பாகம் 11.
இதுவரை சிந்து சமவெளி நாகரீகத்தில் இந்து மதத்தின் மூலக் கூறுகள் பதிந்திருப்பதை விரிவாக சொல்லியதற்கு மிக முக்கியமான காரணங்கள் உண்டு. அதாவது சிந்துவெளி நாகரீகமும் வேதகால நாகரீகமும் வேறு வேறானது இரண்டுக்கும் சம்பந்தம் இல்லாதது என்பதை தெளிவுபடுத்துவதே முக்கிய நோக்கமாகும். இதில் சிந்து வெளி நாகரீகம் வேதகாலத்திற்கு முந்தியதா பிந்தியதா என்ற முடிவை இதுவரை எந்த ஆராய்ச்சியாளனும் எட்டவில்லை என்றாலும் சிந்து மக்கள் பயன்படுத்திய சமய சின்னங்கள் வேதங்களுக்கு முற்பட்டவை என்பதில் எந்த மாற்றமும் இல்லை. இதற்கு வேதங்களிலேயே பல ஆதாரங்கள் கிடைக்கின்றன. நான்கு வேதங்களை மிக நுணுக்கமாக ஆராயும்பொழுது இந்த உண்மை நமக்கு தெரியவருகிறது.
இந்தியாவின் பூர்வகுடிகள் ஆரியர்களா, திராவிடர்களா என்பதை இதுவரை யாரும் அறுதியிட்டு கூறமுடியவில்லை என்றாலும் இந்த இரு இனங்களுக்கு முன்பே மனித சமூகம் இந்தியாவில் நல்ல முறையில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் பல உள்ளன. அந்த மனித சமூகத்திடமிருந்து திராடவிடர்களோ ஆரியர்களோ நாகரீகத்தை பெற்றிருக்கிறார்கள் என்பது மிகவும் உறுதியாகும். அதாவது நாகரீகத்தை பெயர் தெரியாத இந்திய பூர்வ குடிகள் இவ்விரு இனத்தாருக்கு வழுங்கியிறுக்கிறார்கள். அத்தகைய நாகரீக தானத்தை முதன் முதலில் பெற்றவர்கள் திராவிடர்களாகவே இருக்க வேண்டுமென்று பரவலான கருத்து உள்ளது. அதை மறுப்பதற்கு போதிய ஆதாரம் இன்று வரை இல்லை என்பதனால் திராவிடர்களே வேதகாலத்திற்கு முற்பட்டவர்கள் என்பதை ஏற்று கொள்வதை தவிர இன்று நமக்கு வேறு வழியில்லை. இதன் அடிப்படையில் இந்து மதம் வேதங்களுக்கு முன்பு எப்படி இருந்தது அது எப்படி வேதங்களோடு இணைக்கப்பட்டிருக்கிறது என்பதை விரிவாக பார்ப்போம்.
வேதங்களுக்கு முற்பட்டதாக கருதப்படும் திராவிட நாகரீகத்தில் வேதக் கருத்தக்களின் சேர்க்கையால் இந்து மதக் கருத்துக்கள் உருவானதா அல்லது வேத நாகரீகத்தில் திராவிடக் கருத்துகளின் சேர்க்கையால் அவை உண்டானவைகளா என்ற குழப்பங்கள் வலுவாக இருந்தாலும் இந்து மதக் கருத்துக்கள் என்பது வேத நாகரீகத்திலிருந்து வளர்ந்த எளிய வளர்ச்சி அல்ல என்பதை உறுதியாக நம்ப முடிகிறது. வேத சார்பில்லாத மூலக் கருத்துக்கள் இந்து மதத்தில் பரவி கிடப்பதனால் இந்த நம்பிக்கை நமக்கு ஏற்படுகிறது.
திராவிடன் என்ற சொல் குறிப்பாக எந்த பொருளை சுட்டிக் காட்டுகிறது என்று தெளிவாக கூறமுடியாது. இச்சொல் மொழிவாரியான இனத்தை குறிக்க ஒரு மக்கள் குழுவை குறிக்க அல்லது ஒரு நாகரீக தொகுதியை குறிக்க பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. வட மொழியின் தாக்கம் திராவிட மொழிகளில் வலுவாக இருந்தாலும் கூட அவைகள் தனது தனிதன்மையை முற்றிலுமாக இழந்துவிடவில்லை. நமது நாட்டில் ஏற்பட்ட இனக்கலப்புகள் இன்று எவரையும் ஆரியன் என்றோ திராவிடன் என்றோ பிரித்து கூற இயலாவிட்டாலும் வடமொழியில் கலந்துள்ள திராவிடச் சொற்களை இன்று கூட மிக எளிதாக பிரித்துக் காட்டிவிடலாம். அதாவது மனித இனங்கள் கலப்பினால் தனது சுயத் தன்மையை இழந்து விட்டாலும் மொழிகள் தனது தற்சார்பை இழக்கவில்லை இதனால் வேத இலக்கியங்களில் கலந்துள்ள மாறுபட்ட தன்மைகளை நம்மால் சுலபமாக பிரித்தரிய முடிகிறது. இதனால் வேதத்தில் மூலப்பாடத்தில் உள்ளவைகளோடு சம்பந்தப்படாத கருத்துகளை வேதத்திற்கு முற்பட்டக் கருத்துகள் அதில் காலம் தாழ்ந்து இணைந்த கருத்துகள் என்று கருதமுடிகிறது.
தொடரும்..