கிணற்றுக்குள் கங்கை!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:04 PM | Best Blogger Tips

கும்பகோணத்தில் இருந்து சுமார் 10 கி.மீ தூரத்தில் உள்ளது திருவிச நல்லூர். இந்த ஊரைச் சொன்னதுமே ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள் எனும் மகான்தான் ஞாபகத்துக்கு வருவார். இவரது வாழ்வில் ஒரு சம்பவம்.
ஒருமுறை இவரது வீட்டில் சிராத்தம் வந்தது. வீட்டில் அதற்கான சமையல் தயாராகிக்கொண்டிருந்தது. ஐயாவாள் காவிரியில் குளிக்கக் கிளம்பினார். வழியில் ஏழை ஒருவன் பசியால் துடித்துக்கொண்டிருந்தான். அவனை தன் வீட்டுக்கு அழைத்து வந்து உணவிட்டார். ஆனால், அவரைப் பிடிக்காத அந்தணர்கள் சிலர், ஏழைக்கு அவர் உணவிட்டதைக் காரணம் காட்டி அவரை விலக்கி வைத்தனர். அவரது வீட்டுக்குச் செல்வதில்லை என்றும் முடிவெடுத்தனர். அன்றைய சிராத் தத்தை அந்தணர்கள் இல்லாமல் ஒருவாறு செய்துமுடித்தார் ஐயாவாள்.
சிலநாட்களில் மீண்டும் ஒரு சிராத்தம் வந்தது. அதை முறைப்படி செய்ய விரும்பிய ஐயாவாள், அந்தணர்களிடம் சென்று வீட்டுக்கு அழைத்தார். 'தகுந்த பிராயச்சித்தம் செய்யவும் தயாராக இருக்கிறேன்' என்றார். 'எனில் கங்கையில் குளித்து வாரும்!' என்றனர். காசிக்குச் சென்று கங்கையில் நீராடிவர வெகுநாட்கள் ஆகுமே! எனவே, ஸ்ரீதர ஐயாவாள் தனது வீட்டுக் கிணற்றடிக்குச் சென்றார். கங்காஷ்டகம் என்ற ஸ்தோத்திரத்தைப் பாடினார். மறுகணம் அந்தக் கிணற்றில் கங்கை பொங்கிப் பெருகி, வீதியெங்கும் வெள்ளமெனப் பாய்ந்தாள். ஊர்மக்களும் அந்த அந்தணர்களும் தங்கள் தவற்றுக்கு வருந்தி மன்னிப்புக் கோரினர். அதை ஏற்று ஸ்ரீதர ஐயாவாள் மீண்டும் ஒரு ஸ்லோகம் சொல்லி வணங்க, அந்தக் கிணற்றிலேயே கங்கை ஐக்கியமானாளாம். இன்றைக்கும் கார்த்திகை அமாவாசையில் அந்தக் கிணற்றில் கங்கை பொங்கி வருவதாக ஐதீகம்

 நன்றி இணையம்