வேதத்தில்
பெருவாரியாக குறிப்பிடபடாமல் இந்து மதத்தில் முக்கியமாக கருதப்படும்
தெய்வங்கள் அனைத்துமே காடுகளோடும் வேட்டையாடுவதோடும் தொடர்புடையதாக
இருக்கிறது. அதே நேரம் சைவ சமய பிவுகளில் காட்டப்படும் முக்கிய தெய்வங்கள்
அனைத்தும் வேத தெய்வங்களோடு
சம்பந்தப்படாதவைகளாக இருக்கிறது அதனால் இத்தகைய தெய்வங்கள் இந்தியாவின் ஆதி
குடிகளின் தெய்வமென்றும் அவைகளை பிற்காலத்தில் வேத சமூகம் தமதாக்கி
கொண்டிருக்கின்றன என்பதும் தெளிவாகிறது. அத்தகைய ஆதி தேவதைகளில் மிக
முக்கியமானது காளி அல்லது துர்க்கை, ஐயப்பன் அல்லது சாஸ்தா என்ற இரண்டு
தேவதைகளையும் தனித்து சுட்டிக்காட்டலாம்.
சாஸ்தா எனும் ஐயப்பன் சிவனுக்கும் திருபாற்கடலை கடைந்த போது உருவான அமிர்தத்தை பகிர்ந்த போது உருவான மாயை என்ற விஷ்ணுவுக்கும் பிறந்ததாக கருதப்படுகிறது. தென்னிந்தியாவில் சாஸ்தா தெய்வங்கள் இருக்கும் பகுதிகளை காவு என்ற பெயரில் இன்றும் அழைக்கப்படுவதை காணலாம். காவு என்ற வார்த்தைக்கு காடுகள் அல்லது சோலைகள் என்ற பொருளை சொல்லலாம். அதாவது காட்டுப் புறத்திலும் சோலை வனங்களிலும் சாஸ்தா வணங்கப்பட்டதாக சொல்லலாம். இன்று கூட திருநெல்வேலியின் எல்லை கிரமமாக இருக்கும் காரிக்கோயில் என்ற ஊரில் பூமிக்கு அடியில் கடலோரத்தில் உள்ள சாஸ்தா கோயில் காரி சாஸ்தா அல்லது காவு சாஸ்தா என்று அழைக்கப்படுவதை காணலாம்.
புலிப்பால் கொண்டு வர சாஸ்தா அனுப்பப்பட்டதும் எருது முக அரக்கனோடு காளி தேவி சண்டையிட்டதும் சாஸ்தா, காளி ஆகிய இரு தெய்வங்கள் காடுசார்ந்த சமய வளர்ச்சியால் உருவானவைகள் என்பதை நமக்கு சொல்லாமல் சொல்லும். இந்த இரு தெய்வங்களும் வேதங்களால் ஆரம்பத்தில் சிறப்பித்து கூறப்படவில்லை என்பதிலிருந்தும் இவைகள் தென்னிந்திய சாயலில் வர்ணிக்கபடுவதிலிருந்தும் வேதங்களுக்கு முற்பட்டே இத்தெய்வ வழிபாடுகள் நமது நாட்டில் இருந்திருப்பது நன்கு புலனாகும்.
இத்தகைய வேதம் சாராத அல்லது வேதங்களுக்கு முற்பட்ட சமய வளர்ச்சியின் கூறுகள் வேத சிந்தனைகளுக்கு செரிவூட்டி இருப்பதை யாரும் மறுக்க முடியாது. இத்தகைய சமய பங்களிப்பு வேதங்களில் புரட்சிகரமான மாறுதலை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். வேத நாகரீகம் என்பது வைதீக சடங்குகளையும் யாகங்களில் சோமரசத்தை அளிப்பதையுமே முக்கியமானதாக இருந்தது. வேதத்தின் மூலப்பாடங்கள் இம்மாதிரி சடங்குகளில் மிக நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தாலும் கடவுளை ஆத்மாவை சீர்தூக்கி சிந்தித்து பார்க்கும் தன்மையை முற்றிலுமாக கருத்தில் கொள்ளவில்லை என்று சொல்லி விட முடியாது. ரிக் வேத ரிஷிகளில் பலர் கடவுளோடு ஒன்றுபடும் உணர்வுகளை துல்லியமாக பெற்றிருந்தனர் என்பது தெரிகிறது. ஆனால் புலன் கடந்த உணர்வுகளை யோக மார்க்கத்தில் பெறுவதை வேதங்கள் தனக்கு முன்பிருந்த மக்களிடமிருந்தே பெற்றிருக்க வேண்டும்.
கடவுளுக்கு உருவம் கொடுத்து வழிபடுவது என்பதே மனதை ஒரு நிலை படுத்தும் யோக மார்க்கத்திற்கு ஒரு எளிய வழியாகும். இந்த உருவ வழிபாட்டு முறையை வேதங்கள் சிறப்பித்து கூறவில்லை. யாகங்கள் செய்வதையும் வேறு சில சடங்கு முறை செய்வதையுமே வேதங்கள் வலியுறுத்தி கூறுகின்றன. ஆனால் வேதகாலத்திற்கு முற்பட்ட இந்திய சமூகம் உருவ வழிபாட்டை குறிப்பாக லிங்க வழிபாடு சிவ வழிபாடு ஆகியவைகளை ஆழமாக கொண்டிருந்தனர். இந்த ஆழமான உருவ வழிபாடு வேதங்களில் அவ்வளவாக வற்புறுத்த படாததை பார்க்கின்ற போது அது மிகவும் காலம் தாழ்ந்து வேதங்களில் சேர்க்கபட்டிருப்பது புலனாகும். இதனாலும் உருவ வழிபாடுடைய இந்து மதம் வேதகாலத்திற்கு முற்பட்டது என்பது உறுதியாகும்.
பராக்கிரம் பொறுந்திய செயற்கய செயல்களை புரிந்த மனிதர்களை தெய்வ நிலைக்கு உயர்த்தி வழிபடும் வழக்கம் வேதகாலத்தில் இல்லை. ஆனால் சிந்து வெளியில் கிடைகின்ற சில முத்திரை சித்திரங்களில் மனிதனை தெய்வமாக வழிபடும் தன்மை இருந்திருப்பதாக அறிய முடிகிறது. இந்த தன்மையே பிற்காலத்தில் மக்களை காப்பாற்ற கடவுள் மனிதனாக இறங்கி வரும் அவதாரக் கொள்கையாக வேதங்களில் பேசப்படுகிறது. இதற்கு உதாரணமாக அங்கிரஸ் என்ற மகரிஷியின் வாழ்க்கை விபரம் வேதத்தில் கூறப்பட்டதிலிருந்து அறிந்து கொள்ளலாம். பகவான் விஸ்ணு அவதாரங்கள் பல எடுத்திருந்தாலும் அந்த அவதாரங்கள் எல்லாமே வேதங்களில் விவரிக்கப் படவில்லை. அண்ட சராசரங்கள் அனைத்தையும் மூன்று அடிகளால் அளந்த வாமன அவதாரத்தை பற்றிய சிறு குறிப்பும் வராக அவதாரத்தை பற்றிய சிறு குறிப்புகளுமே வேதத்தில் காணப்படுகிறது. ஆகவே இந்து மதத்திலுள்ள அவதாரக் கொள்கை என்பது வேதகாலத்திற்கு முற்பட்டதாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தொடரும்..