"கீழக்கரை கடல் பாசி செய்யும் முறை". . . .

மணக்கால் அய்யம்பேட்டை | AM 1:52 | Best Blogger Tips

Photo: "கீழக்கரை கடல் பாசி செய்யும் முறை". . . .

தேவையான பொருட்கள்:

பால் - 500 மில்லி
கடல் பாசி - 8 கிராம்
சர்க்கரை - தேவையான அளவு
முந்திரி - தேவையான அளவு
ரோஸ் எசன்ஸ்

செய்முறை:
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
ஒரு டம்ளர் தண்ணீரில் கடல் பாசியை ஊற வைக்கவும்.

பாலில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு பச்சை வாசம் போக காய்ச்சவும். (அதிக தண்ணீர் சேர்க்க வேண்டாம். பாலில் தண்ணீர் கூடினால் சுவை நன்றாக இருக்காது).

மற்றொரு பாத்திரத்தில் ஊறிய கடல் பாசியை தண்ணீருடன் சேர்த்து நன்கு கரைந்து தண்ணீர் போலாகும் வரை காய்ச்சவும்.

கடல் பாசி நன்கு கரைந்து கொதித்ததும், அதனுடன் காய்ச்சி வைத்துள்ள பாலைச் சேர்க்கவும்.

பின் சுவைக்கேற்ப சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

சர்க்கரை கரையும் வரை கொதிக்கவிட்டு, அதனுடன் ரோஸ் எசன்ஸை சேர்க்கவும்.

பிறகு நன்கு கொதித்ததும் இறக்கி சிறு கோப்பையில் ஊற்றி, சிறிது நேரம் வைக்கவும். கடல் பாசி சற்று இறுகியதும் பொடியாக நறுக்கிய முந்திரியை மேலே தூவி, சற்று நேரம் காற்றிலேயே வைக்கவும். நன்கு இறுகியதும் ஃபிரிட்ஜில் வைத்து ஜில்லென்று சாப்பிடலாம். சுவையான குளிர்ச்சியான கடல் பாசி தயார்.

தயாரிப்பு : பரிதா
இது ரொம்ப இறுகி கல் போல இருக்காது. சற்று கொழ கொழப்பாக இருக்கும். இதை ஸ்பூனில் எடுத்துசாப்பிடலாம். கீழக்கரையில் செய்யப்படும் பிரபலமான உணவு வகை இது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. வெயில் காலத்தில் சாப்பிட ஏற்றது.தேவையான பொருட்கள்:

பால் - 500 மில்லி
கடல் பாசி - 8 கிராம்
சர்க்கரை - தேவையான அளவு
முந்திரி - தேவையான அளவு
ரோஸ் எசன்ஸ்

செய்முறை:
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
ஒரு டம்ளர் தண்ணீரில் கடல் பாசியை ஊற வைக்கவும்.

பாலில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு பச்சை வாசம் போக காய்ச்சவும். (அதிக தண்ணீர் சேர்க்க வேண்டாம். பாலில் தண்ணீர் கூடினால் சுவை நன்றாக இருக்காது).

மற்றொரு பாத்திரத்தில் ஊறிய கடல் பாசியை தண்ணீருடன் சேர்த்து நன்கு கரைந்து தண்ணீர் போலாகும் வரை காய்ச்சவும்.

கடல் பாசி நன்கு கரைந்து கொதித்ததும், அதனுடன் காய்ச்சி வைத்துள்ள பாலைச் சேர்க்கவும்.

பின் சுவைக்கேற்ப சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

சர்க்கரை கரையும் வரை கொதிக்கவிட்டு, அதனுடன் ரோஸ் எசன்ஸை சேர்க்கவும்.

பிறகு நன்கு கொதித்ததும் இறக்கி சிறு கோப்பையில் ஊற்றி, சிறிது நேரம் வைக்கவும். கடல் பாசி சற்று இறுகியதும் பொடியாக நறுக்கிய முந்திரியை மேலே தூவி, சற்று நேரம் காற்றிலேயே வைக்கவும். நன்கு இறுகியதும் ஃபிரிட்ஜில் வைத்து ஜில்லென்று சாப்பிடலாம். சுவையான குளிர்ச்சியான கடல் பாசி தயார்.

தயாரிப்பு : பரிதா
இது ரொம்ப இறுகி கல் போல இருக்காது. சற்று கொழ கொழப்பாக இருக்கும். இதை ஸ்பூனில் எடுத்துசாப்பிடலாம். கீழக்கரையில் செய்யப்படும் பிரபலமான உணவு வகை இது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. வெயில் காலத்தில் சாப்பிட ஏற்றது.
 
Via மருத்துவ தகவல்