எந்த
ஒரு மனிதனை பார்த்தாலும் அவனைப் பற்றி உடனடியாக நமக்குள் எழும்பும் கேள்வி
இவன் வயது என்னவாக இருக்கும் என்பதுதான். சாதாரணமான மனிதனின் வயதையே
அறிந்து கொள்ளும் ஆர்வம் வரும் போது மதங்கள் போன்ற பெரிய பெரிய விஷயங்களை
அறிந்து கொள்ளும் பொழுது இது எத்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கும் என்ற சிந்தனை வருவது தவிர்க்க முடியாததே ஆகும்.
5,000 வருடங்களுக்கு முன்பு பாரசீகத்தில் தோன்றிய ஸ்ராஸ்திய மதத்திலிருந்து யூதர் ஹீபுரு மதம் தோன்றி அதிலிருந்து கிறிஸ்துவ மதம் தோன்றி கிறிஸ்துவத்தின் பெருவாரியான கொள்கைகளை சித்தாந்தங்களை உள்ளடக்கி இஸ்லாம் மதம் உருவாகி இன்று 1500 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இம்மதங்களுக்கு முன்னரே நமது இந்து மதம் தோன்றிவிட்டது. அதாவது ஸ்ராஸ்திய மதம் தோன்றுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது மதம் உருவாகிவிட்டது என்று சொல்லலாம்.
பொதுவாக இந்து மதத்தின் தோற்றத்தை வேத காலத்திலிருந்து ஆரம்பிப்பதுதான் நம்முடைய வழக்கமான மரபு. ஆனால் இந்து மதம் உண்மையில் வேதகாலத்தில் தான் தோன்றியதா அல்லது அதற்கு முன்னரே தோன்றிவிட்டதா என்று நம்மை போன்ற சாதாரண மனிதர்கள் சிந்திப்பது இல்லை. காரணம் நமக்கு வேதகாலம் என்பதே எத்தனை வருடங்களுக்கு முற்பட்டது என்பது சரிவர தெரியாத போது அதற்கு முன்பே உள்ள காலத்தை எப்படி கணித்து பார்க்க முடியும். அப்படி முடியாது என்பதினால் காலங்களை அறிந்து கொள்ளும் நமது ஆர்வத்தையும் முயற்சிகளையும் கைவிட்டு விடமுடியுமா எனவே வேதகாலத்திற்கு முற்பட்ட காலத்தை அறிந்து கொள்ள நம்மால் முடிந்தவரை முயற்சி செய்து பார்ப்போம். அப்படி பார்த்தால் தான் இந்து மதத்தின் தொன்மையை நாம் உணர முடியும்.
புவியியல் அறிஞர்கள் உலகத்தில் மனித இனம் தோன்றியது தென்னிந்தியாவில் தான் என்று சொல்கிறார்கள். இவர்களின் இந்த கூற்றுக்கு சில யூகங்கள் மட்டுமே ஆதாரமாக இருக்கிறதே தவிர அறிவியல் சார்ந்த அசைக்க முடியாத சான்றுகள் எதுவும் இது வரை கிடைக்கவில்லை இருந்தாலும் கூட நமது இந்திய நாட்டை பொறுத்த வரையில் மனித இனம் தோன்றியது தெற்கில் தான் என்பதற்கு அசைக்க முடியாத ஆதாரங்கள் நமக்கு கிடைத்து உள்ளன.
பல கோடி ஆண்டுகள் வயதுடைய முதுமையான கற்பாறை படிவுகள் தென்னிந்தியாவில் காணப்படுகிறது. அப்பாறை படிவுகள் இருக்கும் பகுதிகள் காடுகளும் மலைகளும் சார்ந்த பகுதிகளாக இருப்பதினால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதியில் மனித சமூகம் வாழ்ந்திருக்க வேண்டும். எப்படியென்றால் இங்குதான் அதிக சிரமப்படாமல் மனிதர்கள் வேட்டையாடி மிருகங்களை உணவாக்கிக் கொள்ளவும் காய் கனிகளை பெற்றுக் கொள்ளவும் வாய்பிருந்திருக்கிறது. மேலும் விந்திய மலை தொடருக்கு வடக்கே இன்று பரந்து கிடக்கும் கங்கை சமவெளியும் இமயமலை தொடரும் ஒரு காலத்தில் கடலுக்குள் மூழ்கி கிடந்திருக்கிறது.
இன்று கூட இமயமலை சிகரங்களின் உச்சியில்....
தொடரும்....