இரத்த‍ சுத்திகரிப்பு (டயாலிஸிஸ்) எவ்வாறு செய்ய‍ப்படுகிறது? – நேரடி காட்சிகளுடன் வீடியோ

மணக்கால் அய்யம்பேட்டை | 2:21 AM | Best Blogger Tips
சிறுநீரகம், இயற்கையான முறையில் இரத்த‍த்தை சுத்திகரிக்கும் அதிமுக்கிய பணியினை செய்துவரும் சிறுநீரகம் செயலிழக்கும் போது உடனடியாக, பாதிக்க‍ப்பட்ட‍ நோயாளிக்கு மாற்று சிறுநீரகத்தை அறுவை சிகிச்சையின் மூலம் பொருத் தினால், அந்த நோயாளியின் உயிர் காப் பாற்ற‍ப்படும். ஆனால் இன்றைய சூழ் நிலையில் மாற்று சிறுநீரகம் (உறுப்பு) கிடைக்காத‌ நிலையில் இரத்த‍ சுத்திகரி ப்பு அதாவது டயாலிஸிஸ் பெரிதும் கைக் கொடுக்கிறது.
ரத்தத்தை சுத்திகரிக்கும் சிறுநீரகங்களின் பணியை டயாலிஸிஸ் என்கிற இயந்திரங்கள் செய்கின்றன. இச்சிகிச்சை தேவைப்படு வோர் வாரத்திற்கு 3 முறையோ, 2 முறையோ சிகிச்சைபெற வேண்டும். ஒரு முறை டயாலிஸிஸ் செய்ய 4 மணி நேரம் தேவை. ஒரு நிமிடத் திற்கு 250 மி.லி., முதல் 300 மி.லி., ரத்தம் உடலில் இருந்து வெளியே வந்து சுத்திகரிக்கப்படுகிறது. ரத்தத் தில் உள்ள யூரியா, கிரியாட் டினின், தேவை யற்ற அமிலங்கள், அதிகப் படியான நீர் பிரிக்கப்படுகின்றன. இவற்றை பிரிக்காவிட்டால் அதிகப்படி யான நீரால் நுரையீரலில் நீர்கோர்த்துக் கொள்ளும், ரத்த அழுத்தம் கூடும். கால் வீக்கம் ஏற்படும். ஒரு சில நாட்களில் உயிரிழப்பும் ஏற் படும்.
ரத்த சுத்திகரிப்பு அதாவது டயாலிஸிஸ் செய்வதில் எத்த னை வகைகள் உள்ள‍ன என்றும் அவைகள் எப்ப‍டி செயல்படுத் த‍ப்படுகின்றன என்பதை அற்பு தமாக வீடியோவில் பதிவே ற்றியுள்ள‍னர். நீங்களும் கண்டு பயன்பெற‌ அந்த வகையான வீடியோவை விதை2விருட்சம் இணையம் இங்கே பகிர்ந்துள்ள‍ து.
.
.



Via- விதை2விருட்சம்