🌊#நீலலோசனி ❤️#மீனலோசனி

மணக்கால் அய்யம்பேட்டை | 1:31 PM | Best Blogger Tips

 


கருந்தடங்கண்ணி அங்கயற்கண்ணி

நாகை மற்றும் #மதுரை ஸ்தலங்களுக்கு இடையேயான சில ஒப்பீடுகள் ..

சிவபெருமானின் நாகம் வலம் செய்து உண்டான நகரம் மதுரை என்பதால் #திருஆலவாய் (ஆலம் என்றால் நாகம்) என்ற பெயர் உண்டு. நாகர்கள் வசித்து சிவபூஜை செய்த நகரம் #நாகப்பட்டினம் என அழைக்கப்படுகிறது.


மதுரையில் சொக்கநாதப் பெருமான் 64 #திருவிளையாடல்கள் நிகழ்த்தியது போல், நாகை உள்ளிட்ட #சப்தவிடங்கர் தலங்களில் தியாகராஜப் பெருமான் 360 திருவிளையாடல்களை நிகழ்த்தி உள்ளார்.


மதுரையில் #சுந்தரேஸ்வரர் ஆகவும் நாகையில் #சுந்தர_விடங்கர் ஆகவும் சுவாமி அருளாட்சி புரிகிறார்.

பதஞ்சலி, #வியாக்ரபாதர் முனிவர்களுக்கு #நடராஜர் திருநடனம் காட்டி அருளிய பல தலங்களில் இவூர்களும் அடக்கம்.

கைலாயத்தில் நடைபெற்ற சிவன் பார்வதி திருமணக் காட்சியை அகத்தியருக்கு நாகையிலும் இறைவன் காட்டியருளினார். மதுரையில் சிவபெருமான் சுந்தரேஸ்வரர் ஆக எழுந்தருளி மீனாட்சி அம்மனை #திருமணம் செய்து அருள்புரிகிறார்.

அம்பிகையின் 64 #சக்தி பீடங்களில் மிக முக்கியமான ஐந்து ஆட்சி பீடங்களில் இவ்விரு ஊர்களும் அடக்கம்,

இவ்விரு ஊர்களில் சிவஸ்தலம் முதன்மையாக உள்ளபோதிலும் அம்பிகையின் பெயராலேயே, நாகை நீலாயதாட்சி #அம்மன்_கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் என அழைக்கபடுகிறது.

நாகையில் #நீலாயதாட்சி அம்மன் நித்ய கன்னியாக வீற்றிருந்து, நீலநிற கடல் போன்ற பரந்த பார்வையால் தன் பக்தர்களுக்கு அருள் புரிகிறாள், மதுரையில் #மீனாட்சி அம்மன் நித்ய சுமங்கலியாக வீற்றிருந்து மீன் போன்ற விழிகளால் பக்தர்களை குழந்தையாக காத்து அருள்கிறாள்.

இவ்விரு தலங்களிலும் அன்னை ஸ்ரீ ராஜ #சியாமளா தேவியாகவே போற்றப்படுகின்றனர். மதுரையில் மீனாட்சி அம்மன் மரகத பச்சை நிறத்திலும் , நாகையில் நீலம் கலந்த பச்சை நிறத்திலும் ராஜ மாதங்கியாக காட்சி தருகின்றனர்.

இரு தலங்களிலும் #ஆடி மாதம் அம்பாள் சன்னதியில் கொடியேற்றத்துடன் பத்து நாட்கள் உற்சவம் வெகுவிமர்சையாக நடைபெறும்.

நாகையில் நீலாயதாட்சி அம்மனுக்கு ஆடிப்பூரம் முன்னிட்டு அம்பிகை பூப்பெய்தல் #பூரம்_கழித்தல் விழாவாகவும். மதுரையில் மீனாட்சி அம்மனுக்கு ஆடி #முளைக்கொட்டு உற்சவத்தில் பூரம் அன்று ருதுமங்கள ஸ்னானம், ஏற்றி இறக்கும் வைபவம் நடைபெறும்.

சூரசம்காரம் உடன் தொடர்புடையதாக #முருகப்பெருமான் நாகை சிக்கலில் #வேல் வாங்கி சம்காரம் செய்து, மதுரை திருப்பரங்குன்றத்தில் தெய்வானையை #மணம் முடிக்கிறார்.


திருமால் #அழகர் ஆக சுந்தரராஜ பெருமாள் என்ற திருநாமத்துடன் மதுரையிலும், #அழகியார் ஆக சௌந்தரராஜ பெருமாள் என்ற திருநாமத்துடன் நாகையில் அருள்புரிகிறார்.


 


ன்றி இணையம்


இராமகிருஷ்ணரின் உபதேசம்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:21 PM | Best Blogger Tips

 



இன்றைய சிந்தனைகள்-225



இராமகிருஷ்ணரின் உபதேசம்


 கடவுள் எல்லா உயிரிலும் நிறைந்திருக்கிறார், எறும்புவரை உள்ள உயிரினங்களில் இருக்கிறார்.ஆனால் சக்தி வெளிப்பாட்டில் வேறுபாடு உள்ளது.யாரை பலர் மதிக்கிறார்களோ போற்றுகிறார்களோ அவர்களிடம் கடவுளின் சக்தி அதிகம் வெளிப்பட்டுள்ளது


சுவாமி விவேகானந்தரின்வீர மொழிகள்


பசியால் வாடிக்கொண்டிருக்கும் ஒரு கிறிஸ்தவன் தனக்கு முன் மாட்டிறைச்சியைக் கண்டால்; ஒன்று அவன் சாப்பிடவேண்டும்,அல்லது இன்னொருவனுக்கு கொடுக்கவேண்டும்.இரண்டையும் செய்யவில்லை என்றால் கடமையிலிருந்து தான் தவறியாதகவே எண்ணுவான். ஆனால் ஓர் இந்து அதைச் சாப்பிடத் துணிந்தாலோ, மற்றொருவனுக்கு கொடுத்தாலோ,  அவனும் தன் கடமையிலிருந்து வழுவிவிட்டதாகவே நினைப்பான். 



ஆசாரக்கோவை


முற்பொழுது விளக்கு ஏற்றி இரவில் உண்டு உறங்குதல் நன்று.


உறங்கும் முறை

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)


கிடக்குங்கால், கை கூப்பித் தெய்வம் தொழுது,

வடக்கொடு கோணம் தலை வையார்; மீக்கோள்

உடல் கொடுத்து, சேர்தல் வழி.




சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம்


அடிப்படை வசதி இல்லாத கிராமத்தில் வசிப்பது, தனக்கு கீழானவனுக்கு சேவை செய்வது, பசியை போக்கா உணவு, முட்டாள் மகன், விதவையான மகள் ஒரு மனிதனை உடலை தீ

இல்லாமல் எரிக்கும் விஷயங்கள் ஆகும்.


நாலடியார்



ஆவாம்நாம் ஆக்கம் நசைஇ அறம்மறந்து

போவாம்நாம் என்னாப் புன்நெஞ்சே - ஓவாது

நின்றுஞற்றி வாழ்தி எனினும்நின் வாழ்நாட்கள்

சென்றன செய்வது உரை




திரிகடுகம்



முந்நீர்த் திரையின் எழுந்து இயங்கா மேதையும்,

நுண் நூல் பெருங் கேள்வி நூல் கரை கண்டானும்,

மைந் நீர்மை மேல் இன்றி மயல் அறுப்பான், - இம் மூவர்

மெய்ந் நீர்மைமேல் நிற்பவர்


திருக்குறள்


ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்


பகவத்கீதை


பார்த்தா, எந்த உறுதியினால், அறம்,இன்பம்,பொருள் ஆகியவைகளை காக்கிறானோ, பெரும் பற்றுதலால் பயனை விரும்புபவனாகிறானோ. அந்த உறுதியானது ராஜஸமானது



கவிஞர் கண்ணதாசனின் தத்துவங்கள்


பற்றற்று வாழ்வதென்றால், எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடிப்போய் சந்நியாசி ஆவதல்ல!


“இருபது போதும்; வருவது வரட்டும்: போவது போகட்டும்: மிஞ்சுவது மிஞ்சட்டும்” என்று சலனங்களுக்கு ஆட்படாமலிருப்பதே பற்றற்ற வாழ்க்கையாகும்.


ஆசை, தீமைக்கு அடிப்படையாக இல்லாதவரை, அந்த ஆசை வாழ்வில் இருக்கலாம் என்கிறது இந்து மதம்.



நமது தினசரி பதிவுகளை கூகுள் டிரைவில் பார்க்கலாம்


https://drive.google.com/drive/u/0/folders/1GNwm1Q3b7mkkNPWGQkG-x5WPhl-I-2VM



Thanks to

சுவாமி வித்யானந்தா தமிழ்