இய‌ற்கை வைத்தியம் 2

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:43 | Best Blogger Tips

பல் ஈறு வீக்கம், வலிக்கு:

கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு வீக்கம் தீரும்.

மயக்கம் நீங்க:

ஏலக்காய் ஒரு பங்கு, பனைவெல்லம் ஒரு பங்கு சேர்த்து எட்டுப் பங்கு நீர் விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.

பசி உண்டாக:

புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச் சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். இவ்வாறு செய்தால் பசி உண்டாகும்.

படர்தாமரைக்கு:

அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.

வயிற்று வலிக்கு:

நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்று வலி போகும்.

வீக்கத்திற்கு:

கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டு பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட தீரும்.

புண் ஆற:

புளியிலை, வேப்பிலை ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து இடித்து எட்டு பங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள் ஆறும்.

தலைவலி:

ஐந்தாறு துளசி இலைகளோடு ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு
அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

குடல்புண் ஆற:

மஞ்சளை தணலில் இட்டு, சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை
தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண் ஆறும்.

வறட்டு இருமல் குணமாக:

எலுமிச்சம்பழச்சாறு, தேனில் கலந்து குடித்தால் வறட்டு இருமல் குணமாகும்.

தேமல் குணமாக:

வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து
குளித்து வந்தால் தேமல் குணமாகும்.

பித்த வெடிப்பு:

கண்டங்கத்திரி இலை சாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

மூலம்:

கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

இருமல்:

வெ‌ற்‌றிலையை‌ப் ‌பி‌ழி‌ந்து சாறு எடு‌த்து தே‌ன் கல‌ந்து அரு‌ந்‌தி வர ‌தீராத இரும‌ல் குணமாகு‌ம்.

கிருமிகள் நீங்க:

அ‌திகாலை‌யி‌ல் வெறு‌ம் வ‌யி‌ற்‌றி‌ல் வே‌ப்ப‌ங்‌கொழு‌ந்தை ‌தி‌ன்று வர வ‌யி‌ற்‌றி‌ல் உ‌ள்ள ‌கிரு‌மிக‌ள் ஒ‌ழி‌யு‌ம்.

இய‌ற்கை வைத்தியம்:-

நன்றி 
Karthikeyan Mathan