நகம் கடிக்கும் பழக்கம்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 1:33 | Best Blogger Tips
திடீரென்று டென்ஷன் ஏற்பட்டால் சிலருக்கும் நகம் கடிக்கும் பழக்கம் இருக்கிறது. சிலர் சும்மா கூட தன்னை மறந்த நிலையில் நகத்தை கடிப்பார்கள். சிறிய வயதில் ஆரம்பித்த இந்த பழக்கத்தை விட இயலாமல் சிலர் தொடர்வார்கள். இது ஒருவகை மனநல பாதிப்புதான் என்கிறது ஒரு ஆராய்ச்சி. அந்த ஆராய்சியில் மனநிலை பாதிப்புகளில், நகம் கடிப்பதை சேர்க்க பரிந்துரையும் செய்துள்ளனர் நிபுணர்கள்.  உலகம் முழுவதும் பல லட்சம் பேர் நகம் கடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர். நகம் கடிப்பது மட்டுமல்ல, கையை அடிக்கடி கழுவுவது, புருவத்தை திருகுவது, முடியை பிடித்து இழுத்து கொண்டே இருப்பது போன்ற பழக்கங்களும் மனநல பாதிப்பின் வெளிப்பாடுதான். இனம் தெரியாத பயம், தவறான எண்ணங்கள் மனதில் எழுவதால் சிலர் இதுபோல செய்கின்றனர் என்கிறார்கள்.  

எப்போதாவது நகம் கடிப்பவர்கள் கூட மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என கூறிவிட முடியாது. இந்த பழக்கத்தால் வலி ஏற்படும் அளவுக்கு ஒருவர் நடந்துகொண்டால் அவரை மனநலம் பாதிக்கப்பட்டவர் என கருதலாம் என்று கலிபோர்னியா பல்கலைக்கழக மனோ தத்துவவியல் வல்லுனர்கள் ஆராய்ச்சியில் குறிப்பிட்டுள்ளார்கள். நகம் கடிப்பதால் நோய் தொற்று ஏற்பட்டு அடிக்கடி சளி பிடித்தல், நோய் கிருமித் தொற்று ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கிறது.

அடுத்த முறை நகம் கடிக்கும் முன் இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Via Doctor Vikatan