விநாயகர் விரத முறை

மணக்கால் அய்யம்பேட்டை | 12:18 PM | Best Blogger Tips
Image result for விநாயகர் விரத முறை
 விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் புரிவார். அதனால் தான் அவர் எல்லாருக்கும் பொதுவாகவும், சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார். நினைத்த காரியம் நிறைவேற விநாயகருக்கு விரதம் இருப்போம். விரதம் இருக்கும்போது நாம் என்ன செய்ய வேண்டும். எப்படி விரதம் இருக்க வேண்டும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.
 தொழிலில் லாபம் வேண்டும் என்று விரதம் இருப்பவர்கள் குயவர் மண்ணால் செய்த மண் பொம்மையை பு+ஜை அறையில் வைத்து வணங்க வேண்டும்.
 கடன் தீர விரதம் இருப்பவர்கள் சிறு தொகையை பு+ஜையில் வைத்த பிறகு உரிய நபருக்கு கொடுக்க முயற்சித்தால் அந்த ஆண்டிற்குள் படிப்படியாக கடன் அடைந்து விடும்.
 ஒரு வருட காலத்திற்கு விரதம் இருக்கும்போது இடையில் இறப்பு, தீட்டுக்காலம் வந்தால் 16 நாட்கள் நிறுத்தி விட்டு அடுத்து வருகிற வெள்ளிக்கிழமை அன்று காக்கைக்கு காலையில் நெய் விட்டு வெறும் சாதத்தை போட்டு காக்கை எடுத்த பின் விரத பு+ஜை தொடங்க வேண்டும்.
 கல்வியில் முன்னேற்றம், வேலை கிடைக்க வழிபாடு செய்பவர்கள் வலம்புரி கணபதியை பு+ஜையில் வைத்து வழிபட்டு மறுநாள் காலையில் அரச மரத்து விநாயகரை சுற்றி வந்து வணங்குதல் வேண்டும்.
 திருமணமானவர்கள் விரத நாட்களில் பாயில் படுத்தல் கூடாது. காலையில் எழுந்து குளித்து விட்டு விநாயகரை நினைத்து தீபம் ஏற்றி ஒரு பொழுது விரதம், ஒரு வேளை உணவு உண்டு இருக்க வேண்டும்.
 விநாயகர் விரதம் தொடங்குபவர்கள் பாதியில் விரதத்தை விடுதல் கூடாது.
மேற்காணும் விரத முறையை கடைபிடித்து விநாயகருக்கு விரதம் இருந்து பலன்களை பெறுவோம் !!

 நன்றி இணையம்

*BALANCE SHEET Of LIFE*

மணக்கால் அய்யம்பேட்டை | 12:15 PM | Best Blogger Tips

Birth is your
*Opening Stock.*

What comes to you
is
*Credit.*

What goes from you
is
*Debit.*

Death is your
*Closing Stock.*

Your ideas are your
*Assets.*

Your bad habits are 
your *Liabilities.*

Your happiness is
your
*Profit.*

Your sorrow is your
*Loss.*

Your soul is your
*Goodwill.*

Your heart is your
*fixed*
*Assets*

Your character is 
your
*Capital.*

Your knowledge is
your
*Investment*

Your age is your
*Depreciation.*

And finally :

*ALWAYS REMEMBER, GOD IS YOUR AUDITOR*.

Have a perfect balance sheet...


 நன்றி இணையம்

கிணற்றுக்குள் கங்கை!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:04 PM | Best Blogger Tips

கும்பகோணத்தில் இருந்து சுமார் 10 கி.மீ தூரத்தில் உள்ளது திருவிச நல்லூர். இந்த ஊரைச் சொன்னதுமே ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள் எனும் மகான்தான் ஞாபகத்துக்கு வருவார். இவரது வாழ்வில் ஒரு சம்பவம்.
ஒருமுறை இவரது வீட்டில் சிராத்தம் வந்தது. வீட்டில் அதற்கான சமையல் தயாராகிக்கொண்டிருந்தது. ஐயாவாள் காவிரியில் குளிக்கக் கிளம்பினார். வழியில் ஏழை ஒருவன் பசியால் துடித்துக்கொண்டிருந்தான். அவனை தன் வீட்டுக்கு அழைத்து வந்து உணவிட்டார். ஆனால், அவரைப் பிடிக்காத அந்தணர்கள் சிலர், ஏழைக்கு அவர் உணவிட்டதைக் காரணம் காட்டி அவரை விலக்கி வைத்தனர். அவரது வீட்டுக்குச் செல்வதில்லை என்றும் முடிவெடுத்தனர். அன்றைய சிராத் தத்தை அந்தணர்கள் இல்லாமல் ஒருவாறு செய்துமுடித்தார் ஐயாவாள்.
சிலநாட்களில் மீண்டும் ஒரு சிராத்தம் வந்தது. அதை முறைப்படி செய்ய விரும்பிய ஐயாவாள், அந்தணர்களிடம் சென்று வீட்டுக்கு அழைத்தார். 'தகுந்த பிராயச்சித்தம் செய்யவும் தயாராக இருக்கிறேன்' என்றார். 'எனில் கங்கையில் குளித்து வாரும்!' என்றனர். காசிக்குச் சென்று கங்கையில் நீராடிவர வெகுநாட்கள் ஆகுமே! எனவே, ஸ்ரீதர ஐயாவாள் தனது வீட்டுக் கிணற்றடிக்குச் சென்றார். கங்காஷ்டகம் என்ற ஸ்தோத்திரத்தைப் பாடினார். மறுகணம் அந்தக் கிணற்றில் கங்கை பொங்கிப் பெருகி, வீதியெங்கும் வெள்ளமெனப் பாய்ந்தாள். ஊர்மக்களும் அந்த அந்தணர்களும் தங்கள் தவற்றுக்கு வருந்தி மன்னிப்புக் கோரினர். அதை ஏற்று ஸ்ரீதர ஐயாவாள் மீண்டும் ஒரு ஸ்லோகம் சொல்லி வணங்க, அந்தக் கிணற்றிலேயே கங்கை ஐக்கியமானாளாம். இன்றைக்கும் கார்த்திகை அமாவாசையில் அந்தக் கிணற்றில் கங்கை பொங்கி வருவதாக ஐதீகம்

 நன்றி இணையம்

நவராத்திரி வரலாறு

மணக்கால் அய்யம்பேட்டை | 2:03 PM | Best Blogger Tips

நவராத்திரி கொண்டாடப்பட
என்ன காரணம் என்ற புராணக் கதையை
கீழே பார்க்கலாம்.
முன்பு வரமுனி என்ற பெரும் சக்தி
வாய்ந்த முனிவர் ஒருவர் இருந்தார்.
எல்லாவற்றிலும் சிறந்து விளங்கியவர்
வரமுனி. இவருக்கு நிகர் இவர்தான்.
தனக்கு இணை யாரும் இல்லை என்ற
தலைக்கனம் இவருக்கு ஏற்பட்டது. பதவியும்,
தலைக்கனமும்ஏற்பட்டால் மற்றவர்களை
துச்சமாக மதிக்கும் எண்ணமும்
வரும்தானே?
வரமுனிக்கும் அது வந்தது. இவர்
தலைக்கனம் காரணமாக அகத்தியர்
போன்ற பெரும் முனிவர்களிடமும்
மகிஷம் (எருமை) போல் உருவம்
கொண்டு
அவமரியாதையாகநடந்து
கொண்டார். இதனால் கோபம்
கொண்ட முனிவர்கள் அனைவரும்
எருமையாகபோவாய் என்று அவருக்கு
சாபமிட்டனர்.
ரம்பன் என்ற அசுரன் கடுமையான
தவத்தில் ஈடுபட்டிருந்தான். அவன்
தவத்தை மெச்சி அவன் முன்
தோன்றினார் அக்னி பகவான். அவன்
தனக்கு சர்வ வல்லமை
பொருந்தியமகன் வேண்டும் என
வேண்டினான்.
அவன் வேண்டியதை அருளிய அக்னி தேவன்,
ரம்பன்!, நீ கேட்ட வரத்தை அளித்தேன்.நீ எந்த
பெண்ணை கொண்டு ஆசை
கொள்கிறாயோ அவள் மூலம்
உனக்கு மகன் பிறப்பான் என்று கூறி
மறைந்தார். மனம் முழுக்க
உற்சாகத்துடன் வந்த ரம்பன் முதலில்
கண்டது காட்டெருமையை.
அவனது அசுர புத்தி வேலை செய்தது.
காட்டெருமை மேல் காதல்
கொண்டான். தானும்
காட்டெருமையாக
உருமாறினான். முனிவர்களால்
எருமையாய் பிறப்பாய் என்றுசாபம்
பெற்ற வரமுனி, அசுரனின்
வாரிசாக மகிஷாசுரனாக
பிறந்தான்.
மகிஷாசுரன் 10 ஆயிரம் ஆண்டுகள்
பிரம்மனை நோக்கி தவம் இருந்தான்.
எனக்கு தேவர்கள், அசுரர்கள்,
மானிடர்களால் மரணம்
ஏற்படக்கூடாது.
கன்னிப்பெண்ணால் தான்
மரணம் ஏற்பட வேண்டும் என்று வரம்
கேட்டான். அவன் கேட்டவரத்தை
அருளினார் பிரம்ம தேவன். அங்கு
தொடங்கியது பிரச்சனை.
மகிஷாசுரனின் அராஜகம்
அதிகமாகியது. மகாவிஷ்ணுவை
தஞ்சமடைந்தனர்.தேவர்கள்.
மகிஷாசுரனுக்கு மரணம்
பெண்ணால்தான். அவனை
சம்ஹாரம் செய்யதகுந்தவள்
மகாசத்தி மட்டும்தான் என்று
கூறினார் மகாவிஷ்ணு.
மும்மூர்த்திகளும் தேவர்களும் ஒன்று கூடி
பிரார்த்தனை செய்ததும் ஸத்வ,
ரஜஸ், தமஸ்என்ற மூன்று குணங்களையும்
ஒன்றாக பெற்ற
மகாலட்சுமியாய் தோன்றினாள்
அம்பாள். தங்களை காக்க வந்த தேவிக்கு
தேவர்கள் படைக்கலங்களைப் படைத்தனர்.
சிவபெருமான் சூலம் தந்தார்.
அக்னி சக்தி தந்தார். வாயு பகவான்
வில்லும்,அம்பறாத்துணியும்
கொடுத்தார். தேவி மகிஷனை
சம்ஹாரம் புரிய
சர்வலங்காரபூஷிதையாய்
புறப்பட்டாள்.
அம்பாளுடன் கடும் போர் புரிந்தான்
மகிஷாசுரன். கடும் போர் முடிவுக்கு வந்தது.
அநீதி அழிக்கப்பட்டது. அழிந்தான்
மகிஷாசுரன். அம்பாள் மகிஷாசுரனை
சம்ஹாரம் செய்தது அஷ்டமி
தினத்தன்று. தேவர்கள் அம்மனை வணங்கி
வழிபட்டது அடுத்த நாளான நவமி
தினத்தன்று. தேவி மணித்வீபம்
(
மூலஸ்தானம்) சென்றது அதற்கு
அடுத்த நாளான தசமி தினத்தன்று.
இந்த நாட்கள்தான் நவராத்திரி
நாட்களாகக்
கொண்டாடப்படுகிறது.
நன்றி இணையம்