* கடவுளிடம் நம் குறைகளைச் சொல்லி முறையிடுவது வெறும் மூடநம்பிக்கை அல்ல.
* பலம் என்பது உடல்வலிமை மட்டுமல்ல. மனவுறுதியே உண்மையான பலம்.
* நேர்மையாக வியாபாரம் செய்வது கடினம். ஆனால் அது முடியாத செயல் அல்ல.
* தேவைகளைப் பெருக்கிக் கொள்வது அநாகரிகம். குறைத்துக் கொள்வதே நாகரிகம்.
* நற்செயல்கள் அனைத்தும் இறுதியில் ஒருநாள் பலன் அளித்தே தீரும் என உறுதியாக நம்புங்கள்.
* வேகத்தால் எதையும் சாதிக்க முடியாது. விவேகமானவனோ வாழ்வில் நிறைய சாதிப்பான்.
* தெய்வத்தின் கணக்குப் புத்தகத்தில் நம் செயல்கள் மட்டுமே குறிக்கப்படுகின்றன. நாம் பேசியவையும், படித்தவையும் அல்ல.
* பாவத்தை மனதில் மறைத்து வைக்காதீர்கள். அது உடலில் மறைந்து கொல்லும் நஞ்சு போன்றது.
* பாவத்தை வெறுக்கலாம். பாவியை வெறுக்காதீர்.
* வாழ்நாள் முழுவதும் பழகி வந்த பழக்கத்தை நொடியில் விட்டு விட முடியாது.
- காந்திஜி