வேதங்களில்
பறவைகளையும், விலங்குகளையும் தெய்வத்தன்மை வாய்ந்ததாக சொல்லும் கருத்துகள்
ஆரம்ப காலத்தில் இல்லை. வேதகாலமானது முடிவுக்கு வரும் நேரத்திலேயே அவைகளை
புனிதமானதாக கருதும் நிலை எற்பட்டுள்ளது. அதாவது ஆரம்பகால வேத பாடல்களில்
பசுவை புனிதமாக கருதக்கூடிய எந்த
குறிப்பும் இல்லாததை இதற்கு உதாரணமாக சொல்லலாம். சிவனுக்கு எருதுவும்
துர்க்கைக்கு சிங்கமும் விஷ்ணுவுக்கு கருடனும் பிரம்மனுக்கு அன்னமும்
பிற்காலத்திலேயே வாகனங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. இது எப்படி ஏற்பட்டது
என்பதை நாம் ஆராய வேண்டும்.
மனிதன் தவிர மற்ற உயிரனங்களும் தெய்வ தன்மையை தங்களோடு வைத்திருப்பதை சிந்து வழி மக்கள் நம்பி பறவைகளையும் விலங்குகளையும் வழிபட்டு இருக்கிறார்கள். இந்த வழிபாடானது திடீரென்று அவர்களுக்கு தோன்றியதாக இருக்க வாய்பில்லை. பல நூறு ஆண்டுகளாக தலைமுறை தலைமுறையாக நம்பி வந்ததையே தங்களது பழக்கத்தில் அவர்கள் வைத்திருக்க வேண்டும்.
சிந்து பகுதி மண் மேடான பிறகு அதிலிருந்து தப்பி பிழைத்த சில மக்கள் கங்கையோரத்தில் குடியேறியிருக்க வேண்டும். பிற்காலத்தில் கங்கை நதி புறத்தில் வேத நாகரீகம் பரவிய போது இந்த மக்களின் வழிபாட்டிலுள்ள கவர்சி மிக்க இந்த அம்சம் வேத விற்பன்னர்களை ஈர்த்து வேதங்களில் இவைகளை பற்றிய குறிப்புகளை ஏற்றியிருக்க வேண்டும். அப்படித்தான் வேதத்தின் கடைசி காலத்தில் இவைகள் வந்திருக்க வேண்டுமே தவிர ஆதியிலிருந்து இம்முறை இருந்ததற்கான வாய்ப்பில்லை.
வேதங்களில் பானிகள் என்று ஒரு புலத்தினர் குறிப்பிடப்படுகிறார்கள் இவர்கள் வணிகர்கள் என்று காட்டப்படுகிறார்கள். இப்பானி மக்கள் வட்டி தொழிலை மேற்கொண்டதாகவும் வேதங்கள் கூறுகின்றன. மேலும் இவர்கள் புதிதான ஒரு வழிபாட்டு முறையை கடைபிடித்ததாகவும் அந்த முறை வேதமுறைக்கு முரணானதாக இருந்ததாகவும் இதனால் வேத நெறி நிற்பவர்களுக்கும் இந்த புலத்தாரருக்கும் அடிகடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டதாகவும் க் வேதம் தெளிவாகச் சொல்லுகிறது. இந்த பானிமக்களே சிந்து வழி மக்களாக இருக்க வாய்ப்புள்ளது. இவர்களுடன் ஏற்பட்ட பகைமையை பெரிதாகக் கொள்ளாமல் இவர்களிடம் உள்ள நல்ல அம்சங்கள் பொருந்திய வழிபாட்டு முறைகளை வேதங்கள் சுவிகாரம் எடுத்து கொண்டிருக்க வேண்டும்.
சிந்துவெளி நாகரீகத்தில் மட்டுமல்ல அதற்கும் முந்தைய காலத்திலும் இந்துமதம் இந்த நாட்டில் இருந்துள்ளது பல சர்ச்சைகள் இருந்தாலும் சிந்து நாகரீக காலத்தை கி.மு. 5000 க்கு முற்பட்டது என ஆய்வாளர்கள் ஒத்துக் கொள்கிறார்கள் ஆனால் அதற்கு முன்பே அதாவது கி.மு. 90000 ஆண்டிலேயே விநாயகரை வழிபடும் வளக்கம் மக்கள் மத்தியில் இருந்துள்ளது சிந்துமாநிலத்திற்கு அறுகிலுள்ள நௌஸர் என்னும்இடத்தில் சுட்டமண்ணால் செய்யப்பட்ட பிள்ளையார் சிலை 1992 ஆண்டு கண்டெடுக்கப்பட்டது இந்த சிலைக்கு இன்றைய வயது 11 ஆயிரம் வருஷம் மட்டும் தான் இபிகே7712 என பெயர் சுட்டப்பட்ட இந்த விநாயகர் உருவம் தற்போது பாகிஸ்த்தான் அருங்காட்சியகத்தில் இன்றும் உள்ளது
வேதங்களில் உள்ள சிறப்பான அம்சமே எந்த வகையிலாவது நல்லவற்றை எடுத்து கொள்வதே ஆகும். ஆரம்பகால வேத ஸ்லோகங்கள் ருத்ரனை மூலமூர்த்தியாக கருதியது கிடையாது ஆனால் சிந்து வழி மக்களிடமிருந்து பசுபதியை சுவிகரித்துக் கொண்டவுடன் வேதக்கடவுளான ருத்ரனின் நிலையை விட பல மடங்கு உயர்ந்த நிலையில் வேதங்களால் பசுபதி போற்றப்படுகிறார். யோக முத்திரைகளும் பெண் தெய்வ வழிபாடும் மரம், பறவைகள், விலங்குகள் ஆகியவற்றின் மேன்மைகளும் அப்படியே வெளியிலிருந்துதான் வேதத்திற்குள் அழைத்துவரப் பட்டிருக்கின்றன அவைகள் தான் இந்து மதத்தின் ஆதிகூறுகள் ஆகும். அதன் விரிவாக்கத்தை அடுத்த அத்யாயத்தில் தெளிவாக பார்ப்போம்.