கர்பமாவதற்கு முன் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

மணக்கால் அய்யம்பேட்டை | 2:24 AM | Best Blogger Tips
திருமணமான பின்பு, குழந்தைபெற முயற்சிக்கும்போது சில சமய ங்களில் தோல்வியை சந்திக்கலாம். இதற்கு பெரும் காரணம், கர்பமாவதற்கு முன் என்னவெல் லாம் செய்ய வேண்டும் என்பது பற்றி சரியாக தெரியாததே ஆகும். மேலும் பெரும்பாலானோர் திரும ணத்திற்கு பின், சீக்கிரம் கர்ப்பமாக வேண்டுமெ ன்று திருமணமான முதல் இரண்டு மாதங்களிலேயே முயற்சி செய்வார்கள். ஆனால் இவ்வாறு முயற்சிப்பதைவிட, இரண்டு மாதவிடாய் சுழற்சியான து முடிந்த பின்னர், கருத்தரிக்க முயற்சிப்பது சிறந்த பலனைத் தரும். மேலும் இந்த செயலால், கருத்தரிப்பதில் ஏதேனும் பிரச்ச னை இருந்தாலும் நன்கு தெரிந்து கொள்வ தோடு, அதனை சரிசெய்தும் கருத்த ரிக்க முடியும். இல்லையெனில், கீழே கொடுக்கப் பட்டுள்ள சில செயல்க ளை பின்பற்றுவதன் மூலமும் எளி தில் கருத்தரிக்கலாம். பொதுவாக எளிதில் கருத்தரிப்பதற்கு சில கருவி கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்ற ங்களின் மூலம் எளிதில் கருத்தரிக் கலாம். உதாரணமாக, ஓவுலேசன் ஸ்ட்ரிப் (ovulation strips) மற்றும் ஓவுலே சன் காலெண்டர் (ovulation calendars) போன்ற கருவிகளின் உதவியால் எளிதில் கருத்தரிக்க முடியும். எப்படி யெனில், இவை எப்போது கருத்தரிக்க முயற்சி த்தால் எளிதில் கர்பமாக முடியும் என்பதை சொல்லும். மேலும் வாழ்க் கை முறை மாற்றங்களில் புகைப் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தி னால், விரைவில் கர்பமாகலாம். இப்போது விரைவில் கர்பமாக எந்த மாதிரியான விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
.
எடையில் கட்டுப்பாடு
.
கர்பமாக நினைக்கும் போது உடல் எடையில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் எடை அதிகமாக இருந்தால், கருத்தரிப்பதில் பிரச்ச னை ஏற்படும்.
.
உடற்பயிற்சி
.
சில எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலமும் கருத்த ரிக்க முடியும். எப்படியெனில் உடற் பயிற்சியினால் தசைகள் தளர்வதோடு, ஹார் மோன்களும் சீராக இயங்கும். முக்கியமாக, உடற் பயிற்சியை மேற்கொள்ளும்போது, கருப்பை க்கு அதிகமான அழுத்தம் கொடுக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
.
ஓவுலேசன்
.
காலெண்டர் ஓவுலேசன் காலெண்ட ரைப் பயன்படுத்தினால், எந்த காலத்தில் உறவுகொண்டால், கருத்தரிக்க லாம் என்பதை நன்கு தெரிந்து, அதற்கேற்றாற் போல் செயல்பட்டு, எளிதில் கருத்தரிக்க லாம்.
.
ஓவுலேசன் ஸ்ட்ரிப்
.
வுலேசன் ஸ்ட்ரிப் என்பது ஒரு கருவி. இதனை பிறப்புறுப்பில் நுழைத்து 1 நிமிடம் கழித்து எடுத்துப் பார்க்கும் போது, சிவப்பு நிறத்தில் கோடுகள் தெரிந்தால், இது உறவு கொள்வதற்கான சரியான நேரம் என்றும், இந்த நிலையில் உறவு கொண்டால், எளிதில் கருத்தரிக்கலாம் என்றும் அர்த்தம்.
.
புகைப்பிடித்தலை நிறுத்துதல்
.
அதிகமாக புகைப்பிடித்தால், குழந்தை இடம் மாறும் பிரசவத்திற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. மேலும் இதைப் பிடிப்பதால், சில சமயங்களில் மலட்டுத்தன்மைகூட ஏற் படும். எனவே கருத்தரிக்க ஆசைப்பட்டால், ஒரு வருடத்திற்கு முன்பிருந்தே புகைப்பிடி த்த லை அறவே தவிர்த்து விட வேண்டும்.
.
கருத்தரிக்க உதவும் உணவுகள்
.
சில உணவுகளை சாப்பிட்டால், அவை கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கும். அதிலும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசி மற்றும் பால் பொருட்களை பெண்கள் சாப்பிட் டால், அவை எளிதில் கருத்தரிக்க உதவி யாக இருக்கும்.
.
விந்தணுவின் எண்ணிக்கை
.
ருத்தரிக்க முயற்சிக்கும்போது, துணையின் விந்தணுவை அதிக ரிக்கும் வகையில், துணைக்கு ஜிங்க் நிறைந்த உணவுகளை அதி கம் கொடுக்க வேண்டும். மேலும் அவர்களை புகைப்பிடிக் கவோ, மது அருந்தவோ அனுமதிக்கா மல், தினந்தோறும் உடற்பயிற்சி களை மேற்கொள்ள வைக்க வேண்டும்.
.
ஈரமான நாட்கள்
.
சில சமயங்களில் பிறப்புறுப்பில் அதிகப்படியா ன ஈரத்தை உணர நேரிடும். பொதுவாக பாது காப்பற்ற நாட்களில் கர்பப்பையின் வாயிலிரு ந்து அதிகப்படியான சளியானது சுரக்கப்படும். இத்த கைய ஈரப்பதத்தை உணர்ந்தால், அது கருத்தரிக்க வேண்டுமெனில், முயற்சிக்க வேண் டிய காலம் என்பத ற்கான ஒரு அறிகுறியாகும்.
.
மன அழுத்தத்தை குறைக்கவும்
.
கர்பமாவதற்கு தடையை ஏற்படுத்து வதில் மன அழுத்தம் முக்கிய பங்கி னை வகிக்கிறது. எனவே கர்ப்பமாக வேண்டுமெனில், மன அழுத்தத்தைக் குறைக்க முயற்சிக்க வேண்டும். அத ற்கு யோகா, தியானம் போன்றவற்றை பின்பற்ற வேண்டும்.
 
Via  விதை2விருட்சம்