சிரிக்க மட்டும் (டாக்டர் காமடிகள்):-

மணக்கால் அய்யம்பேட்டை | 12:35 PM | Best Blogger Tips


பிச்சைகாரர்: சாமி... தர்மம் பண்ணுங்க...
டாக்டர்: யோவ். இது ஆஸ்பிடல். நான் டாக்டர்ய்யா...
பிச்சைகாரர்: பாவம் பண்ணுறவங்க தான் தர்மம் பண்ணுவாங்கன்னு இங்கே வந்தேன் சாமி...

==============

பேஷன்ட்: எனக்கு வந்தது ஜுரம் இல்லேன்னு எப்படி டாக்டர் சொல்றீங்க?
டாக்டர்: நான் கொடுத்த மருந்தை சாப்புட்டு சரியாயிடுச்சுன்னு சொல்றீங்களே. அதுனாலே தான் சொல்றேன்.

==============

பேஷன்ட்: எனக்கு ஆஃபிஸ்லே தூக்கமா வருது.... டாக்டர்!
டாக்டர்: தூக்கம் வரலையின்னா தான் பிரச்சனை. you are perfectly all right.

==============

பேஷன்ட்: எனக்கு எதை சாப்பிட்டாலும் வாந்தி வருது... டாக்டர்!
டாக்டர்: அப்போ.. சாப்பிடாம இருங்க. என்ன வருதுன்னு பாப்போம்?

==============

பேஷன்ட்: டாக்டர்...என் கையை எக்ஸ் ரே எடுக்கும் போது, கை எரிஞ்சு போச்சு டாக்டர்!
டாக்டர்: சாரிப்பா...எக்ஸ் ரே மிஷின்னுக்கு பதிலா லேசர் மிஷினை வாங்கிகிட்டு வந்துட்டேன் போல.

==============

பேஷன்ட்: ஒரு மாசமா உங்ககிட்டே வைத்தியம் பாத்தும் ஒன்னுமே சரியாகாதது வருத்தமா இருக்கு டாக்டர்!
டாக்டர்: என் சர்வீஸுலேயே நான் ஒரு மாசம் வைத்தியம் பாத்து உயிரோட இருக்குறது நீங்க ஒருத்தர் தான். அதை நினச்சு சந்தோஷப்படுங்க..

==============

பேஷன்ட்: அந்த ஸ்டதஸ்கோப்பை உங்க கையிலே பாத்தா வேற மாதிரி தெரியுது...டாக்டர்!
டாக்டர்: எப்படி தெரியுது?
பேஷன்ட்: பாசக் கயிறு மாதிரி தெரியுது டாக்டர்!

===============

நர்ஸ்: நம்மகிட்டே ஒரு யூனிட் ரத்தம் தான் இருக்கு. ஆனா ரெண்டு யூனிட் தேவைப் படுது...டாக்டர்!
டாக்டர்: பரவாயில்லே.. கொஞ்சம் தண்ணி கலந்து ரெண்டு யூனிட்டா மாத்திடுங்க..!