சிவலிங்கம்..! ( பகுதி 1)

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:10 | Best Blogger Tips
Photo: சிவலிங்கம்..! ( பகுதி 1)

லிங்கரூபமாய் எழுந்தருளியிருக்கும் முழுமுதல் இறைவன், சில திருத்தலங்களில் வித்தியாசமாகவும் திகழ்கிறார்.பிருங்கி முனிவர் வண்டு வடிவம் எடுத்து சிவபெருமானை வழிபட்டார். அதன் அடிப்படையில் வண்டு துளைத்த குறியுடனுள்ள சிவலிங்கத்தை திருநல்லூரில் காணலாம்.

நீடூர் திருத்தலத்தில் நண்டு ஒன்று அருள்சோமநாதரை வழிபட்டதால், இங்குள்ள சிவலிங்கத்தின் உச்சியில் நண்டு நுழையும் அளவிற்கு துளை உள்ளது.

குடவாசல் தலத்தில் அமைந்துள்ள ஸ்ரீகோணேசுவரரை கருடன் வழிபட்டார். அப்படி வழிபட்டபோது கருடனுடைய கால்சுவடுகள் லிங்கத்தின் மீது படிந்தது. அந்த அடையாளத்தை இன்றும் தரிசிக்கலாம்.

கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருந்துதேவன்குடி தலத்தில் குதிரையும் வண்டும் ஈசனை வழிபட்டு முக்தி அடைந்தன. அவற்றின் காலடிச் சுவடுகள் லிங்கத்தில் பதிந்திருப்பதைக் காணலாம்.

திருக்கொண்டீஸ்வரம் தலத்தில் சுயம்புலிங்கமாக பசுபதீஸ்வரர் அருள்புரிகிறார். இந்த லிங்கத்தை பசு வழிபட்டதால், பசுவின் கொம்பால் ஏற்பட்ட பிளவு காணப்படுகிறது.

திருக்கடையூர் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் லிங்கத் திருமேனியில், எமனின் பாசக்கயிறு பட்டதால் ஏற்பட்ட தழும்பு உள்ளது.

ராமேஸ்வரத்தில் அருள்புரியும் ராமநாதர் லிங்கத்தை அனுமன் தன் வாலால் கட்டி இழுத்ததால், அனுமனின் வால்பட்ட தழும்பு லிங்கத்தில் பதிந்திருக்கிறது. இதேபோல் ஆந்திர மாநிலம் ராமகிரியில் உள்ள சிவன் கோவிலில் அருள்புரியும் லிங்கத்திலும் அனுமனின் வால்பட்ட தழும்பு உள்ளது.

திருவிஜயமங்கைத் திருத்தலத்தில் உள்ள ஸ்ரீவிஜய தேஸ்வரர் லிங்கத்தில், அர்ஜுனனின் அம்புபட்ட தழும்பு உள்ளதைக் காணலாம்.

வித்தியாசமான லிங்கங்கள் சில திருத்தலங்களில் காணப்படுவதுபோல புனிதமான நீரில் நனையும் சிவலிங்கங்களும் உள்ளன.

தொடரும்..

Via இந்து மத வரலாறு - Religious history of hinduism