நம் நாட்டிற்கு உழைப்பால் பெருமை சேர்த்தவர்களின் வருசையில் திரு .ரத்தன் டாட்டா !!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 3:23 PM | Best Blogger Tips

நம் நாட்டிற்கு உழைப்பால் பெருமை சேர்த்தவர்களின் வருசையில் திரு .ரத்தன் டாட்டா !!!

இந்தியாவில் பம்பாயில், 1937 ஆம் ஆண்டு டிசம்பர் 28 அன்று பிறந்தவர்), ஜாம்சேத்ஜி டாட்டா நிறுவிய, அவரது குடும்பத்தினரின் பிற்கால சந்ததியினரின் தொகுதியாக விரிவாக்கிய தொழில் திரளாக விளங்கும், இந்தியாவின் மிகப்பெரிய தொழிற்திரளான டாடா குழுமத்தின் தற்போதைய தலைவராக உள்ளார். அவர், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டாடா பவர், டாடா கல்சல்டன்சி சர்வீஸஸ், டாடா டீ, டாடா கெமிக்கல்ஸ், தி இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி மற்றும் டாடா டெலிசர்வீசஸ் ஆகிய பெரும் டாடா நிறுவனங்களுக்கும் தலைவராக பொறுப்பேற்று உள்ளார்.
மும்பையின் வளமும் புகழும் மிகுந்த டாடா குடும்பத்தில் ரத்தன் டாடா பிறந்தார். அவர் சூனு மற்றும் நவால் ஹார்முஸ்ஜி டாடா ஆகியோரின் மகனாகப் பிறந்தார். ரத்தன், டாடா குழும நிறுவனர் ஜாம்செட்ஜி டாடா வின் கொள்ளுப் பேரனாவார். ரத்தனின் குழந்தைப்பருவம் இடர்ப்பாடுகள் நிறைந்ததாக இருந்தது. 1940-ஆம் ஆண்டுகளின் இடையே அவரது பெற்றோர்கள் பிரிந்த போது அவருக்கு ஏழு வயதாகவும் அவரது இளைய சகோதரர் ஜிம்மிக்கு ஐந்து வயதாகவும் இருந்தது. அவரது அன்னை குடும்பத்திலிருந்து வெளியேறியபின், ரத்தனையும் அவரது சகோதரரையும் அவர்களது பாட்டியார் லேடி நவஜிபாய் வளர்த்தார்.
ஆரம்பகாலத் தொழில் வாழ்க்கை
ரத்தன் டாடா, 1962 ஆம் ஆண்டில் கார்நெல் பல்கலைக்கழகத்தில் கட்டமைப்புப் பொறியியலில் பிஎஸ்சி இளங்கலை பொறியியல்பட்டம் பெற்றார். பின்னர், 1975 ஆம் ஆண்டில் ஹார்வர்ட் வணிகப் பள்ளியில் உயர் மேலாண்மை பட்டம் பெற்றார். ஜே. ஆர். டி. டாடா வின் அறிவுரையின்படி, ஐபிஎம் நிறுவனத்தில் கிடைத்த வேலையை உதறி விட்டு அவர் 1962 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டாடா குழுமத்தில் சேர்ந்தார். அவர் முதலில் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்ற ஜாம்ஷெட்பூருக்கு சென்றார். அவர் பிற உடலுழைப்புப் பணியாளர்களுடன் (blue-collar employees) சேர்ந்து சுண்ணாம்புக்கல் வாருதல் மற்றும் சூளைகளைக்[3] கையாளும் பணிகளைச் செய்தார். கூச்சம் நிறைந்தவரான ரத்தன் டாடா, சமூகக் கவர்ச்சி இதழ்களில் மிக அபூர்வமாகவே தோன்றுவார். பல ஆண்டுகளாக, மும்பை யின் கொலாபா மாவட்டத்தில், புத்தகங்களின் நெரிசல் மிகுந்த, நாய்கள் நிரம்பி வழியும் விடலைக் குடியிருப்பில் (bachelor flat) வாழ்ந்த அவர், வியக்கத்தக்க பெருந்தகையாக விளங்குகிறார்.
தொழில் வாழ்க்கை
1971 ஆம் ஆண்டில், மிக மோசமான நிதி நெருக்கடியில் இருந்த தி நேஷனல் ரேடியோ அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் கம்பெனி லிமிடெட் (Nelco) நிறுவனத்தின் பொறுப்பு இயக்குனராக ரத்தன் பொறுப்பேற்றார். நுகர்வோர் மின்னணு சாதனங்கள் உற்பத்தி செய்வதைத் தவிர்த்து, உயர் தொழில்நுட்பப் பொருட்களை உருவாக்க முதலீடுகளை அந்நிறுவனம் செய்ய வேண்டும் என்று ரத்தன் யோசனை கூறினார். வழக்கமான ஆதாயப் பங்குகளைக் கூட ஒழுங்காக வழங்காத நெல்கோ நிறுவனத்தின் நிதி நிலை வரலாற்றைக் கருத்தில் கொண்ட ஜேஆர்டி, இந்த ஆலோசனையை ஏற்பதில் தயக்கம் காட்டினார். மேலும், ரத்தன் பொறுப்பை ஏற்றபோது நெல்கோ நிறுவனம் நுகர்வோர் மின்னணு சாதனச் சந்தையில் 2 சதவீதப் பங்கும் விற்பனையில் 40 சதவீத இழப்பெல்லையும் கொண்டிருந்தது. ஆயினும், ஜே.ஆர்.டி., ரத்தனின் ஆலோசனைகளைப் பின்பற்றினார்.
1972 ஆம் ஆண்டு முதல் 1975 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், படிப்படியாக நெல்கோவின் சந்தைப் பங்கு 20 சதவீதத்தை எட்டியது. தனது இழப்புகளையும் அந்நிறுவனம் மீட்டெடுத்தது. ஆனால், 1975 ஆம் ஆண்டில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்ததுடன் பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, 1977 ஆம் ஆண்டில் தொழிற்சங்கப் பிரச்சினைகள் தோன்றின. எனவே, தேவை அதிகரித்தபோதும் அதற்கேற்ப உற்பத்தி பெருகவில்லை. இறுதியில் டாடாக்கள் தொழிற்சங்கங்களை எதிர்த்தனர். ஒரு வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஏழு மாதக் கதவடைப்பு நடந்தேறியது. ரத்தன், நெல்கோவின் அடிப்படைத் திறமைகளைத் தொடர்ந்து நம்பிக்கையுடன் ஆதரித்த போதும், அவரது முயற்சி தாக்குப்பிடிக்கவில்லை.
1977 ஆம் ஆண்டில், டாடா குழும வசமிருந்த எம்ப்ரஸ் மில்ஸ் துணி ஆலை, ரத்தனிடம் ஒப்படைக்கப் பெற்றது. அவர் அந்நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றபோது, அந்நிறுவனம் டாடா குழுமத்தின் நொடிந்த சில நிறுவனங்களுள் ஒன்றாக இருந்தது. ரத்தன் அதை மீட்டெடுத்ததுடன் ஆதாயப் பங்கும் அறிவித்தார். ஆயினும், குறைந்த தொழிலாளர் சார்புள்ள நிறுவனங்களிடமிருந்து வந்த போட்டியின் விளைவாக பல நிறுவனங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. எம்ப்ரஸ் ஆலையைப் போன்று அதிகமான தொழிலாளர் படைகளைக் கொண்ட, நவீனமயமாக்கலுக்கு மிகவும் குறைவாக செலவழித்த நிறுவனங்களும் அவற்றில் அடங்கும். நிறுவனத்தில் ஒரு சிறு முதலீட்டை மேலும் செய்ய வற்புறுத்தினார், ஆனால் அது போதவில்லை. முரட்டுத்தன்மை வாய்ந்த நடுத்தரப் பருத்தித் துணியையே எம்ப்ரஸ் ஆலை உற்பத்தி செய்தது. இவ்வகைப் பருத்தித் துணிக்கான சந்தை பாதிப்புக்கு உள்ளாகியதால், எம்ப்ரஸ் ஆலை அதிக இழப்புக்குள்ளாகியது. நீண்ட காலத்திற்கு நிதி உதவிகளை, குழுமத்தின் பிற நிறுவனங்களில் இருந்து மாற்றி வழங்க டாடாவின் தலைமையகமான பம்பாய் ஹவுஸ் விரும்பவில்லை. எனவே, சில டாடா இயக்குனர்கள், குறிப்பாக நானி பல்கிவாலா, ஆலையை மூட முடிவு செய்தனர். இறுதியில், 1986 ஆம் ஆண்டில், ஆலையை மூடினார்கள். அம்முடிவால் ரத்தனுக்கு மிகுந்த மனக்கசப்பு ஏற்பட்டது. பின்னாளில், ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில், வெறும் ஐம்பது இலட்சம் ரூபாய் இருந்திருந்தால் எம்ப்ரஸ் ஆலையை சீராக்கி நடத்தியிருக்கலாம் என்று அவர் கூறினார்.
1981 ஆம் ஆண்டில், குழுமத்தின் மற்றொரு பங்குதார நிறுவனமான டாடா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குனராக ரத்தன் பொறுப்பேற்றார். அந்நிறுவனத்தை, குழுமத்தின் செயல்திட்டங்களுக்கான சிந்தனைக் கொள்கலனாகவும், உயர் தொழில்நுட்ப வர்த்தகங்களுக்கான ஆக்க முயற்சிகளை மேற்கொள்ளும் நிறுவனமாகவும் மாற்றுவது அவரது பொறுப்பானது.
1991 ஆம் ஆண்டில், அவர் ஜே.ஆர்.டி. டாடா விடமிருந்து குழுமத் தலைவர் பொறுப்பை ஏற்றார். வயதானவர்களை வெளியேற்றி இளைய மேலாளர்களை நியமித்தார். அதன் பிறகு, டாடா குழுமத்தின் எதிர்காலத்தை மாற்றியமைப்பதில் அவர் பெரும் பங்காற்றினார். இன்று, இந்திய பங்குச் சந்தையில் உள்ள வணிக நிறுவனங்களில் மிக அதிகமான சந்தை முதலீடு உள்ளதாக டாடா குழுமம் திகழ்கிறது.
ரத்தனின் வழி காட்டுதலில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பொது நிறுவனமானது. டாடா மோட்டார்ஸ் நியூ யார்க் பங்குச் சந்தை யில் பட்டியலானது. 1998 ஆம் ஆண்டில், டாடா மோட்டார்ஸ் அவரது சிந்தனையில் பிறந்த டாடா இண்டிகாவை அறிமுகப்படுத்தியது.
2007 ஆம் ஆண்டு ஜனவரி 31 அன்று, ரத்தன் டாடாவின் தலைமையின் கீழ், டாடா சன்ஸ் நிறுவனம், எஃகு மற்றும் அலுமினியம் தயாரிக்கும் ஆங்கிலோ-டச்சு நிறுவனமான கோரஸ் குழுமத்தைக் கைப்பற்றியது. இக்கைப்பற்றல் மூலம் ரத்தன் டாடா இந்திய வணிகக் கலாச்சாரத்தின் புகழ்பெற்ற ஆளுமையானார். இந்த இணைப்பு உலகிலேயே ஐந்தாவது பெரிய எஃகு உற்பத்தியாளரை தோற்றுவித்துள்ளது.
2008 ஆம் ஆண்டு மார்ச் 26 அன்று, ரத்தன் டாடாவின் தலைமையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ஜாகுவார் மற்றும் லாண்ட் ரோவர் நிறுவனத்தை ஃபோர்டு மோட்டார் நிறுவனத்திடமிருந்து வாங்கியது. ஒன்றாம் தரமாக உலகமே போற்றும் பிரித்தானிய தர அடையாளங்களான ஜாகுவார் மற்றும் லாண்ட் ரோவர் ஆகிய இரண்டும் 1.15 பில்லியன் பவுண்டுக்கு (2.3 பில்லியன் டாலர்) விலை போனது இந்தியாவுக்கு பெருமை ஈட்டித் தந்தது.
சொந்த வாழ்க்கை
திரு ரத்தன் டாடா ஒரு உலோக நீல வண்ண மெசெராட்டி மற்றும் பெர்ராரி கலிபோர்னியா வாகனங்கள் வைத்துள்ளார். ஜேஆர்டி, ஓட்டுனர் வைத்துக்கொள்ளாமல் தனது சொந்த பியட் காரையே வேலைக்குச் செல்லவும் திரும்பவும் பயன்படுத்தியதைப் போலவே, ரத்தன் டாடாவும் தனது பழைய மாதிரி மெர்சடிஸ் செடானை தானாக ஓட்டிச் செல்வதையே விரும்புகிறார். அவர் சில சமயங்களில் தனது சொந்த ஜெட் விமானத்தில் பறப்பதை விரும்புகிறார். வணிக விமானப் போக்குவரத்தில் தற்போது பயன்பாட்டில் இல்லாத, வழக்கில் இல்லாத பால்கன் ஜெட் விமானம் ஒன்று அவரிடம் உள்ளது. அவர் திருமணம் புரிந்து கொள்ளவில்லை.
ரத்தன் டாடா பெரும்பாலும் குழுமத்தின் பணி வழித் தலைவர் அல்லது முதன்மைச் செயல் அலுவலராக உள்ளார். குழுமத்தின் பங்குதாரர் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தில் உள்ள அவரது மூலதனப் பங்குகளில் பெரும்பாலானவை, குடும்ப வழியில் பெற்ற பங்குகளே ஆகும். அவரது பங்கு ஒரு சதவீதம் அல்லது அதற்கும் குறைவானதே. அவரது தனிப்பட்ட பங்கு மதிப்பு, தோராயமாக ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் தேறும்.டாடா சன்ஸின் மூலதனப் பங்குகளில் ஏறக்குறைய 66 சதவீதம், அசல் ஜாம்செட்ஜி குடும்ப உறுப்பினர்கள் நிறுவிய, பொதுநல அறக்கட்டளைகளிடம் உள்ளன. இதில் மிக அதிகமான பங்கு, ஜாம்செட்ஜியின் மைத்துனரான ஷபூர்ஜி பல்லோஞ்சி மிஸ்த்ரி வழியிலான குடும்பத்தினரிடம் உள்ளது. பங்குதாரர்களான அறக்கட்டளைகளிலேயே பெரியவை, சர் தோரப்ஜி டாடா அறக்கட்டளை மற்றும் சர் ரத்தன் டாடா அறக்கட்டளை (இது ரத்தன் டாடாவிலிருந்து வேறுபட்டது) ஆகிய இரண்டும் ஆகும். இவை ஜாம்செட்ஜி டாடாவின் மகன்களின் குடும்பத்தாரால் தோற்றுவித்தவை. ரத்தன் டாடா, சர் ரத்தன் டாடா அறக்கட்டளையின் அறங்காவலர் குழுவில் உறுப்பினராகவும், சர் தோராப்ஜி டாடா அறக்கட்டளையின் தலைவராகவும் உள்ளார்.[original research?]. சர் ரத்தன் டாடா, உலக சுற்றுச் சூழல்மாற்ற சகாப்தத்தில், இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் அடையாள முகமாகவும் அறியப்படுகிறார்.
[தொகு]
விருதுகளும் அங்கீகாரங்களும்
இந்தியாவில் பல்வேறு அமைப்புகளில் மூத்த பொறுப்புகளில் பணியாற்றும் ரத்தன் டாடா, வணிகம் மற்றும் தொழில்கள் குறித்த பிரதம மந்திரியின் மன்றத்திலும் உறுப்பினராக உள்ளார். 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று மும்பையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களுக்கு ப்பின், ரத்தன் டாடாவை இந்தியாவின் மிகவும் நன்மதிப்பு பெற்ற வணிகத் தலைவர் என்று குறிப்பிட்டு, அவர் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று போர்ப்ஸ் இதழ் கருத்து வெளியிட்டது.
மிட்சுபிஷி கார்பரேஷன், அமெரிக்க பன்னாட்டுக் குழுமம், ஜேபி மார்கன் சேஸ் மற்றும் பூஸ் ஆலன் ஹாமில்டன் ஆகிய அமைப்புகளின் பன்னாட்டு ஆலோசனை வாரியங்களின் உறுப்பினராக உள்ளமை, ரத்தன் டாடாவின் வெளிநாட்டுத் தொடர்புகளுள் அடங்கும். மேலும் அவர், RAND கார்பரேஷன், தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் அவர் கல்வி கற்ற, கார்நெல் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் அறங்காவலர் குழு உறுப்பினராகவும் உள்ளார்.தென்னாப்பிரிக்கக் குடியரசின் பன்னாட்டு முதலீட்டு மன்றத்தின் குழு உறுப்பினராகவும்,நியூயார்க் பங்குச் சந்தையின் ஆசிய-பசிபிக் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் அவர் பணியாற்றுகிறார். கிழக்கு-மேற்கு மையத்தின் ஆளுகைக் குழுவிலும், RAND’s மையத்தின் ஆசிய-பசிபிக் கொள்கை மைய ஆலோசனைக் குழுவிலும் டாடா உறுப்பினராக உள்ளார். மேலும், அவர் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் நிறுவனத்தின் இந்திய AIDS திட்டத்தின் குழுவிலும் பணியாற்றுகிறார்.
26 ஜனவரி 2000 அன்று, 50 ஆவது இந்தியக் குடியரசு தினத்தையொட்டி, படைத்துறை சாராத ஒரு குடிமகனுக்கு வழங்கும் மூன்றாவது பெரிய சிறப்புப் பதக்கமான பத்ம பூஷண் விருது, ரத்தன் டாடாவுக்கு வழங்கினார்கள்.
2004 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், சீனாவின் ஜேஜியாங் மாகாணத்தில் உள்ள ஹாங்க்ஜோவ் நகரத்தின் பொருளாதார ஆலோசகர் பட்டம் ரத்தன் டாடாவுக்கு வழங்கினார்கள்.
2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள, தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் அறங்காவலர் குழுவிற்கு ரத்தன் டாடாவை தேர்ந்தெடுத்தார்கள்.
2006 ஆம் ஆண்டில், பொறுப்புடைய முதலாளித்துவத்திற்கான FIRST விருது அவருக்கு வழங்கினார்கள்.
மார்ச் 2006 ஆம் ஆண்டில், பொருளாதாரக் கல்விக்காக ராபர்ட் எஸ். ஹாட்பீல்ட் பெல்லோ விருதினை வழங்கி, கார்நெல் பல்கலைக்கழகம் டாடாவை கௌரவித்தது. வணிகத் துறையில் சிறப்பு வாய்ந்த தனியருக்கு பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் இவ்விருது மிகப்பெரும் கௌரவமாகக் கருதப்படுகிறது.
2008 ஆம் ஆண்டிற்கான NASSCOM உலகத் தலைமை விருதுகள் பெற்றவர்களில் இவரும் ஒருவர். இவ்விருது 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று மும்பையில் வழங்கினார்கள். 2007 ஆம் ஆண்டு வழங்கிய, நற்பணிகளுக்கான கார்னகி பதக்கத்தை, டாடா குடும்பத்தின் சார்பாக, ரத்தன் டாடா ஏற்றுக்கொண்டார்.
2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பார்ச்யூன் இதழ் வெளியிட்ட மிகவும் ஆற்றல் மிக்க வர்த்தகர்கள் பட்டியலில் இவர் இடம் பெற்றார்.
2008 ஆம் ஆண்டு மே மாதத்தில், டைம் இதழ் வெளியிட்ட, உலகின் மிக செல்வாக்குடைய நூறு பேர் அடங்கிய பட்டியலில் திரு டாடா இடம் பிடித்தார். டாடா, ஒரு இலட்ச ரூபாய் காரான நானோவை தயாரித்து வெளியிட்டதற்குப் பெரிதும் புகழப் பெற்றார்.
படைத்துறை சாராத ஒரு குடிமகனுக்கு வழங்கும் இரண்டாவது பெரிய சிறப்புப் பதக்கமான பத்ம விபூஷண் விருது, 2008 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று அவருக்கு வழங்கினார்கள்.
2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 அன்று சிங்கப்பூர் அரசாங்கம் கௌரவக் குடிமகன் தகுதியை ரத்தன் டாடாவுக்கு வழங்கியது. தீவு நாடான அதனுடன் தொடர்ந்த வணிக உறவையும், சிங்கப்பூரில் உள்ள உயர் தொழில்நுட்பத் துறைகளுக்கு அவரது பங்களிப்பையும் அங்கீகரிக்கும் வகையில் இதை வழங்கினார்கள். இந்த கௌரவத்தைப் பெறும் முதல் இந்தியர் ரத்தன் டாடா ஆவார்.
2009 ஆம் ஆண்டில் அவர் மதிப்பார்ந்த பிரித்தானிய பேரரசின் வீரத் தலைவராக (honorary Knight Commander of the British Empire) நியமிக்கப்பட்டார்.
ஒகைய்யோ மாநிலப் பல்கலைக்கழகம் வழங்கிய வணிக மேலாண்மைக்கான கௌரவ முனைவர் பட்டம்; பாங்காக்கில் உள்ள ஆசிய தொழில்நுட்ப நிறுவனம் வழங்கிய தொழில்நுட்பத்திற்கான கௌரவ முனைவர் பட்டம்; வாரிக் பல்கலைக்கழகம் வழங்கிய அறிவியலுக்கான கௌரவ முனைவர் பட்டம்; மற்றும் லண்டன் ஸ்கூல் ஒப் எகொநோமிக்ஸ் வழங்கிய கௌரவ பெல்லோஷிப் ஆகியவை அவர் பெற்ற பிற விருதுகளாகும்.

நன்றி FB இன்று ஒரு தகவல்

கொலஸ்ட்ராலை குறைக்கும் முட்டை

மணக்கால் அய்யம்பேட்டை | 2:38 PM | Best Blogger Tips

'முட்டை சைவமா..? அசைவமா?' என்றொரு கேள்வி நீண்ட நாட்களாக நம்மிடையே உண்டு. சிலர் அதை சைவம் என்றும், பலர் அதை அசைவம் என்றும் கூறுகின்றனர். சரி அதை விட்டுவிடுவோம். தினந்தோறும் முட்டைகள் சாப்பிடலாமா?

அமெரிக்காவில் நடந்த ஒரு ஆய்வில், 14 ஆண்டுகள் தினமும் முட்டை சாப்பிடும் பல ஆயிரம் பேர்களைத் தொடர்ந்து கண்காணித்தார்கள். இந்த ஆய்வில் இவர்களுக்கு உடலில் இதய நோய்க்கான அறிகுறியே இல்லை என்பது தெரியவந்தது. சத்துணவான முட்டையில் உள்ள பொருட்கள் இதயநோயைக் குணப்படுத்துகிறது. அதிக அளவு கொலஸ்ட்ரால் இல்லாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால், முட்டை சாப்பிட்டவர்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகரிக்கவில்லை.

அமெரிக்காவின் முட்டை சத்துணவு மையமும், ஹார்வார்டு ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த்தும் கடந்த 14 ஆண்டுகளாக முட்டை உணவு பற்றி ஆராய்ந்தன. அதில்தான் இந்த உண்மைகள் வெளிவந்தன. முட்டையில் கொலஸ்ட்ரால் இருப்பது உண்மை! ஆனால், அதை அளவுடன் சாப்பிட்டால், இதயத்துக்கு எந்த விதமான கெடுதலையும் செய்யாது என ஆய்வு தெரிவிக்கிறது. "சரிவிகித உணவு தயாரித்து அதன்படி சாப்பிடுகிறவர்கள் தினமும் முட்டையை ஒதுக்க வேண்டாம். முட்டையில் தீய கொலஸ்டிராலுடன் நல்ல கொலஸ்ட்ரால் அளவும், டிரைகிளி செர்டைஸின் அளவும் இதே அளவு சக்தி வாய்ந்த தரத்துடன் இருக்கின்றன. எனவே, தீய கொலஸ்ட்ரால் ரத்தத்தில் சேராது. இத்துடன் இதயத்துக்குப் பாதுகாப்பான போலிக் அமிலம் மற்றும் 'பி' குரூப் வைட்டமின்களும், நச்சு முறிவு மருந்துகளும், கொழுப்புச் செறிவில்லாத கொழுப்புகளும் முட்டையில் உள்ளன" என்கிறார் டாக்டர் டெனால்ட் மெக்மைரா.

1976-ஆம் ஆண்டு முதல் பதினோரு அமெரிக்க மாநிலங்களில் தினமும் முட்டை சாப்பிட்டு வந்த நர்சுகளின் உடல்நிலை கவனிக்கப்பட்டு குறிப்புகள் சேர்க்கப்பட்டன. இந்த ஆய்வு 2 வருடம் நடந்தது.

1986-ம் ஆண்டு முதல் அமெரிக்க பல் டாக்டர்கள், கண் டாக்டர்கள், கால்நடை வைத்தியர்கள் தினமும் முட்டை சாப்பிட்டனர். இவர்களுக்கு கொலஸ்ட்ரால் அளவு, 12 ஆண்டுகள் அதிகரிக்கவில்லை. ஸ்டிரோக் அபாயமும் ஏற்படவில்லை.

80 ஆயிரம் நர்சுகளின் உடல் நலம் பற்றிய 14 ஆண்டு கால மருத்துவ குறிப்பேடுகள், 37 ஆயிரம் ஆண்களின் உடல் நலக்கோளாறு பற்றிய எட்டு வருட மருத்துவ குறிப்பேடுகள் தெரிவிக்கும் உறுதியான தகவல்கள்: தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். அதுவும் பயமில்லாமல் சாப்பிடலாம் என்பதுதான்.

சாதாரண அவித்த முட்டையில்தான் இவ்வளவு நன்மைகள். இதில் வெண்ணெய், பன்றிக்கறி, பாம் ஆயில் போன்றவை சேர்த்துச் சாப்பிட்டால் கெடுதல் தான்.

நீரிழிவு நோயாளிகள் தினமும் முட்டை சாப்பிடக்கூடாது. இது அவர்களுக்கு கெடுதல் உண்டாக்கும். டாக்டர் யோசனைப்படி வாரம் ஒரு முட்டை சாப்பிடலாம்.

Thanks to தமிழ்ச் சமுதாயம் - தமிழுக்காக தமிழர்களுக்காக ஒரு பகுதி

பழங்களை எப்போது எப்படி சாப்பிடணும்?

மணக்கால் அய்யம்பேட்டை | 2:35 PM | Best Blogger Tips

காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும்.

இதனால், உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும்.

சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம்தான் ஜீரணமாகும். உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும்.

உட்கொண்ட உணவுகள் செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும்.

அதனால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.

பழங்களை தனியாக சாப்பிடாமல், அதனுடன் இனிப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அடித்து ஜூஸாக சாப்பிடும் வழக்கம் பலரிடம் உள்ளது. இது தவறு.

பழங்களை ஜூஸாக சாப்பிடுவதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது.

அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும். சத்தும் முழுமையாக கிடைக்கும்.

உங்களிடம் தன்னம்பிக்கை இருக்கிறதா?

மணக்கால் அய்யம்பேட்டை | 12:58 PM | Best Blogger Tips

கண்டுபிடிக்க ஒரு சுய பரிசோதனை……………..

ஆ. மேனியழகு பொலிவாகத்தான் இருக்கி
வெற்றியின் ஆணிவேர் தன்னம்பிக்கை. உங்களிடம் தன்னம்பிக்கை மிகுந்திருந்தால் நீங்களும் வெற்றியாளராக வலம் வரலாம்.

உங்கள் தன்னம்பிக்கையை சோதிக்க ஒரு சுய பரிசோதனை இங்கே…

1. உங்கள் உடல்வாகு எப்படிப்பட்டது?
அ. எனது உடல் அழகான `ஸீரோ சைஸ்’ கொண்டது. அதில் எனக்கு திருப்திதான்!
ஆ. இன்னும் வசீகரிக்கும் தோற்றமுடன் எனது உடலை வைத்துக்கொள்ள விரும்புகிறேன்.
இ. மக்கள் நான் வசீகரிக்கும் வனப்புடன் தோன்றுவதாகக் கூறுகின்றனர். ஆனால் நான் அப்படி நினைப்பதில்லை!

2. நீங்கள் வெகுநாள் விரும்பிய முக்கிய மனிதரை எதிர்பாராத விதமாக சந்திக்கிறீர்கள்? அப்போது…
அ. நானே முதலில் பேச்சைத் தொடங்கி அவருக்கும், எனக்கும் இடையே பரஸ்பர கருத்தொற்றுமை இருக்கிறதா? என்பதைக் கண்டறிவேன்.
ஆ. பார்த்ததும் ஏற்கனவே அறிமுகமானவர் மாதிரி அரட்டையடிக்கத் தொடங்கிவிடுவேன்..!
இ. அவர் என்னிடம் முதலில் பேச மாட்டாரா? என்று காத்திருப்பேன்!

3. சொந்தபந்தங்களுடன் உறவை பேணுவதில் நீங்கள் எப்படி?
அ. எப்போதாவது கருத்துவேறுபாடு ஏற்பட்டு உறவில் விரிசல் விழுவதுபோல தோன்றினால் நான் என் நிலையை ஆய்வு செய்து தவறுகள் இருந்தால் அதற்காக மன்னிப்புக் கோரி உறவு முறையை மேம்படுத்த முயற்சிப்பேன்.
ஆ. உறவுமுறை நன்றாகவே இருக்கிறது..! ஆனாலும் சில பிரச்சினைகள் வந்து போகின்றன.
இ. உறவுகள் என்றாலே தொல்லையும் துயரமும்தான்..! அவர்கள் என்னை புரிந்து நடந்து கொள்ளவே மாட்டார்கள்!

4. உங்கள் முகத்தில் திடீரென்று முகப்பரு தோன்றினால் என்ன செய்வீர்கள்..?
அ. முகப்பரு மருந்து தடவுவேன். இன்றைய முகப்பரு நாளைக்கு மறைந்துவிடும் என்கிற நம்பிக்கையோடு அடுத்த வேலையில் கவனம் செலுத்துவேன்.!
ஆ. முகப்பருவைக் கண்டதும் உடனே நல்ல டாக்டரை நாடி செல்வேன். டாக்டரிடம் செல்வதை தள்ளிப்போட மாட்டேன்.
இ. எனக்கு உடம்பு சரியில்லை என்று கூறிவிட்டு, அன்றைய அலுவலை ஒத்திப்போட்டுவிட்டு கவலையில் ஆழ்ந்து விடுவேன்!

5. நெருங்கிய நண்பர் ஒருவர் எதிர்பாராத துன்பத்தில் மாட்டிக்கொண்டால்…?
அ. முதல்ஆளாக ஓடிப்போய் அவருக்கு உதவி செய்வேன்..!
ஆ. அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு என்ன தேவைப்படுகிறது என்பதைக் கேட்டறிந்து உதவி செய்வேன்!
இ. உதவி செய்ய எனக்குத் தெரிந்த இன்னொரு நண்பரை அனுப்பி வைப்பேன்..!

6. உங்களது வாழ்க்கை எப்படி செல்கிறது?
அ. எனக்கு உண்மையான நண்பர்கள் அதிகம். அதனால் வாழ்க்கை ஆனந்தமாய் கழிகிறது..!
ஆ. ஏதோ இருக்கிறேன். நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் அங்கங்கே தனித்தனியாக இருக்கிறார்கள். எனக்கு ஏற்படும் கஷ்டநஷ்டத்தை கண்டுகொள்ள ஆளில்லை.
இ. இது என்ன வாழ்க்கை. ஒரு சந்தோஷமும் இல்லை. வாழ்க்கையே வெறிச்சோடிப் போய்க் கிடக்கிறது!

7. ஒரு குழுவை வழிநடத்தும் தலைவராக உங்களை தேர்வு செய்தால்…?
அ. உடனடியாக ஒத்துக்கொள்வேன்!
ஆ. நான் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று கேட்டறிவேன். அதன்பிறகு தலைமை தாங்குவது பற்றி முடிவு செய்வேன்.
இ. நான் என்ன செய்வது என்று அறியாமல் தவிப்பேன். தலைமை தாங்க யோசிப்பேன்!

8. உங்கள் பஸ் பயணம் திடீரென்று ரத்தாகிறது, தனியார் பஸ் நிறுவனம் அதற்கு மாற்று ஏற்பாடு செய்யவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை. என்ன செய்வீர்கள்…?
அ. கம்பெனி மேலாளரை சந்தித்து, இழப்பீடு தர வற்புறுத்துவேன்.
ஆ. என் கோரிக்கையை அமைதியாகத் திரும்பத் திரும்ப எடுத்துரைப்பேன்!
இ. திரும்ப திரும்ப கேட்பதால் பயனில்லையென்று கருதி, இன்னொரு பஸ்சில் ஏறி வீட்டிற்கு போய்விடுவேன்.
-------------------------------------------------------------
• உங்கள் பதில்களில் `அ’ விடைகள் அதிகமாக இருந்தால் நீங்கள் தன்னம்பிக்கை மிகுந்தவர்தான். எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்கும் வல்லமை உங்களுக்கு உண்டு! எப்படிப்பட்ட சூழ்நிலையையும் உங்களுக்குச் சாதகமாக்கி நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.

• அதிக கேள்விகளுக்கு விடை ஆ-வை தேர்வு செய்திருந்தால் நீங்கள் எதுவும் நல்லதாகவே நடக்கும் என்று நம்புவீர்கள். சிறிது சஞ்சலங்கள் தோன்றினாலும் சூழ்நிலையை சமாளிக்கும் வல்லமை உங்களிடம் இருக்கும்.

• பதில் `இ’ உங்கள் விடைகளில் மிகுந்திருந்தால் நீங்கள் நம்பிக்கை குறைவானவர். உங்கள் வாழ்வியல் முறைகளை சீர்திருத்துவதோடு மன தைரியத்துடன் செயல்படத் தொடங்குங்கள்.

நன்றி:- ஜுனைத் பfர்ஹானா
 
இய‌ற்கை வைத்தியம் 2

மணக்கால் அய்யம்பேட்டை | 12:43 PM | Best Blogger Tips

பல் ஈறு வீக்கம், வலிக்கு:

கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு வீக்கம் தீரும்.

மயக்கம் நீங்க:

ஏலக்காய் ஒரு பங்கு, பனைவெல்லம் ஒரு பங்கு சேர்த்து எட்டுப் பங்கு நீர் விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.

பசி உண்டாக:

புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச் சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். இவ்வாறு செய்தால் பசி உண்டாகும்.

படர்தாமரைக்கு:

அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.

வயிற்று வலிக்கு:

நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்று வலி போகும்.

வீக்கத்திற்கு:

கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டு பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட தீரும்.

புண் ஆற:

புளியிலை, வேப்பிலை ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து இடித்து எட்டு பங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள் ஆறும்.

தலைவலி:

ஐந்தாறு துளசி இலைகளோடு ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு
அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

குடல்புண் ஆற:

மஞ்சளை தணலில் இட்டு, சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை
தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண் ஆறும்.

வறட்டு இருமல் குணமாக:

எலுமிச்சம்பழச்சாறு, தேனில் கலந்து குடித்தால் வறட்டு இருமல் குணமாகும்.

தேமல் குணமாக:

வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து
குளித்து வந்தால் தேமல் குணமாகும்.

பித்த வெடிப்பு:

கண்டங்கத்திரி இலை சாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

மூலம்:

கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

இருமல்:

வெ‌ற்‌றிலையை‌ப் ‌பி‌ழி‌ந்து சாறு எடு‌த்து தே‌ன் கல‌ந்து அரு‌ந்‌தி வர ‌தீராத இரும‌ல் குணமாகு‌ம்.

கிருமிகள் நீங்க:

அ‌திகாலை‌யி‌ல் வெறு‌ம் வ‌யி‌ற்‌றி‌ல் வே‌ப்ப‌ங்‌கொழு‌ந்தை ‌தி‌ன்று வர வ‌யி‌ற்‌றி‌ல் உ‌ள்ள ‌கிரு‌மிக‌ள் ஒ‌ழி‌யு‌ம்.

இய‌ற்கை வைத்தியம்:-

நன்றி 
Karthikeyan Mathan

சிரிக்க மட்டும் (டாக்டர் காமடிகள்):-

மணக்கால் அய்யம்பேட்டை | 12:35 PM | Best Blogger Tips

பிச்சைகாரர்: சாமி... தர்மம் பண்ணுங்க...
டாக்டர்: யோவ். இது ஆஸ்பிடல். நான் டாக்டர்ய்யா...
பிச்சைகாரர்: பாவம் பண்ணுறவங்க தான் தர்மம் பண்ணுவாங்கன்னு இங்கே வந்தேன் சாமி...

==============

பேஷன்ட்: எனக்கு வந்தது ஜுரம் இல்லேன்னு எப்படி டாக்டர் சொல்றீங்க?
டாக்டர்: நான் கொடுத்த மருந்தை சாப்புட்டு சரியாயிடுச்சுன்னு சொல்றீங்களே. அதுனாலே தான் சொல்றேன்.

==============

பேஷன்ட்: எனக்கு ஆஃபிஸ்லே தூக்கமா வருது.... டாக்டர்!
டாக்டர்: தூக்கம் வரலையின்னா தான் பிரச்சனை. you are perfectly all right.

==============

பேஷன்ட்: எனக்கு எதை சாப்பிட்டாலும் வாந்தி வருது... டாக்டர்!
டாக்டர்: அப்போ.. சாப்பிடாம இருங்க. என்ன வருதுன்னு பாப்போம்?

==============

பேஷன்ட்: டாக்டர்...என் கையை எக்ஸ் ரே எடுக்கும் போது, கை எரிஞ்சு போச்சு டாக்டர்!
டாக்டர்: சாரிப்பா...எக்ஸ் ரே மிஷின்னுக்கு பதிலா லேசர் மிஷினை வாங்கிகிட்டு வந்துட்டேன் போல.

==============

பேஷன்ட்: ஒரு மாசமா உங்ககிட்டே வைத்தியம் பாத்தும் ஒன்னுமே சரியாகாதது வருத்தமா இருக்கு டாக்டர்!
டாக்டர்: என் சர்வீஸுலேயே நான் ஒரு மாசம் வைத்தியம் பாத்து உயிரோட இருக்குறது நீங்க ஒருத்தர் தான். அதை நினச்சு சந்தோஷப்படுங்க..

==============

பேஷன்ட்: அந்த ஸ்டதஸ்கோப்பை உங்க கையிலே பாத்தா வேற மாதிரி தெரியுது...டாக்டர்!
டாக்டர்: எப்படி தெரியுது?
பேஷன்ட்: பாசக் கயிறு மாதிரி தெரியுது டாக்டர்!

===============

நர்ஸ்: நம்மகிட்டே ஒரு யூனிட் ரத்தம் தான் இருக்கு. ஆனா ரெண்டு யூனிட் தேவைப் படுது...டாக்டர்!
டாக்டர்: பரவாயில்லே.. கொஞ்சம் தண்ணி கலந்து ரெண்டு யூனிட்டா மாத்திடுங்க..!

வானம் ஏற வழி இருக்கு..... ( சுவாமி விவேகானந்தர் )

மணக்கால் அய்யம்பேட்டை | 12:32 PM | Best Blogger Tips

எனக்கு ஆங்கிலம் தெரியாது. நான் அழகாக இல்லை. நான் அதிகம் படிக்கவில்லை. நான் ஏழையாக இருக்கிறேன். நான்கு பேருக்கு முன்னால் என்னால் தைரியமாக பேச முடியவில்லை என்று ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கிறது. 

இந்த தாழ்வு மனப்பான்மை ஒருவருடைய தன்னம்பிக்கையை அழித்து விடுகிறது.

எந்த முயற்சியும் செய்யாமல் வாழ்க்கையில் இருக்கிற நிலையையே ஏற்றுக் கொண்டு கடைசி வரை அதே நிலையில் வாழ்ந்து விட்டு போகிறவர்கள் பலர் இருக்கிறார்கள்.

இந்த தாழ்வு மனப்பான்மை என்ற கூட்டை உடைத்துக் கொண்டு வெளியில் வந்தால் தான் உங்களால் பறக்க முடியும்.

ஆஹா நமக்கு பறக்கவும் தெரிகிறது என்பதே உங்களுக்கு தெரியும். இந்த உலகில் எல்லாம் தெரிந்தவர் எவரும் இல்லை. அதே போல் முட்டாள் என்பவரும் இல்லை. முயற்சி செய்து பாருங்கள், முடியாது என்று நினைக்காதீர்கள்.

ஒரு சின்ன குழந்தை ஆங்கிலம் பேசுகிறது. சிறுவன் கார் ஓட்டுகிறான். நம்மால் முடியாதா என்று யோசித்து பாருங்கள். விமானம் ஓட்டுபவன் என்ன தேவலோகத்தில் இருந்தா வந்தான் பயிற்சிதான் காரணம்.

அம்பானி பிறக்கும் போது மில்லியனராக இல்லை. நாம் பணக்காரராக இல்லையே, இந்த மும்பை தொழில் அதிபர்களுடன் நாம் போட்டி போடமுடியுமா என்று அவர் நினைத்திருந்தால் இன்று உலகின் முதல் நிலை பணக்காரர்களின் வரிசையில் அவர் குடும்பம் இருக்க முடியாது.

இரண்டே செட் துணியோடும் ஒரு தகரப் பெட்டியோடும் தான் பஸ் ஏறி பம்பாய் வந்தாராம்.

நம்மால் முடியுமா என்ற பயமே பலரின் முன்னேற்றத்தை தடுத்து விடுகிறது. எதையும் நமக்கு சாதகமாக நினைத்து கற்றுக் கொள்ள வேண்டும்.

இன்று மணிகணக்கில் சரளமாய் மேடையேறி பேசுகிறவர்கள் முதல் மேடையில் முதல் வரிக்கு மேல் பேச முடியாமல் நா குழறி வேர்த்து விறுவிறுத்து தான் போயிருப்பார்கள்.

முயற்சி இருந்தால் இங்கு எதுவுமே சாத்தியம். நம்மாலும் முடியும். விவேகானந்தர் அமெரிக்கா போனபோது ஆங்கிலத்தில் நாம்மால் மேடையேறி பேச முடியுமா என்ற எண்ணம் இருந்ததாம்.

ஆனால் அவரது தியானம், யோகத்தால் இயற்கையாகவே அவருக்கு மனோதிடம் இருந்தது.

நியுயார்க்கில் உலக ஆன்மீக மகாசபையில் அவர் பேசும் போது எல்லோரும் பேசிய பின், கடைசியாகத்தான் அவரை அழைத்தார்களாம். அதன் பின் அவர் பேசிய எல்லா மேடையிலும் அவர்தான் முக்கிய பேச்சாளாராக இருந்தாராம்.

முதலில் தாழ்வு மனப்பான்மையில் இருந்து வெளியில் வரவேண்டும். நம்மை சுதந்திர மனிதனாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு எந்த செயலை செய்ய நினைக்கிறோமோ அதைபற்றிய ஆய்வினை செய்ய வேண்டும். இது நம் முயற்ச்சிக்கு உட்பட்டது. முயன்றால் வெற்றி பெறலாம்.

நாம் எதிலும் குறைந்து போய்விடவில்லை. எதிரில் இருப்பவரை விட நாம் எதிலும் தாழ்ந்தவரில்லை.

நம் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. தெளிவாய் சிந்திக்கும் அறிவு இருக்கிறது. அதுபோதும் வெற்றி கொள்ள.

பெரியோருக்கு மரியாதை தரலாம். மேலதிகாரிக்கு வணக்கம் சொல்லலாம். ஆன்மீகவாதிகளின் காலில் விழலாம். இது அவரவர் நிலைக்கு காட்டும் மரியாதை. ஆனாலும் உங்கள் தனிதன்மையில் நீங்கள் உயர்ந்தவர்தான். இதை நீங்கள் உணர்ந்தால் நீங்கள் வெற்றியாளர்.

வானம் ஏற வழி இருக்கு.....

நன்றி Thannambikkai

எலுமிச்சைப்பழமும்,அவற்றின் தத்துவமும்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:28 PM | Best Blogger Tips

மனித வாழ்வில் எலுமிச்சைப்பழம் ஒரு இன்றியமையாத பழம் ஆகும்.வாழ்க்கையில் நமக்கு பல வழிகளில் பயன்படுகிறது.பெரிய மனிதர்களுக்கும்,சான்றோர்களுக்கும் எலுமிச்சைப்பழம் கொடுத்து வரவேற்பது பெரிய கவுரமாக மதிக்கபடுகின்றது ஏன் தெரியுமா?

எந்த ஒரு பழமும் அதன் பருவத்தின் ஒவ்வொரு நிலைகளிலும், ஒவ்வொரு சுவை இருக்கும்.உதாரணமாக மாம்பழம் பிஞ்சு பருவத்தில் துவர்க்கும்,காய் பருவத்தில் புளிக்கும்,பழத்தில் இனிக்கும்.ஆனால் எலுமிச்சை பிஞ்சு பருவத்திலும் புளிக்கும்,காய் பருவத்திலும் புளிக்கும்,பழத்திலும் புளிக்கும்.

அது போல் மனிதர்களாகிய நாம் வாழ்வின் எந்த நிலையிலும் உயர்ந்தாலும்,தாழ்ந்தாலும் நம்முடைய குணத்தை மாற்றிக்கொள்ளக்கூடாது என்பதை உணர்த்தவும்,உணர்ந்து கொள்ளவும் தெய்வத்திற்கும்,பெரிய மனிதர்களுக்கும்,சான்றோர்களுக்கும் எலுமிச்சைப்பழம் வழங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம்.

உதாரண கதை:
ஒரு முனிவர் தனது சீடர்களுடன் ஆற்றில் குளித்துகொண்டிருந்தார்.ஆற்றில் தேள் ஒன்று உயிருக்குபோராடியபடியே தத்தளித்து கொண்டிருந்தது.முனிவர் அவற்றை காப்பாற்றும் எண்ணத்துடன் கையில் எடுக்கும்பொழுது நறுக்கென்று கடித்துவிட்டது வலியை பொறுத்துகொண்டே கரையில் விட்டார்.

மீண்டும் அது ஆற்றில் விழுந்துவிட்டது,மீண்டும் எடுத்து கரையில்விடும்பொழுதும் அவரை கடித்து விட்டது.மீண்டும் தேள் ஆற்றில் விழுந்துவிட்டது,மீண்டும் முனிவர் தேளை காப்பாற்ற போனார்,இந்த நிகழ்வை கவனித்துக்கொண்டிருந்த சீடர்கள்,சுவாமி நீங்கள் ஒவ்வொரு தடவை தேளை காப்பாற்ற முயலும்போது, அந்த தேள் உங்களை காயப்படுத்துகின்றது,ஆனால் அதை பொருட்படுத்தாமல்,தேளை மீண்டும்,மீண்டும் காப்பாற்ற முயலுகின்றீர்கள் ஏன் என வினவினர்.அதற்கு அவர்,கடிப்பது(கொட்டுவது)அதனுடைய குணம்,காப்பாற்றுவது என்னுடைய குணம் எனக்கூறினார்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்
எலுமிச்சைப்பழமும்,அவற்றின் தத்துவமும்;

கிருபானந்த வாரியார்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:27 PM | Best Blogger Tips

இது கதையல்ல நிஜம்.

கிருபானந்த வாரியார் திருமணம் ஒன்றிற்குத் தலைமை தாங்கச் சென்றிருந்தார். அங்கே நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் வந்திருந்தார்.

இருவரும் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருக்க திருமண பேச்சுக்கு இடையே நடிகவேள் தனது வழக்கமான கிண்டலுடன், "சாமி. முருகனுக்கு ஆறு தலைன்றானுங்கோ, ராத்திரி தூங்கும் போது எப்படி ஒரு பக்கமா படுப்பாரு.?

கூடி இருந்தவர்கள் அனைவரும் சிரிக்க.. வாரியாருடன் வந்தவர்கள் தர்மசங்கடத்துடன் நெளிந்தார்கள்.

வாரியார் புன்சிரிப்புடன், திருமண ஏற்பாடுகளை பார்த்துக் கொண்டு இருந்த மணமக்களின் தந்தையரை அழைத்து அவர்களிடம் கேட்டார், “நேத்து தூங்கினீங்களா?”

அவர்கள் இருவரும் "இன்னைக்குக் கல்யாணத்தை வச்சுக்கிட்டு எங்க சாமி தூங்கறது” என்றார்கள்.

வாரியார், நடிகவேளைப் பார்த்துச் சொன்னார்.

ஒரு குழந்தையின் வாழ்க்கையை நடத்தி வைக்க நினைச்ச இவங்களுக்கேத் தூக்கம் வரவில்லை... உலக மக்கள் அனைவரும் எம்பெருமானோட குழந்தைகள். அவருக்கு எப்படி தூக்கம் வரும்? அவருக்குத் தூங்கறதுக்கு நேரம் ஏது?" என்றார்.

தெய்வீகத் திருமகனாய் விளங்கிய - பசும் பொன் முத்துராமலிங்கத்தேவர்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:25 PM | Best Blogger Tips

அது ஒரு தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம். ஆண்டு 1937. இடம் காரைக்குடிக்கு அருகிலுள்ள கானாடுகாத்தான். கூடியிருந்த மக்கள் 50 ஆயிரத்திற்கு மேல். மேடையிலுள்ள குட்டித் தலைவர்களின் முழக்கங்கள் முடிந்தன. இரவு 10 மணிக்கு சிங்கத்தின் வீர கர்ஜனை ஒலிக்கத் தொடங்கியது.

“நேற்றைய தினம் எங்களது மாபெரும் தலைவர் சத்தியமூர்த்தி ஐயர் அவர்களை ரிவால்வரைக் காட்டி பேச விடாமல் தடுத்து மேடையை விட்டு கீழே இறக்கிய சப்-இன்ஸ்பெக்டர் அவர்களே, உங்களுக்கு நெஞ்சில் உரமிருந்தால் குண்டுகளை ரிவால்வரிலே மாட்டிக்கொண்டு மேடைக்கு வரும்படி அடியேன் அறைகூவி அழைக்கிறேன். இந்த தேசம் விடுதலை ஆக, பாரத மாதா விலங்கொடிக்கப்பட அடியேன் இந்த மேடையிலே சாவதற்குத் தயார். சப்-இன்ஸ்பெக்டர் அவர்களே நீங்கள் தயாரா?” என்று சவால் விட்டு அழைத்த அந்த வீர கர்ஜனைக் குரலுக்கு சொந்தக்காரர் - தேசியத் தலைவர் முத்துராமலிங்கத் தேவர்.

”தேசியம் எனது உடல், தெய்வீகம் எனது உயிர்” என்ற கொள்கைக்கோர் எடுத்துக்காட்டாய் வாழ்ந்த பெருமகனார்.
“வீரமற்ற விவேகம் கோழைத்தனம்; விவேகமற்ற வீரம் முரட்டுத் தனம்” என்று வீரத்துடன் விவேகத்-தையும் வளர்த்த இரண்டாம் விவேகானந்தர். தனது வீரப்பேச்சால் பல்லாயிரக்கணக்கான தியாகிகளுக்கும், தனது விவேக சிந்தனைகளால் பல்லாயிரக் கணக்கான அறிவாளிகளுக்கும் வழிகாட்டியாய் விளங்கியவர்.

1952 தேர்தலில் ஒரே மேடையில் பல பிரசாரக் கூட்டங்களில் தேவரும், ஈ.வெ.ரா. நாயக்கரும் பேசினார்கள். ஈ.வெ.ரா., தேவரை “தேவகுமாரன் இப்பொழுது பேசுவார்” என்று அறிவிப்பு செய்தது அன்றைய அரசியலில் ஓர் புதுமையான புரட்சிதான்.

1954ல் காசி இந்து பல்கலைக் கழகத்தில் சர்.சி.பி. ராமசாமி தலைமையில் “இந்து மதம்” என்ற தலைப்பில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகிறார். அதுவும் ஆங்கிலத்தில். பேச்சில் இந்து மதத்தின் பெருமை, நாட்டின் வரலாறு, காசியின் சிறப்பு, பாரதியாரின் பாடல்களை எல்லாம் குறிப்பிட்ட முத்துராமலிங்கத் தேவர், மாணவர்களுக்கான குறிப்பேட்டில் எழுதினார்:

“அரசியலில் நேதாஜியையும், ஆன்மிகத்தில் விவேகானந்தரையும் பின்பற்றுங்கள்.” என்னே ஒரு தொலைநோக்குப் பார்வை! தேவரின் பெருமைதான் என்னே!

1955 ஆம் ஆண்டு பர்மா வாழ் தமிழர்களும், பர்மிய அறிஞர்களும் வேண்டிக் கொண்டதற்கிணங்க இரண்டாம் முறையாக பர்மா செல்கிறார் தேவர். தொண்டர்களும், தமிழர்களும், பர்மியர்களும், புத்த பிட்சுக்களும் பல்லாயிரக்கணக்கில் கலந்துகொண்டு அவரை வரவேற்கின்றனர்.

வரவேற்பில் புதுமையாகவும் - அதே சமயத்தில் புத்தமதத் தலைவர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டு வந்த வரவேற்பும் அளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. புத்தமதப் பெண்கள் வரிசையாக இரண்டு புறத்திலும் தரையில் படுத்துத் தங்கள் கூந்தலைத் தரையில் விரித்துக் கொள்வார்கள். தங்களால் வரவேற்கப்படும் தலைவர் அந்தக் கூந்தல் மீது நடந்து விழா மேடைக்கு வருவார்.

வரவேற்பை ஏற்க மறுத்து தேவர் கூறினார்: “எங்கள் இந்து மதத்தின் படி, பராசக்தியின் திருவுருவில் தாய்க்குலத்தைப் பார்க்கிறவன் நான். அந்த இந்து மதத்தின் சாமான்யப் பிரதிநிதி என்கிற வகையில் அடியேனால் இந்த வரவேற்பை ஏற்றுக்கொள்ள முடியாதவனாக இருக்கிறேன்” என்றார்.

பர்மா ஜனாதிபதியை சந்தித்த போது திருக்குறள் புத்தகத்தைப் பரிசளித்த பெருமிதம் கொண்டார் தேவர் பெருமகன்.

பொதுக்கூட்டங்கள் நடத்தவில்லை; தனக்கு வாக்களிக்கும்படி மக்களைக் கேட்டுக்கொள்ள தொகு-திக்-குள் செல்லவில்லை. ஆனாலும் நாடாளுமன்றத்-திற்கு அருப்புக்கோட்டை தொகுதியிலும், சட்டமன்றத்திற்கு முதுகுளத்தூர் தொகுதியிலும் ஒரே சமயத்தில் வெற்றி-யைப் பெற்று நாடே அதிசயித்த அரும் பெரும் தலைவர்.
வீரமும் விவேகமும் என்றும் இம்மண்ணில் தழைத்திட வாழ்நாளெல்லாம் அர்ப்பணித்த ஆன்மிகப் புருஷர்,
தேசியமும், தெய்வீகமும் இம்மண்ணின் அடையாளங்களாகக் காட்டிய கர்ம வீரர்,

தன்னை ஒரு சாதித் தலைவராகக் காட்டாது, தாய்நாட்டின் பெருமைகளை சாதித்தத் தலைவராகக் காட்டிய கொள்கை மறவர்.

“வில்லுக்கு விஜயன், வீறுநடை தேசியக் சொல்லுக்கு முத்துராமலிங்கம்” என்ற கூற்றுக்குப் பொருத்தமான தேசியத் தலைவனாய், தெய்வீகத் திருமகனாய் விளங்-கிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை நினைவில் போற்றுவோமாக! வாழ்வில் பின்பற்றுவோமாக!

பசும் பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை

‘தமிழ் அபிமானம் வேண்டும், தமிழ்நாடு வாழ வேண்டும் ‘ என்று கூறிக்கொண்டு ஒரு கூட்டம் தேர்தலில் போட்டியிடுகிறது. தமிழ் அபிமானம் வேண்டியதுதான். ஆனால் இவர்கள் தமிழின் மேல் அபிமானம் கொண்டாடுகிற முறை எப்படியிருக்கிறது என்றால்,
அவர்கள் பொதுக்கூட்டங்கள் நடத்துகிறபோது, ‘வட இந்தியர்கள், தென்னிந்தியர்கள்; வடநாடு, தென்னாடு ‘ என்று பிரிப்பதிலேயே குறியாய் இருக்கிறது. அப்படிப் பார்க்கிறபோது ஜின்னா பார்க்கில் கூட்டம் நடை பெறுகிறது என்கிறார்கள். அடுத்தாற்போல் ராபின்சன் பார்க்கில் நடைபெற்றால் ராபின்சன் பார்க் என்று போடுகிறார்கள்.அதே நேரத்தில் திலகர் கட்டத்தில் கூட்டம் நடைபெறுகிறது என்றால் அவர் பெயரைச் சொல்ல இவர்களுக்குக் கோபம் வருகிறது. வட இந்தியர் என்று சொல்லி அவர் பெயரைப் போடாமல் தந்தை திடலில் நடை பெறுகிறது என்று போடுகிறார்கள்.

(கிண்டலாக ஆங்கிலத்துக்கு மாறி)

In what way Jinnah is not a North Indian ? How is the [i]names Jinnah and Robinson so sweet to you Sir ? How is [/i]
the name of poor Tilak so bitter to you Sir ? I am not [i]able to understand. [/i]

ஜின்னா எந்த வகையில் வட இந்தியன் அல்ல; எந்த வகையில் ராபின்சன் என்ற வெள்ளைக்காரன் உங்களுக்கு வேண்டியவன் ? திலகர் பெயர் மாத்திரம் உங்களுக்குக் கசப்பாக இருப்பானேன் ? இது இந்த நாட்டு அரசியலுக்கு விரோதமாக நீங்கள் செய்யும் தேசத் துரோகம் அல்லவா ?

ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து வெள்ளைக்காரனுக்கு வால் பிடித்த கூட்டத்தில் வந்த எண்ணம் என்பதைத் தவிர வேறு எதைக் காட்டுகிறது ? அதற்கு மேல் ‘வடநாட்டான் திராவிட நாட்டை சுரண்டுகிறான். வட இந்தியன் பெயர் இந்த நாட்டில் இருக்க வேண்டாம். இருந்தால் போராடி மாற்றுவோம் ‘ என்று சொல்கிறார்கள்.மிக்க மகிழ்ச்சி.

டால்மியாபுரம் என்ற பெயரை மாற்றப் போராடிய நீங்கள் நான் எடுத்துச் சொன்ன ஹார்விபட்டி என்ற பெயரை மாற்ற ஏன் சத்தியாகிரகம் பண்ணவில்லை ? வெள்ளைக்காரன் பெயர் இருக்கலாம்; அதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கணும். அதே நேரத்தில் ‘டால்மியாபுரம் ‘ என்ற பெயர் போகணும் என்றால் அறிவுடையவன் கேட்பானா ? ஹார்வி மில்லில் பட்டிவீரன்பட்டி செளந்தரபாண்டியன் வகையறா பங்கு இருக்கிறது. அந்த செளந்தரபாண்டியன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தந்தையாக இருந்ததால், ஹார்விபட்டி என்ற பெயரை மாற்ற வேண்டுமென்று சொன்னால் உங்கள் கட்சிக்குப் பணம் வராது.ஆகையால் தமிழ் என்ற பெயரால் மக்களிடம் உண்மையை மறைப்பதில் பிரயோசனம் இல்லை. இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதுதான் அதனுடைய ரகசியம்.

அதற்குமேல் திராவிடநாடு என்று கோஷிக்கிறார்கள். திராவிட நாடு யார்கிட்டே கேட்கிறாய் ? முறையாக இருந்து வெள்ளையன் நம்மை அடிமையாக வைத்திருந்த காலத்தில், சுதந்திரப்போரில் மக்கள் பக்கத்தில் இருந்திருந்தால் கேட்க உரிமை இருக்கிறது என்றாவது சொல்லலாம்.வெள்ளையனை எதிர்த்துப் போராட்டம் நடைபெற்றபோது வெள்ளைக்கார சர்க்காரிடம் கைக்கூலி வாங்கிக் கொண்டு, அவனுக்கு அனுகூலமாக யுத்த ‘புரபகண்டா ‘ ‘செய்துவிட்டு, இப்போது திராவிடநாடு கேட்டால் என்ன அர்த்தம் ? பாகிஸ்தான் கேட்டு வாங்கி அவன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டது மாதிரி, நீ வெள்ளைக்காரனுக்கு ஐந்தாம் படையை அமைப்பாய். அப்படி ஏமாற நாங்கள் பைத்தியக்காரர்கள் அல்ல.

‘தமிழ் வேண்டும் ஹிந்தி வேண்டாம் ‘ என்கிறார்கள். 1937-லேயே ஹிந்தி எதிர்ப்பு வருகிறபோது, ‘ஹிந்தியைப் புகுத்தாதே ‘ என ராஜகோபாலாச்சாரியர் மந்திரி சபைக்குச் சொன்னவன் அடியேன். இது சரித்திரம். எங்கள் அரசாட்சி அமைந்தால் ‘தமிழ் மாகாணம் ‘ என்று பெயர் வைப்போம். Residuary Madras State என்கிற பெயரை எடுப்பதில் பின்னடைந்தவர்கள் அல்ல நாங்கள். ஆனால் தமிழ் என்பதன் பெயராலும், தமிழ் உரிமையைக் காப்பாற்றுகிறோம் என்கிற பெயராலும் தமிழன் நாகரீகத்தைக் கெடுக்கக்கூடிய போராட்டங்களையும், பிராமணர் பிராமணர் அல்லாதார் என்று
சொல்லிக் கொண்டு நாஸ்திகத்தை வளர்ப்பதையும் நாங்கள் ‘ரோமாபுரி ராணி ‘ என்ற கதையை எழுதுவதா நீ பிராமணர் அல்லாதோரைக் காப்பாற்றுகிற யோக்யதை ?

எத்தனை பள்ளிக்கூடப் பையன்களை பாழாக்கி இருக்கிறாய் இதைப் போன்ற கதைகளை எழுதி ? ரோமாபுரி ராணி கதை போதாது என்று ‘தங்கையின் காதல் ‘ என்று ஒரு கதை
எழுதியிருக்கிறாய். தங்கையைக் கண்டு காதல் கொள்ளுகிறான் அண்ணன் என்று எழுதியிருக்கிறாய்.அடுத்து மகன் தாயைத் தாலிகட்ட வேண்டியதுதானே ? வேறு என்ன ?
இதுவா தமிழ் நாகரீகம் ? சின்னச்சின்ன பள்ளிப் பிள்ளைகளைப் பாழாக்கி நாட்டை மிக
விபரீதமான பாதைக்குக் கொண்டு போகக்கூடிய இத்தகைய கட்சிகளை, தாங்கள் தேர்தலில் ஆதரிக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.