிவு.

Terror & trade ஒன்றாக செய்ய முடியாது.

உலக மக்களுக்கு தெளிவாக ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். இனி பாக் கோடு எந்த பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை. தீவிரவாதத்தையும், பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதையும் தவிர பாக் கோடு பேச இனி எதுவுமில்லை.

இன்று புத்த பூர்ணிமா. பகவான் புத்தர் "அமைதியை" போதிக்கிறார். ஆனால் "வலிமையால்" மட்டுமே அமைதியை நிலை நாட்டப்படும்.

நிம்மதியாக வாழவும், "அகண்ட பாரதம்" என்ற கனவை எட்டுவதற்கும் நாம் வலிமையாக இருப்பது அவசியம். அவசியம் ஏற்பட்டால் நம் சக்தியை 🌎உலகிற்கு காட்டவும் தயங்க மாட்டோம்.

மீண்டுமொரு முறை நாட்டு மக்களை ஒன்றிணைத்தற்கு நம் நாட்டின் ராணுவத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

பாரத் மாதா கி ஜெய்

பாரத் மாதா கி ஜெய்

பாரத் மாதா கி ஜெய்"

என்று யாருக்கு எதை சொல்ல வேண்டுமோ அதை சரியாக சொல்லியிருக்கிறார் நம் பிரதமர்.

 


🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷