*மரணம் வரை மனைவி*

மணக்கால் அய்யம்பேட்டை | 2:34 PM | Best Blogger Tips
Image result for மரணம் வரை மனைவி

ஓர் நாள் இரவு நேரத்தில் 
ஒரு ஏழை விவசாயி
தன் வேலைகளை எல்லாம் 
முடித்து விட்டு 
உறங்கிக் கொண்டிருந்தான்..
அப்போது அவன் கனவில் 
கையில் கரும்பலகையுடன்
கடவுள் வந்தார்..
●"இந்த கரும்பலகையில், 
உனக்கு தெரிந்த முப்பது
உறவுமுறைகளின் 
பெயர்களை எழுது" என்றார்..
அந்த விவசாயும், 
"
அப்பா, அம்மா , 
தாத்தா , பாட்டி ,
மனைவி , மகன் , மகள் , 
அக்கா , தங்கை , அண்ணன் , தம்பி , 
சித்தப்பா , சித்தி , மாமா , அத்தை , 
காதலி , நண்பன்" என 
முப்பது பேர் பெயரை எழுதினான்..
அப்பொழுது கடவுள், 
"
கண்டிப்பாக இதில் நீ
இரண்டு பேர் பெயரை 
அழிக்க வேண்டும்., 
நீ யாரை இழக்க முடியும் 
என்று நினைக்கிறாயோ, 
அந்தப் பெயரை அழி" என்றார்..
சற்று யோசித்த விவசாயி, 
காதலி , நண்பன் என 
இரண்டு பேர் பெயரை அழித்தான்..
கடவுள் மறுபடியும், 
"
இன்னும் இரண்டு பேர் 
பெயரை அழி" என்றார்..
விவசாயும்
கொஞ்ச நேரத்தில், 
"
மாமா , அத்தை" என
இரண்டு பேர் பெயரை அழித்தான்..
விவசாயி இப்படியே, 
இரண்டு இரண்டு பேர்
பெயராக அழித்தான்..
கடைசியாக 
அப்பா , அம்மா , 
மனைவி , மகன் , மகள் என 
இவர்கள் பெயர் மட்டுமே இருந்தது..
கடவுள், 
"
இதிலிருந்தும் இரண்டு பேர் பெயரை 
நீக்க வேண்டும்., 
நீ யார் பெயரை நீக்குவாய்?" என்றார்..
விவசாயி வருத்தத்துடன் 
சிறிது நேரம் கழித்து, 
அப்பா , அம்மா 
பெயரை அழித்தான்..
கடவுள் மீண்டும், 
"
இன்னும் இரண்டு பேர் பெயரை 
அழிக்க வேண்டும்" என்றார்..
கடவுளுக்கு சற்று 
எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டது.. 
"
அடுத்ததாக இவன் யார் பெயரை 
அழிக்கப்போகிறான்?" என்று..
அப்போது விவசாயி, 
மிகுந்த சோகத்துடனும் 
மன வேதனையுடனும்
மகன் , மகள் பெயரை அழித்தான்..
கடைசியாக கரும்பலகையில், 
"
மனைவி" பெயர் மட்டும் இருந்தது..
கடவுள் ஆச்சரியமுடனும்
ஆவலுடனும் கேட்டார்..
●"மகன், மகள் பெயரை அழித்து விட்டு 
எதற்காக மனைவி பெயரை 
அழிக்கவில்லை?" என்று..
அதற்கு விவசாயி, 
"
மகள் எப்படியும் 
இன்னொரு வீட்டுக்கு 
வாழப் போய் விடுவாள்..
மகன், 
அவனும் அவனுடைய 
மனைவி குழந்தை என வாழ்வான்..
கடைசி காலம் வரை 
என்னோடு வாழக் கூடியவள் 
#என்_மனைவி 
மட்டும் தான்" என்றான்..
விவசாயின் பதிலைக் கேட்டு 
வியந்து போன கடவுள், 
அவன் வேண்டிய வரத்தையெல்லாம்
கொடுத்துவிட்டு சென்றாராம்..

[
நம்முடைய 
வாழ்க்கைத் துணையாக
நாம் இறக்கும் வரை 
நம்முடன் வரக்கூடிய
நம்மோடு வாழக்கூடிய🏻
ஒரே உறவு, 
மனைவி மட்டும் தான்..
*மனைவியை மதிப்போம்.,*
*
மகிழ்வுடன் வாழ்வோம்.... ]*
Image result for மரணம் வரை மனைவிImage result for மரணம் வரை மனைவி

 நன்றி இணையம்

*படித்ததில் பிடித்தது*

மணக்கால் அய்யம்பேட்டை | 2:26 PM | Best Blogger Tips
Image result for *படித்ததில் பிடித்ததுImage result for *படித்ததில் பிடித்தது

1]
எல்லா உறவுகளும் கண்ணாடி மாதிரிதான். நாம் எப்படிப் பழகுகின்றோமோ அப்படித்தான் அதன் பிம்பங்களும்...
2]https://www.facebook.com/images/emoji.php/v8/f6d/1/16/2600.png*தடுமாறும் பொழுது தாங்கிப் பிடிப்பவனும், தடம் மாறும் பொழுது தட்டிக் கேட்பவனுமே உண்மையான நண்பன்*.
[
இது எனக்கு பிடித்த முதல் வரிகள்-உங்களுக்கு...?]
3] உங்களைப் புரிந்து கொண்டவர்கள் கோபப்படுவதில்லை. உங்களைப் புரியாதவர்களின் கோபத்தை நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை...
4] https://www.facebook.com/images/emoji.php/v8/f6d/1/16/2600.pngகுழந்தைகளிடம் அருகில் அமர்ந்து பொறுமையாக பழகிப் பாருங்கள். நாம் முன்னர் எப்படி நடந்து கொண்டோம் என்பது நன்றாக புரியும்.
5] வயதானவர்களிடம் பழகிப் பாருங்கள். நாம் எப்படி இருக்கப் போகிறோம் என்பது முழுமையாகப் புரியும்.
6] ஒருவர் உங்களைத் தாழ்த்திப் பேசும் போது *ஊமையாய்* இருங்கள்....! புகழ்ந்து பேசும் போது *செவிடனாய் இருங்கள்...!எளிதில் வெற்றி பெறுவீர்கள்.
7] https://www.facebook.com/images/emoji.php/v8/f6d/1/16/2600.pngசங்கடங்கள் வரும் போது *தடுமாற்றம்* அடையாதீர்கள்...! சந்தர்ப்பங்கள் வரும் போது *தடம்* மாறாதீர்கள்.
8] வளமுடன் [பணமுடன்] வாழும் போது நண்பர்கள் உங்களை அறிவார்கள். பிரச்சினைகள் வரும் பொழுதுதான் நண்பர்களைப் பற்றி *நீங்கள்* நன்றாக அறிவாய். யார் உண்மையான நண்பர்கள் என்று...? 
[
இது எனக்கு பிடித்த இரண்டாவது வரிகள்-உங்களுக்கு...?]
9] https://www.facebook.com/images/emoji.php/v8/f6d/1/16/2600.pngஒரு முறை தோற்றுவிட்டால், அதற்கு நீங்கள் வேறு ஒரு-நபரை காரணம் சொல்லலாம். ஆனால், தோற்றுக் கொண்டே இருந்தால், அதற்கு *நீங்கள்* மட்டுமே காரணம்.
10] நீ சிரித்துப் பார்! உன் முகம் உனக்குப் பிடிக்கும். மற்றவர்களை சிரிக்க வைத்துப் பார்; உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்.
11] https://www.facebook.com/images/emoji.php/v8/f6d/1/16/2600.pngஅவசியம் இல்லாததை வாங்கினால், விரைவில் அவசியமானதை விற்க நேரிடும்.
12]வாழ்க்கையில் தோற்றவர்கள் இரண்டு பேர்... ஒருவர் யார் பேச்சையும் கேட்காதவர். மற்றொருவர், எல்லோருடைய பேச்சையும் கேட்பவர்.
13] https://www.facebook.com/images/emoji.php/v8/f6d/1/16/2600.pngஎண்ணங்களை அழகாக மாற்ற முயற்சி செய்தாலே போதும். வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக மாறிவிடும்.
14]நீங்கள் ஒருவனை ஏமாற்றி விட்டால், அவனை *முட்டாள்* என்று நினைக்காதீர்கள். நீங்கள் ஏமாற்றியது அவன் உங்கள் மேல் வைத்திருந்த முழு 
 *
நம்பிக்கையையே* ஆகும்.
15] https://www.facebook.com/images/emoji.php/v8/f6d/1/16/2600.pngஅமைதியாய் இருப்பவனுக்குக் கோபப்படத் தெரியாது என்பதல்ல அர்த்தம். கோபத்தை அடக்கி ஆளும் *திறமை* படைத்தவன் என்பதே அர்த்தம்.
16]மரியாதை வயதைப் பொறுத்து வருவதில்லை. 
அவர்கள் செய்யும் செயலைப் பொறுத்தே வருகின்றன....!

 நன்றி இணையம்

விவசாயிகளே போரட்டம் குறித்து....?

மணக்கால் அய்யம்பேட்டை | 2:18 PM | Best Blogger Tips
Image result for தமிழக விவசாயிகள் போரட்டம்
விவசாயிகளே உங்களுக்கு தேவை படுகின்ற 39000 கோடியை மாநில அரசிடம் கேட்டு போராடுவதுதானே முறை அதை விடுத்து டெல்லி வெய்யிலில் ஏன் காய்கிறீர்கள்?
******************
மத்திய அரசுக்கு வரும் வரி வருமானங்கள்
மத்திய கலால் வரி
சுங்க வரி
சேவை வரி
வருமான வரி
மாநில அரசுகளுக்கு வரும் வரி வருமானங்கள் :
மாநில கலால் வரி (மது பானங்களுக்கு மாநில கலால் வரி மட்டுமே உண்டு மத்திய கலால் வரி கிடையாது)
வணிக வரி
முத்திரைதாள் கட்டணம்
கேளிக்கை வரி
நுழைவு வரி
ஹிந்து கோயில்களில் உள்ள உண்டியல் வருமானம்
விவசாய விளைபொருட்களுக்கு செஸ் வரி
மேலும் மத்திய அரசு வசூலிக்கின்ற வரியில் 52 % மாநில அரசுக்கே மத்திய அரசு கொடுத்து விடுகிறது
மீதி இருக்கின்ற 48% வருவாயில் மத்திய அரசு கொடுக்கும் மானியங்கள்
1.அரிசி கிலோ ஒன்றுக்கு 27 ரூபாய்
2.100 நாள் வேலை திட்டத்திற்கு 100 ரூபாய் நபர் ஒருவருக்கு .
3.மண்ணெண்ணெய்க்கு முழு மானியம்
சமையல் கேஸ் முழு மானியமும் மத்திய அரசுதான் கொடுக்கிறது.
4.மேலும் கழிவறை கட்ட,வீடிலாதவர்க்கு வீடு கட்ட மானியம்
5.சத்துணவிற்கு மானியம் போன்ற பல மானியங்களை மக்களுக்கு கொடுகிறது மத்திய அரசு
6. இந்த ஆண்டு கிராம வளர்ச்சிக்கு(பல்வேறு திட்டங்கள் மூலம்) ஒதிக்கப்பட்ட தொகை 48 ஆயிரம் கோடி.
ஆகவே மத்திய அரசு கொடுப்பதில் குறை வைக்கவில்லை .ஆனால் இதைலாம் மாநில அரசு முறையாக தன் மாநில மக்களுக்கு தருகிறதா?????? நம் பணம் அனைத்தும் மாநில அரசிடம் தான் உள்ளது.
##நன்றி துக்ளக் ஃபேன் க்ளப்