மோடியுடன் மோதப்போவது யாரு?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:31 | Best Blogger Tips
Image result for மோடி

விரிவான ஒரு அரசியல் பார்வை,
Image result for மோடி
2019 ம் ஆண்டில் நடைபெற உள்ள பாராளு மன்ற தேர்தல் பற்றிய சமீபத்தில் கருத்துக் கணிப்புகள் மோடியே மீண்டும் பிரதமர்ஆவார. என்றும் பிஜேபி சுமார் 300 தொகுதிகளை கைப்
பற்றும் என்றும் தெரிவிக்கின்றன.
இப்பொழுது தான் பாராளுமன்ற தேர்தல் நடந்த
மாதிரி இருந்தது. அதற்குள் மூன்று வருடம் முடிந்து விட்டது.அடுத்த தேர்தலுக்கு இடையில்
ஒரு வருடம் தான் இருக்கிறது. மோடி யின்
மூன்று வருட ஆட்சியில் நாடு நிறைய மாற்றங்
களை சந்தித்துள்ளது.
Image result for மோடி
டீமானிட்டிசேசன் ஜிஎஸ்டி என்று சாமானிய மக்களும் உணரும் வகையில் மத்திய அரசு
திட்டங்கள் உள்ளது. காங்கிரஸ் ஆட்சி மாதிரி
ஏழைகளை குளிர்விக்கும் இலவச திட்டங்கள்
எதுவும் மோடி அரசில் இல்லை.
மக்களை நேர்மையான பாதைக்கு திரும்பி வரும் வகையில் அனைத்து திட்டங்களுக்கும்
ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.வியாபா
ரிகள் நேர்மையாக தொழில் செய்து அரசை
ஏமாற்றாமல் வரி செலுத்த வேண்டும் எச்சரிக் கை செய்யப்பட்டுள்ளார்கள்.
கணக்கு வழக்கு இல்லாமல் வெளிநாட்டு நிதி
யை பெற்றுக் கொண்டு மதமாற்றத்தில் ஈடு
பட்டு வந்த என்ஜிஓக்களின் லைசன்ஸ் ரத்து
செய்யப்பட்டு அரசின் கண்காணிப்பில் இருக்கி
றார்கள்.
ஆக மொத்தத்தில் மக்களின் வழியில் அரசு என்கிற நிலை மாறி அரசின் வழியில்மக்கள் என்று நாடு சென்றுக்கொண்டிருக்கிறது. சுதந்திர இந்தியாவில் இது வரை இல்லாத
புதுமை.இதுஉண்மையிலேயே இந்தியாவின் முன்னேற்றத்திற்கு கிடைத்த நல்ல சந்தர்ப்பம் என்றே சொல்லலாம்.
Image result for மோடி
ஒரு நாட்டின்அரசாட்சியைப்பற்றி நம்ம திருவள் ளுவர் கூட ஒரு குறளில் அற்புதமாக கூறியுள் ளார்.
குடிபுறம் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்..
அதாவது ஒரு அரசு ஒழுக்கம் நிறைந்ததாக இருக்க வேண்டும். அப்படியிருந்தால்தான் மக்களும் தவறு செய்ய மாட்டார்கள். மக்கள் தவறு செய்யாமல் வாழ்வதற்கான சூழ்நிலை களை ஏற்படுத்திக் கொடுக்கும் அரசே நல்ல அரசு என்று வள்ளுவர் சொல்லுகிறார்.
இதைத்தான் மோடி செய்து கொண்டிருக்கிறார்
இதற்காக அரசை தாக்கி ஆயிரம் விமர்சன ங்கள் வந்து கொண்டிருக்கிறது .இருந்தாலும்
மோடி கவலைப்படவில்லை.அவர் வேலையை
அவர் செய்து கொண்டிருக்கிறார்..
சரிப்பா..என்னமோ மோடியோடு மோதப்போ வது யாரு என்கிற பெயரில் டைட்டில் வைத்து
விட்டு திருக்குறளை சொல்லிக்கொண்டு இருக்கிறாய் என்று நீங்கள் கேட்கலாம்.
இந்த அளவிற்கு சுதந்திர இந்தியாவில் மிரட்டிய
அரசு எதுவும் இல்லையென்றாலும் மோடியை
வீழ்த்த போவது யார் என்கிற கேள்வியே இன் னும் இந்தியாவில் எழ வில்லை .அதை விடுங் கள் மோடியோடு மோதப்போவது யாரு என்கிற
கேள்விக்கே இன்னும் விடை கிடைக்கவில்லை
என்பதே யதார்த்த நிலைமை.
சுதந்திர இந்தியாவில் நடந்த மூன்று தேர்தல்க ளில் அன்றைய ஆளும் கட்சிக்கு எதிராக கிட்ட
தட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர் ந்து ஆளும் கட்சியை முறியடிக்க ஒன்று சேர்ந்த
சம்பவங்கள் நடந்துள்ளது.இரு முறை காங்கிர சை ஒரு முறை பிஜேபியை எதிர்க்கட்சிகள்
ஒன்று கூடி முறியடித்துள்ளன.
சுதந்திர இந்தியாவில் முதல் பொது தேர்தல் நடந்த 1952 ல் இருந்து பார்த்தால் 1977 ல் தான்
இந்திரா காந்தியை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்கிறார்கள்.அதுவும் எமர்ஜென்சி மட்டும் நிகழாமல் இருந்திருந்தால் எதிர்க்கட்சி
கள் ஒன்று சேரந்திருக்க வாய்ப்பில்லை.
இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் பிரதமர்களில்
இந்திராகாந்தியின் அரசியல் சாணக்கியம்
வேறு யாரிடமும் இருந்ததில்லை.ஆனால் அவராலேயே அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் 
மொரார்ஜி தலைமையில் ஒன்று திரள்வதை தடுக்க முடியவில்லை.
1977 தேர்தலில் இந்திராகாந்தி தோல்வி யடை ந்த பிறகு தான் மொரார்ஜி ஆட்சியை அவரால்
சரன்சிங்கை வைத்து உடைக்க முடிந்ததே தவிர 
தன்னுடைய தோல்விக்கு முன்பே எதிர்க் கட்சி
களை அவரால் உடைக்க முடியாமல் போனது
அவரின் அரசியல் வாழ்வில் மாபெரும் சறுக்கல்
தான்.
அடுத்து 1989 தேர்தலில் வெறும் 64 கோடி ரூபாய் போபர்ஸஊழல் குற்றச்சாட்டுகளுக்காக ராஜீவ் காந்தியை வீழ்த்த எதிர்க்கட்சிகள விபி சிங் தலைமையில் ஒன்று சேரவிட்டதன் மூலம் ராஜீவ் காந்தியின் அரசிய ல்அனுபவமின்மை யை அறிந்து கொள்ளலாம்
ராஜீவ காந்தி உண்மையிலேயே் ஒரு சராசரி
அரசியல்வாதியாக இருந்திருந்தாலே போதும்.
விபி சிங் என்கிற பிரதமர் இந்திய வரலாற்றில்
இருந்திருக்க மாட்டார்.
2004 ல் இருந்த வாஜ்பாய் அரசின் மீது பெரிய
அளவில் எதிர்ப்பு இல்லாமல் இருந்த போதிலும் சோனியா தலைமையில் ஒரு வலுவான கூட்ட ணி அமைந்ததை தடுக்க அப்போதைய பிஜே பியின் தலைமையாக இருந்த அத்வானி தவறியதில் இருந்தே அத்வானியின் அரசியல் சாணக்கியத்தனத்தை அறிந்து கொள்ளலாம்.
1999 தேர்தலில் பிஜேபியோட இருந்த திரிணா முல் காங்கிரஸ் திமுக பிஜூ ஜனதாதளம் போ ன்ற கட்சிகளை பிஜேபி கூட்டணியில் தக்க
வைத்திருந்தாலே போதும் 2004 தேர்தலிலும் பிஜேபியே மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும்.
அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் பிஜேபி கூட்டணியில் இருந்த திமுக பாமக மதிமுக
கட்சிகள் காங்கிரஸ் பக்கம் தாவாமல் இருந்திரு ந்தாலே போதும் பிஜேபி ஆட்சிக்கட்டிலில்
தொடர்ந்து அமர்ந்திருக்கும். ஆக ஆட்சியை
கைப்பற்றுவதை விட அதை தக்க வைத்துக் கொள்வதில் தான் அரசியல் ராஜதந்திரம் 
உள்ளது.
அந்த வகையில் பார்த்தால் மோடி அமித்ஷா விடம் மிகுந்த அரசியல் தந்திரம் இருக்கிறது
இல்லை என்றால் மோடி பிரதமராக கூடாது
அதை என்னால் ஏற்று கொள்ளவே முடியாது
என்று கூறி பிஜேபி கூட்டணியில் இருந்து
சென்ற நிதிஷ்குமார் இப்பொழுது 2019 லிலும்
மோடியே பிரதமர் என்று கூறிக்கொண்டு பிஜேபி கூட்டணிக்கு வருவாரா?
ஆக 2019 தேர்தலில் மோடியை எதிர்க்க காங்கி ரஸ் முன்னிறுத்த நினைத்த நிதிஷ்குமார் இப் பொழுது பிஜேபி முகாமில் ஐக்கிய மாகிவிட்டார்
நவீன் பட்நாயக் சைலன்டாகி விட்டார்
இது தாங்க அரசியல் ராஜதந்திரம் .தேர்தலுக்கு
முன்பாகவே பீகாரில் மெகா கூட்டணியின் முன் 
பிஜேபி தேறாது என்று உணர்ந்து அந்த கூட்ட ணியை உடைக்க ஈகோவை ஓரங்கட்டி விட்டு
நிதிஷை பிஜேபி இழுக்கிறது பாருங்கள் அது தான் ராஜ தந்திரம்.
மாறாக காங்கிரஸ் கட்சியோ காங்கிரசில் இருந்து பிரிந்து போன ஜெகன் மோகன் ரெட்டி
யையே இன்னும் தன் பக்கம் கொண்டு வர
முடியாமல் ஆந்திராவில் தள்ளாட்டத்தில் இருக்கிறது.
ஆந்திரா மாதிரி காங்கிரசுக்கு எம்பிக்களை அள்ளிக்கொடுத்த மாநிலம் வேறெதுவும்
இருக்காது. ஆனால் அங்கே காங்கிரஸ்க்கு
இப்பொழுது முட்டை தான் கிடைக்கும். ஆந்தி 
ராவில் காங்கிரஸ் உயிர் பெறாமல் ஆட்சியை
பற்றி கனவு கூட காண முடியாது.
இந்தியாவின் வடக்கு மேற்கு மாநிலங்களில் எஎப்பொழுதும் காங்கிரசை விட. பிஜேபியே ஸ்ட்ராங்.கிழக்கு மற்றும் தெற்கில் பிஜேபியை விட ஸ்ட்ராங்காக இருந்த காங்கிரஸ் மோடி ஆட்சி க்கு வந்த பிறகு கிழக்கு தெற்கிலும் பிஜே பியி டம் மண்ணை கவ்வி விட்டது
மோடியோட ஸ்பெசாலிட்டி என்னவென்றால் அவரை எதிர்த்து வீசப்படும் ஆயுதங்களே 
அவரின் இருக்கைக்கு பலம் சேர்த்து அவரை
உயரத்திற்கு கொண்டு செல்வது வழக்கம்.
அதனால் டீமானிட்டீசேசன் ஜிஎஸ்டி போன்ற
மக்களின் குறைகள் எல்லாம் நிறைகளாகி
அவரின் இருக்கைக்கு வலு சேர்க்கும் என்பதை
வருங்காலம் சொல்லும்.
வழக்கமா ஆளும் கட்சியை வீழ்த்த எதிர்க்கட்சி கள் ஒன்று சேர்வது வழக்கம் ஆனால் மோடியை 
ஆதரித்து எதிர்கட்சி கள் ஒன்று சேர ஆரம்பித்து
விட்டதில் இருந்து வரும் தேர்தலில் மோடியோடு
மோதப்போவது யாரு என்பதே கேள்வி யாகி
விட்டது.
டுமீல் போராளிகள் முடிந்தால் முதலில் ஒரு வார்டு கவுண்சிலர் ஆக முயற்சி செய்யுங்கள் பிறகு பார்க்களாம்


 நன்றி இணையம்