ரிக்வேத
காலத்தில் இறைவழிபாடு என்பது இயற்கை வழிபாடாகவே இருந்தது. கடவுகளுக்கு
அவர்கள் எந்த தனிப்பட்ட உருவத்தையும் கொடுத்தது இல்லை. இயற்கை சக்திகளை
வருணன், அக்னி, வாயு, பிருத்வி என்று பல்வேறு பெயர்களில் துதி செய்து
வழிபட்டனர். அப்படி வழிபட்ட தெய்வங்களில்
ரிக்வேதத்தில் மட்டும் இருபத்தி மூன்று சக்திகளாகும். ஆரம்ப காலத்தில்
வேதகால மக்களால் தீயஸ் என்னும் கடவுளும், பிருத்வி என்ற கடவுளும் பெரிதும்
வழிப்படபட்டனர். காலம் செல்ல செல்ல இத்தெய்வங்கள் சிறப்பாக
கொண்டாடப்படவில்லை. அதற்கான காரணம் என்னவென்று சரிவர தெரியலில்லை. இடி
இடித்து மழை பெய்விக்கும் வருணணும், மேக கடவுளான இந்திரனுமே நான்கு வேத
காலங்களிலும் முதலிடம் பெற்றிருந்தனர். அதிலும் வருணனுக்கு தனி இடம்
கொடுக்கப்பட்டது. திராவிடர்களிடமிருந்து திருமாலை பற்றிய அறிவை பெற்ற பிறகு
எப்படி திருமாலானவன் பாவங்களை மன்னிப்பவனாக கருதப்பட்டானோ அப்படியே
வருணனும் வேதகாலத்தில் கருதப்பட்டான்.
வருணன் இந்திரன் ஆகிய கடவுள்களை தவிர மருத்துகள் புயல் கடவுளாகவும் ருத்திரன் மின்னல் கடவுளாகவும் வணங்கப்பட்டான். சிவன், திருமால், விநாயகன், முருகன், பார்வதி மகாலஷ்மி போன்ற கடவுள்களைப் பற்றிய நேரடியான குறிப்புகள் வேதங்களில் இல்லையென்றாலும் கூட அவர்களை பற்றிய மறைமுகமான குறியீடுகள் வேதத்தில் உள்ளன. மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மாவை விதாத்,ஹிரன்யகர்ப்பன், பிரஜாபதி பிராமணஸ்பதி என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
இவைகளையெல்லாம் பார்க்கும் போது வேதகாலத்தில் பல கடவுள் வழிபாடு இருந்ததாக நமக்கு தோன்றும். நான் பல சமயங்களில் இந்து மத சிறப்புகளை சொல்லுகின்ற போது சில பகுத்தறிவாத நண்பர்களும் மாற்றுமத சகோதர்களும் இந்து மத வேதங்கள் கடவுள் பல என சொல்லி தவறான பாதையை காட்டுகிறது என்று குறைபட்டவர்களும் உண்டு. குற்றம் சாட்டியவர்களும் உண்டு. அவர்களுக்கெல்லாம் எனது ஒரே பதில் இந்து மதத்தில் பல கடவுள் பெயர்கள் உண்டு. அவைகள் கடவுளின் ஒவ்வொரு செயலிலும் அவருக்கு உள்ள பெயரே தவிர அவரே பல அல்ல, என்பது தான். உதாரணமாக இயற்கை மழையாக கொட்டுகின்ற போது இந்திரன் என்று அழைக்கப்படுகிறது. மழை தண்ணீரே வெள்ளமாக பாயும் போது வருணன் என்று அழைக்கப்படுகிறது. ஆனாலும் இயற்கை ஒன்றே தான். இந்து மத தத்துவப்படி கடவுள் இயற்கையாகவும் இருக்கிறார். இயற்கைக்கு அப்பாற்பட்டும் இருக்கிறார். இயற்கையை வழிநடத்துபவராகவும் இருக்கிறார். இதற்கு என்ன ஆதாரம் என்று சிலர் கேட்கலாம். அவர்களுக்காக ரிக் வேதத்தில் உள்ள ஒரு பாடலை கீழே தருகிறேன்.
‘இந்திரனென்றும், மித்திரனென்றும், வருணனென்றும்,
அக்கினியென்றும், தெய்விகம் பொருந்திய கருடமதன்
என்றும் உன்னை வழங்குவர்.’
‘ஒரு பொருளாம் உனக்குக்
கவிஞர் பல பெயர்கள் அளிப்பார்
அக்கினியும், யமனும் மாதிசுவனும்
நீயே அன்றோ?’
இதை விட சிறந்த ஆதாரம் வேறு எதையும் தர இயலாது. இன்னும் ஒருபடி மேலே சொல்ல வேண்டுமென்றால் இன்று கடவுள் ஒருவரே என்று சொல்லுகின்ற மதங்கள் கூட இந்திய வேதத்தில் இருந்து தான் ஒரு தெய்வ வழிபாட்டை பெற்றிருக்கின்றன என்று சொல்லலாம். அதாவது பாரசீகத்தில் தோன்றிய சொராஸ்தியர் என்பவர் உபநிஷத ஞானியொருவரின் உபதேசத்தை கேட்ட பிறகே அஸ்சரமஸ்தா என்ற முழுமுதற் கடவுளை அறிந்து சொராஸ்திய மதத்தை ஸ்தாபித்தார். அவரின் அஸ்ரமஸ்தா தான் யுத மதத்தின் ஜெகோவா கடவுளானார். ஜெகோவா கடவுளே கிறிஸ்துவத்தில் பரிசுத்த ஆவியானார். இந்த பரிசுத்த ஆவிதான் இஸ்லாம் சொல்லும் அல்லா. எனவே உலகிலுள்ள எல்லா மதங்களுக்கும் ஆதார தத்துவத்தை கொடுத்தது இந்து மத வேதங்கள் தான்.
தொடரும்....