சுதந்திர தினத்தில் படேலுக்கு ஒரு ஜே...

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:07 | Best Blogger Tips
Image result for படேலுக்கு
இந்தியா சுதந்திரம் அடைந்த போது சென்னை; பம்பாய்; உத்திரப்பிரதேசம்; மத்தியப் பிரதேசம்; பீகார்; ஒரிசா; மேற்கு வங்கம் அசாம்; பஞ்சாப் என 9 மாநிலங்களை யும் 562 தன்னாட்சி உரிமை பெற்றசமஸ்தானங்களை யும் கொண்டிருந்தது
இந்தியா சுதந்திரம் பெற்று ஓராண்டு ஆன நிலையில் - 1948 ல் - தன்னாட்சி உரிமை பெற்ற அனைத்து சமஸ்தா னங்களையும் இந்தியாவுடன் இணைக்கும் நடவடிக்கை யில் இறங்கினார்வல்லபாய் பட்டேல்.
இந்த முடிவை அறிவித்தவுடன் பெரும்பாலான குட்டி குட்டி சமஸ்தானங்கள் எல்லாம் தாமாகவே முன்வந்து இந்தியாவுடன் இணைந்து கொண்டன.இணைய மறுத்த சமஸ்தானங்களை ராணுவத்தை அனுப்பிப் பணிய வைத்தார்;
உள்துறை அமைச்சரான வல்லபாய் பட்டேல். அப்படி இருந்தும் மூன்று சமஸ்தானங்கள் இணைய மறுத்தன. அவை ஜுனாகத்,ஹைதராபாத் மற்றும் காஷ்மீர் ஆகும்.
காஸ்மீர் வரலாறு நமக்கு எல்லோருக்கும் தெரியும்
ஆனால் ஜுனாகத் மற்றும் ஹைதரபாத் சமஸ்தானங் களின் வரலாறு நமக்கு அவ்வளவாக சொல்லப்பட
வில்லை.அதனால் அதை பற்றி மட்டும் பார்ப்போம்.
இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் சுதந்திர இந்தியா வோடு சேர்வதில் தனக்கு இஷ்டம் இல்லை, பாகிஸ்தா னோடு சேரப்போகிறேன் என்று அறிவித்தார். ஜுனாகத் நவாப் முகம்மது கஞ்சி.ஜுனாகத் பகுதியில் 20% மட்டு மே இஸ்லாமி யர்கள் இருந்தனர். மீதம் இருந்தவர்கள் இந்துக்கள். மேலும் , அவரது சமஸ்தானம் பாகிஸ்தான் எல்லை யோடு எந்த விதத்திலும் தொடர்பற்றது.
எனவேஅவரது அறிவிப்பை மக்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துக் கலகம் செய்தனர்.உள்துறைச் செயலாளராக இருந்த வி.பி.மேனன், 1947ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி ஜுனாகத்துக்கு வந்தார்.திவான் நவாஸ் பூட்டோ விடம் பேச்சுவார்த்தை நடத்தினார். நவாப்பை சந்தித்து இந்திய அரசின் சார்பில் தான் பேச விரும்புவதாக மேனன் கூறினார்.
ஆனால், நவாபுக்கு உடல்நலம் சரியில்லை. ஆகவே, அவரைச் சந்திக்க முடியாது என்று நவாஸ்பூட்டோ மறுத்துவிட்டார். அதனால், ஜுனாகத்துக்குச் செல்லும் உணவுப் பொருட்கள் மற்றும் சாலைகளைத் தடுத்து நெருக்கடியை ஏற்படுத்தியது இந்திய அரசு.
இனிமேலும், இங்கே இருக்க முடியாது என்று உணர்ந்த நவாப், 1947ம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி தனது மந்திரி மற்றும் செல்ல நாய்களுடன் விமானத்தில் ஏறி பாகிஸ்தானுக்குச் சென்றுவிட்டார்
சமஸ்தானம் எங்கும் உருவான நெருக்கடியைச் சமாளி க்க முடியாமல் திவான், இந்திய அரசிடம் உதவி கேட்ப து என்று முடிவு செய்து அழைப்பு விடுத்தார்.இந்திய அரசு தலையிட்டு ஜுனாகத்தைக் கைப்பற்றிக் கொண்டது.
அடுத்து ஹைதராபாத் சமஸ்தானம்-
சுதந்திர இந்தியாவோடு ஹைதராபாத் இணை விருப் பம் இல்லை என்றும், பிரிட்டிஷ் ஆதரவுள்ள சுதந்திர நாடாகவே இருக்க விரும்புவதாகவும் தெரிவி த்தார். ஏழாவது நிஜாமாக இருந்த உஸ்மான் அலிகான்.
இதை, படேல் ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்காக, பிரிட்டிஷ் பார்லிமென்ட் வரை சென்றார் ஹைதராபாத் நிஜாம்.
இந்தியாவோடு ஹைதராபாத் நிஜாம் சேர வேண்டும் என்றது அன்றைய தக்காண காங்கிரஸ். ஆனால், பாகிஸ்தானோடுதான் சேர வேண்டும் என்றன இஸ் லாமிய அமைப்புகள்.மௌன்ட் பேட்டன் ஆலோசனை ப்படி, இதற்கு தீர்வு காணும் வரை இரு தரப்புக்கும் இடையே ஓர் ஆண்டு கால நிலை ஒப்பந்தம் கையெழு த்தானது.
இந்தக் காலகட்டத்தில், இரு தரப்பும் தங்களுக்குள் பேசிப் பிரச்னையைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், நிஜாம் இந்த ஒப்பந்தத் தைப் பயன்படுத்திக்கொண்டு தனது ராணுவ பலத்தை வலிமையாக்கினார்.
பாகிஸ்தானோடு ஹைதராபாத் சேர வேண்டும் என்ப தற்கு ஆதரவாக ரஸாக்கர்கள் என்ற அமைப்பு உருவா க்கப்பட்டது. அதற்கு, காசிம் ராஸ்வி தலைமை வகித் தார்.இந்தியா மீது தொடர் தாக்குதல் நடத்த வேண்டும் என்று, ரஸாக்கர்கள் தூண்டிவிட்டனர். பம்பாயில் இரு ந்து சென்னைக்கு வந்த ரயிலை, ரஸாக்கர்கள் தாக்கி னர். இதனால், பல இடங்களில் கலவரம் ஏற்பட்டது.
1948ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி, நிஜாம் ராஜ்ஜி யத்துக்குள் நுழைந்தது இந்திய ராணுவம். ஹைதராபாத் சமஸ்தானம் நாலா பக்கமும் சுற்றி வளைக்கப்பட்டது. இந்த நடவடிக்கை ஆபரேஷன் போலா என அழைக்கப் பட்டது.
செப்டம்பர் 13ம் தேதி தொடங்கி ஐந்தே நாட்களில் நட வடிக்கை முடிவுக்கு வந்தது. தோல்வி நிச்சயம் என்ற நிலையில், இந்திய ராணுவத்திடம் 17ம் தேதி நிஜாம் சரண் அடைந்து படேலை வணங்கி நின்றார்.
ஐந்து நாட்கள் நடந்த சண்டையில், இந்திய ராணுவத் தில் 97 பேர் காயம் அடைந்தனர். 32 வீரர்கள் கொல்ல ப்பட்டனர். நிஜாம் தரப்பில் 490 வீரர்கள் கொல்ல ப்ப ட்டனர். 122 பேர் காயம் அடைந்தனர். 1,373 ரஜாக்கர்க ளும் இறந்தனர். 1,911 பேர் கைது செய்யப்பட்டனர்.
பிறகு இந்திய அரசின் உத்தரவுப்படி, ஹைதராபாத் நிஜாம் தானே வானொலி நிலையத்துக்குச் சென்று, இந்திய ராணுவத்தை வரவேற்பதாகவும், அமைதியான முறை யில் அதிகாரப் பறிமாற்றம் நடக்கும் என்றும் அறிவித் தார்.
இதைத் தொடர்ந்து, ஜெனரல் சவுத்ரி தற்காலிக கவர்னராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். அதன் பிறகு, இந்தியாவுடன் ஹைதராபாத் முறையாக இணைக்கப் பட்டது.ஹைதராபாத் இந்தியாவின் பத்தாவது மாநில மாக 17.9.1948 அன்று முதல் செயல்பட தொடங்கியது..
இன்று நாம் காணும் ஒருமித்த இந்தியாவை உருவா க்கிய பெருமை வல்ல பாய் படேலையே சாரும். எனவே
இன்றைய சுதந்திர தின நாளில் படேலை வணங்கி ஒரு
ஜே போடுவோம்....

 நன்றி இணையம்