இந்து மத வரலாறு பாகம் 14

மணக்கால் அய்யம்பேட்டை | 5:32 PM | Best Blogger Tips
Photo: பாகம் 14.

வேதத்தில் இல்லாத கருத்துக்களும் நடை முறைகளும் இந்து மதத்தில் இருக்கிறது என்று சொல்வது வேதம் வேறு இந்து மதம் வேறு என்று சொல்வதற்காகவோ வேதங்களை குறைத்து மதிப்பிடுவதற்காகவோ அல்ல. இந்து மதம் என்பது வேதத்தை விட தொன்மையானது மனித சமூகத்தன் முதல் மதமாக இருப்பது என்பதை நிலை நிறுத்தி காட்டுவதற்காகத் தான். சரித்திர ஆசியர்கள் குறிப்பிடுவது போல் வேதகால மக்கள் வெளியிலிருந்து உள்ளுக்குள் வந்தவர்களாக இருந்தாலும் திருமண பந்தங்கள் மூலமாக உள்ளூர் மக்களோடு இரண்டற கலந்து விட்டதனால் எப்படி அவர்களும் இந்தியாவின் பூர்வ குடிகளாக இருக்கிறார்களோ அதே போன்றே பூர்வ குடிகளின் கருத்துக்கள் வேதங்களில் கலந்து வேதங்களை இந்து மதத்தின் ஆதாரங்களாக ஆக்கி கொண்டது. பூர்வ சிந்தனைகளும் வேத சிந்தனைகளும் கலந்து காலங்கள் பல கடந்து விட்டதனால் வேத காலத்திலிருந்து தான் இந்து மதம் தோன்றியிருக்கலாம் என்று நாம் தவறுதலாக கருதிவருகிறோம் உண்மை நிலை முன்பே இருந்த மதத்தில் வேதங்கள் கலந்து அதை செழுமை உடையதாக்கியது என்பதாகும்.

இந்து மதத்திற்கு மட்டுமல்ல ஆசியப்பகுதி சிந்தனை மரபுகளுக்கே மூலகாரணமாக இருப்பது வேதங்கள் என்பது நாமறிந்த விஷயம் தான். நம்மில் பலருக்கு வேதங்களின் பெயர்கள் தெரிந்தளவிற்கு அவற்றில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் என்னவென்று முழுமையாக இன்று வரை தெரியாது. அதற்கு வேதங்கள் வடமொழியில் எழுதப்பட்டுள்ள விஷயங்கள் ஒரு குறிப்பிட்ட சாதியார் தவிர மற்றவர்களுக்கு படிக்க அனுமதி இல்லை என்று பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் கூட அவைகள் முற்றிலும் உண்மை என்று கருத இயலாது. வடமொழி அறிந்தவர் கூட வேதம் படிக்கும் தகுதியை பெற்றவர் கூட வேதத்தின் உண்மை பொருளை உணர்ந்தவர்களாக இல்லை என்பது தான் உண்மை.

வேதங்களில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களே இன்னும் முழுமையாக அறிந்து கொள்ளபடாமலிருக்கும் போது வேதகால மக்களின் வாழ்க்கை தரம், வாழ்க்கை முறை எப்படியிருந்தது என அறிந்து கொள்வதும் கடினம். அறிய முயற்ச்சிப்பவர்களும் மிக குறைவு. அப்படியே தப்பி தவறி முயற்சி செய்பவர்கள் ஒன்று வேதங்களை திட்டுபவர்களாகவோ அல்லது அதீதமாக போற்றி புகழ்பவர்களாகவோ இருந்து விடுகிறார்கள். இதனால் உண்மையான நிலவரத்தை அறிய ஆர்வமுடையவர்கள் அறிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே இந்து மத வரலாற்றை முழுமையாக இல்லையென்றாலும் ஓரளவாவது அறிந்து கொள்ள வேதகால சமுதாயம் எப்படியிருந்தது என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அப்படி அறிந்தால் தான் வேத கருத்துக்களையும் இந்து மத சிந்தனைகளையும் நம்மால் புரிந்து கொள்ள ஓரளவு முடியும்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை குறிப்பிடும் போது அது இப்போது தோன்றி இந்த காலத்தில் முடிந்தது என காலவரையறை சொன்னால் தான் கேட்பவர்களுக்கு சரியான முறையில் கிரகித்து கொள்ள வசதியாக இருக்கும். ஆனால் வேத காலத்தை பற்றி சொல்லும் போது அது எப்போது துவங்கியது. எப்போது முடிவுக்கு வந்தது என்று சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை. வரலாற்று ஆய்வாளர்கள் எட்டிபார்க்க முடியாத மிக நீண்ட நெடிய காலத்திற்கு முன்பே வேதங்களின் காலம் துவங்கிவிட்டது என்று சொல்லலாம். இருப்பினும் ஒரு கணக்கு குறியீட்டுக்காக கி.மு. ஆறாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட காலத்தை வேதகாலம் என்று சொல்கிறார்கள். நான்கு வேதங்களில் முதன்மையானது ரிக்வேதம் என்று நமக்கு தெரியும். ரிக்வேதம் தோன்றி பல நூற்றாண்டுகளுக்கு பிறகு தான் மற்ற மூன்று வேதங்களும் தோன்றியிருக்கிறது. ஆனாலும் ஆச்சர்யம் என்னவென்றால் பல நூற்றாண்டுகளின் இடைவெளியில் வேதங்கள் தோன்றியிருந்தாலும் கூட அவற்றுகிடையில் மெல்லிய தொடர்ச்சி அவற்றை தனிதனியாக போகாமல் ஒருங்கிணைக்கிறது.

தொடரும்...
பாகம் 14.

வேதத்தில் இல்லாத கருத்துக்களும் நடை முறைகளும் இந்து மதத்தில் இருக்கிறது என்று சொல்வது வேதம் வேறு இந்து மதம் வேறு என்று சொல்வதற்காகவோ வேதங்களை குறைத்து மதிப்பிடுவதற்காகவோ அல்ல. இந்து மதம் என்பது வேதத்தை விட தொன்மையானது மனித சமூகத்தன் முதல் மதமாக இருப்பது என்பதை நிலை நிறுத்தி காட்டுவதற்காகத் தான். சரித்திர ஆசியர்கள் குறிப்பிடுவது போல் வேதகால மக்கள் வெளியிலிருந்து உள்ளுக்குள் வந்தவர்களாக இருந்தாலும் திருமண பந்தங்கள் மூலமாக உள்ளூர் மக்களோடு இரண்டற கலந்து விட்டதனால் எப்படி அவர்களும் இந்தியாவின் பூர்வ குடிகளாக இருக்கிறார்களோ அதே போன்றே பூர்வ குடிகளின் கருத்துக்கள் வேதங்களில் கலந்து வேதங்களை இந்து மதத்தின் ஆதாரங்களாக ஆக்கி கொண்டது. பூர்வ சிந்தனைகளும் வேத சிந்தனைகளும் கலந்து காலங்கள் பல கடந்து விட்டதனால் வேத காலத்திலிருந்து தான் இந்து மதம் தோன்றியிருக்கலாம் என்று நாம் தவறுதலாக கருதிவருகிறோம் உண்மை நிலை முன்பே இருந்த மதத்தில் வேதங்கள் கலந்து அதை செழுமை உடையதாக்கியது என்பதாகும்.

இந்து மதத்திற்கு மட்டுமல்ல ஆசியப்பகுதி சிந்தனை மரபுகளுக்கே மூலகாரணமாக இருப்பது வேதங்கள் என்பது நாமறிந்த விஷயம் தான். நம்மில் பலருக்கு வேதங்களின் பெயர்கள் தெரிந்தளவிற்கு அவற்றில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் என்னவென்று முழுமையாக இன்று வரை தெரியாது. அதற்கு வேதங்கள் வடமொழியில் எழுதப்பட்டுள்ள விஷயங்கள் ஒரு குறிப்பிட்ட சாதியார் தவிர மற்றவர்களுக்கு படிக்க அனுமதி இல்லை என்று பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் கூட அவைகள் முற்றிலும் உண்மை என்று கருத இயலாது. வடமொழி அறிந்தவர் கூட வேதம் படிக்கும் தகுதியை பெற்றவர் கூட வேதத்தின் உண்மை பொருளை உணர்ந்தவர்களாக இல்லை என்பது தான் உண்மை.

வேதங்களில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களே இன்னும் முழுமையாக அறிந்து கொள்ளபடாமலிருக்கும் போது வேதகால மக்களின் வாழ்க்கை தரம், வாழ்க்கை முறை எப்படியிருந்தது என அறிந்து கொள்வதும் கடினம். அறிய முயற்ச்சிப்பவர்களும் மிக குறைவு. அப்படியே தப்பி தவறி முயற்சி செய்பவர்கள் ஒன்று வேதங்களை திட்டுபவர்களாகவோ அல்லது அதீதமாக போற்றி புகழ்பவர்களாகவோ இருந்து விடுகிறார்கள். இதனால் உண்மையான நிலவரத்தை அறிய ஆர்வமுடையவர்கள் அறிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே இந்து மத வரலாற்றை முழுமையாக இல்லையென்றாலும் ஓரளவாவது அறிந்து கொள்ள வேதகால சமுதாயம் எப்படியிருந்தது என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அப்படி அறிந்தால் தான் வேத கருத்துக்களையும் இந்து மத சிந்தனைகளையும் நம்மால் புரிந்து கொள்ள ஓரளவு முடியும்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை குறிப்பிடும் போது அது இப்போது தோன்றி இந்த காலத்தில் முடிந்தது என காலவரையறை சொன்னால் தான் கேட்பவர்களுக்கு சரியான முறையில் கிரகித்து கொள்ள வசதியாக இருக்கும். ஆனால் வேத காலத்தை பற்றி சொல்லும் போது அது எப்போது துவங்கியது. எப்போது முடிவுக்கு வந்தது என்று சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை. வரலாற்று ஆய்வாளர்கள் எட்டிபார்க்க முடியாத மிக நீண்ட நெடிய காலத்திற்கு முன்பே வேதங்களின் காலம் துவங்கிவிட்டது என்று சொல்லலாம். இருப்பினும் ஒரு கணக்கு குறியீட்டுக்காக கி.மு. ஆறாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட காலத்தை வேதகாலம் என்று சொல்கிறார்கள். நான்கு வேதங்களில் முதன்மையானது ரிக்வேதம் என்று நமக்கு தெரியும். ரிக்வேதம் தோன்றி பல நூற்றாண்டுகளுக்கு பிறகு தான் மற்ற மூன்று வேதங்களும் தோன்றியிருக்கிறது. ஆனாலும் ஆச்சர்யம் என்னவென்றால் பல நூற்றாண்டுகளின் இடைவெளியில் வேதங்கள் தோன்றியிருந்தாலும் கூட அவற்றுகிடையில் மெல்லிய தொடர்ச்சி அவற்றை தனிதனியாக போகாமல் ஒருங்கிணைக்கிறது
 
------------------------------------------------------------------------------------------------------------------------

வேதத்தில் குறிப்பிடப்படும் தெய்வங்களுக்கு தனித்தன்மையும் தனி உருவமும் இல்லை. அதாவது தேவதைகளை அருவமாக வழிபடுவதே வேத மரபாகும். அதனால் வேதக் கடவுளான இந்திரன், வருணன், வாயு, அக்னி இவைகளுக்கு தனிப்பட்ட வகையில் எந்த உருவமும் ஆதியில் கொடுக்கப்படவில்லை. இன்று சிலை வடிவங்களால் காட்சி அளிக்கும் அந்த தெய்வ உருவங்கள் மிக சமீப காலத்திலேயே உருவாக்கப்பட்டது ஆகும். ஆனால் சிவனுக்கும் அம்பிகைக்கும் கொடுக்கப்பட்டுள்ள உருவங்கள் வேதத்திற்கு மிகவும் முற்பட்ட உருவங்கள் ஆகும். அது மட்டுமல்ல வேதங்கள் ஆலைய வழிபாட்டை வலியுறுத்தவே இல்லை. தனிதனி குழுக்களாகவோ அல்லது சமுதாய கூட்டங்களாகவோ மனிதர்கள் ஒருங்கிணைந்து வேள்விச் சடங்கை செய்யச் சொல்லி தான் வேதங்கள் வற்புறுத்துகின்றன. ஆனால் பூர்வ கால இந்திய மக்கள் உருவ வழிபாட்டை முதன்மையாக கொண்டவர்களாகவும் வழிபாட்டுக்கு என்று தனி இடத்தை தேர்ந்தெடுத்து செய்பவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.

ஆதிகால மக்கள் ஆலய வழிபாட்டை மேற் கொண்டவர்களாக இருந்தாலும் கூட பின்னர் வந்த வேதகால கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அவர்கள் ஆலய வழிபாட்டை கைவிட்டு விட்டனர் என்றே தோன்றுகிறது. இதனால் தான் ராமாயணத்திலும், மகாபாரதத்திலும் மற்றுமுள்ள பழைய புராணங்களிலும் ஆலயங்களை மன்னர்கள் புதிதாக உருவாக்கியதாகவோ மக்கள் அதில் சென்று வழிபாடு நடத்தியதாகவோ எந்த குறிப்பும் இடம் பெறவில்லை.

இதை விட முக்கியமான இன்னொரு ஆதாரம் உள்ளது. அது சிந்து நதி பள்ளத்தாக்கு நாகரீகத்தில் மிகத் தெளிவாகக் காணும் வேதத் தொடர்பில்லாத தன்மையை நமக்கு உள்ளங்கை நெல்லிக் கனிபோல் எடுத்து காட்டுகிறது. அதாவது இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறையாகும். இந்தியாவின் பூர்வ குடிகள் தெற்கே வாழ்ந்த போதும் சரி வடக்கே நகர்ந்த போதும் சரி இறந்தவர்களை தாழிகளில் வைத்து புதைக்கும் பழக்கத்தை மேற்கொண்டிருந்தனர். எப்பொழுதுமே அவர்கள் இறந்த உடல்களை எரித்துவிடவில்லை. புதைத்தே வைத்தனர். ஏன் அப்படி அவர்கள் செய்தார்கள் என்பதில் ஒரு உண்மை தெளிவாக ஒளிந்து கிடக்கிறது.

ஆதிகால மக்கள் உடலைவிட்டு உயிர் பிரிந்ததும் உயிரின் வேலை முடிந்து விடுவதாக கருதவில்லை. உலகை விட்டு சென்ற உயிர் மீண்டும் பூமிக்கு திரும்பி வரும் என்று அவர்கள் நம்பினார்கள். அப்படி வருகின்ற போது உயிர்கள் வாழ்வதற்கு உடல்கள் தேவை என்பதினால் அந்த உடலை எரிக்காமல் புதைத்து வைப்பதே சிறந்த வழி என்று கருதினார்கள். இன்று கூட ஆன்மீக உயர் நிலையை அடைந்த ஞானிகளின் உடலை எரிக்காமல் புதைப்பதும் அந்த நம்பிக்கையினால் தான். வேதங்களை நெறியாகக் கொண்ட மக்கள் உடல்களை புதைப்பது இல்லை எரித்து விடுவார்கள். ஏன் என்றால் வேதங்கள் உயிர்களின் மறு வருகையை பற்றி எதுவும் கூறவில்லை.

வேதங்கள் மறுபிறப்பை பற்றி எதுவும் சொல்லவில்லை என்றாலும் இந்து மதத்தின் ஆதாரக் கொள்கையாக இருப்பது மறுபிறப்பு கொள்கையாகும். வேத காலத்திற்கு முற்பட்டகாலத்திலிருந்தே மறு பிறப்பு பற்றிய சிந்தனைகள் இந்து மக்களிடையே ஆழமாக வேறூன்றி இருப்பதனால் இந்து மதம் வேதக் கொள்கைகளை தனக்கு ஆதாரமாக கொண்டிருந்தாலும் கூட வேதம் சாராத கொள்கைகளையும் தனக்குள் அடக்கி இன்று வரை நிலைத்து வருகிறது.

தொடரும்..
 
Via இந்து மத வரலாறு - Religious history of hinduism