* சுயகட்டுப்பாடு, ஒருமுகப்படுத்தும் திறன், அர்ப்பணிப்பு உணர்வு இவை மூன்றும் இருந்தால் தான் எந்தப் பணியிலும் சிறந்து விளங்க முடியும்.
* பிறருக்கு அன்பை வழங்க முயலுங்கள். வாழ்வை சீர்படுத்திக் கொள்ளுங்கள். உங்களைச் சுற்றிலும் வளமான சிந்தனைகளைப் பரப்புங்கள்.
* நம்மிடம் கண்ணாமூச்சி விளையாடும் கடவுளை அன்பின் மூலமாக நம்மால் அடைய முடியும்.
* நேர்மையற்ற மனிதர்களை சமூகத்தில் மலிந்திருக்கும் கொள்ளைநோய்களுக்கு ஒப்பிடலாம். இவர்களின் கீழான நடத்தையால் மக்கள் துன்பத்தில் சிக்கித் தவிக்கின்றனர்.
* எப்போதும் சுழல்வது தான் சக்கரத்தின் இயல்பு. அதுபோல வாழ்க்கைச் சக்கரத்தையும் சரியான பாதையில் திருப்பி விடத்தான் வேண்டும்.
* மந்திரம் என்பது கடவுளை நினைக்க துணை செய்கிறது. அதைச் சொல்லும் போது அதற்குரிய தெய்வத்தின் உருவத்தை மனதில் நினைப்பது அவசியம்.
சின்மயானந்தர்