வேதகால
சமுதாயத்தை ஆர்ய நாகரீகம் என்ற பெயரிலேயே பலர் அழைக்கிறார்கள். நாமும்
அப்படி அழைத்தால் ஒன்றும் குடி மூழ்கி போய்விடாது. ஆர்ய என்ற சொல்லிற்கு
உயர்ந்த சிறந்த என்ற பொருட்கள் உண்டு. பொதுவாக சமஸ்கிருதத்தையும் அதை
சார்ந்த மொழிகளையும் பேசும் மக்களை இந்தோ
ஆரியர் என்று அழைப்பது வழக்கம். ஆரியர்கள் இந்தியாவிற்குள் எங்கிருந்து
வந்தார்கள். எப்போது வந்தார்கள் என்ற குழப்பம் பல காலமாக இருந்து வருகிறது.
காதல் கடவுளான மன்மதனை சிவபெருமான் நெற்றிகண் கொண்டு எரித்தாரா
இல்லையாயென்று தொன்று தொட்டு லாவணி பாடல் இருந்து வருவது போல ஆரியர்கள்
இந்தியாவின் பூர்வகுடிகள் என்று ஒரு சாராரும் அல்ல அல்ல அவர்கள் இந்த
நாட்டின் வந்தேரிகள் என்று வேறொரு சாராரும் தொடர்ந்து வாதம் செய்து
வருகிறார்கள். இந்தவாத பிரதிவாத சிக்கலுக்குள் மூக்கை நுழைத்து கொண்டு
அவதிப்பட வேண்டிய அவசியம் இப்போது நமக்கு இல்லை. நாம் நேரடியாக அக்கால
மக்களின் வாழ்க்கை எப்படியிருந்தது என ஆராய போய்விடலாம்.
வேதகால குடும்பங்களின் தலைவராக தந்தையே இருந்தார். ஒரு குடும்பத்தின் வரம்பற்ற அதிகாரம் அவருக்கே இருந்தது. திருமணம் முடிந்து குழந்தை குட்டிகள் பெற்ற பிறகும் ஒரு மகன் தந்தைக்கு அடங்கியனாகவே இருக்க வேண்டும். சமுதாயத்திற்கு தீங்கிழைத்த ஒரு மகனை தந்தை குருடாக்கியதாக ரிக் வேதத்தில் ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது. அதே போல சூதாடியான ஒருவனை குடும்பமே வெறுத்து ஒதுக்கியதாகவும் அந்த வேதம் சொல்கிறது. இக்கருத்துக்களின் அடிபடையில் பார்க்கும் போது அக்கால சமுகத்தில் பெற்றோர் பிள்ளைகளுக்கிடையில் இணக்கமான உறவு முறை இல்லையென்று சொல்ல முடியாது.
தந்தைக்கு பணிந்து நடப்பதை மரியாதை குறைவாக யாரும் கருதவில்லை. மேலும் குடும்பத்தில் ஏற்படும் நல்லது கெட்டதுகளை சமாளிக்க தலைக்கு தலை முடிவு எடுத்தால் சிக்கல்களே ஏற்படுமென்று ஒருவரையே முடிவு எடுக்க விட்டுவிட்டு மற்றவர்கள் சுற்று வேலைகளை கவனித்ததினால் குடும்பத்தின் நிலை என்பது குறைவில்லாத வண்ணமே இருந்தது. குடும்ப ஒற்றுமைக்கு குந்தகம் செய்போவரையும் கௌரவ குறைவாக நடப்பவர்களையும் தண்டிக்கும் நிலை இருந்ததே தவிர மற்றப்படி குடும்ப ஒற்றுமையில் பாச பிணைப்புகளே அதிகம் இருந்தற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. தகப்பனாரின் மறைவுக்கு பின்பு அவரின் அடுத்த சகோதரரோ அல்லது மூத்த மகனோ குடும்ப தலைவனாக ஆக்கப்பட்டிருக்கிறார். மிகபெரிய கூட்டு குடும்பங்களாகவே அக்காலத்தில் இருந்ததினால் நிலத்தின் மூலம் கிடைக்கும் வருவாயும் எல்லோருக்கும் சமமாகவே பங்கிடப்பட்டுள்ளது.
பருவ வயதை அடைந்த பிறகே பெண்களுக்கு திருமணம் நடந்திருக்கிறது. இக்காலத்தை போலவே அப்போதும் ஆண் குழந்தைகளையே அதிகம் விரும்பியிருக்கிறார்கள். ஆனால் பெண் குழந்தைகள் பிறந்துவிட்டால் கள்ளிபால் கொடுத்து சாகடிக்கும் கொடுமை அப்போது சுத்தமாக இல்லை என்றே சொல்லலாம். பிறந்த பெண் குழந்தைகள் பரிவும் பாசமும் காட்டி வளர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.
ஆணுக்கு நிகரான கல்வி பெண்களுக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. வேதகால கல்வி முறை கவிதை புணைபவர்களை மதிக்க தக்க முறையில் நடத்தி இருக்கிறது. சில வேத பாடல்களை ஆணுக்கு இணையாக பெண் கவிஞர்களும் புணைந்து இருக்கிறார்கள். ஆண் பெண் இருவருக்குமே போர்கலை கற்று கொடுக்கப்பட்டிருக்கிறது. ரிக்வேத காலத்தில் சமுகத்தில் ஆணுக்கு என்ன மரியாதை உண்டோ அதே மரியாதை பெண்ணுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. பெண் அடிமைதனம் இருந்ததற்கான ஆதாரம் ரிக்வேதத்தில் இல்லை.
ஆரிய பெண்கள் மிக கட்டாயமாக ஆரிய இளைஞர்களை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று நியதி இருந்ததே தவிர பெற்றோர்கள் பார்க்கும் மணமகனை தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை காதல் திருமணத்திற்கு பெரிய எதிர்ப்புகள் இருந்ததற்கான சுவடுகள் இல்லை. தந்தைவழி உறவினர் சகோதர்களாக கருதப்பட்டதினால் உறவு முறைக்குள் திருமணம் செய்து கொள்வதை அவர்கள் விரும்பவில்லை.
பலதார மணமும் அப்போது வழக்கத்தில் இருந்தது தெரிகிறது. இருப்பினும் ஒருவனுக்கு ஒருத்தி என்கிற ஒழுக்க முறையே பலராலும் பின்பற்றப்பட்டது. ஆண்களுக்கு வழங்கப்பட்டிருந்த பலதார சலுகை பெண்களுக்கு இப்போது போலவே அப்போதும் வழங்கப்படவில்லை. ஆனாலும் கணவனை இழந்த இளம் பெண் கணவனின் சகோதரனோடு கூடி வாழ்வதை யாரும் குற்றமென கருதவில்லை. உடன்கட்டையேறும் பழக்கம் ரிக்வேத காலத்தில் எங்கும் காணப்படவில்லை.
வரதட்சனை கொடுக்க வேண்டிய அவசியம் அக்கால பெண்களுக்கு இல்லை. மணமகனே அதாவது வரனே முன் வந்து தட்சணை கொடுத்து பெண்ணை திருமணம் செய்து கொண்டான். மாப்பிள்ளை பணம் கொடுப்பதினால் தான் வரதட்சனை என்ற வார்த்தையே உருவாகி இருக்கிறது என்று பல அறிஞர்கள் சொல்கின்றன விருப்பம் இல்லாத பெண்ணை வலுகட்டாயமாக தூக்கி சென்று மண முடிக்கும் நிலையும் அப்போது இருந்திருக்கிறது. விமாதா என்பவன் பொருமித்ரா என்பவரின் மகளை இப்படி தூக்கி சென்று திருமணம் செய்ததாக ரிக்வேதம் சொல்கிறது. இத்தகைய திருமண முறைக்கு காந்தர்வ ராட்சஸ திருமணம் என்று ரிக்வேதம் பெயர் சூட்டுகிறது.
தொடரும்...