இன்றைய சிந்தனைகள்-225
இராமகிருஷ்ணரின் உபதேசம்
கடவுள் எல்லா உயிரிலும் நிறைந்திருக்கிறார், எறும்புவரை உள்ள உயிரினங்களில் இருக்கிறார்.ஆனால் சக்தி வெளிப்பாட்டில் வேறுபாடு உள்ளது.யாரை பலர் மதிக்கிறார்களோ போற்றுகிறார்களோ அவர்களிடம் கடவுளின் சக்தி அதிகம் வெளிப்பட்டுள்ளது
சுவாமி விவேகானந்தரின்வீர மொழிகள்
பசியால் வாடிக்கொண்டிருக்கும் ஒரு கிறிஸ்தவன் தனக்கு முன் மாட்டிறைச்சியைக் கண்டால்; ஒன்று அவன் சாப்பிடவேண்டும்,அல்லது இன்னொருவனுக்கு கொடுக்கவேண்டும்.இரண்டையும் செய்யவில்லை என்றால் கடமையிலிருந்து தான் தவறியாதகவே எண்ணுவான். ஆனால் ஓர் இந்து அதைச் சாப்பிடத் துணிந்தாலோ, மற்றொருவனுக்கு கொடுத்தாலோ, அவனும் தன் கடமையிலிருந்து வழுவிவிட்டதாகவே நினைப்பான்.
ஆசாரக்கோவை
முற்பொழுது விளக்கு ஏற்றி இரவில் உண்டு உறங்குதல் நன்று.
உறங்கும் முறை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கிடக்குங்கால், கை கூப்பித் தெய்வம் தொழுது,
வடக்கொடு கோணம் தலை வையார்; மீக்கோள்
உடல் கொடுத்து, சேர்தல் வழி.
சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம்
அடிப்படை வசதி இல்லாத கிராமத்தில் வசிப்பது, தனக்கு கீழானவனுக்கு சேவை செய்வது, பசியை போக்கா உணவு, முட்டாள் மகன், விதவையான மகள் ஒரு மனிதனை உடலை தீ
இல்லாமல் எரிக்கும் விஷயங்கள் ஆகும்.
நாலடியார்
ஆவாம்நாம் ஆக்கம் நசைஇ அறம்மறந்து
போவாம்நாம் என்னாப் புன்நெஞ்சே - ஓவாது
நின்றுஞற்றி வாழ்தி எனினும்நின் வாழ்நாட்கள்
சென்றன செய்வது உரை
திரிகடுகம்
முந்நீர்த் திரையின் எழுந்து இயங்கா மேதையும்,
நுண் நூல் பெருங் கேள்வி நூல் கரை கண்டானும்,
மைந் நீர்மை மேல் இன்றி மயல் அறுப்பான், - இம் மூவர்
மெய்ந் நீர்மைமேல் நிற்பவர்
திருக்குறள்
ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்
பகவத்கீதை
பார்த்தா, எந்த உறுதியினால், அறம்,இன்பம்,பொருள் ஆகியவைகளை காக்கிறானோ, பெரும் பற்றுதலால் பயனை விரும்புபவனாகிறானோ. அந்த உறுதியானது ராஜஸமானது
கவிஞர் கண்ணதாசனின் தத்துவங்கள்
பற்றற்று வாழ்வதென்றால், எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடிப்போய் சந்நியாசி ஆவதல்ல!
“இருபது போதும்; வருவது வரட்டும்: போவது போகட்டும்: மிஞ்சுவது மிஞ்சட்டும்” என்று சலனங்களுக்கு ஆட்படாமலிருப்பதே பற்றற்ற வாழ்க்கையாகும்.
ஆசை, தீமைக்கு அடிப்படையாக இல்லாதவரை, அந்த ஆசை வாழ்வில் இருக்கலாம் என்கிறது இந்து மதம்.
நமது தினசரி பதிவுகளை கூகுள் டிரைவில் பார்க்கலாம்
https://drive.google.com/drive/u/0/folders/1GNwm1Q3b7mkkNPWGQkG-x5WPhl-I-2VM
Thanks to
சுவாமி வித்யானந்தா தமிழ்