இந்து மத வரலாறு பாகம் 12

மணக்கால் அய்யம்பேட்டை | 5:35 PM | Best Blogger Tips

Photo: பாகம் 12.

நமது நாட்டு கருத்துகளின் வளர்ச்சியில் காடுகள் பெரும்பங்கு ஆற்றியுள்ளன. முனிவர்களின் தவச்சாலைகளே அக்காலத்திய கருத்து கருவூலங்களாக இருந்திருக்கின்றன. அத்தகைய தவச்சாலைகள் காடுகளிலேயே பெருவாயாக இருந்திருப்பதினால் இந்திய கருத்துக்கும் காட்டிற்கும் உள்ள தொடர்பை தாய், மகன் தொடர்போடு ஒப்பிட்டு சொல்லலாம். ஆனால் இத்தகைய காடுகளின் சமூக பங்கு உபநிஷத காலத்திலிருந்தே தொடங்குவதாக பலர் சொல்லுகிறார்கள். அதாவது வேதகால நாகரீக சிந்தனைகளுக்கும் காடுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கருதப்படுகிறது.

முதல் வேதமான ரிக் வேதத்தின் ரிஷிகள் ஊர்களிலும் நகரப்பகுதிகளிலும் வாழ்ந்தவர்களே ஆவார்கள் இவர்கள் ஆழமாக சிந்திப்பதற்கு தியானம் செய்வதற்கும் காடுகளை நாடியது இல்லை. வேதத்தின் பிற்பகுதியான பிரமாணங்களும் காட்டு புற நாகரீகத்தை சார்ந்து இருக்கவில்லை. ஆனால் ஊரைவிட்டும் வீட்டைவிட்டும் ஒதுங்கி இருந்து கல்வி கற்கவேண்டும் என்ற கருத்தை முதன் முதலில் மைத்ரேய ஆரண்யத்தில் காண்கிறோம். அதாவது ஒரு இந்துவின் வாழ்க்கை முறையில் கல்வி கற்பதை தனித்திருந்து கற்க வேண்டும் என்ற கருத்தை வேதங்களோ பிரமாணங்களோ கூறாமல் பிற்காலத்தில் எழுந்த ஆரண்யங்கள் மட்டுமே வற்புறுத்துவதினால் தவச்சாலைகள் என்பது காடுகளில் ஏற்படுத்தப்பட வேண்டும். என்ற கருத்து வேதகாலத்திற்கு பிறகே ஏற்பட்டிருக்க வேண்டும் என்று நம்பத் தோன்றுகிறது. இதற்கு வேறு சில ஆதாரங்களையும் குறிப்பிடலாம்.

வேதவர்ணனைகளில் படம்பிடித்து காட்டப்படும் தெய்வங்கள் அக்கால நாகரீக சின்னங்களாக கருதப்பட்ட குதிரைகள் பூட்டிய தேர்களிலேயே பவனி வருவதை காணமுடிகிறது. காடு சார்ந்த வாழ்க்கையில் மிக முக்கிய தொழிலாக கருதப்படும் வேட்டையாடுதலை இந்த வேத தெய்வங்கள் மேற்கொண்டதாக தெரியவில்லை. மாறாக வேதங்களில் அதி தேவதைகளாக கருதப்படாத மற்ற தெய்வங்களை குறிப்பிடும் பொழுது வேட்டையாடுதல் என்பது இணைத்து பேசப்படுகிறது. ஏறக்குறைய இந்து மதத்தின் மிக முக்கிய பிரிவுகளில் ஒன்றான சைவ சமய தெய்வங்களை பற்றி பேசப்படும் பொழுது அவைகளோடு வேட்டையாடுதலும் பேசப்படுகிறது.

இந்த இடத்தில் மிக முக்கியமான ஒரு விஷயத்தை சிந்தித்து பார்க்க வேண்டும். மனித சமூகம் தான் தோன்றிய காலத்திலேயே விலங்குகளை பழக்கப்படுத்தி தங்களது தேவைகளுக்கு துணை புரிவதாக ஆக்கி கொள்ளவில்லை ஆரம்ப கால மனிதன் விலங்குகளை வேட்டையாடி அதன் மாமிசங்களை உண்பதற்கு தெரிந்து வைத்திருந்தானே தவிர அவைகளை வேளாண்மைக்கும் பயணத்திற்கும் பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து வைத்திருக்கவில்லை. எனவே ஆதிகால மனிதன் தனது சிந்தனையில் தன்னை போலவே கடவுள்களும் வேட்டையாடுதலை தொழிலாக கொண்டிருக்கும் என்று கருதுவானே தவிர தேர்களை ஓட்டுவது பற்றி சிந்தித்திருக்க மாட்டான். எனவே வேட்டையாடும் தொழிலை மேற்கொள்ளும் தெய்வங்கள் சைவ சமய சார்பில் வேதங்கள் காட்டுவதால் வேதகாலத்திற்கு முன்பே இந்தியாவில் இருந்த சமயம் சைவ சமயம் என்றும் அது பிற்காலத்தில் வேதங்களோடு இணைக்கப் பெற்று செழுமை பெற்றிருக்க வேண்டும் என்றும் சிந்திக்க முடிகிறது.

தொடரும்..

Via இந்து மத வரலாறு - Religious history of hinduism