இந்து மத வரலாறு பாகம் 16

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:29 | Best Blogger Tips

Photo: பாகம் 16.

ரிக்வேதம் பத்தாம் அத்தியாயம் எண்பத்தி ஐந்தாவது பாடல் ஒரு மண விழாவை அழகுற வர்ணிப்பதை சற்று பார்ப்போம். மணமகன் வீட்டார் ஊர்வலமாக கிளம்பி மணப்பெண்ணின் வீட்டை சென்றடைகிறார்கள். அங்கு அலங்கரிக்கப்பட்டு புதிய கணவனின் வருகைக்காக பெண் காத்து இருக்கிறாள். பெண் வீட்டார் பிள்ளைவீட்டாரை வரவேற்று உபசரித்து உட்கார வைக்கிறார்கள் அனைவருக்கும் விருந்து பரிமாரப்படுகிறது. விருந்து முடிந்த பிறகே திருமண சடங்குகள் ஆரம்பிக்கின்றன. மணமகனின் கைகளில் வயதில் மூத்தவர் பெண்ணின் கையை பிடித்து ஒப்படைக்கிறார். மணமக்கள் நெருப்பை வலம் வந்து அனைவரிடமும் ஆசிர்வாதம் பெறுகிறார்கள். இத்தோடு சடங்குகள் முடிவுக்கு வருகிறது.

இங்கு மிக முக்கியமான விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். திருமணம் முடித்து வைக்க புரோகிதர்கள் யாரும் இருப்பதாகவோ மந்திர முழக்கம் செய்வதாகவோ வேதத்தில் குறிப்பு இல்லை. இது மட்டுமல்ல மணமகன் மணமகளுக்கு திருமாங்கல்யாணம் பூட்டுவதாக கூட வேதம் சொல்லவில்லை. எனவே வேதகால திருமணம் என்பது இப்போதைய வைதீக திருமணங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு எளிமையாகவே இருந்து இருக்கிறது. காலபோக்கில் தான் திருமண சடங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. திருமண சடங்குகளை போலவே உபநயனம் விஷயத்திலும் அக்காலத்தில் மாறுபட்ட நடைமுறையே இருந்திருக்கிறது. தாலிகட்டும் முறை எப்படி பிற்காலத்தில் ஏற்பட்டதோ அப்படியே உபநயன சடங்கும் பிற்காலத்தில் தான் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதற்கு வேதங்களில் வலுவான ஆதாரங்கள் உண்டு.

வேதகால மக்கள் எழுத்துக்களை பற்றிய அறிவை பெற்றிருந்தனரா என்பது விவாதத்குரிய விஷயமாகவே இருந்து வருகிறது ஒருவர் சொல்ல கேட்டு இன்னொருவர் மனபாடம் செய்து கொள்வது தான் அக்கால வேத கல்வி முறை என்பதினால் எழுத்துகளை அவர்கள் அறிந்து இருப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவுயென சிலர் சொல்கின்றனர். இந்தியாவில் ஆரிய நாகரிகம் ஏற்படுவதற்கு முன்பாக இருந்த திராவிடர்களின் சிந்து சமவெளி நாகரிக படிவங்களில் பல வகையான எழுத்து உருவங்களை காண்கிறோம். திராவிடர்களுக்கு பிறகு தான் ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்தார்கள் என்றாலும் அவர்களும் திராவிடர்களை போலவே பழமையான மரபை சார்ந்தவர்கள் என்பதினால் ஆரியர்களின் பூர்வீகம் வழிநடை பாதை என்று சொல்லப்படுகின்ற இடங்களில் பழமையான எழுத்து வடிவங்கள் கிடைத்திருப்பதினால் அவர்களும் எழுத்துக்களை பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். இதில் எது சரி, எது தவறு என்று நமக்கு தெரியவில்லை. சரியான ஆதாரங்கள் கிடைக்கும் வரை வேத காலத்தில் எழுத்துக்கள் இருந்தன என்பது சர்ச்சைக்குரிய விஷயமாகவே தொடரும்.

இதே போலவே ரிக்வேத கால பண்பாட்டில் ஜாதி முறையானது நடைமுறையில் இருந்ததா? இல்லையா? என்றும் நம்மால் உறுதியாக அறிந்த கொள்ள முடியவில்லை. ரிக் வேதத்தில் உள்ள புருஷ சூத்தகம் விராட் புருஷனின் அங்கங்களில் இருந்து பிராமண, ஷத்ரிய, வைசீக, சூத்திர ஜாதியினர் தோன்றினர் என சொல்லப்பட்டு இருப்பதினால் அக்கால சமூகத்தில் நிச்சயம் ஜாதி பாகுபாடு இருந்திருக்க வேண்டும் என்று ஒரு சாரார் வலியுறுத்தி வருகிறார்கள். 

அப்படி இருப்பதற்கான சாத்திய கூறுகள் இல்லை. ரிக்வேதம் உட்பட மற்ற வேதங்களிலும் இது சகல மனிதருக்கும் பொதுவானது என்ற கருத்துக்கள் தான் கூறப்பட்டிருக்கிறதே தவிர மனிதர்களை பற்றிய ஏற்றதாழ்வு மிக்க கருத்துக்கள் எதுவும் இல்லை. மேலும் ரிக் வேதத்தின் முழுமையான மொழி நடைக்கும் பெரிய வித்தியாசம் இருக்கின்றது. எனவே ரிக்வேதத்தில் புருஷ சூத்தகம் இடைசெருகலாக தான் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று சொல்வதோடு வேதகால சமூகத்தில் ஜாதி பாகுபாடு இல்லையென அழுத்தமாக சிலரும் சொல்கிறார்கள்.

மேலும் வேதகாலத்தில் ஜாதிகள் உண்டு என வாதிடுபவர்கள் தொழிலின் அடிபடையில் நிச்சயம் ஜாதிகள் இருந்திருக்க வேண்டும். அதவாது வேளாண்மை செய்பவர்கள், வியாபாரம் செய்பவர்கள், போர் தொழில் புரிபவர்கள், சமய சடங்குகளை நடத்தி வைப்பவர்கள் என்ற பிரிவினர் கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்கள். இதற்கு ஜாதியின் அடிப்படையில் வேதகால தொழில்கள் இல்லை. உதாரணமாக பிராமணர் என்ற சொல் கடவுளை துதிபாடல்களால் மகிழ்விப்பவர்கள் என்ற பொருளில் தான் வழங்கப்பட்டதே தவிர தொழிலின் அடிப்படையில் அல்ல என்று மறுப்பும் சொல்லப்படுகிறது.

பொதுவாக ஆரியர்களின் பண்டையகால வாழ்க்கை முறையை சற்று உன்னிப்பாக கவனித்தால் அவர்கள் நிரந்தரமாக ஒரே இடத்தில் வாழ்பவர்கள் அல்ல. கால்நடைகளை மேய்பதற்காக புல் உள்ள பகுதிகளை நோக்கி பயணப்பட்டு கொண்டிருப்பவர்கள் என்பது தெரியவரும். நாடோடிகளாக இருக்கும் மக்கள் கூட்டத்தில் உடல் உழைப்பு செய்பவர்களுக்கும் காவல் காக்கும் வீரர்களுக்கும் தான் மதிப்பு மரியாதை இருக்குமே தவிர சடங்குகள் புரியும் உடல் உழைப்பு இல்லாத மனிதர்களுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் இராது. அதாவது அவர்கள் விரும்பதகாத சுமையாகவே கருதப்படுவார்கள். ஆரியர்கள் கால்நடைகளை நம்பி வாழ்க்கை ஓட்டியவர்கள் என்பதினால் நிரந்தரமான வேளாண்மையை நிச்சயம் அவர்கள் செய்திருக்க வாய்ப்பு இல்லை. எனவே குறைந்த பட்சம் ரிக்வேத காலத்தில் மட்டுமாவது ஜாதி வேற்றுமைகள் பாராட்டப்பட நடைமுறை சாத்தியமில்லை. என்பதை ஆழ்ந்து சிந்திக்கும் போது உணர முடிகிறது.

தொடரும்...

Via இந்து மத வரலாறு - Religious history of hinduism