விநாயகர் விரத முறை

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:18 | Best Blogger Tips
Image result for விநாயகர் விரத முறை
 விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் புரிவார். அதனால் தான் அவர் எல்லாருக்கும் பொதுவாகவும், சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார். நினைத்த காரியம் நிறைவேற விநாயகருக்கு விரதம் இருப்போம். விரதம் இருக்கும்போது நாம் என்ன செய்ய வேண்டும். எப்படி விரதம் இருக்க வேண்டும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.
 தொழிலில் லாபம் வேண்டும் என்று விரதம் இருப்பவர்கள் குயவர் மண்ணால் செய்த மண் பொம்மையை பு+ஜை அறையில் வைத்து வணங்க வேண்டும்.
 கடன் தீர விரதம் இருப்பவர்கள் சிறு தொகையை பு+ஜையில் வைத்த பிறகு உரிய நபருக்கு கொடுக்க முயற்சித்தால் அந்த ஆண்டிற்குள் படிப்படியாக கடன் அடைந்து விடும்.
 ஒரு வருட காலத்திற்கு விரதம் இருக்கும்போது இடையில் இறப்பு, தீட்டுக்காலம் வந்தால் 16 நாட்கள் நிறுத்தி விட்டு அடுத்து வருகிற வெள்ளிக்கிழமை அன்று காக்கைக்கு காலையில் நெய் விட்டு வெறும் சாதத்தை போட்டு காக்கை எடுத்த பின் விரத பு+ஜை தொடங்க வேண்டும்.
 கல்வியில் முன்னேற்றம், வேலை கிடைக்க வழிபாடு செய்பவர்கள் வலம்புரி கணபதியை பு+ஜையில் வைத்து வழிபட்டு மறுநாள் காலையில் அரச மரத்து விநாயகரை சுற்றி வந்து வணங்குதல் வேண்டும்.
 திருமணமானவர்கள் விரத நாட்களில் பாயில் படுத்தல் கூடாது. காலையில் எழுந்து குளித்து விட்டு விநாயகரை நினைத்து தீபம் ஏற்றி ஒரு பொழுது விரதம், ஒரு வேளை உணவு உண்டு இருக்க வேண்டும்.
 விநாயகர் விரதம் தொடங்குபவர்கள் பாதியில் விரதத்தை விடுதல் கூடாது.
மேற்காணும் விரத முறையை கடைபிடித்து விநாயகருக்கு விரதம் இருந்து பலன்களை பெறுவோம் !!

 நன்றி இணையம்